..இதுகூடவா இந்து மதத்திற்கு எதிரானது?

Garuda1

சுற்றுச் சூழல் ஆர்வலர்களாக காட்டுயிர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக பறவைகள் மொழி தெரிந்தவர்களாக நவீன இலக்கியவாதிகளாக

இன்னும் கம்பனிடம் கம்யுனிசம் காண்பவர்கள் பாரதியிடம் உலகின் ஒட்டு மொத்த தீர்வையும் தரிசிப்பவர்கள் பெரியாரை தவிர்ப்பதற்காகவே தலித் மக்கள் துயரம் நினைத்து தூக்கம் வராமல் தவிப்பவர்கள்

சுற்றுச் சூழல் முதல் பெண்ணிய விடுதலை வரை ஆண்டாளின் திருப்பாவையில் ‘பேன்’ பார்ப்பவர்கள்
இந்து வேத, புராண, இதிகாச கதைகளில் காட்டுயிர், இயற்கை பராமரிப்பு வரை தேடிப் பிடித்து சிலாகிப்பவர்கள்

இப்படியாக தூணிலும் துரும்பிலும் சுற்றுச் சுழலை பாதுகாக்கவே அவதரித்திருக்கிற அறிவாளிகள்..
‘தீபாவளி ஒரு பகுத்தறிவற்ற பண்டிகை’ என்று சொல்ல வேண்டாம். சொல்லவும் மாட்டிர்கள்.

பட்டாசு வெடிப்பது சுற்றுச் சுழலுக்கு மாசு ஏற்படுத்தும், மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரனங்களுக்கும். மிக குறிப்பாக பறவைகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். (விஷ்ணுவின் கருடனுக்கே வேட்டு வைக்கும்)

அதனால் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, நரகாசூரன் என்ற கொடியவனை கொன்று ஒழித்த, பாரதியின் கண்ணனை பக்தியோடு நினைத்து, தீபாவளித் திருநாளை எண்ணெய் தேய்த்து குளித்து, பட்சணம் சாப்பிட்டு சுற்றுச் சுழலை பாதுகாப்போம், என்றாவது அறிவிக்கலாமே.

பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்வது கூடவா இந்து மதத்திற்கு எதிரான செயலாகி விடும்?

21 October at 10:06

அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்

தமிழகத்தில் வேற்றுக்கிரக வாசிகள்

ஹுத்ஹுத் – பட்டாசு

தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்

பட்டாசு: வெடித்து சிதறும் தொழிலாளர்கள்

3 thoughts on “..இதுகூடவா இந்து மதத்திற்கு எதிரானது?

  1. I am reading your speeches articles continuously. I am accept Dr. Ambedkar Thanthai Periyar ideology K.muthukannan

Leave a Reply

%d bloggers like this: