‘அரசியல் நாகரீகம்’-அரியர்ஸ் இல்லாமல் ‘பாஸ்’

1

நேற்று, மருத்துவர் அய்யா வீட்டின் திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட வைகோவும் ஸ்டாலினும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொண்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்,

‘இது அரசியல் நாகரீகம்’

அன்று கலைஞருக்கு திருமண அழைப்பிதழை தந்து விட்டு, கோபாலபுர வீட்டு வாசலில் நின்று மருத்துவர் அய்யா சொன்னார்,

‘அரசியல் நாகரீகம் தெரிந்தவர் கலைஞர்.’

அடுத்தவர்கள் அரசியல் நாகரீகம் பற்றி பாராட்டிய மருத்துவர் அய்யா, அவரும் அதை பெயரளவிலாவது கடைப்பிடித்திருக்க வேண்டும். ஆனால் அவரோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பிதழே தரவில்லை.

இத்தனைக்கும் மிக அதிகமாக ‘இரட்டைக் குழல் துப்பாக்கியை’ப்போல் இருவரும் தமிழக அரசியலில் வலம் வந்தார்கள். யாருக்கு தராமல் விட்டாலும், தன் குடும்ப திருமண அழைப்பிதழை, கண்டிப்பாக திருமாவளவனுக்குத்தான் தந்திருக்க வேண்டும்.

அரசியல் நாகரீகம் பற்றி மருத்துவர் அய்யா பேசியதும், திருமாவளவனை திட்டமிட்டு புறக்கணித்ததை குறித்து கள்ள மவுனம் காத்து விட்டு;

ஸ்டாலினும் வைகோவும் திருமண நிகழ்ச்சியில் கூச்சமில்லாமல் கொஞ்சி குலாவியதை, அவர்களே ‘அரசியல் நாகரீகம்’ என்று புகழ்ந்து கொள்வதும் தான்,
அரசியல் நாகரீகமா?

*

‘கலைஞரிடம் இன்னும் நான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – டாக்டர் ராமதாஸ்.

தெரியும். அன்புமணி அடுத்த வாரிசு என்பதே, முதல் செமஸ்டரில் அரியர்ஸ் இல்லாமல் நீங்கள் ‘பாஸ்’ ஆனதிற்கு அடையாளம் தானே.

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

இலவசம் : ‘சின்ன அய்யா’ விற்கு ஒரு கேள்வி

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

2 thoughts on “‘அரசியல் நாகரீகம்’-அரியர்ஸ் இல்லாமல் ‘பாஸ்’

  1. தங்களின் வழக்கமான (சாதிப்)பார்வையில் ராமதாஸ் ஐயாவை சாடியிருந்தாலும் அந்த கண்ணோட்டத்தை தவிர்த்துவிட்டுபார்த்தாலும் அவரின் சுயருபத்தை தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருந்தது தங்களின் பதிவு.
    இரத்தின சுருக்கமான நல்ல பதிவு.

  2. வேலுமணி சரவணகுமார் உங்களின் வழக்கமான பாரதிப் பார்வையில் ( வர்ணாஸ்ரமப்படி ) பதிலை அளித்து கொண்டிருங்கள் அந்த கண்ணோட்டம் தான் இரத்தினம்,அது தான் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும் இருக்கும்.

    எழில்மாறன்.ல

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading