காமராஜர்-சத்தியமூர்த்தி-ராஜாஜி-பிரபாகரன்

காமராஜரை போற்றுகிறவர், ஆதரிக்கிறவர்; ராஜாஜியை கடுமையாக விமர்சிக்க வேண்டும். மாறாக ராஜாஜியையும் போற்றுகிறார், ஆதரிக்கிறார் என்றால் அவரின் நோக்கம் மிக இழிவான ஒன்றாக இருக்கும். அதில் முதன்மையானது பெரியார் மற்றும் திராவிட இயக்க எதிர்ப்பு, பார்ப்பனியத்திற்கு சொம்பு.
பிரபாகரனையும் ஆதரித்துக் கொண்டு ராஜபக்சேவையும் ஆதரிப்பவரை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்?
அதைவிட கேவலமாக எதாவது சொல்லுங்கள் அவர்களை.
மதிய உணவு திட்டம், அனைவருக்குமான கல்வி இது காங்கிரசின் கொள்கையல்ல. இன்னும் சரியாக சொன்னால் இந்த திட்டங்களுக்கு எதிரானதுதான் காங்கிரஸ். அதாவது குலக் கல்வித் திட்டம்.
ராஜாஜியின் கொள்கை மட்டுமல்ல, காமராஜரின் அரசியல் குருநாதர் சத்தியமூர்த்தி அய்யரின் கொள்கையும் இது தான்.
மதிய உணவு திட்டம், கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இது காங்கிரசுக்கு எதிரான நீதிக்கட்சியின் திட்டம்.ஆனாலும் காங்கிரசில் இருந்த காமராஜர், தன் கட்சியின் கொள்கைக்கு எதிராக தன் குருநாதர் சத்தியமூர்த்தியின் அரசியலுக்கு எதிராக, எளிய மக்களின் கல்விக்கு தன் ஆட்சியில் முக்கிய பங்கு கொடுத்தார் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரே.
ஆக, காமராஜர் வெறும் எளிமையாகவும், நேர்மையாகவும் மட்டும் இருந்து, பெரியாரின் தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால், அவர் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனரின் சீடராக இருந்து மறைந்திருப்பார். நமது நினைவுளிலும் இருந்திருக்க மாட்டார்.
தமிழர்களின் கல்வியும் ஒரு தலைமுறை தள்ளிப் போயிருக்கும்.
சரிங்கண்ணா……….சரிங்கண்ணா……….என்னே ஒரு கண்டுபிடிப்பு
ஆமாம் திரு மதிமாறன், பெரியாருக்கு தோன்றிய சிந்தனைகளெல்லாம் அவரது சொந்த முயற்சியில் உருவானவை.உலகில் மற்றவர்களுக்கு தோன்றிய சிந்தனைகள் அதன் அடிப்படையிலமைந்த அவர்களது நல்ல சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் (அவை யாரால் பின்பற்றப்பட்டதாயினும்) பெரியார் கண்டுபிடித்ததால் மட்டுமே வந்தவை . இல்லையா?
தாங்கள் முன்பொருமுறை குறிப்பிட்டதுபோல காமராஜரின் இந்திய தேசிய ஆதரிப்புக்கும் பெரியார்தான் காரணமா திரு மதிமாறன்?
திமுக காரர்கள்குட சூரியனை மக்களுக்கு அறிமுகம் செய்தவரே கருணாநிதிதான் என சொல்லவில்லை.
ஆனால் சுயமரியாதையை ஆதரிக்கும் பெரியாரின் தொண்டர்கள் அவர்களை விஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது.