ஆயிரம் ஜென்மங்கள் ரஜினி – அரண்மனை சுந்தர் சி
ஆயிரம் ஜென்மங்கள் தான் அரண்மனை. அதில் ரஜினி நடித்த வேடத்தில்தான் இதில் சுந்தர் .சி, நடித்திருக்கிறார். அதனால்தான் ரஜினி போலவே கண்ணாடி போலும். அதில் ரஜினி டாக்டர், இதில் சுந்தர் சி வக்கில்.
மத்த ‘மகாபெரியவா’ எல்லாம் ஹாலிவுட், அய்ரோப்பிய, ஈரானிய, கொரிய படங்களை அவர்கள் பெயரிலேயே கதை, திரைக்கதை, இயக்கம் என்று போட்டுக் கொண்டால்…சுந்தர் சி மட்டும் ‘அம்மையப்பன் தான் உலகம். உலகம் தான் அம்மையப்பன்’ என்று தமிழ் படங்களையே சுட்டு தன் பெயரில் போட்டுக் கொள்வார்.
அப்படிதான் ‘சபாஷ் மீனா – பலே பாண்டியா’ இரண்டையும் படு பச்சையாக தழுவி ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்று செமத்தையாக அள்ளிக் கொண்டு சென்றார்.
அவர் செய்த சாதனைகளில் இதெல்லாம் கூட பெரிதல்ல; இளம் இயக்குநர்கள் எடுக்கிற குறுபடப்போட்டியில் நடுவராக அமர்ந்து, ‘அது நொள்ளை இது சொள்ளை’ என்று முகத்தில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் எப்படி இவரால் சீரியசான முகபாவனைகளோடு சொல்ல முடிகிறது? அந்த நடிப்பை கொஞ்சமாவது அவர் நடிக்கும் திரைப்படத்தில் காட்டியிருந்தால் சுந்தர் சி நடிப்பில் ‘ஹாலிவுட்’டுக்கே சவால் விட்டிருக்கலாம்.
அடுத்தவன் கற்பனையை, சிந்தனையை, உழைப்பை தனதாக்கிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாதிக்கிற இவர்கள் தான், திருட்டு விசிடி யை கடுமையாக எதிர்த்து பொங்குகிறார்கள்.
அரண்மனையில் பெண்ணுக்குள் புகுந்த பேயை ஓட்டுகிறார் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் அவரைப்போன்ற இயக்குநர்களை பிடித்தாட்டும் இந்த ‘காப்பி பேயை’ எந்த பூசாரியை வைத்து ஓட்டுவது?
September 24
மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?
23 hrs · Like · 2 · Remove Preview
Rose Kumar · Friends with Anbu Veera and 8 others
Thozhar kattor gopi kathayai mugadass thirudi, KATHTHI PADAM yaduthathu pola,, suyama sinthingada..
22 hrs · Like
Prabu Jay · Friends with பாவெல் விலாசவ்
அடுத்தவன் கற்பனையை, சிந்தனையை, உழைப்பை தனதாக்கிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாதிக்கிற இவர்கள் தான், திருட்டு விசிடி யை கடுமையாக எதிர்த்து பொங்குகிறார்கள்
22 hrs · Like · 3
வேல்துரை ராஜ்குமார் அயிரம் ஜென்மங்கள் ‘, மலையாள பட ரீமேக்தான்
22 hrs · Like
Prabu Jay · Friends with பாவெல் விலாசவ்
தமிழனின் ரசனையையும் , சிந்தனையையும்
மழுங்கடித்த தமிழ் சினிமாவை விமர்சனம் செய்வது நேரத்தை வீண் அடிக்கும்
செயல்.
21 hrs · Edited · Like
Irfana Rashid பார்க்க வேண்டாமெனும் விமர்சனம் வரவேற்க தக்கதுதான்…நேரம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படும் …
21 hrs · Like · 2
Arokia Rasu Karupar Nagaram ஒரு படத்தக் கூட விடமா பார்க்கிறீங்க..வீட்ல உங்களை கண்டிக்கமாட்டாங்களா…
20 hrs · Like · 2
வே மதிமாறன் ஒரு படத்த பத்தி எழுதுன.. ஒரு படத்தக் கூட விடமா பார்க்கிறதா ஆயிடுமா Arokia Rasu Karupar Nagaram?
18 hrs · Like · 3
Arokia Rasu Karupar Nagaram ம்ம் நடத்துங்க
18 hrs · Unlike · 1
சியாமளா ஷேக்ஸ்பியர் இந்த மகா ஞானிகளை நடுவர்களாக அழைப்பவர்களுக்கு புத்தி வேணும்…