வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க

vadivelu

வந்த, ‘சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை பற்றி என்ன சொல்றீங்க?’ என்றால்..
வராத ஸ்பெக்ட்ரம் ஊழல் ‘தீர்ப்பை’ வரவேற்று பொங்குகிறார்களே..? இந்தக் கோமாளித்தனங்களுக்கு ஒரு முடிவோ எல்லையோ கிடையாதா?

September 28

திருவள்ளுவர் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது முந்தைய திமுக அரசு. ஆட்சிக்கு வந்த உடனேயே அதை மாற்றி, இந்து பார்ப்பன சமஸ்கிருத நாளான சித்திரை ஒன்றையே மீண்டும் தமிழ்ப்புத்தாண்டாக நிறுவினார் அம்மா.
அம்மாவின் தமிழ் விரோத நடவடிக்கையை மறந்தும் கண்டிக்காத முற்போக்காளர்கள் சொல்கிறார்கள்..
‘ஊழலுக்கு எதிரான இந்தத் தீர்ப்பின் மூலமாக, தமிழ் விரோத இந்து மத சக்திகள் தமிழகத்தை கைப்பற்றி விடுவார்களாம்’

September 28

அரசியல் ஆய்வோ, தெளிவோ இல்லாத சாதாரண தொண்டர்களாக இருக்கிற அதிமுகவினர் அம்மா கைது குறித்து, ‘சுப்பிரமணிய சுவாமி ஒழிக, கருணாநிதி ஒழிக’ என்று சம்மந்தப்பட்ட அரசியலுக்குள்ளே முழங்குகிறார்கள்.

அரசியல் ஆய்வும் தெளிவும் நிறைந்த மேதைகளோ, அதற்கு நேர் எதிராக பட்டையை கிளப்புகிறார்கள்.
அதில் ஒரு மேதை நேற்று டி.வியில், ‘காவேரி பிரச்சினையில் சட்ட ரீதியாக அம்மா எடுத்த அதிரடி முடிவுகளால பாதிக்கப்பட்ட கன்னட வெறியர்கள், அம்மா மீதும் தமிழர்கள் மீதும் வெறிகொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் பெங்களுரில்…. இந்த தமிழ் இன விரோதிகளை..’ என்று வீரம் பொங்க பொங்க பேசினார்.

வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க.

September 29

‘சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்.’
அம்மா ஜெயிலுக்குப் போனாலும் போனாங்க… இந்த திமுக எதிர்ப்பு ‘நடுநிலை’களும் கட்சிகாரர்களும், மந்திரி சபையும் செய்கிற காமெடி சிரிச்சி.. சிரிச்சி.. கண்ணுல தண்ணியே வந்திருச்சி.

September 30

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தன்னை கைது செய்தபோது கூட அம்மா வை கண்டிக்காமல் காவல் துறையை மட்டுமே கண்டித்த அய்யா பழ. நெடுமாறன் கூட, அம்மாவிற்கு வழங்கிய தண்டனையை வரவேற்று இருக்கிறார். வாழத்துகள்.

அம்மா ஊர்ல இல்ல என்கிற தைரியமா?

September 28

தன் தலைவரின் நினைவிடத்திற்கு வண்டியில் போனவர்களை வழிமறித்து, ‘கலவரம் செய்கிறார்கள்’  என்று காரணம் காட்டி பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை,

இப்போது கலவரம் செய்கிறவர்களுக்கு பாதுகாப்பாக பந்தோபஸ்துக்கு செல்கிறது.

September 28

நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..

நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..

thank-you

புரட்சித் தலைவி அம்மாவிற்கு எதிராக வந்திருக்கிற தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர்.. திறந்திருக்கிற கடைகளை குறிப்பாக வாழப்பழம் விற்கிற வண்டி, ஜிகர்தண்டா கடை, டிபன் கடை, கையேந்தி பவன், மெடிகல் ஷாப் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறார்கள்.

இப்படி எல்லாம் தங்கள் கோபத்தை வெளிபடுத்துகிற அவர்களிடம் ஒரு கண்ணியம் இருக்கிறது. ‘டாஸ்மாக்’ மீது எந்த தாக்குதல்களும் நடத்தாதது… ஒரு அவசரம் என்றால் அதானே நமக்கு….
உண்மையில் பாராட்டப்படக் கூடிய பண்பு இது.

நன்றி.. நன்றி.. நன்றி..

September 27 மாலை.

‘இந்தத் தீர்ப்பு ஜெயேந்திர சரஸ்வதி, பா.ஜ.க., சுப்பிரமணிய சுவாமி, மற்றும் பார்ப்பன கும்பல்கள் செய்த சதி. இந்தத் இந்துத்துவ-தமிழர் விரோத சக்திகளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ –

அதிமுக ஆதரவை ரகசியமாக வைத்துக் கொண்டு, திமுக எதிர்ப்பை பகிரங்கமாக செய்யும் ‘முற்போக்கு தமித்தேசிய வாதிகள்’ இப்படியாக.. இன்னும் ஏன் தமிழர்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருக்கிறார்கள்.
Facebook ல வழக்கமா இப்படி எழுதுறவங்கக் கூட இப்ப அமைதியா இருக்காங்களே? வேற எதாவது பயங்கரமான திட்டத்தோடு இருப்பாங்களோ? எதுக்கும் ஜாக்கிரதையா இருப்போம்.

September 27 மாலை.

எல்லாம்.. நேரம்..?
கடந்த தேர்தலில் ‘ஊழலுக்கு எதிரான கூட்டு’ என்ற ஒரே காரணத்தைச் சொல்லி அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு மிகத் தீவிரமாக முயற்சித்து தோல்வியடைந்த, கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் சொல்கிறார்,
“லஞ்சம், ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்க்கும்.”

நடிகர் வடிவேலுக்கு வாய்ப்பு இல்லாத கொறையே தெரியல..

September 27 மாலை.

‘அம்மா தொடர்ந்து பதவியில் இருந்தால்.. எப்படியும் தனிஈழம் வாங்கிக் கொடுத்துடுவாங்க.. அதை தடுப்பதற்கான இந்திய அரசின் சதி தான் இந்தத் தீர்ப்பு’
யாராவது ஒரு தமிழ் விஞ்ஞானி கண்டிப்பா சொல்லுவாரு..

September 27 இரவு.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை குறி வைத்து சுட்ட அம்மா அரசை எந்த வார்த்தையாலும் மென்மையாக கூட கண்டிக்காமல்,
தந்திரமாக போலிஸ் குறித்து மட்டும் நான்கு வார்த்தையில் ஒப்புக்குக் கண்டித்துவிட்டு, (அம்மா இலாகா) அந்த ரத்தம் காய்வதற்கு முன்பே, ‘தனிஈழத்திற்கு தீர்மானம் போட்ட புரட்சித் தலைவி வாழ்க’ என்று போஸ்டர் ஒட்டியவர்கள், அம்மாவுக்கு வழங்கிய தண்டணைக் குறித்து இப்படி சொல்கிறார்கள்..
‘ஊழலை விட, ஜாதி வெறி மிக ஆபத்தானது. மத, ஜாதி வெறி சக்திகள் நுழைந்து விடும் ஜாக்கிரதை’

September 28  காலை.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தன்னை கைது செய்தபோது கூட அம்மா வை கண்டிக்காமல் காவல் துறையை மட்டுமே கண்டித்த அய்யா பழ. நெடுமாறன் கூட, அம்மாவிற்கு வழங்கிய தண்டனையை வரவேற்று இருக்கிறார். வாழத்துகள்.

அம்மா ஊர்ல இல்ல என்கிற தைரியமா?

*

தன் தலைவரின் நினைவிடத்திற்கு வண்டியில் போனவர்களை வழிமறித்து, ‘கலவரம் செய்கிறார்கள்’  என்று காரணம் காட்டி பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை,

இப்போது கலவரம் செய்கிறவர்களுக்கு பாதுகாப்பாக பந்தோபஸ்துக்கு செல்கிறது.

யார்..?

வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க.

தமிழ்..?

ramadoss

மருத்துவர் அய்யா ராமதாசின் மகன் வழி பேத்தி சம்யுக்தாவுக்கும், மகள் வயிற்று பேரன் பிரித்திவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

தமிழசை, தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பெயர் பலகைகள் என்று தமிழ் உணர்வோடு இருக்கும் அய்யா மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் தமிழ்ப் பெயர்கள் இல்லை.

September 25

ஆயிரம் ஜென்மங்கள் ரஜினி – அரண்மனை சுந்தர் சி

??????????????????????? Aranmanai-Sundar-C-1ஆயிரம் ஜென்மங்கள் தான் அரண்மனை. அதில் ரஜினி நடித்த வேடத்தில்தான் இதில் சுந்தர் .சி, நடித்திருக்கிறார். அதனால்தான் ரஜினி போலவே கண்ணாடி போலும். அதில் ரஜினி டாக்டர், இதில் சுந்தர் சி வக்கில்.

மத்த ‘மகாபெரியவா’ எல்லாம் ஹாலிவுட், அய்ரோப்பிய, ஈரானிய, கொரிய படங்களை அவர்கள் பெயரிலேயே கதை, திரைக்கதை, இயக்கம் என்று போட்டுக் கொண்டால்…சுந்தர் சி மட்டும் ‘அம்மையப்பன் தான் உலகம். உலகம் தான் அம்மையப்பன்’ என்று தமிழ் படங்களையே சுட்டு தன் பெயரில் போட்டுக் கொள்வார்.

அப்படிதான் ‘சபாஷ் மீனா – பலே பாண்டியா’ இரண்டையும் படு பச்சையாக தழுவி ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்று செமத்தையாக அள்ளிக் கொண்டு சென்றார்.

அவர் செய்த சாதனைகளில் இதெல்லாம் கூட பெரிதல்ல; இளம் இயக்குநர்கள் எடுக்கிற குறுபடப்போட்டியில் நடுவராக அமர்ந்து, ‘அது நொள்ளை இது சொள்ளை’ என்று முகத்தில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் எப்படி இவரால் சீரியசான முகபாவனைகளோடு சொல்ல முடிகிறது? அந்த நடிப்பை கொஞ்சமாவது அவர் நடிக்கும் திரைப்படத்தில் காட்டியிருந்தால் சுந்தர் சி நடிப்பில் ‘ஹாலிவுட்’டுக்கே சவால் விட்டிருக்கலாம்.

அடுத்தவன் கற்பனையை, சிந்தனையை, உழைப்பை தனதாக்கிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாதிக்கிற இவர்கள் தான், திருட்டு விசிடி யை கடுமையாக எதிர்த்து பொங்குகிறார்கள்.

அரண்மனையில் பெண்ணுக்குள் புகுந்த பேயை ஓட்டுகிறார் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் அவரைப்போன்ற இயக்குநர்களை பிடித்தாட்டும் இந்த ‘காப்பி பேயை’ எந்த பூசாரியை வைத்து ஓட்டுவது?

September 24

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

பொறியாளன் சினிமாவும் புரட்சிகர இயக்குநர்களும்

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

576071_128811927260348_627208727_n

கவிஞர். தமிழேந்தி (Tamizhendi Tamil)
பெரியார், தமிழ்த் தேசியம், டாக்டர் அம்பேத்கர் வழி தலித் அரசியல் என்று தொடர்ந்து செயல்படுபவர். அய்யா வே. ஆனைமுத்து தலைமையிலான மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியில் தீவிரமாக இயங்குபவர்.

கட்சிகளைத் தாண்டி மார்க்சிய இயக்கங்களோடும் மற்ற முற்போக்கு அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களிலும் நீண்ட பயணம் செய்து கலந்து கொள்பவர். அய்யா ஆனைமுத்துவைப் போலவே எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குபவர். கவியரங்குளில் சந்தத்துடன் அனல் பறக்கும் தனது கவிதைகளால் எழுச்சியூட்டுபவர்.

தனது அறிவு, வயது வித்தியாசம் இவை எதுவும் அவருக்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை; இளைய எழுத்தாளர்களை மனமகிழ்ச்சியோடு கொண்டாடுவதில்….

இனிய தோழர் சமரன் (Samaran Nagan) நடத்தும் மக்கள் போராளி இதழில் என்னுடைய பேச்சு குறித்து அய்யா தமிழேந்தி அவர்கள் எழுதியதை இங்கு பிரசுரிக்கிறேன்.

*

அண்மையில் ‘பெரியார் ஒருவர்தான் தலித் தலைவர் அம்பேத்கரியல் பார்வை’ என்ற தலைப்பில் சென்னைப் பெரியார் திடலில் தோழர் வே. மதிமாறன் ஆற்றிய உரையை இணைய தளத்தில் காண நேர்ந்தது. முற்றிலும் புதிய கோணத்தில் பெரியாரை மிகச் சரியான முறையில் அணுகி இருந்தார்.

தன் உரையில் தொடக்கத்திலேயே பெரியாரின் பார்வை ஒரு எக்ஸ்ரே பார்வை அதில் எந்த வகையான பக்கச் சார்புக் கண்ணோட்டத்திற்கும் (NO SENTIMENTS) இடமில்லை என்று துல்லியமாக வரையறுப்புச் செய்திருந்தார்.

‘கும்புடுறேன் சாமி’ என்பது அடிமைச் சொல். ‘நமஸ்காரம்’ என்பது ஆதிக்கச் சொல். ‘வணக்கம்’ என்பதே கலகச்சொல் என் முன்னுரையுடன் தன் உரையக் கலகலப்போடு தொடங்கும் மதிமாறன், ‘வணக்கம்’ என்ற சொல்லின் கதாநாயகனாகப் பெரியாரை காண்பது பொருத்தமே.

இந்த இடத்தில் கடந்த காலத்தின் ஒரு வரலாற்றுப் பதிவையும் அவர் நம் கண்முன் வைக்கிறார். காரைக்குடிப் பகுதியில் முந்தைய தன்மான இயக்க வீரர்களான முதுபெரும் தோழர்கள் என்.ஆர். சாமி, காரைக்குடி இராம. சுப்பையா போன்றவர்கள் நடுத்தெருவில் நின்று கொண்டு போவோர் வருவோர்க்கெல்லாம் ‘வணக்கம்’ ‘வணக்கம்’ என்று கூறி இந்தச் சொல்லை மானமீட்புச் சொல்லாக அறிமுகப்படுத்தியுள்ளது எண்ணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

பெரியார் மீது தொடர்ந்து கூறப்பட்டு வரும் பழிப்புரைகளின் மிக முதன்மையானது ‘அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் பகைவர் (தலித் விரோதி) என்பதுதான். இப்பழிச்சொல்லை மறுத்து மிக நேர்மையான பல கருத்துகளைத் தோழர் மதிமாறன் தன் உரையில் முன் வைக்கிறார்.

தாழ்த்தப்பட்டோர் மீது இழைக்கப்படும் கொடுமைகள் பற்றித் தாழத்தப்பட்டோரிடமே சென்று பேசிக் கொண்டிருப்பது மிகப் பெரிய மோசடி. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் பிறக்க நேர்ந்த பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டில் வாழ்ந்த எல்லாப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் நடுவிலும் போய்த்தான் தாழத்தப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகத் தொடரந்து பேசினார். போராடினார்.

தேவர், வன்னியர், முதலியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச்சாதியர் பெருமளவில் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும் மிகக் கடுமையான சொற்களால் அவர்களின் சாதி ஆதிக்கத்தைக் கண்டித்தார் எனத் தோழர் மதிமாறன் குறிப்பிடும் கருத்து மிகப் பரவலாக எடுத்துச் செல்லப் பட வேண்டிய உண்மைக் கருத்தாகும்.
‘பறையர் பட்டம் தொலையாமல் உங்கள் சூத்திரப் பட்டம் தொலையவே தொலையது’ எனப் பல கூட்டங்களில் பெரியார் பேசியுள்ளதை இங்கே நினைவுகூரலாம்.

முதுகளத்தூர் கலவரத்தின் போது மற்றெல்லா வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளும் முத்துராமலித் தேவர் பக்கம் நிற்க, பெரியா ஒருவர்தான் தேவரைக் கைது செய்து சிறையில் போடக் காமராசரை நெருக்கினார் என்ற உண்மை வரலாற்றையும் தோழர் தம் உரையில் பதிவு செய்துள்ளார்.
தீண்டப்படாதார் எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தனியே ஒதுக்கி வைத்து, அவர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ஆதிக்கச் சாதியனரின் கருத்தியலில் மிக முதன்மையானது அவர்கள் ‘மாட்டுக்கறி உண்ணுவோர்’ என மட்டமாகக் கருதும் இழிந்த மனநிலைதான். இதற்குத் தனது உரை வழி சரியான சவுக்கடி தருகிறார் மதிமாறன்.

உணவுப் பிரிவில் சைவம், அசைவம் என இருவகை உண்டு. இதவே மோசடியானது. இதில் அசைவப் பிரிவில் இரண்டு வகை நடைமுறையில் உள்ளது அதை விட மோசடியானது. 1. மாட்டுக்கறி உண்போர் 2. மாட்டுக்கறி தவிர்த்த மற்றெல்லாப் புலால் உணவு வகையும் உண்போர்.

தம்மை இன்று சைவர்களாக (மரக்கறி) உணவளார்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்கள் வேத காலம் முதலே மாடு, குதிரை உள்ளிட்ட எல்லாவற்றையும் அடித்துக் கொன்று தின்றிருக்கிறார்கள்.
வரலாற்றில் ஈடிணையில்லாத வேத மறுப்பாளனாக பார்ப்பனியத்தின் மாபெரும் எதிரியாகத் தோன்றினான் புத்தன். உழவுத்தொழில் செய்யவே மாடுகள் இல்லாதபடி இரக்கமற்ற இந்தப் பார்ப்பனர்கள் வேதத்தின் பேரால் யாகம் என்ற பொய்யுரையால் எல்லா மாடுகளையும் அடித்துக் கொன்று தின்ற அட்டூழியத்தை எதிர்த்துப் புத்தன் தோன்றுகிறான். மாடுகளைப் பாதுகாக்க எழுந்த இயக்கமே புத்தனின் இயக்கம். புத்த மத்தின் வீச்சால் பார்ப்பனியம் ஆட்டம் காணுகிறது.

எப்படியேனும் தங்கள் மதத்தைப் பாதுகாத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் பார்ப்பனர்களுக்கு உருவாகிறது. அதன் விளைவாகவே தாங்கள் மிகவும் விரும்பிச் சுவைத்து உண்டு வந்த மாட்டுக்கறி உணவைத் துறந்து சைவ உணவுககு அவர்கள் மாறுகிறார்கள்.

அண்ணல் அம்பேத்கரின் இந்த அரிய கருத்தைத் தகுந்த இடத்தில் மேற்கோளாக்கிவுள்ள மதிமாறன், ரிக் வேத காலத்தில் எங்கும் பார்த்தாலும் தீக் குண்டம் எரிந்து கொண்டிருந்தது. மாடு, குதிரை போன்றவை எப்போதும் அதில் வெந்து கொண்டிருந்தன என மிக அழகாக எடுத்துக் காட்டி பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தை அம்பலபடுத்துகிறார்.

மாடு உண்ணார் மேலோர், உண்போர் கீழோர் என்கிற வஞ்சகமான பரப்புரையை பார்ப்பனர் வெற்றிறெச் செய்து விட்டனர். மிகக் கூர்மையாக நோக்கினால் இந்திய வரலாறு என்பதே பார்ப்பனியத்திற்கும் பவுத்தத்துக்குமான போராட்டமே என அணண்ல் அம்பேத்கர் சொன்னதை தனது உரையில் நிரூபிக்கிறார் தோழர் மதிமாறன்.

இஃது மிக மிக அருமையானதோர் கருத்தாகும்.
‘ஆச்சாரம் கடைபிடிப்பத்தல்’ என்பதே தீண்டாமைக்கு உரம்பாச்சும் உயிர்ச்சொல் வாழ்வியல் நடைமுறை என்கிற தோழர் மதிமாறனின் கூற்று மிகவும் நுட்பமானது.

‘பெரியாரின் இறுப்புகளில் ஒன்று, அவர் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை மக்களிடையே பரவலாக அறிமுகப்படுத்திய கலகச் செயல்தான். இந்தியாவிலேயே இடைநிலைச்சாதியார் நடுவில் இதனை முன்னெடுத்த ஒப்பற்ற தலவர் பெரியார் ஒருவரே என்ற மதிமாறன் கூற்றில் உடன்படதார் யார்?

பொதுவில் வைணவன்- சைவன் போராட்டமும் இந்த அடிப்படையில்தான் நடந்துள்ளது. இரமாயணத்தில் இராமன் வைணவன் அவனுக்கு எதிரியாக காட்டப்படும் இராவணன் சைவன். தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் கூட, பெரியார் இராமாயணம் எரிக்கப்பட வேண்டும் என்று சொன்ன போது வாய் மூடிக் கிடந்தார். ஆனால் பெரியபுராணமும் கூடவே எரிக்கப்படவேண்டும் என்று சொன்னபோது, ‘பார்த்தீரா பார்த்தீரா, பெரியார் ஒரு வைணவர்; அதனால்தான் அவர் சைவத்தை எதிர்க்கிறார்’ என்று சொன்ன மோசடிக்கருத்தியலையும் மதிமாறன் அம்பலப்படுத்துகிறார்.

அவர் தன் உரையின் இடையே, பெரியார், முழுச் சோம்பேறியான குசேலனின் கதையையும் குத்திக் கிழித்துள்ள பாங்கை நகைச்சுவையோடு பதிவுசெய்கிறார்.

10592556_904965682850873_1861563877_n

தோழர் மதிமாறன் உரையில் மிக முதன்மையான மற்றொரு பகுதி பெரியார் தலித் தலைவரான அயோத்திதாசரை வேண்டுமென்றே இரட்டடிப்புச் செய்துவிட்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை மறுத்துள்ள பாங்குதான்.
நடுநிலையோடு ஆராய்ந்தால் அண்ணல் அம்பேத்கரே அயோத்திதாசரை குறிப்பிடவில்லை. அவர் இலட்சுமிநரசு என்கிற தலித் அல்லாத தலைவரைதான் பாராட்டி எழுதியுள்ளார். என். சிவராஜ் அவர்களைப் பாராட்டி இருக்கிறார். ஆனால், உண்மையில் பெரியார், ‘அயோத்திதாசர் தனக்கு முன்னோடித் தலைவர் என்று பதிவு செய்துள்ளார்.

‘அம்பேத்கர் என் தலைவர்’ என்று தன் தலைமேல் வைத்துக் கொண்டாடி இருக்கிறார். உண்மைகள் இப்படி இருக்கப் பெரியார் மீது வேண்டுமென்றே பழிசொல்வது அபாண்டமானது என்கிற நேர்மையான பதிவைத் தன் உரையில் மதிமாறன் வெளிப்படுத்துயுள்ளார்.
தமிழில், பார்ப்பனர் அல்லாதர் இயக்கம் கண்டுள்ள வெற்றியை – நீதிக்கட்சி அரசை அம்பேத்கர் பாராட்டியுள்ள தகவலையும் மதிமாறன் மறவாமல் பதிவு செய்துள்ளார்.

இப்போதுகூட கோயில் நுழைவுப் போராட்டத்தில் தவறான ஒரு செய்தி தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராடத்தை முன் நின்று நடத்தியவர் வைத்தியநாத அய்யர் என்ற தவறான கருத்தையும் தோழர் மதிமாறன் தமது உரையில் மறுத்துள்ளார்.

உண்மையில் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துக்கொண்டு சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தான் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளனர்.

1939 ல் மதுரைக் கோயில் நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே 1929 ல் ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் போராட்டம் நடைபெற்றது. குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் உள்ளிட்டோருடன் ஏராளமான தாழ்த்தப்பட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

கோயிலுக்குள் சென்ற எல்லோரையும் வெளியே வரமுடியாதவாறு மூன்று நாட்கள் ஆதிக்கசாதியார் பெரியபூட்டாக போட்டு அடைத்து வைத்து விட்டனர். அந்த மூன்று நாள்களும் கோயிலுக்குள் அடைப்படிருந்த தோழர்களுக்குப் பெரியாரின் மனைவி நாகம்மையார்தான் தனது வீட்டில் உணவு தயாரித்துத் தந்து கொண்டிருந்தார். வெளியூர் சென்றிருந்த பெரியார் வந்தபிறகுதான் தோழர்கள் வெளியே வந்தனர் என்ற செய்தியையும் மதிமாறன் தன் உரையல் பதிவு செய்துள்ளார்.

ஆக, தொடக்கம் முதல் இறுதி வரை கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றலுடன் அமைந்த ஒளி- ஒலி குறுந்தகடாக வெளிவந்துள்ள இவ்வுரைப் பொழிவைத் தோழர்கள் அனைவரும் கேட்டுப் பயன்பெறலாம்.
மதிமாறனுக்கே உரிய நையாண்டி, நுட்பமான எள்ளல், எதிரிகள் மீது போடும் கிடுக்குபிடி போன்றன இந்தப் பேச்சிலும் உண்டு.

தோழரின் உரையில் நான் முரண்படும் ஒரே இடம் அவர் தனித்தமிழை ஆதிக்கவாதிகளின் மொழி, பூர்ஷ்வாக்களின் மொழி என்று குறிப்பிட்டுள்ள கருத்தியலைத்தான்.

மறைமலையடிகள் தனித்தமிழ் பேசினார் என்கிறார். பாவாணர் பேசியதும் தனித் தமிழ் தானே! தாழ்த்தப்பட்ட சேரி மக்களிடம்தான் இன்றும் தமிழ் உயிர்ப்போடு வாழ்கிறது என்கிறார்.
அதெற்கென்ன காரணம்? தாழ்த்தப்பட்ட மக்களின் பேச்சு வழக்கில்தான் பிறமொழி கலவாத தமிழ் அதிகளவில் இடம் பெற்றுள்ளது என்பதுதானே?
தோழர் இக்கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதிக்கம் எங்கிருந்து வந்தாலும் எதிர்ப்போம். சாதியக் கருத்தியலை எதிர்ப்போம். ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் ஒற்றுமையைக் கூர்மை படுத்துவோம்.

– கவிஞர். தமிழேந்தி
*
தொடர்புக்கு: அபசகுனம் வெளியீடு –/ கோவை / விலை ரூ.35.
97508 71000 -/ 91594 30004

இந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

மகாத்மா: விமர்சனப்படுத்துவது தேவையானது, ஆரோக்கியமானது, சுவாரசியமானதும் கூட

சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகிதான் !

தத்துவம் 501: ஜே.கிருஷ்ணமூர்த்தியும் முத்துக்காளையும்

Krishnamurti 02 muthukalai-453

//இறப்பு எங்கும் இருக்கிறது. ஆனால் நாம் அதனுடன் வாழ்வதில்லை -ஜே.கிருஷ்ணமூர்த்தி//

தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர்-சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்

1800860_521920681278860_867745978_nஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா

sign 003

ராவண தேசமும் இராவண காவியமும்

அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பேரன்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

6846680097_993cb47839_m
இன்று காலை இந்தோனேசியாவிலிருந்து தோழர் தனவனம் (Thana Vanam.) தொலைபேசியில் அழைத்து பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னார்.

“புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு அவ்வளவு ஏன் ஆசிரியர் தினத்திற்கும் கூட நாம் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், பெரியார் பிறந்தநாளுக்கு வாழத்துகள் சொல்லிக் கொள்வதில்லை.
இவை எல்லாவற்றையும் விட சிறப்பான நாள் பெரியார் பிறந்தநாள் தான். இந்த நாளை இனி நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிற நாளாக பழகிக் கொள்ள வேண்டும்” என்றார்.

ஆமாம். தோழர் தனவனம் சொன்னதைப் போல், நாம் ஒருவருக்கொருவர் பிறந்த நாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம்.
இனிய பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள்.

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

பெரியாரின் ஊழல்

‘அஞ்சான்’ வழங்கும் துணிச்சல்

surya2

//நான் எப்ப சாகணும் கிறதை நான் தான் முடிவு பண்ணனும் …லிங்குசாமிசார். நீங்க முடிவு பண்ணக் கூடாது..(அஞ்சான் இண்டெர்வெல் )// -Manushya Puthiran.

தற்கொலை பண்ணிக்கிறவங்களுக்குதான் இந்த உரிமை பொருந்தும். கொலை செய்யறவங்க மனுப்போட்டு கெஞ்சி கேட்டுக்கிட்ட செய்வாங்க?

August 30

நாயகன் மாறுவேடமாக முகத்தில் பரு அல்லது தழும்பு வைத்துக் கொண்டால் அவரை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வில்லன்கள் மூடர்களாக இருந்தது எம்.ஜி.ஆர் காலம்.

நாயகன் சாப்பிட்டு முடித்தவுடன் பல் குத்தும் குச்சியை தூர வீசி விட்டால், அவனை யாரென்றே தெரியாமல், ‘தம்பியாக இருப்பானோ’ என்று கூட சந்தேகிக்கக்கூட முடியாத அளவிற்கு, வில்லன்கள் கூமுட்டைகளாக இருப்பது நவீன தொழில் நுட்பம் வளர்ந்த காலம்.

‘வாயில குச்சி வைச்சிருந்தா தாதா
வெறும் வாயா இருந்தா சாதா’
அஞ்சான் வழங்கிய அசைக்க முடியாத அங்க அடையாளம்.

‘ராஜு பாய் காதலியின் தந்தை மும்பை காவல் துறை அதிகாரி. அதனால் நம்மை பற்றிய தகவல் ராஜு பாய் முலமாகத்தான் போகிறது’ என்று அடியாட்கள் அரசல் புரசலாக பேசுவதினால், ராஜு பாய் தன் காதலியை தவிர்க்கிறார்.

பிறகு தன் தாதா நண்பனை அவமானப்படுத்திய மும்பையின் நம்பர் – 1 தாதாவை கடத்தி வந்து நண்பனிடம் நற்பெயர் பெறுகிறார் ராஜு பாய்.
அதற்கு சன்மானமாக நண்பன், நவீன கார் ஒன்றினுள் ராஜு பாயின் காதலியை பார்சலாக உள்ளே வைத்து பரிசு தருகிறார்.

அவர்கள் ஜோடியாக பாடி, ஆடி முடிப்பதற்குள், தாதா நண்பன் கொலை செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியான காட்சியிலேயே ராஜு பாய் சுட்டு வீழ்த்தப்படுகிறார்.

‘சரி இப்ப என்ன அதுக்கு?’ என்று கேட்கிறீர்களா.

இல்லிங்க.. அதன் பிறகு,
ராஜு பாயின் Flashback க்கில்; தாதா நண்பன், காதலி, ராஜு பாய் மூவரும் மும்பைத் தெருக்களில் ஜாலியாக சுற்றித் திரிவதும், அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஆழமான நட்பை ‘காதலி’ புரிந்து கொள்வதும், கர்நாடக சங்கீத பாடகரை வம்புக்கிழுப்பதும் பிறகு பல பழைய இந்திப் பாடல்களுக்கு வீதியில் குத்தாட்டம் போடுவதுமாக இருந்திருக்கிறார்கள்.

இதெல்லாம் எப்போ நடந்தது?
தாதா நண்பன் ஆவியா வந்து ஆடுனாறா?
அப்போ சுடப்பட்ட ராஜு பாய் அப்பவே திரும்பி வந்துட்டாரா?

அப்பவே வந்திருந்தா… அவரே தம்பி கிருஷ்ணாவா ஏன் வரணும்? அதுக்குப் பிறகு ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி கதை சொல்லனும்? அப்பவே A Film by… ன்னு போட்டிருந்தா… எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? யாருக்கு?
பாத்தவங்க.. எடுத்தவங்க.. எல்லாருக்கும் தான்.

குறிப்பா டாக்சி டிரைவராக வரும் சூரி, படத்தின் கடைசிக் காட்சியில், ராஜு பாயை தம்பி கிருஷ்ணா என்று நினைத்து எகத்தாளமாக பேச,

சாய்பாபா வாயில இருந்து லிங்கம் எடுத்த மாதிரி, ராஜு பாய் தன் வாயிலயிருந்து குச்சியை வெளியே நீட்டிக்காட்டின உடனேயே… கிருஷ்ணாதான் ராஜு பாய் என்று தெரிந்ததும்
அவரும் அவர் டாக்சி டயரும் பஞ்சராகாமல் இருந்திருக்கும்.
பார்வையாளர்களும்தான்.

*

பரபரப்பாக சொல்ல வேண்டிய கதையை ‘நிதானமா சொல்றோம்’ என்ற நினைப்பில், மெதுவா சவகாசமாக சொல்லியிருக்கிறார்கள். அத இன்னும் நல்லா ஜவ்வா இழுத்தப் பெருமை நம்ம ‘slow motion specialist’ சந்தோஷ் சிவன் ASC,iscக்கு தான்.

September 8

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல