PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா

Rajkumar-Hirani moviepp

மதமற்றவனாகக் காட்டுவதற்கும் மதங்களைக் கேலி செய்து கிழிப்பதற்கும் ‘வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன்’ என்ற நாயகனின் அடையாளம் ரொம்பப் புத்திசாலித்தனம்.

‘அறிவாளியாக’ மதங்களை அம்பலப்படுத்தும்போது எழுகிற எதிர்ப்பு, ‘அப்பாவியாக’ கேட்கிற கேள்விகளில் மதங்கள் கிழிந்துத் தொங்குவதை மதவாதிகளே கை தட்டி வரவேற்கிற முறையாக மாறிவிடுகிறது.

நாயகனின் ‘வெகுளி’த்தனம்; இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி அறிவாளி, மாமேதை என்பதை அடையாளப்படுத்துகிறது.
இவரின் முந்தைய படங்களான Munna Bhai M.B.B.S. – 3 Idiots படங்களை விட ‘PK’ மிகச் சிறப்பான படம் மட்டுமல்ல, மிகத் தைரியமான படம்.

நேர்த்தியான திரைக்கதையும் பொருத்தமான வசனங்களும் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் வசப்படுத்திவிடும் என்பதற்கு, நெற்றியில் நீட்டி பொட்டு வைத்திருந்தவர்களும் கடவுள்கள், மதங்கள் குறித்த கேலிகளுக்குக் கை தட்டிக் கொண்டாடியதே சாட்சி.

நேற்றைய வேலை நாளிலும் கூட, ஒரு இந்திப் படம் சென்னை தேவிபாரடைஸ் திரையரங்கில், தமிழர்களும் இந்திக் காரர்களுமாக நிரம்பி வழிந்தது. 3 Idiots யை தாண்டிய வெற்றி. (‘ஐ’ – ‘என்னை அறிந்தால்’ முன்னோட்டக் காட்சிகளின் போது கேட்ட கை தட்டல்கள், தமிழ் ரசிகர்கள் நிறைய வந்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தியது.)

படம் புரிவதற்கு ‘இந்தி’ தெரியனும் என்கிற அவசியம் இல்லை. எனக்கே புரிஞ்சது. ஆங்கிலச் சப் டைட்டிலுடன் திரையிடப்படுகிறது. (அப்படியும் புரியாத சில இடங்களை என் மகன் கவின் இடம் விளக்கம் கேட்டுப் புரிந்து கொண்டேன்.)

‘நம்ம ‘பகுத்தறிவு’ கமல்ஹாசன் போன்றவர் தமிழில் இப்படியொரு படத்தை எடுப்பார்களா?’ என்று எதிர்ப்பார்ப்பதை விட, இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால், அதன் உண்மையை மலினப்படுத்தாமல் எடுத்தாலே மகிழ்ச்சி.

வேற்றுக் கிரகவாசி ‘அய்யங்கார்’ அல்லது ‘வைணவ’ அடையாளம் என்று காட்டாமல் விட்டாலோ.. இன்னும் கோடானகோடி நன்றி.

22 December at 19:56

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்!

பொறியாளன் சினிமாவும் புரட்சிகர இயக்குநர்களும்

6 thoughts on “PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா

  1. பிரபா அழகர்
    8 hrs · Unlike · 1

    செந்தில் வடிவேல் கமல் பகுத்தறிவு
    இந்த இரண்டும் வேறு வேறு.
    7 hrs · Unlike · 2

    Devadoss Swaminathan அப்ப உடனே பார்ககணும்.
    என் பையன்கள் இருவரும் திருவான்மியூர் சத்தியத்தில் பார்த்துவிட்டு என்னை பார்ககச்சொல்லி வலியுறுத்தினார்கள்.
    லிங்கா தியேட்டர் காத்து வாங்குது, pk house full என்றனர்.
    7 hrs · Unlike · 7

    வே மதிமாறன் // லிங்கா தியேட்டர் காத்து வாங்குது, pk house full //
    ஆமாம். இங்கேயும் அப்படிதான்.
    7 hrs · Like · 12

    Olivannan Gopalakrishnan நன்றி தோழர்…..
    7 hrs · Unlike · 1

    Anandan Atp தோழர் லிங்கா படம் காத்து மட்டும் வாங்க வில்லை தியேட்டர் உரிமையாளர்களின் காவையும் சேர்த்தும் வாங்குது
    7 hrs · Unlike · 8

    Veeramani Panneerselvam Nice review.. Especially finishing punch!
    6 hrs · Unlike · 1

    ஆரோக்கிய ராசு எனக்கே புரிஞ்ச்சி.
    5 hrs · Unlike · 1

    Govi Lenin
    5 hrs · Unlike · 1

    வே மதிமாறன் தோழர் Olivannan Gopalakrishnan இந்த நன்றி நீங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கப்போவதற்கா? அப்படியானால்.. பதில் நன்றி.
    5 hrs · Like · 1

    Olivannan Gopalakrishnan ஆமாம் தோழரே…..
    3 hrs · Unlike · 1

    RajaRaja Ark தோழர் நேற்று ஒரு தியேட்டரிலும் டிக்கட் இல்லை
    3 hrs · Unlike · 2

    Chittibabu Lakma · Friends with Anbu Mani and 34 others
    அவர்களுக்கு தமிழகத்தில் பாராட்டு விழா நடத்தவேண்டும். .,
    2 hrs · Unlike · 1

    Jaffar Obaithullah arumai
    50 mins · Unlike · 1

    வே மதிமாறன் தோழர். RajaRaja Ark //தோழர் நேற்று ஒரு தியேட்டரிலும் டிக்கட் இல்லை//
    ஆமாம் தோழர். நாங்களும் நேற்று மாலை முதலில் ஈகா சென்றோம்.. அங்கு இல்லை… பிறகு தான் தேவிபாரடைஸ் போனோம். அதுவும் சிறிது நேரத்தில் முடிந்து விட்டது.
    8 mins · Edited · Like

  2. Ram Kumar · Friends with Sathiya Balan and 1 other
    Super pls see all guys this movie
    23 December at 07:08 · Unlike · 1

    Paa Vee · Friends with Arulmozhi Adv and 14 others
    கமல் ஒரு “CLEAN INDIA” நாத்திகவாதி…
    23 December at 08:25 · Like

    வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2010/01/04/artical-268/

    பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்
    பேராண்மை விமர்சனக் கூட்டத்தில், பராசக்தி திரைப்படம் “ஏய் குருக்கள், அம்பாள் எந்தக்…
    MATHIMARAN.WORDPRESS.COM
    23 December at 08:28 · Like · 3 · Remove Preview

    Thayumanavan Thayumanavan · 15 mutual friends
    What is the move name?
    23 December at 13:15 · Like

    RajaRaja Ark உங்கள் பதிவை பார்த்துதான் படத்திற்க்கு போனேன் நீங்கள் சொன்னது உண்மை ஆணால் கமல் இதுபோல் பண்ண முடியாது
    23 December at 13:24 · Unlike · 2

    Arun Pragash · Friends with Mass Venkat and 2 others
    Aiya!! Amir knows exactly what he is doing!! Jai Ho!!
    23 December at 16:28 · Like

    Nawin Seetharaman நன்றி தோழர் ! அவசியம் இங்கு பார்க்கிறேன். சென்னையிலிருந்திருந்தால் சேர்ந்து பார்த்திருக்கலாம்
    23 December at 17:00 · Unlike · 1

    வே மதிமாறன் Thayumanavan Thayumanavan· What is the move name?//
    `PK’
    23 December at 17:47 · Like

    வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2012/03/11/514-1/

    ‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்)…
    MATHIMARAN.WORDPRESS.COM
    23 December at 18:54 · Like · 3 · Remove Preview

    சிரிதரன் துரைசுந்தரம் நானும் மனைவியும் சென்று பார்த்தோம்…
    அவர் இந்த உலகத்தை எதோ ஒரு சக்தி இயக்குகிறது, இருக்கிறது அதற்கு ஒரு உருவம் தேவை, பெயர் கடவுள் என்று நம்பிக்கை உடையவர்.

    பல நேரங்களில் எனக்கு நிறைய விட்டுக்கொடுப்பவர்….

    PK பார்த்த பின்பு சில விசயங்களை பற்றி விவாதம் நடைபெறுகிறது..நமது பாதைக்கு வருவாரா பார்ப்போம் ..
    23 December at 22:09 · Unlike · 2

    Mohan Vellore · Friends with RajaRaja Ark and 7 others
    S its very beautiful story
    24 December at 15:53 · Like · 1

    த. மணிகண்டன் சங்கர விட்டுட்டேளே
    24 December at 18:17 · Like

    RajaRaja Ark பிகேன்னா பைத்தியகாரன்னு அர்தத்தில் வைத்தார்களாம் உண்மையா
    24 December at 19:32 · Unlike · 1

    குறிஞ்சி நாடன் கடவுள் பெரியது இத்தனை ரூபாய்,கடவுள் சிறியது இந்தனை ரூபாய் என்பதில் தொடங்குகிற காட்சியிலிருந்து மூன்று மதங்களும் கடவுள் வழிபாட்டின் வேற்றுமையையும்,காந்தி எதனால் மதிக்கப்படுகிறார் என்ற பிம்பத்தையும் திரைகிழித்த இயக்குனரை எவ்வளவு பாராட்டீனாலும் தகும் தோழர்.
    24 December at 19:33 · Unlike · 4

    குறிஞ்சி நாடன் Pk என்றால் நான் புரிந்து கொண்டது “பகுத்தறிவு கோட்டை (Pakutharivu Koottai)
    24 December at 19:35 · Unlike · 2

    Raj V Ernesto · Friends with RajaRaja Ark and 30 others
    ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு ரசிக்க வைக்கிறது.., காட்சிகளை விடவும் வசனங்கள் நம்மையறியாமல் கைதட்ட வைக்கிறது, அதிலும் SARFARAZ, JAGGU வின் காதல் அத்தியாயங்களும், PK ன் சேட்டை நடிப்பும் அருமை, தமிழில் இப்படத்தை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் கூறியது போல் கமல், ஷங்கர் போன்ற “அதிமேதாவிகள்” இவ்வேற்றுகிரகவாசிக்கும் சாதி அடையாளத்தை கொடுத்து கெடுத்துவிடுவர், அவர்கள் ‘ஆணியைப் பிடுங்காமல்’ இருப்பதே நல்லது,, தமிழ் திரையுலகில் உள்ள “பல நேர்மையான படைப்பாளிகள்” முயற்சியில் இப்படம் தமிழில் அதுவும் இக்கால கட்டத்தில் வெளிவரவேண்டும்.. #HATS #OFF #Rajkumar Hirani Sir.. Keep Moving….!!!!
    24 December at 22:34 · Unlike · 6

Leave a Reply

%d bloggers like this: