தீவிரவாதத்தை விட ஆப்பத்தனாது ‘முற்போக்கு’

இந்து மதத்தை மற்ற மதங்களோடு ஒப்பிட்டு ஒரே அடியாக, ‘எல்லா மதங்களைப்போலும் மோசமானது தான் இந்து மதமும்’ என்று ஆணியடிப்பதே, முற்போக்கு வேடமிட்ட இந்து மனோபாவம் தான்.

‘இந்து மதம்’ என்று ஒன்று கிடையாது. மற்ற மதங்களைப் பார்ப்பதைப்போல் அதைப் பார்க்க முடியாது. மதமாக இருப்பதற்குக் கூட லாயக்கற்றது ‘இந்து மதம்’

20 November at 20:38

‘என்னடா நியாயம் இது?’

புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்

புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

பன்றி அவதாரம் எடுத்த கடவுள்

ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி

கடவுள் அல்ல; களவாணி

தினத்தந்தியின் ராஜபக்சே புகழ்;வைகோ – மதிமுக சீற்றம்

thinathanthi paper-1
தமிழகத்தில் 2008 வாக்கில் இலங்கை அரசைச் சேர்ந்த ‘அம்சா’ என்பவர் விரித்த வலையில், விரும்பிச் சிக்கி ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராகப் பல பத்திரிகைள் செய்தி வெளியிட்டன.

‘அம்சா’ கொடுத்த விருந்தில் பல பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு இலங்கை அரசைக் கவுரப்படுத்தி, தமிழர்களைக் கேவலப்படுத்தினர்.
இலங்கைக்கு இன்பச் சுற்றுலாவும் சென்று வந்தனர்.

அம்சா வலையில் சிக்காத தமிழ் பத்திரிகைகள் ‘நக்கீரன்’ ‘தினத்தந்தி’ இரண்டு மட்டும் தான்.
இக்காட்டனா சூழலில், தமிழர்களுக்கு எதிராக நேரடியானச் செய்தி வெளியிடாத ‘தினத்தந்தி’ இப்போது ராஜபக்சே பேட்டியையே வெளியிடுகிறது.

தினத்தந்தியின் இந்த மோசடியை கண்டித்து, வைகோ தலைமையில் மதிமுக வினர் தினத்தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பல பகுதிகளில் தினத்தந்தி இதழை எரித்தும் இருக்கிறார்கள்.

தேர்தல் அரசியல் கட்சியாக இருந்து கொண்டு, தினத்தந்தி போன்ற செல்வாக்குப் பெற்ற ஊடகத்தை எதிர்த்து முற்றுகை நடத்துவதும் நாளிதழை எரிப்பதும் உண்மையில் பாராட்டக் கூடியது.
மதிமுகவினருக்கும் அதன் தலைவர் வைகோவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

*

வழக்கமாகத் தினமலருக்கு எதிராகக் கொதிக்கிற உணர்வாளர்கள், மதிமுகவைப் போல் தினத்தந்தியை எதிர்த்து முற்றுகை, நாளிதழை எரிப்பது என்று போராட்டம் நடத்துவார்களா? இல்லை… தந்தி டி. வி. யிலிருந்து அடுத்தப் பேட்டிக்ககான அழைப்புக்காகக் காத்திருப்பார்களா?

இன்று (29-12-2014) இரவு 8 மணிக்கு  facebook ல் எழுதியது.

‘எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்’ இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

தாது மணல்: தினத்தந்தியின் ‘துணிவு’ம் தமிழர்களின் துயரமும்; ‘ஆண்டவரே.. கடவுளே..!

தினத்தந்தியின் சாட்டையடி!

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

கயல்: கதறுகிறது காதல்; காப்பாற்றுங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து..

1417089275-6583

இந்திரனின் பொம்பள பொறுக்கித் தனத்தினால், அவனைக் கவுதம முனி, ‘உடலெல்லாம் பெண்குறியாகப் போகட்டும்’ என்று சபித்தான். அதுபோல் தமிழ் சினிமாவை, ‘காலம் முழுவதும் காதலை மட்டும் தான் சொல்லித் தொலைக்க வேண்டும். வேறு எதையாவது சொன்னாலும் அதையும் காதல் வழியாகத்தான் சொல்லவேண்டும்’ என்று எந்த முனிவன் சபித்தானோ தெரியவில்லை.

இந்திய மற்றும் உலகச் சினிமாக்கள் எவ்வளவோ மாற்றங்களைக் கடந்து மக்களின் அரசியல், எளிய மக்களின் வாழ்க்கை; காதலன் – காதலி, கணவன் – மனைவி, சகோதர-சகோதரிகள், தாய் – மகன் இப்படியாக ‘ஆண்-பெண்’ உறவில் சமூகம் மற்றும் பொருளாதராத்தை ஒட்டி எழுகிற பிரச்சினைகள், மனப் பிரச்சினைகள், சிக்கல்கள், தீர்வுகள் என்று பயணிக்கிறது.

ஆனால், தமிழ் சினிமாக்காரர்களோ, ‘காதல் கோடு’ தாண்ட முடியாமல் தவிக்கிறார்கள். இதிகாசகாலத்திலேயே, ‘பத்தினி சீதை’ கூடத் தன் ‘அவதாரபுருஷன்’ போட்ட ‘கோட்’ டை தாண்டியிருக்கிறார். இந்த நவீன காலத்தில் இதிகாசகாலத்தை விடப் பிற்போக்காக இருக்கிறார்கள் நம்ம சினிமாக்காரர்கள்.

விடலைத் தனமான ரசிகர்களின், காதல் குறித்த அறியாமையை நியாயப்படுத்தி, அதை இன்னும் மலினப்படுத்திச் சில்லரை சேர்க்கிற முறைதான் தமிழ் சினிமாவின் ‘காதல்’ யுக்தியாக இருக்கிறது.

இது வெறும் வியாபாரமாக மட்டும் முடிந்து விடுவதில்லை. அப்படிக் காட்டப்படுகிற முறையில் காதலை அணுகுகிற இளைஞர்கள், தன்னை விரும்பாத பெண்ணைக் காதலிக்கச் சொல்லி டார்ச்சர் செய்வதும்,
அநாகரீகமான முறையில் நடந்து கொண்டவனிடம் அந்தப் பெண் தன் வெறுப்பை, எதிர்ப்பை காட்டினாலோ அல்லது அவள் தனக்குப் பிடித்த ஒருவனை விரும்பினாலோ, பதிலுக்கு அவன் ‘ஆசிட்’ வீசுகிற அளவிற்கு ‘அன்பானவனாக’ மாறிவிடுகிறான்.

பல நேரங்களில் இப்படித் தொடர்ந்து அணுகுகிற முறையைத் தனக்கான பெருமைக்குரிய அங்கிகாரமாகக் கருதி, தன்னை விட வயதில் ‘அதிகம்’ மூத்த ஆண்களை நம்பி சீரழிந்துப் போன சிறுமிகளும் இருக்கிறார்கள்.

‘கயல்’; மனிதப் பேரழிவை நிகழ்த்திய சுனாமியால் பாதிக்கப்பட்ட, மீனவ மக்களின் துயரங்களுடன் அல்லது பிரச்சினைகளுடன் சொல்லப்பட்ட காதல் கதை, என்று நம்பி போனேன். ‘கயல்’ பெயர் – மீனவக் குறியீடு என்பதாகவும் நினைத்து.

‘புலி மார்க்’ சீக்காய்த் தூளுக்கும் ‘புலி’ க்கும் எந்தத் தொடர்பு இல்லாததைப் போலவே, ‘கயல்’ திரைப்படத்திற்கும் மீனவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மீன் சாப்பிடுவது போல் ஒரு ‘ஷாட்’ கூட இல்லை. அதுகூடப் பரவாயில்லை, சுனாமி என்ற அந்தக் கொடூரம் கூடக் காதலின் பிரிவைச் சொல்லும் முறையாகத் தான் காட்டப் பட்டிருக்கிறது.

படத்தில் சுனாமி பாதிப்பலிருந்து உயிர் பிழைத்தவர்கள், காதலன் – காதலி, நண்பன் அப்புறம் இவர்களைப் படம் பிடித்த இந்தப் படத்தின் கேமரா மேன். இந்த நாலுபேர்தான்.

சுனாமிக்கு சில விநாடிகள் முன்புதான் காணாமல் போன தன் காதலியை, அல்லது தன் காதலனை கண்டுப்பிடித்துக் கொள்கிறார்கள். அந்தப் பரவச சூழலில் நாயகனின் நண்பன், சிலுவையில் முத்தமிட்டு ஆண்டவருக்கு நன்றி சொல்கிறான். நன்றி சொன்ன உடனே, ஆண்டவர் சுனாமியை பரிசாகத் தருகிறார்.

அந்தப் பேரழிவுக்குப் பிறகு, பிரிந்த மூவரும் ஒன்று சேர்கிறார்கள். கடற்கரையில் இருந்தவர்கள், குழந்தைகள், தங்களைச் சேர்ப்பதற்குத் துணையாக இருந்த பெண்கள் எல்லோரும் ‘கர்த்தருக்குள் நித்திரையான’ பிறகு பிழைத்த இந்த மூவர் மட்டும் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறார்கள்;

2004 ஆம் ஆண்டின் சுனாமியின் போது நூற்றுக்கணக்காணப் பக்தர்கள், வேளாங்கன்னி மாத கோயில் சுவற்றில் மோதி சிதறி செத்தப் பிறகும் ‘மாதாவிற்கு மகிமை’ இருப்பதாக நம்புகிற பக்தர்களைப்போலவே.

விடலைத் தன உணர்வை ‘இடி, மின்னல், மழை, இருதயம், சிறுநீரகம், கல்லீரல்’ என்று காதலாக நாயகன் பேசுகிற வசனம்; ஒரு பொறுப்பில்லாத பாட்டி சிறுமிக்கு காதலின் சிறப்புக் குறித்துச் சொல்லுகிற அற்பத்தனமான வசனங்களையும், நண்பனின் காதல் அறிவுரை உளறல்களையும், சிறுமியின் புலம்பல்களையும் கேட்கும்போதும்,நால்வரையும் ஓங்கி அறையலாம்போல எரிச்சல் வருகிறது.

முதல் பகுதி வசனங்களில் நகைச்சுவையில் தெரிந்த புத்திசாலித்தனம், பின் பகுதியில், காதலின் சிறப்புகளைச் சொல்லும்போது அறியாமை தான் முந்தி நிற்கிறது. ஒரே விசயம் பிற்பகுதி முழுவதும் நீண்டு இழு இழு என்று இழுக்கிறது.

அது மட்டுமல்ல, இப்போது வருகிற படங்களில் முதல் பகுதி என்பது தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது. இடைவேளை வரை சொல்லப்படுகிற கதை, அதன் பிறகு பிற்பகுதியில் பயனற்ற ஒன்றாகவே மாறிவிடுகிறது. திரைக்கதை என்ற ஒன்றே இல்லை. முதல் பகுதி வேறு ஒரு படத்தின் நீண்ட டிரைலர் போல.

‘ஒவ்வொரு காட்சிக்கும் மற்றக் காட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது’ என்கிற அளவிற்கு மிகச் சிறப்பான திரைக்கதை அமைப்பது எப்படி? என்பதை இப்போது வந்திருக்கிற ராஜ்குமார் ஹிராணியின் ‘PK’ படத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். பழைய, பாக்கியராஜ், பாண்டியராஜன் படங்களிலும் திரைக்கதை யுக்தி சிறப்பாகவே இருக்கும்.

அபத்தமான காதல் படங்களை விட, பக்தி படங்கள் எவ்வளவோ பராவியல்லை.

‘மைனா’ ‘கும்கி’ ‘கயல்’ போன்ற படங்களை எடுப்பதைவிட இயக்குநர் பிரபு சாலமன் ‘இயேசு அழைக்கிறார்’ போன்ற படங்களை எடுப்பது நிச்சயம் முற்போக்கானது. அவருக்கும் கொள்கை சார்ந்த மன நிறைவை தருவதாகவும் இருக்கும்.

*

இன்று (28-12-2014) மதியம் facebook ல் எழுதியது.

PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா

ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

‘என்னடா நியாயம் இது?’

cimg7544d1
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இயங்கியவர்கள், அல்லது பிரிட்டிஷ் அரசைப் பார்த்துப் பயந்தவர்கள்; தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பிரான்ஸ் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புதுச்சேரி போன்ற பகுதிகளில் தஞ்சம் அடைந்தார்கள். பாரதியைப் போல்.

‘பயந்தவர்கள்’ என்று சொல்வதற்குக் காரணம், பாரதியை விட அதிக வழக்குகளில் சம்பந்தப்பட்ட வ.உசி., புதுச்சேரியில் சென்று ஒளிந்து கொள்வதற்கு ஒருபோதும் முயற்சித்ததுகூட இல்லை.

சரி. பிரிட்டிஷ் அரசு மட்டும் தான் இந்தியாவை அடிமை படுத்தியது, மற்றப்படி பிரான்ஸ் அரசு, புதுச்சேரியின் மண்ணின் மைந்தன் அரசா? அதுவும் பிரிட்டிஷ் அரசு போலவே.. இந்தியப் பகுதிகளை அடிமை படுத்திக் கொள்யைடித்த அரசுதான்.

ஆனால், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இயங்கியவர்கள் தங்களைத் தற்காலிகமாக அல்லது குறைந்தப்பட்சம் பாதுகாத்துக் கொள்ள, ஆதிக்கப் பிரான்ஸ் அரசுக்கு எதிராக ‘பாரதமாதா’ வசனமெல்லாம் பேசாமல் உண்மையாக வாழ்ந்தார்கள்.

அதுபோல் மிகக் கொடுமையான இந்து – பார்ப்பனிய ஜாதிகளுக்கு எதிராகவும் கல்வி – வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இயங்காத ‘சமூகநீதி’ அரசியல் தளத்தில் இயங்கியவர்களை, ‘தேசத் துரோகிகள்’ என்று அன்றைய பாரதியும், அவரைப்போலவே தேசப்பக்தர் வேடத்தில் இருக்கிற இன்றைய பாரதிகளும் சொல்கிறார்கள்,

என்னடா நியாயம் இது?

‘சூத்திரனுக்கொரு நீதி-தணடச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி’

பாரதிப் பாட்டு; பாரதிக்கும் பாரதியார்களுக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!

20 December at 22:10

புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்

புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

பாரதியும் பாரதிதாசனும் சின்ன விவாதமும்

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்


j4ZkdH

மதமாற்றத்தைக் கண்டித்துத் தமிழில் வந்த ஒரே படம், ‘கல்யாண அகதிகள்’ அதை எடுத்தவர் இயக்குநர் கே. பாலசந்தர்.

‘பெரியார் வழி குஷ்டரோகம் பிடித்தபாதை’ என்று குறியீடாக்கினார்.. ‘தில்லு முல்லு’ படத்தின், ஒரு பாடல் காட்சியில். ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் பெரியாரின், கடவுள் மறுப்பு வாசகங்களை மிக இழிவாகக் கண்டித்தவர்.

இடஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்த்தவர் பாலசந்தர். அதன் உச்சம் அவர் இயக்கிய ‘வானமே எல்லை’ .

தமிழர்கள் அதிகமாகச் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட ஆரம்பத்தில், அதைக் கண்டித்துத் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த துவக்கக் காலங்களில், ‘புன்னகை மன்னன்’ படத்தில் நாயகியை (ரேவதி) ஒரு சிங்களப் பெண்ணாகக் காட்டியவர்.

பெண்களுக்கு எதிராக… கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக… இன்னும் இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் சினிமாக்களைப் பற்றி.

அதனால் ஒருவர் இறந்து விட்டால் அவர் என்ன செய்திருக்கிறார் என்று முறையாகத் தெரிந்துகொண்டு, இரங்கல் தெரிவிப்பதுதான் முறையானது. இறந்தவருக்கு அதுதான் உண்மையில் மரியாதை செய்வது.

அதை விட்டுக் கும்பலில் ‘கோவிந்தா’ போடுவதும்… ஒன்னாகூடி கடனுக்கு ‘ஒப்பாரி’ வைப்பதும்.. இறந்தவருக்குச் செய்கிற அவமரியாதை மட்டுமல்ல…
தங்களின் கொள்கைகளுக்கு வைத்துக் கொள்கிற கொள்ளியும் கூட.

23 December at 19:13

மற்றபடி, மிகச் சிறந்த வாழ்க்கை அவருடையது

நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

எஸ்.எஸ்.ஆர்: தற்கொலைக்கு முயன்றேன் – பெரியார் என்னை அவமானப்படுத்தி விட்டார்

ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா

Rajkumar-Hirani moviepp

மதமற்றவனாகக் காட்டுவதற்கும் மதங்களைக் கேலி செய்து கிழிப்பதற்கும் ‘வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன்’ என்ற நாயகனின் அடையாளம் ரொம்பப் புத்திசாலித்தனம்.

‘அறிவாளியாக’ மதங்களை அம்பலப்படுத்தும்போது எழுகிற எதிர்ப்பு, ‘அப்பாவியாக’ கேட்கிற கேள்விகளில் மதங்கள் கிழிந்துத் தொங்குவதை மதவாதிகளே கை தட்டி வரவேற்கிற முறையாக மாறிவிடுகிறது.

நாயகனின் ‘வெகுளி’த்தனம்; இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி அறிவாளி, மாமேதை என்பதை அடையாளப்படுத்துகிறது.
இவரின் முந்தைய படங்களான Munna Bhai M.B.B.S. – 3 Idiots படங்களை விட ‘PK’ மிகச் சிறப்பான படம் மட்டுமல்ல, மிகத் தைரியமான படம்.

நேர்த்தியான திரைக்கதையும் பொருத்தமான வசனங்களும் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் வசப்படுத்திவிடும் என்பதற்கு, நெற்றியில் நீட்டி பொட்டு வைத்திருந்தவர்களும் கடவுள்கள், மதங்கள் குறித்த கேலிகளுக்குக் கை தட்டிக் கொண்டாடியதே சாட்சி.

நேற்றைய வேலை நாளிலும் கூட, ஒரு இந்திப் படம் சென்னை தேவிபாரடைஸ் திரையரங்கில், தமிழர்களும் இந்திக் காரர்களுமாக நிரம்பி வழிந்தது. 3 Idiots யை தாண்டிய வெற்றி. (‘ஐ’ – ‘என்னை அறிந்தால்’ முன்னோட்டக் காட்சிகளின் போது கேட்ட கை தட்டல்கள், தமிழ் ரசிகர்கள் நிறைய வந்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தியது.)

படம் புரிவதற்கு ‘இந்தி’ தெரியனும் என்கிற அவசியம் இல்லை. எனக்கே புரிஞ்சது. ஆங்கிலச் சப் டைட்டிலுடன் திரையிடப்படுகிறது. (அப்படியும் புரியாத சில இடங்களை என் மகன் கவின் இடம் விளக்கம் கேட்டுப் புரிந்து கொண்டேன்.)

‘நம்ம ‘பகுத்தறிவு’ கமல்ஹாசன் போன்றவர் தமிழில் இப்படியொரு படத்தை எடுப்பார்களா?’ என்று எதிர்ப்பார்ப்பதை விட, இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால், அதன் உண்மையை மலினப்படுத்தாமல் எடுத்தாலே மகிழ்ச்சி.

வேற்றுக் கிரகவாசி ‘அய்யங்கார்’ அல்லது ‘வைணவ’ அடையாளம் என்று காட்டாமல் விட்டாலோ.. இன்னும் கோடானகோடி நன்றி.

22 December at 19:56

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்!

பொறியாளன் சினிமாவும் புரட்சிகர இயக்குநர்களும்

லிங்கா; ஹாலிவுட் ரேன்ஞ்..

rajini-k.s.ravikumar

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் பற்றிச் சிலர் விமர்சிக்கிறார்கள். ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரியான ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை ஏற்றுக்கொள்பவர்கள், அதுபோல் தமிழில் எடுத்தால் ஏற்க மறுக்கிறார்கள். – இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் .

ஸ்பைடர்மேன், பேட்மேன் படங்களில் ஆரம்பத்தில் நாயகர்கள், பிக்பாக்கெட்டாக இருந்துவிட்டு, படம் முடிவில் பறந்து பறந்து மாயஜாலம் செய்யவில்லை. ஆரம்பித்திலிருந்தே அவர்கள் அது போன்ற ‘சக்தி’யை பெற்றவர்கள். அதனால் அந்தப் பாத்திரங்கள் செய்கிற சாகசங்களுக்கு ஒரு காரணம் இருந்தது. கோமாளித்தனமாகத் தெரியவில்லை.

அவ்வளவு ஏன்?
ரஜினியின் ‘எந்திரன்’ படத்திலும் அப்படித்தான். தமிழ் ரசிகர்கள், ரஜினி ரசிகர்களோடு சேர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவில்லையா?

ஒருவனைச் சாதாரண மனிதனாகக் காட்டிவிட்டு, பிறகு திடிரென்று அமானுஷ்ய சக்தி உள்ளவனாகக் காட்டினால்.. அது ‘கடவுளாகவே’ இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் ரசிகர்கள்.

ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களின் மாபெரும் வசூல், அவர்களின் எளிய கூலி வேலை செய்யும் ரசிகர்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரின் அத்தியாவசியமான தேவைகளைப் புறம் தள்ளிவிட்டு; அந்தப் பணத்தில், ஒருமுறைக்கு நாலு முறை படம் பார்ப்பதால் தான் நடக்கிறது.

அவர்கள் திரும்பத் திரும்பப் பார்க்கிற படமே, மற்றவர்களையும் ஒரு முறையாவது பார்க்க வைத்துவிடுகிறது.

இப்படி இருக்க.. ரஜினி படத்தை, ரஜினி ரசிகர்களே ஒரு முறையோடு ஏறக்கட்டி விட்டார்கள் என்றால் அது தோல்விப் படம்.

சுவாரஸ்யமாக இருந்தால்.. எவ்வளவு மோசமாக, கோமாளித்தனமாக இருந்தாலும் பார்க்க விரும்புகிற ரசிகர்கள் மத்தியில், இப்படி ரஜினி ரசிகர்களே விரும்பாத படத்தை எடுத்து விட்டு..
தன்னை ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு, உயர்த்திப் பேசிக் கொள்வது, ‘லிங்கா’ படத்தை விடவும் மொக்கையான காமெடியா இருக்கு.

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

எம்.ஜி.ஆரின் கண்ணியம் ரஜினியின் அற்பம்; லிங்கா ரிசல்ட்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

மதம் மாறினால் பணம் கிடைக்கும் ஜாதி கிடைக்குமா?

om

கிறிஸ்துவர்களை மீண்டும் இந்துவாக மாற்றினால் ‘எந்த ஜாதி?’ என்ற பிரச்சினையில்லை. காரணம், அவர்கள் ஜாதியாகத்தான் இருக்கிறார்கள்.

முஸ்லிம்களை மாற்றினால், அவர்களை ‘எந்த ஜாதி’ இந்துவாக மாற்றுவது? ஜாதி மாறிக் கொள்ள முடியுமென்றால், அவர்கள் முஸ்லிமாகவே மாறியிருக்க மாட்டார்கள்.

20 December at 07:07

தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!

முஸ்லிம் பணம் குடுக்குறாங்களா.. எங்க?

இஸ்லாம் எதிர்ப்பு படமும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பும்

இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்

இந்து என்றால் ஜாதி வெறியனா?

இந்துவா? அது அவுங்க மட்டும்தாங்க

கமல்-மதன்-திருவள்ளுவர்

ka8

‘அன்பே சிவம்’ படத்தில், திருவள்ளுவரை யார் என்றே தெரியாத மாதவனிடம் கமல்,
‘மயிலப்பூர் Man. Near Sanskrit College Setting..’ என்பார். –

‘மயிலப்பூர்’ – ‘Sanskrit’ எவ்வளவு நுட்பமான குறியீடு. வசனம் மதன்.

8 December at 07:07

கமல் – கடவுள் மறுப்பாளரின் இறைஉணர்வு?

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

மைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்

டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிப்பது எப்படி?

254632_258104577533242_323762_nசு.விஜய பாஸ்கர்

சிங்கப்பூர்

“சிறந்த பேச்சாளார் ஆவது எப்படி” என்ற கேள்விக்குச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாகப் பதில் சொல்லப்பட்டு வருகிறது. இதில் நமக்கு முழுமையாக உடன்பாடு இல்லையெனிலும் தோழர் மதிமாறனின் “பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்” உரை மீதான விமர்சனத்தைச் சிரித்துக் கொண்டே எழுதுகிறேன். தமிழ் தேசியர்களுக்குக் கொடுக்கப்பட்ட அடி அப்படி!

“எனக்குத் தலைப்பு கொடுத்திருக்காங்க, பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்”, இந்தப் புதியதமிழ் தேசியங்கள் அப்படிங்கறதுக்கு ரொம்பப் பழைய உதாரணம் ஒன்று சொல்றேன், அது புதிய மொந்தை பழைய கள்” என்று தான் தனது பேச்சை ஆரம்பித்தார் தோழர் மதிமாறன்.

அட என்னங்கடா, தமிழ்தேசியமாவது, அதில என்னடா புதுசு பழசு உங்க தேசியம் எல்லாம் சாதியதேசியம் தான்டா, இந்தச் சாதிய விளக்கமாத்துக்கு எதுக்குப் பட்டுக்குஞ்சம் எதுக்குடான்னு எடுத்தஎடுப்பிலே தமிழ் தேசியர்களின் சாதிய அபிமானத்தை அம்பலப் படுத்தினார் தோழர்.

தமிழ் தேசியர்களின் சாதிய வெறியை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லனும்னா, ஒரு உதாரணம் கொடுக்கிறேன். உலகத் தமிழர் பேரவை, உள்ளூர்த் தமிழர் கூட்டமைப்பு, அண்டார்டிக்கா தமிழர் மாநாடு, ப்ளுட்டோ, நெப்டியூன் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ன்னு தன்னாலே எண்ணவியலாத அளவிற்கு இயக்கம் ஆரம்பித்து ஈழத் தமிழர்களைக் கழுத்தறுத்த அய்யா பழ. நெடுமாறனின் தமிழ் தேசியம், முக்குலத்தோர் சாதிய வெறியை உருவாக்கிய மன்னார்குடி நடராஜன் (சசிகலா கணவர்) காலடியில் வீழ்த்து கிடப்பதே இதற்கு ஒரு உதாரணம். சீமான், ராமதாஸ் ன்னு இந்த மாதிரி பட்டியல் போட்டால் டன் கணக்கிலப் பேப்பர் வேணும்.

“சிறந்த பேச்சாளர்களாக உருவாவது எப்படி” என்ற கேள்விக்குப் பதிலை மதிமாறன் தனது பேச்சினூடே நேரடியாகச் சொல்லாமல் தன் முழுப் பேச்சால் உணர்த்திச் சென்றார். அந்தப் பதில் “உண்மையைத் தைரியமாகப் பேசுவது”. எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டி, நீட்டி முழக்கி பேசாமல், உண்மையைத் தைரியமாகப் பேசுவது மதிமாறனின் சிறப்பு. அதற்குச் சிறந்த உதாரணம், இன்று திராவிடர்கழகத்தால் நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களில் ஒருவராகக் கொண்டாடும் தியாகராயச் செட்டியார் போன்றோரின் பார்ப்பன சடங்கு அடிமைத்தனத்தைத் திராவிடர் கழகத்தின் பெரியார் நூலக வாசகர் வட்ட பேச்சரங்கில் அம்பலப்படுத்தியது தான்.

பெரியார் அரசியல் அரங்குக்குள் வருமுன் திருவிக, வரதராஜுலு நாயுடு, ஆர் கே சண்முகம் செட்டியார், மறைமலை அடிகள் போன்றோர் எப்படிப்பட்ட அரசியலை மேற்கொண்டனர், பெரியாரின் வருகைக்குப் பின்னர் அவர்களின் அரசியல் முகம் எப்படி மாறியது என்பதை வரலாற்று உண்மைகளுடன் தோழர் எடுத்துக்காட்டியது அவரின் உண்மையை மறைக்காது எடுத்தியம்பும் இயல்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

காங்கிரஸ் அந்தக்காலத்தில் இருந்தே கைக்கூலிகளாக, அடிமைகளாகப் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு எதிராகப் பார்ப்பனர் அல்லாதவர்களையே தன் கையை வைத்து தன் கண்களைக் குத்தும் நயவஞ்சக வேலையைச் செய்ய முயன்றது என்றும் அந்த முயற்சியின் ஒருபகுதிதான் ராமசாமி நாயக்கர் (அதாங்க நம்ம பெரியார்) ராஜாஜியினால், காந்தி மீது கொண்ட பாசத்தினால் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார் என்பதை மறைக்காமல் சொன்னது தோழர் மதிமாறனின் நேர்மையின் சிறப்பு.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்ட பின்னர்ப் பெரியார் கட்சியை விட்டு வந்தார் என்பதை அக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை வரலாற்று உண்மைகளுடன் எடுத்து சொல்லியது நன்று.

பெரியார் ஒன்றும் தானாக வானில் இருந்து தலைவராகக் குதித்து வந்துவிடவில்லை, அன்றிருந்த பார்ப்பன ஆதிக்கச் சமுகச் சூழல்தான் பெரியாரை போராட தூண்டியது என்று “வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்” என்ற இயங்கியல் தத்துவத்தை நேர்மையுடன் எடுத்துரைக்கிறார் தோழர்.

பாரதிதாசன்; பாரதியின் உண்மையான தாசனாக இருந்தபோது எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடினான். அதைப்போல, அன்று இருந்த “எங்கெங்கு காணினும் பார்ப்பன ஆதிக்கமே”, “ராமசாமி நாயக்கரை” முதலில் “ராமசாமியாகவும்” பின்னர் “பெரியாராகவும்” மாற்றியது என்ற வரலாற்று உண்மையை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் தோழர்.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கி, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய திருவிக, மறைமலை அடிகள் போன்ற அன்றைய தமிழ் தேசியர்கள் தொட்டு, இன்றைய காசி ஆனந்தன், பழ நெடுமாறன், மணியரசன் போன்ற புதிய தமிழ் தேசியர்களின் சாதிய அபிமானத்தை, பார்ப்பன அடிவருடித்தனத்தை ஒப்பிட்டுத்தான் புதிய மொந்தையில் பழைய“கள்” என்று தோழர் தனது பேச்சை ஆரம்பித்த தோழர், ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும், “தமிழ்தேசியமும் பார்ப்பனிய அடிமைத்தனமும் சாதிய உணர்வும்” நகமும் சதையும் போல ஒன்றுடன் ஒன்றை பிரிக்க இயலாதவை என்று அடித்து நொறுக்கினார்.

சாதியத்தைச் சமரசம் இல்லாமல் எதிர்க்கும் பெரியாரின் நேர்மையின் முன்னால் இன்று பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்களின் சாதிய அபிமானம் எங்கே என்று அனல் பறந்தது தோழரின் பேச்சு.

கிரேக்கம், ஏதென்ஸ், ஸ்பார்ட்டகஸ், கரிபால்டி”, தம்பி பிரபாகரன், வைகோ. அய்யகோ வைகோவின் நிலை பரிதாபம்! வெற்றுப் பேச்சாளர்களின் நிலை அதுவாகத்தான் இருக்கமுடியும். “பாரதீ” யும் தப்பவில்லை! ஆனால் மபொசி, ஜீவா போன்றோர் தப்பிவிட்டனர்.

தமிழ் தேசியர்களின் தமிழ் உணர்வு என்பதே பார்ப்பன அடிமைப் புத்திதான் என்பதைத் தலையில்கொட்டி சொன்னது அழகு. ஜீவா, மாபொசி என்று அன்றிலிருந்து, ரவிக்குமார், நெடுமாறன், மணியரசன், சீமான் போன்ற தமிழ் தேசிய அபிமானிகளால் என்றும் பெரியாரின் தாடி மயிரைக் கூட அசைக்க முடியாது என்ற சவாலுடன் தன் பேச்சை முடித்தது சிறப்பு.

டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிக்கிறது எப்படின்னு தோழரின் பேச்சை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பேச்சின் தன்மை கெட்டுவிடாது இருக்கவேண்டும் என்பதற்காக நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்னும் பலவித சிறப்புகள் தோழர் மதிமாறனின் பேச்சில் உள்ளன.

நீங்களும் கேட்டுப் பலரிடம் பகிருங்கள்:

தோழர். விஜயபாஸ்கர் 14 நவம்பர், 2014 அன்று அவருடைய இணையப்பக்கத்தில் எழுதியது.

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

டாக்டர் அம்பேத்கர் பார்வையில் இந்து ராஷ்டிரம் ஒழிப்பு

‘பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்’ – அம்பேத்கரியல் பார்வை