எஸ்.எஸ்.ஆர்: தற்கொலைக்கு முயன்றேன் – பெரியார் என்னை அவமானப்படுத்தி விட்டார்
எம்.ஜி.ஆர் முதல் இன்னும் பலரும் தன்னுடைய பிரபலத்திற்காக, அதிகாரத்திற்காக அரசியலை, தான் சார்ந்த கட்சியை பயன்படுத்தியபோதும்;
தன் பிரபலத்தை, தன் பணத்தை தான் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
திரை நடிகர்களிலேயே இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற அரசியல் நிலைக்கு உயர்ந்த பிறகும், அதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி, தலைமை பதவியை நோக்கி பயணித்தவர் இல்லை என்பது அவரின் சிறப்புகளில் முக்கியமானது.
பெரியாரின் கடவுள் மறுப்புக் கருத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பதால் புராணப் படங்களில் மட்டுமல்ல, திரைப்படங்களில் திருநீரு உட்பட எந்த மதத்தின் குறியீடுகளையும் பயன்படுத்தி நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்த உலகின் ஒரே நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
திமுக வின் மீதும் அண்ணாதுரையின் மீதும் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர். அது எந்த அளவிற்கு என்றால், அண்ணா இறந்த போது தற்கொலைக்கு முயற்சி செய்தவர். அதைப்பற்றி அவரே ஒருமுறை ஒரு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.
“பேரறிஞர் அண்ணா இறந்து விட்டார். என்னால் அந்தத் துயரத்தை தாங்க முடியவில்லை. என் தலைவரே இறந்து விட்டார். இனி நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அதனால் அளவுக்கு அதிகமாக மது குடித்து செத்து விடுவது என்று முடிவு செய்து, அதுபோலவே குடித்து கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
நான் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததை அறிந்த தந்தை பெரியார், என்னை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். அவர் என்னிடம் ஒரு நிமிடம் கூட பேசவில்லை. கோபமும் கனிவுமாக என்னைப் பார்த்து,
“என் வயது என்ன? உங்கள் வயது என்ன? நான் மருத்துவமனையில் படுத்திருக்க வேண்டும். நீங்கள் என்னை வந்து பார்த்திருக்கவேண்டும்.’’ என்று சொல்லிவிட்டு சட்டென்று தான் அமர்ந்திருந்த வீல் சேரை வேகமாக தட்டினார். அதற்கு அர்த்தம் ‘உடனே வண்டியை தள்ளு போலாம்’ என்பது. வேகமாக கிளம்பி விட்டார்.
என்னை செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன். அதற்கு மேல் மருத்துவமனையில் இருக்கவும் என்னால் முடியவில்லை. யாரிடமும் சொல்லாமல் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து சுவர் ஏறி குதித்து வீடு வந்து சேர்ந்தேன்.
அன்று பெரியார் என்னை அப்படி பேசாமல் இருந்திருந்தால். நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்“ என்றார்.
திரைப்பட நடிகராக இருந்து கொண்டு இந்த அளவிற்கு, கொள்கையில் உறுதியாக இருந்தது அவரின் சிறப்பு.
நடிகராக வசனங்களில் அவர் பயன்படுத்திய மொழி உச்சரிப்பு, பாவம் அழகு. ஒரு நாட்டுப்புற மனிதனைப் போல, உடல்மொழியும், முக பாவனைகளும் அவர் வெளிப்படுத்திய விதம் யதார்த்தமானது மிக நுட்பமானது. அதை அவர் அவரிடமே இருந்து தான் கொண்டு வந்தார். அவருக்கு மட்டுமே சொந்தமானது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அவர், தனது இரண்டு திருமணங்களையும் ஜாதி மறுப்புத் திருமணங்களாக செய்து கொண்ட அவர்;
பின்னாட்களில் தன்னை அரசியல் அடையாளத்திலிருந்து ஜாதி அடையாளத்திற்கு மாற்றிக் கொண்டது, என்னை பொறுத்தவரை அது ஒரு துயரம்.
மிகப் பெருமான்மையான எண்ணிக்கை கொண்ட ஜாதியை சேர்ந்த பிரபலங்களை பயன்படுத்தி அவர்களின் ஜாதி ஓட்டை தன் கட்சி ஓட்டாக மாற்ற முயற்சித்த திமுக வின் மிக மோசமான தேர்தல் அரசியல் நிலைபாட்டினால் ஏற்பட்ட நீட்சியே திராவிட இயக்கத்திற்குள் ஜாதி உணர்வை தூண்டியது. அது தான் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருக்கும் நேர்ந்தது.
பிறகு அவர் அரசியலில் ஓரம் கட்டப்பட்டதால் அவரின் ஜாதிய ஆதரவு தீவிரமானது. அதுவே அவருக்கான செல்வாக்கை சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பால். ஜாதி அரசியலின் பின்னணியும், முத்துராமலிங்கத் தேவர் தன் உறவினர் என்பதினாலும் அவரின் தேவர் ஜாதி உணர்வு கூடுதலாக அமைந்தது.
ஆனாலும், முன்னணி நாயகனாக நடித்த காலங்களில் அவர் தன் படங்களில் முத்துராமலிங்கத் தேவரை, தன் ஜாதியின் அடையாளமாக பெருமை பொங்க சிவாஜி கணேசன் காட்டியதுபோல் காட்டியதில்லை என்றே நினைக்கிறேன்.
ஜாதியை கடந்து வந்திருந்தால் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், நடிகவேள் எம்.ஆர். ராதாவை தாண்டியும் நம்மால் கொண்டாடப்பட்டிருப்பார். (நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரால் வளர்க்கப்பட்டார் என்று சொல்பவர்களும் உண்டு.)
இருந்தும், கடவுள் மறுப்பை தன் கடைசி மூச்சு வரை கடைப்பிடித்த அவரின் மரணம் கடவுள் மறுப்பாளர்களுக்கு ஒரு இழப்பல்ல; பெருமைமிகு சாட்சி.
நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்
இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!
அன்பு நண்பரே! சாதி அடையாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் உண்மையான கடவுள் மறுப்பாளராக இருக்க சாத்தியமே இல்லை. திரு. எஸ். எஸ். ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வது பண்பான செயல். ஆனால் அவசர அவசரமாக அவரை தேர்ந்த கடவுள் மறுப்பாளராகக் காட்டுவது தவறு.
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
actually SSR father is from devar community and mother a widow from Naidu community, his father follower of Periyar , married the widow from other community at that time was a great achievement
இவர் பிரபல ஓவியர் trotsky மருதுவின் உறவினர் என்றும் அறிகிறேன் ..இதை ஒரு கட்டுரையில் அவர் கூறி இருந்ததாய் நினைவு ….முத்து ராமலிங்கத்தை நேசித்த சிவாஜி கணேசன் ,அவருடைய அரசியல் எதிரியான காமராஜருடன் எப்படி இணைந்து இருந்தார் ?முத்து ராமலிங்கதேவர் அரசியல் ரீதியாக அவரது சொந்த சாதியினரால் நிராகரிக்கப்பட்டவர் …இன்றைய ராமதாஸ் போல!முத்து ராமலிங்கதேவரின் கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் அவரது சாதியினர்தான் என்றாலும் அந்த சாதியை சேர்ந்தவர்கள் அனைவருமே அவரது ஆதரவாளர் இல்லை ….இதுதான் ராமதாசுக்கும் பொருந்தும்