விஜய்; மலையாளிகளை வென்ற மாவீரன்

1413907254_kaththi-in-kerala-1

கேரளாவில் திரையரங்குகள் குறைவு. மலையாளப் படங்களை திரையிடுவதற்கே தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

இந்தச் சூழலில், ‘கத்தி’ திரைப்படம் மொழி மாற்றம் கூட செய்யப்படாமல் கேரளா முழுவதும் நேரடியாக தமிழிலேயே 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

மலையாள சினிமாவின் மீதும் மலையாளிகளின் மீதும் நிகழ்த்தப்பட்டிருக்கிற இந்த ‘கத்தி’ குத்து, பெரிய வன்முறை. தமிழர்கள் மீதும் தமிழ்த் திரைப்படங்ள் மீதும் இந்தி படங்கள் ஆதிக்கம் செய்யததை விட மோசமானது.

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் விஜய் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தபோது, உன்னி கிருஷணன் என்ற இளைஞர் தவறி விழுந்து இறந்து போனார்.

இறந்த உன்னி கிருஷணன் குடுபத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மலையாள சினிமாவிற்கும் மலையாளிகளுக்கும் என் ஆழந்த அனுதாபங்கள்.

*

இதையொட்டி ‘முல்லை பெரியாரில் பிரச்சினை செய்யும் மலையாளிகளை வென்ற மாவீரன்’ என்று புதிய பட்டம் எதுவும் தமிழ்த் தேசியவாதிகள் தந்து விடாமல் இருந்தால், அதுவே அவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் மாபெரும் நன்மை.

26 October எழுதியது.

கத்தி: நிறைய விமர்சனங்களோடு அதிகமாக பிடித்திருக்கிறது

அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்!

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

2 thoughts on “விஜய்; மலையாளிகளை வென்ற மாவீரன்

  1. விஜயின் தாயார் ஒரு மலையாளி என்கிறார்கள். ஒரு மலையாளிப் பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒருவரை மலையாளிகள் ஆதரிப்பது ஒரு பெரிய விடயமா? எனக்கென்னவோ ‘எழுத்தாளர்’ மதிமாறன் ஒரு தமிழரல்லாத “திராவிடர்” ஆகத் தானிருப்பார் என்று தோன்றுகிறது, அதனால் தான் மலையாளிப் பெண்ணின் மகனை மலையாளிகள் ஆதரிப்பதைக் கூட வியந்து, பாராட்டிப் பதிவு போடுகிறார். 🙂

    ///முல்லை பெரியாரில் பிரச்சினை செய்யும் மலையாளிகளை வென்ற மாவீரன்///

    அந்த ஆற்றின் பெயர் ‘முல்லைப்பெரியார்’ அல்ல ‘முல்லைப்பெரியாறு’. தமிழில் ர, ற முக்கியம், கவனம் செலுத்தாது விட்டால் அதன் பொருளே மாறிவிடும். 🙂

  2. mathi, better u stop writing here, because tamil ppl will comment normally at least for the cinema related blogs…if u look at ur posts for last 2 months , hardly ppl commented out..it means NO ONE cares abt ur blogs…..please post this comment!

Leave a Reply

%d bloggers like this: