‘அஞ்சான்’ வழங்கும் துணிச்சல்

surya2

//நான் எப்ப சாகணும் கிறதை நான் தான் முடிவு பண்ணனும் …லிங்குசாமிசார். நீங்க முடிவு பண்ணக் கூடாது..(அஞ்சான் இண்டெர்வெல் )// -Manushya Puthiran.

தற்கொலை பண்ணிக்கிறவங்களுக்குதான் இந்த உரிமை பொருந்தும். கொலை செய்யறவங்க மனுப்போட்டு கெஞ்சி கேட்டுக்கிட்ட செய்வாங்க?

August 30

நாயகன் மாறுவேடமாக முகத்தில் பரு அல்லது தழும்பு வைத்துக் கொண்டால் அவரை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வில்லன்கள் மூடர்களாக இருந்தது எம்.ஜி.ஆர் காலம்.

நாயகன் சாப்பிட்டு முடித்தவுடன் பல் குத்தும் குச்சியை தூர வீசி விட்டால், அவனை யாரென்றே தெரியாமல், ‘தம்பியாக இருப்பானோ’ என்று கூட சந்தேகிக்கக்கூட முடியாத அளவிற்கு, வில்லன்கள் கூமுட்டைகளாக இருப்பது நவீன தொழில் நுட்பம் வளர்ந்த காலம்.

‘வாயில குச்சி வைச்சிருந்தா தாதா
வெறும் வாயா இருந்தா சாதா’
அஞ்சான் வழங்கிய அசைக்க முடியாத அங்க அடையாளம்.

‘ராஜு பாய் காதலியின் தந்தை மும்பை காவல் துறை அதிகாரி. அதனால் நம்மை பற்றிய தகவல் ராஜு பாய் முலமாகத்தான் போகிறது’ என்று அடியாட்கள் அரசல் புரசலாக பேசுவதினால், ராஜு பாய் தன் காதலியை தவிர்க்கிறார்.

பிறகு தன் தாதா நண்பனை அவமானப்படுத்திய மும்பையின் நம்பர் – 1 தாதாவை கடத்தி வந்து நண்பனிடம் நற்பெயர் பெறுகிறார் ராஜு பாய்.
அதற்கு சன்மானமாக நண்பன், நவீன கார் ஒன்றினுள் ராஜு பாயின் காதலியை பார்சலாக உள்ளே வைத்து பரிசு தருகிறார்.

அவர்கள் ஜோடியாக பாடி, ஆடி முடிப்பதற்குள், தாதா நண்பன் கொலை செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியான காட்சியிலேயே ராஜு பாய் சுட்டு வீழ்த்தப்படுகிறார்.

‘சரி இப்ப என்ன அதுக்கு?’ என்று கேட்கிறீர்களா.

இல்லிங்க.. அதன் பிறகு,
ராஜு பாயின் Flashback க்கில்; தாதா நண்பன், காதலி, ராஜு பாய் மூவரும் மும்பைத் தெருக்களில் ஜாலியாக சுற்றித் திரிவதும், அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஆழமான நட்பை ‘காதலி’ புரிந்து கொள்வதும், கர்நாடக சங்கீத பாடகரை வம்புக்கிழுப்பதும் பிறகு பல பழைய இந்திப் பாடல்களுக்கு வீதியில் குத்தாட்டம் போடுவதுமாக இருந்திருக்கிறார்கள்.

இதெல்லாம் எப்போ நடந்தது?
தாதா நண்பன் ஆவியா வந்து ஆடுனாறா?
அப்போ சுடப்பட்ட ராஜு பாய் அப்பவே திரும்பி வந்துட்டாரா?

அப்பவே வந்திருந்தா… அவரே தம்பி கிருஷ்ணாவா ஏன் வரணும்? அதுக்குப் பிறகு ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி கதை சொல்லனும்? அப்பவே A Film by… ன்னு போட்டிருந்தா… எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? யாருக்கு?
பாத்தவங்க.. எடுத்தவங்க.. எல்லாருக்கும் தான்.

குறிப்பா டாக்சி டிரைவராக வரும் சூரி, படத்தின் கடைசிக் காட்சியில், ராஜு பாயை தம்பி கிருஷ்ணா என்று நினைத்து எகத்தாளமாக பேச,

சாய்பாபா வாயில இருந்து லிங்கம் எடுத்த மாதிரி, ராஜு பாய் தன் வாயிலயிருந்து குச்சியை வெளியே நீட்டிக்காட்டின உடனேயே… கிருஷ்ணாதான் ராஜு பாய் என்று தெரிந்ததும்
அவரும் அவர் டாக்சி டயரும் பஞ்சராகாமல் இருந்திருக்கும்.
பார்வையாளர்களும்தான்.

*

பரபரப்பாக சொல்ல வேண்டிய கதையை ‘நிதானமா சொல்றோம்’ என்ற நினைப்பில், மெதுவா சவகாசமாக சொல்லியிருக்கிறார்கள். அத இன்னும் நல்லா ஜவ்வா இழுத்தப் பெருமை நம்ம ‘slow motion specialist’ சந்தோஷ் சிவன் ASC,iscக்கு தான்.

September 8

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

One thought on “‘அஞ்சான்’ வழங்கும் துணிச்சல்

Leave a Reply

%d bloggers like this: