பகுத்தறிவு பிரியாணி
மதநல்லிணக்கம், பகுத்தறிவு பேசுகிற பலர்; திபாவளியன்றும் Christmas ன் போதும் தங்கள் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிடும்போது… ஏன் ரம்ஜானுக்கு மட்டும் முஸ்லீம்களிடம் பிரியாணி எதிர்பார்க்கிறார்கள்?
ரம்ஜானுக்கும் தங்கள் வீட்டில் பிரியாணி செய்தால்.. பகுத்தறிவுக்கும் மதநல்லிணக்கத்திற்கும் எதுவும பிரச்சினையாகிவிடுமா?
என் மீது தொடர்ந்து சுமத்தப்படுகிற குற்றச்சாட்டு,
“நீ முஸ்லிமிடம் பணம் வாங்கிக்கிட்டுதான் இந்து மதத்தை திட்ற“ என்பது.
ஆனால், ரம்ஜானின் போதும் HALF மட்டன் பிரியாணி இல்ல… குவாட்டர் குஸ்கா கொடுக்கக் கூட ஆளில்லை.
நண்பர்களில் பலர் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களுமாக இருக்கிறார்கள்.
தனது குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த விஷேசங்களை மத ரீதியாக நடத்துவது,
வேண்டிக் கொண்டு அடிக்கடி குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு போவது. தனது தமிழ் உணர்வையும் மீறி, தீவிரமான மத உணர்வோடு குழந்தைகளுக்கு கிறித்துவ, இஸ்லாமியப் பெயர்கள் வைப்பது,
ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பம் மறந்தாலும் அவர்களை நினைவுப்படுத்தி சர்ச்சுக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்துப் போக வாசலில் காத்திருப்பது,
தவறாமல் தொழுகை நடத்துவது, குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கத்தை கட்டாயப்படுத்துவது,
இப்படியாக எல்லா வழிகளிலும் மத அடையாளங்களோடு வாழ்ந்து கொண்டு என்னைப் பார்த்தால் மட்டும் பகுத்தறிவு பேசுவது….
ஏன்அப்படி..?
ஒருவேளை கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜானின்போது எனக்கு பிரியாணி கொடுக்க வேண்டி வரும் என்பதற்காகவா?
பகுத்தறிவு என்பது தனிமனித சம்பந்தமான ஒன்று இதை யாரிடமும் திணிக்க இயலாது, திணிக்க கூடாது, திணிக்கவும் முடியாது. மேலும் நீங்கள் குறிப்பிடும் என்னைப்போன்ற இசுலாமியர்கள் தீவிர பகுத்தறிவு பேசினாலும் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறது. மேலும் பகுத்தறிவு என்பது வெரும் இறை மறுப்பு மட்டுமல்ல.
ஒண்ணு, உமக்கு பிடிச்ச மதத்தை கட்டிகிட்டு மதவாதியா இரும். இல்ல பகுத்தறிவாதியா இரும். ரெண்டு கெட்டானா இருக்க வேண்டாம். அப்படி ரெண்டு கெட்டானா இருக்கிறதுல உமக்கு என்ன பெருமை.