இஸ்ரேல் தாக்குதலும் தமிழ் உணர்வு ‘போப்’ பக்தர்களின் கள்ள மவுனமும்

Pope Francis
ஈராக், லிபியா, சிரியா இன்னும் பல அரபு நாடுகளில் நடந்த உள் நாட்டு சண்டைகளில் பலர் இறந்தபோது; மனிதாபிமானம் பீறிட்டுக் கிளம்பி ‘அய்யோ குழந்தைகள் பெண்கள் எல்லாம் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை தர இறைவனை வேண்டுவோம்.” என்றார்கள் அன்பே வடிவான போப் ஆண்டவர்கள்.

உடனே இறைவன் (அமெரிக்கா) அவதாரம் எடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள், தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் என்று பல லட்சம் மக்களை கொன்று அமைதியை நிலை நாட்டினார்.

உள் நாட்டு சண்டையில் சில ஆயிரம் பேர் இறந்ததை தாங்க முடியாமல் துயறுற்ற போப் ஆண்டவரின் மனம், அமெரிக்காவின் தாக்குதலில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்ட பிறகே ஆறுதல் அடைந்தது. அதனால் தான் ‘ஆண்டவனின்’ (அமெரிக்கா) கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து ‘ஆண்டவர்’ வாடிகனிலிருந்து வருத்தப்படவேயில்லை.

சிரியா, ஈராக், லிபியா நாடுகளில் உள் நாட்டு சண்டையின் போது கொல்லப்பட்ட மக்களைவிட அதிகமாக கொடூரமான முறையில் குழந்தைகள் உட்பல பல ஆயிரம் மக்கள் பாலஸ்தீனத்தில் தொடர்ந்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதியசம், கருணையே உருவான வாடிகன் வாழ் ஆண்டவர் கண்களிலிருந்து கண்ணீரே வரவில்லை. இஸ்ரேலின் அநீதியைக் கண்டித்து அமெரிக்க ஆண்டவனும் தன் அவதாரத்தை நிகழ்த்தவில்லை.

எனக்குத் தெரிந்து பாஸ்தீனத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து, போப் ஆண்டவர்கள் இதுவரை யாரும் தங்கள் இதயத்தை ரணமாக்கிக் கொண்டதில்லை என்றே நினைக்கிறேன்.

2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இது போலவே கொடூர தாக்குதல்களைப் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தியபோது; பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், செப்டபர் மாதம் 23 ஆம் தேதி பிரச்சினைக்குத் தீர்வுகாணும்படி போப் ஜான் பாலுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதோடு போப்பைச் சந்திக்க ஒரு உயர் பாலஸ்தீன அதிகாரியையும் இத்தாலிக்கு அனுப்பி வைத்தார்.
பாலஸ்தீன ரேடியோ, இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து அவசரக் கூட்டமும் பிராத்தனையும் நடத்தும்படி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் இவை எதுவுமே நடைமுறை படுத்தவில்லை என்பதை விட, மதிக்கப்படவே இல்லை.

தமிழகத்திலும் ஈழப் பிரச்சினையின் போது அதற்காக கதறி, பவுத்தத்தை கூட கடுமையாக குற்றம் சாட்டி தீவிர தமிழ் உணர்வாளர்களைப்போல பேசிய, கிறித்துவ நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்களாக தங்களை சித்தரித்துக் கொள்கிற கிறஸ்துவ முற்போக்காளர்கள் பலரும் பாலஸ்தீன பிரச்சினைக் குறித்து போப் ஆண்டவரை போலவே கள்ள மவுனம் காப்பதின் பின்னணி இதுதான்.

ரம்ஜானுக்கு வாழ்த்துச் சொல்கிற பல நல்லிணக்கவாதிகள் பாலஸ்தீன படுகொலைகளுக்கு பம்முவதும் இதனால்தான்.

இந்த விசயத்தில் பார்ப்பன அறிவாளிகளும் கிறித்துவ முற்போக்காளர்களும் கொலைக்கார இஸ்ரேலின் பக்கம் தான் நிற்கிறார்கள்.
இவர்களுக்கு ஈழ மக்கள் துயரம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

July 31 அன்று facebook ல் எழுதியது.

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின

6 thoughts on “இஸ்ரேல் தாக்குதலும் தமிழ் உணர்வு ‘போப்’ பக்தர்களின் கள்ள மவுனமும்

 1. எனக்குத்
  தெரிந்து பாஸ்தீனத்தின்
  மீதான தாக்குதலைக்
  கண்டித்து, போப்
  ஆண்டவர்கள்
  இதுவரை யாரும் தங்கள்
  இதயத்தை ரணமாக்கிக்
  கொண்டதில்லை என்றே நினைக்கிறேன்./////

  இதை இப்படியும் சொல்லலாம். எனக்கு தெரிந்து குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு வருந்திய முஸ்லீம் நலன் விரும்பிகள் எவரும் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு

  இதுவரை யாரும் தங்கள்
  இதயத்தை ரணமாக்கிக்
  கொண்டதில்லை என்றே நினைக்கிறேன்.

 2. இதை இப்படியும் சொல்லலாம். எனக்கு தெரிந்து தங்களின் சொந்த மாநிலத்தில் பலர் கொல்லப்பட்டு,பெண்கள் கற்பழிக்கப்பட்டு,எஞ்சியவர்கள் வலுக்கட்டாயமாக துரத்தப்பட்டு, சொந்த நாட்டிலேயே தலைநகரில் அகதிகளாக பல ஆண்டுகளாக வாழும் ‘காஷ்மீர் பண்டிட்களை’ பற்றி எழுத முடியாமல் மதிவாணர் போன்றவர்களுக்கும் மதிமயக்கம் வந்துவிடும்.

 3. இதை இப்படியும் சொல்லலாம். எனக்கு தெரிந்து தங்களின் சொந்த மாநிலத்தில் பலர் கொல்லப்பட்டு,பெண்கள் கற்பழிக்கப்பட்டு,எஞ்சியவர்கள் வலுக்கட்டாயமாக துரத்தப்பட்டு, சொந்த நாட்டிலேயே தலைநகரில் அகதிகளாக பல ஆண்டுகளாக வாழும் ‘காஷ்மீர் பண்டிட்களை’ பற்றி எழுத முடியாமல் ‘மதிமாறன்’ போன்றவர்களுக்கும் மதிமயக்கம் வந்துவிடும்.

 4. இதில் வேடிக்கை என்னவென்றால் பாப்பாண்டவரையும், கிறித்தவர்களையும் இழுத்து நீதி கேட்கும் மதிமாறன், இப்பொழுது பலஸ்தினத்துக்காக அழும் முஸ்லீம்கள் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் போது, ஈழத்தமிழர்களின் குழந்தைகள் உயிரோடு வன்னியில் புதைக்கப்படும் போது என்ன செய்து கொண்டிருந்தர்கள் என்பதை மட்டும் கேட்க மறந்து விட்டார் போல் தெரிகிறது. முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களைக் கொல்ல ராஜபக்சவுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள். அது போதாதென்று தமிழர்களின் அழிவுக்குப் பின்னர் தமிழர்களின் அப்பாவிக் குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதை எதிர்த்து UNHCR க்கு எதிராக அகில இலங்கை முழுவதும் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டங்களும் செய்தனர். முஸ்லீம் அரேபியநாடுகளை இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் வாக்களிக்குமாறும் வேண்டிக் கொண்டனர். 🙂

Leave a Reply

%d bloggers like this: