முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா..

palaniandi

முதல் மனைவிகளை கடவுள்கள் ஜாதி மாறி திருமணம் முடித்ததில்லை. இரண்டாவது மனைவி அதாவது வைப்பாட்டிகளையே ‘கீழ்’ஜாதிகளில் இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முருகன் வள்ளியை தேர்ந்தெடுத்ததைப்போல்.
இது இயல்பாகாவே ஆதிக்க ஜாதி ஆண்களிடம் உள்ள வழக்கம் தான்.

August 24

ஆறுமுகம்.அதற்கு இணையாக 12 கைகள்.

சரி தான். அப்படியானால் ஏன் 12 கால்கள் இல்லை?

கடவுள்களின் அந்தரங்கம் பற்றி பேசுவது முறையல்ல.
6 க்கு 6 பற்றி பேசுவதும் அப்படிதான்.

August 28

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை

‘பெரியார் ஒரு துரோகி’

ஆமாம்.

தான் பிறந்த ஜாதிக்கும் தன் பெற்றோர்கள் தீவிரமாக நம்பிய, வளர்த்த இந்து மதத்திற்கும் அவர் பச்சை துரோகி மட்டுமல்ல, வஞ்சம் வைத்து தாக்கிய எதிரியும் கூட.

August 18

‘மனு’ விற்கு மறுபெயர்

பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?

அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

வர்க்க ரசம் சொட்டும் காதல் உணர்வு;மருதகாசி

maruthakasi

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே

ஆண் : கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே – அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே

பெண் : முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
–கவிஞர் மருதகாசி.

மழையில் தன் வீடு ஒழுகும்போது, காதலனும் காதலியும் இரவு தூக்கத்தைத் தொலைத்துப் பாடுகிற பாடல். இவனல்லவா கவிஞன்.

ஆண் : பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே – முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ?’ – மருதகாசி.

கோபத்தில் சிவக்கிற தன் காதலியின் முகத்தை தன் தொழில் சார்ந்து ஒப்பிடுகிற காதலன். என்ன ஒரு வர்க்கப் பார்வை? மருதகாசி – எளிய மக்களின் பிரபல வார்த்தைகள்.

கண்ணதாசனுக்காக தமிழர்கள் செய்த ‘தியாகம்’

புன்னகை மன்னன் வைரமுத்து

பட்டுக்கோட்டை பாடல் பற்றிய..

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

புன்னகை மன்னன் வைரமுத்து

பட்டுக்கோட்டை பாடல் பற்றிய..

கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

கதை திரைக்கதை ‘வசனம்’ மயக்கம்

NT_140628150528000000

வடிவேலுவும் பார்த்திபனும் பேசும் வசன முறையையே எல்லா பாத்திரங்களுக்கும் விரிவாக்கியிருக்கிறார்.

முதல்பாதியில் சுவாரஸ்யமற்ற காட்சிகளை வைத்துக் கொண்டு. முழு முழுக்க புத்திசாலித்தனமான வசனங்களாலேயே பார்வையாளர்களை வசப்படுத்துகிற பார்த்திபன்;

படத்தில் எதை விமர்சிக்கிறாரோ அதாவது வழக்கமான சினிமாவாக இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு வழக்கமானதேயே ஒரு முறையல்ல, இரண்டு முறை செய்கிறார்.

படத்தில் நாயகனாக வரும் இயக்குநர் தன் சொந்த வாழ்க்கையில் நடக்கிற விசயத்தை, ஆர்யா-அமலாபால் இருவரையும் வைத்து கதை சொல்வதாக மீண்டும் அதே சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறார். முதல் முறையே ‘ஜவ்’ மிட்டயாக இழுத்தது, அதையே மீண்டும் பார்க்கும்போது ‘பம்புள்காம்’ அளவிற்கு.

முதல்பகுதிப் போன்ற புத்திசாலித்தனமான வசனங்களும் பிற்பகுதியில் இல்லை. அது போலவே பிற்பகுதியும் இருந்திருந்தால்.. படம் இன்னும் பெரிய சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

விரும்பம்போல் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து துவங்கிய படத்தை, எப்படி முடிப்பது என்ற குழப்பமே இரண்டாம் பகுதி.

என்னுடன் படம் பார்த்த என் சித்தப்பா மகன் கார்த்திகேயன் சொன்னான்:

அய்யா படத்துல வடிவேலு தியேட்டர் ஓனரா வருவார். ரஜினியின் அருணாசலம் படத்தின் கடைசி ரீல் பெட்டியை குரங்கு தூக்கிட்டு ஓடிடும். அதை மீட்க முடியாமல் வடிவேலு, தியேட்டர் ஆப்ரேட்டரிடம் சொல்லுவார்,
அடுத்த வாரம் நம்ம தியேட்டர்ல பாட்சாதானே. அதுல யாரு வில்லன் ரகுவரன். இதுல யாரு வில்லன் ரகுவரன். எடுத்து ஓட்றா அந்த ரீல என்பார்.
அதுகூட வித்தியாசனமான முயற்சிதான். அதுபோல் இருக்கிறது இந்தப் படத்தின் பிற்பகுதி, என்றான்.

August 25

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

காலத்தைத் தாண்டி கனவு கண்டவன்..

mohan_bagawat_

1459663_10201170748172890_227902526_n

இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள். -ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். 12-8-2014.
*
ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன், சீனத்தில் பிறந்தவன் சீனன்; இந்து தேசத்தில் பிறந்தவன் இந்து;

இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.
-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
(‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்திலிருந்து..)

August 19

பாரதியும் பாரதிதாசனும் சின்ன விவாதமும்

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

சத்தியமா நான் தமிழனே இல்லிங்க..

Thamizhan

ஜாதி அடிப்படையில் இனவாத அரசியல் பேசுகிற கும்பல், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அம்பேத்கரால் தீர்வு காண முடியாது என்ற தொனியில்,
‘அம்பேத்கர் தமிழரல்ல. மராட்டியர்’ என்று அவதூறு வீசி அவரை புறக்கணித்தபோது, கமுக்கமாக அந்த கும்பலோடு இணைந்து கொண்டு இனவாதிகளைப்போலவே ஈழ விடுதலை, விடுதலை புலி ஆதரவு, மலையாளி எதிர்ப்பு, கன்னடர் எதிர்ப்பு என்று தமிழ் உணர்வோடு முழங்கியவர்கள்;
இப்போது இனவாதத்திற்கு எதிராக சீறுகிறார்கள்.

வைகோ விற்கு கொடுத்த, கொடுக்கிற மரியாதையைக் கூட பலர் டாக்டர் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் கொடுப்பதில்லை. (தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று ஒருவன் சொன்னபோதும்கூட)

தமிழர்கள் உட்பட்ட இந்த மண்ணின் மானங்கெட்டத் தனத்திற்கு எதிராக போராடிய தலைவர் டாக்டர் அம்பேத்கர் மராட்டியர் என்றால்.. நிச்சயம் நானும் மராட்டியன்தான்.

தமிழர்களின் இழிவுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்த தந்தை பெரியார் கன்னடர் என்றால் நானும் கன்னடன்தான்.

இப்படி சொல்லிக் கொள்வதில் நான் அளவற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். 

தந்தை பெரியாரே தமிழர் இல்லை என்றால்.. சத்தியமா நான் தமிழனே இல்லிங்க..

August 21

காரல் மார்க்ஸ் தமிழரில்லை அதனால் மார்க்சியம் தீர்வாகாது

தமிழனா – தெலுங்கனா? தமிழனா – உருது இஸ்லாமியனா?

தமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..

கண்ணதாசனுக்காக தமிழர்கள் செய்த ‘தியாகம்’

MC

‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..
ஒன்று மனசாட்சி.. ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா.. ’ – கண்ணதாசன்.
-இந்த ரெண்டுமே எந்தக் கோர்ட்டுலேயும் செல்லாது. கண்டிப்பா தூக்குதான்.

August 13

‘நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா’ – கண்ணதாசன்.

confirm அதேதான். இல்லாததை இருக்கிறதா நினைக்கிற வியாதி.
முத்துனா mental.
எவ்வளவுப் பெரிய குடிகாரனாக இருந்தாலும் நம்பிக்கை வைச்சி மினரல் வாட்டரை குடிச்சா போதையாகிடுமா?
இத தெளிவா புரிஞவரு., அத குழப்பறதுக்குக் காரணம்.. இதுல போதை லாபம். அதில் போதைக்கான பணம் லாபம்.

August 14

‘நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா’ – கண்ணதாசன்

நதியுமில்ல.. விதியுமில்ல.. வெய்யிலு.
அது குற்றமல்ல. காரணம்.
அதிகமான வெப்பமும் மழை இல்லாததும்.
குற்றம் காடுகளை சூறையாடியது. குற்றவாளிகள் லாபவெறி கொண்ட நிறுவனங்கள். அவர்களுக்கு ஆதரவான அரசுகள்.

‘பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்’ – கண்ணதாசன்.

மப்புல மட்டையாகி கெடக்கும்போது.. காதுகிட்ட லாரி போனாலே கேக்காது… இதுல பறவை பேசுறது தான் இவருக்கு‘ டான்’னு கேக்கப்போது..
ஏற்கனவே.. சைடிசா.. சாப்பிட்ட காடையும் கவுதாரியும் வயித்துல சமாதியாகி இருக்கு.. ,இதுல அது வேற பேசுனுமாம்? ஆவி அமுதாவல கூட முடியாது. பேச வைக்க.

August 14

‘மனதிற்கு மனதை கொஞ்சம்
தூது செல்லுங்கள்’ – கண்ணதாசன்.

மக்களே, கவியரசு எவ்வளவு தெளிவா எழுதியிருக்கார்..அப்படின்னா அவரு எவ்வளவு தெளிவா இருந்திருப்பார்?
இந்த வரிக்கு சரியான விளக்கம் தருபவர்களுக்கு 1000 பொற்காசுகளை, அவர் ரசிகர்கள் தருவார்கள்.

August 14

/ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை/-கண்ணதாசன்.

அத ஆண்டவன் தானே சொல்லனும்.

/மனிதனம்மா மயங்குகிறேன் /

full ஆ தண்ணி அடிச்சா.. அப்டிதான்.

/தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே/ – கண்ணதாசன்.

‘வானம் இல்லை.. இல்லாத வானத்தை.. தவறி மண்ணில் விழவைக்கவும் முடியாது’ என்கிற அறிவியல் விளக்கத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு பார்த்தாலும்…
முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும எதவாது தொடர்பு இருக்கா?
‘தவறுக்கு’ ‘தவறியும்’ ‘த’ வுக்கு ‘த’ என்பதைத் தவிர எந்த வகையிலும் சம்பந்தமில்லாமல் இருக்கு.
இந்த தொடர்பற்ற உதாரணத்திற்கு ரெம்ப தூரத்து உறவுப்போல் சின்னதாக ஒரு தொடர்பிருந்தால்.. யாராவது சொல்லுங்களேன்.

August 15

புன்னகை மன்னன் வைரமுத்து

பட்டுக்கோட்டை பாடல் பற்றிய..

கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

எளிய மக்களுக்கான எதிர்ப்பு அரசியலின் குறியீடு

Mannargudi_News_11-08-2014_Ph_1[1]

மன்னார்குடி ஆக. 10
சிந்தனை முற்றம் இலக்கிய அமைப்பின் சார்பில் சமூக வாழ்வியலுக்கான கவியரங்கம், கருத்தரங்கம் மன்னார்குடி அம்பேத்கர் அறிவாலயத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் வே.மதிமாறன் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஆதலினால் காதல் செய்வீர் என்ற தலைப்பில் கவிஞர் பரிதி பாண்டியன்
தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கருக்கல் விடியும் ஆசிரியர் அம்ராபாண்டியன் தலைமையில் அண்ணலும் அய்யாவும் என்ற தலைப்பில் நடைபெற்ற
கருத்தரங்கத்தில் எழுத்தாளர் வே.மதிமாறன் பேசியது:

இங்கர்சால், பெட்ரண்ட்ரஸ்சல் போன்றவர்களைப்போல் வெறும் நாத்திகரல்ல பெரியார். அவர்களை விட பலமடங்கு உயர்ந்தவர். அவர்கள் இருவரும் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள்.
மற்றபடி மக்களின் வாழ்க்கையில் ஆதிக்கத்திறகு எதிராக அவர்கள் போராடியவர்கள் அல்ல. ஆனால் பெரியார், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழக்கையை மேம்படு­­த்தியவர்.
தந்தை பெரியார் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல, ஜாதி எதிர்ப்புப்போராளியும் கூட. அதனால் தான் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பாக தமிழகத்தில் மட்டும் தன் பெயருக்கு பின் ஜாதி பெயர் போட்டுக்கொள்வதை ஒழித்தவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வேலை வாய்ப்பு நல்வாழ்விற்கு காரணமானவர். அவர் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப்போராடாமல் இருந்திருந்தால் இன்று நாம் எழுதப்படிக்கக்கூட தெரியாத தற்குறிகளாக இருந்திருப்போம்.
தன் வாழ்நாள் முழுக்க ஓய்வெடுப்பதைக் கூட அவமானமாக, திமிர் பிடித்ததாக கருதி ஒய்வே இல்லமால், கடுமையான உடல் உபாதையுடனும் மூத்திரப் டியூபோடு தொடர்ந்து பொதுகூட்டங்களில் பேசிய உலகின் ஓரே தலைவர்.

டாக்டர் அம்பேத்கர் தன் படிப்பு, தன் அறிவு, தன் உழைப்பு அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்காகவே அர்பணித்தவர். அவர் நினைத்திருந்தால் இந்தியாவின் ஜனாதிபதியாக இரண்டு முறை வந்திருக்க முடியும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அனைத்து சமூக பெண்களுக்காகவும் இந்து சட்ட மசோதாவை கொண்டுவந்தார்.

அதை நேரு அரசு உடனடியாக அமல்படுத்த முன் வராத காரணத்தால் தான் தன் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். இன்று அந்த சட்டத்தின் மூலம் அதிகம் பயன்பெறுபவர்கள். தாழ்த்தப்பட்ட பெண்கள் அல்ல. மற்ற சமூகத்தின் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மாபெரும் மேதை என்று உலகளவில் அறியப்பட்ட ஓரே தலைவர்.

ஜாதி, மத ஆதரவு, காந்தி ஆதரவு என்கிற நிலையில் ஒருவர் இந்தியாவின் பெரிய தலைவர் ஆவது அதிசயமல்ல. ஆனால், இவற்றை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக போராடிய ஒருவர் மாபெரும் தலைவர் ஆவது என்பது சாதாரணமல்ல.
எளிய மக்களுக்கான எதிர்ப்பரசியலின் குறியீடு டாக்டர் அம்பேத்கர் என்றுகூறினார்.
முன்னதாக பெரியார் ஒருவர்தான் தலித் தலைவர் என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பசுகௌதமன் வெளியிட்டார். ஆயுள் காப்பிட்டுக்கழக தொழிற்சங்க நிர்வாகி சேதுராமன் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் குறுந்தகடை பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக மன்னை காளிதாசு வரவேற்றார். சேரன்குளம் செந்தில்குமார், பேராசிரியர் எஸ்.டி.ஜெயராமன், தடா ரவி, மன்னை ஜே.ஆர்.எஸ்., வருவாய்த்துறை அலுவலர் மகேஷ்குமார், கவிஞர் கலைபாரதி, வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். செந்தமிழன் நன்றி கூறினார். (நன்றி தமிழ் இந்து நாளிதழ்)

IMG

Mannargudi_News_11-08-2014_Ph_2[1]

Mannargudi_News_11-08-2014_Ph_3[1]

Mannargudi_News_11-08-2014_Ph_5[1]

 

10583924_293955830805228_725890522743981581_n

 

ஒண்ணுமே புரியலைங்க டாக்டர்..

_64020638_gp

‘டாக்டர் நமக்கு என்ன மருந்து எழுதியிருக்கார். அதை தான் மருந்துக் கடைக்காரர் கொடுத்தாரா?’ என்பதே தெரியாமல் தான் பல நோயாளிகள் தங்கள் நோய்க்கான மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறார்கள்.

‘ஆங்கிலம் எழுதப்படிக்க தெரிஞ்சவுங்களுக்குக் கூட புரியக் கூடாது. மருந்து கடைக்காரருக்கு மட்டும் புரிஞ்சா போதும்.’ என்ற பரந்த மனப்பான்மையோடு பொறுப்பாக மருந்து எழுதும் மருத்துவர்கள்;

மற்றவர்களை மதிக்காத, பொது ஒழுங்கற்ற, பொறுப்பற்ற சமூகத்தின் மீதும்; படித்த, படிக்காதவர்களின் பொது சுகாதாரமின்மை குறித்தும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நியாயந்தானே.

August 7

தனது பெயரை தொடர்ந்து MBBS ல் ஆரம்பித்து MD அதற்கு மேலும் தனது படிப்புகளையும் தனது முகவரி, போன் நம்பர் உட்பட தன்னை தொடர்பு கொள்தவற்கான அனைத்து விளம்பரங்களையும் மிகத் தெளிவாக அச்சிட்டு நோயாளிகளுக்கு எளிதில் புரிவதுபோல் தருகிற மருத்துவர்கள்….

அதே prescription paper ல அந்த அளவுக்குக்கூட வேணாம்.. சுமாரா புரிவதுபோல் மருந்துபேரையும் எழுதுனா.. எவ்வளவு உதவியா இருக்கும் எங்களுக்கு.

August 8

‘கிட்னி. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free

போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை

..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?