உமாசங்கர் Vs கிறிஸ்துவ இந்துத்துவம்

இந்து சமூகத்தை நான்காக பிரிக்கிற ஒரு இந்து புத்தகத்தை பிரதமர் இந்திய அடையாளமாக வெளிநாட்டு அதிபர்களேக்கே அளிக்கலாம்… விண்வெளி அனுப்பும் முன் ராக்கெட்டுக்கு யாகம்.. தேங்காய்… இந்து..

கிறிஸ்துவத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் செயல்படாது.. கிறிஸ்துவர்கள் மேல் நடக்கிற வன்முறை தலித், பழங்குடி மக்கள் மேல் நடக்கிற வன்முறைதான்.. உமா சங்கர் தலித் என்பதால் தான்…

இனி அரசுஅலுவலகங்களுக்குள் அரசு ஊழியர்கள் கூட மதக் குறியிடுகளோடு வரக்கூடாது..

புக் கு விக்றவங்களைத் தாண்டி வெளியில் வாங்க பெருமாள் முருகன்

‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

வைகோ வின் நரசிம்மம் பாரதிதாசனின் இரணியன்

இரணியன்

திராவிட இயக்கத் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வைகோ:
‘திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார்’ என்ற மேற்கோளைப் பயன்படுத்தியிருப்பது, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

தான் கொண்ட கொள்கைக்கு எதிராக – துரோகியாகத் தன் இனத்தைச் சேர்ந்தவனோ, தன் ஜாதிக்காரனோ, தன் உறவினனோ அவ்வளவு ஏன்..? தன் மகனாகவே இருந்தாலும் மன்னிக்கக் கூடாது என்ற கொள்கை உறுதியை நமக்குக் கற்றுத் தந்தவன் இரணியன்.

எதிரியிடம் சிக்கினால், சையனட் குப்பியை கடித்து, தன் இனத்திற்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட மாவீர்களே இரணியனின் வாரிசுகள்.

பார்ப்பன அடியாளான திருமால், மாமன்னன் இரணியனுக்கு எதிராகச் சதி செய்து நரசிம்ம அவதாரம் கொண்டு கொன்றான், என்பதே பிரகலாதன் கதை.
இரணியன்; ‘ஆதிக்க ஆரிய எதிர்ப்பு’ திராவிட வீரன் என்பது பெரியார் – திராவிடர் அரசியலின் அடிப்படை. பார்ப்பனக் கை கூலியாகித் தன் இனத்திற்கு எதிராக, துரோகியாக மாறினான் என்பதற்காக, தன் மகன் பிரகலாதனுக்கே மரணத் தண்டனை கொடுத்த கொள்கை வீரன் இரணியன்.

அதனால் தான், பெரியாரின் சீடரான பாவேந்தர், 1934 ஆம் ஆண்டே, பெரியாரியல் கண்ணோட்டத்தில், ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நாடகத்தை எழுதினார். அதன் அரங்கேற்றம், தலைவர் பெரியார் தலைமையில் நடைபெற்றது. பிறகு தமிழகமெங்கும் அந்த நாடகம் பல முறை திராவிடர் இயக்கத்தவரால் நடத்தப்பட்டது.

ஆக, ‘நரசிம்ம அவதாரம் எடுத்து ஈவு இரக்கமில்லாமல் தமிழர்களின் குடலை உருவி மாலைப் போட்டுக் கொண்ட கொடூரன் ராஜபக்சே’ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அது தான் திராவிட இயக்கத் தலைவருக்கு அழகு.

‘திருமால், நரசிம்மமாக மாறி, ராஜபக்சேயை வதம் செய்து விட்டார்’ என்று சொல்வது இந்து தலைவருக்கே உரிய ‘அழகு’.

திராவிட இயக்கத் தலைவராக அடையாளப்படுத்திக் கொள்கிற வைகோ, வைணவ பக்தர்களின் பேச்சையெல்லாம் நம்புகிறார். பரிந்துரைக்கிறார். பெரியார் தொண்டர்களின் பேச்சை மட்டும் கேட்க கூட மறுக்கிறார்.

9 January at 22:51

வைகோ வை ஏமாற்றிய வைணவ பக்தர்கள்

புக் கு விக்றவங்களைத் தாண்டி வெளியில் வாங்க பெருமாள் முருகன்

எதிர்ப்பை போர்குணத்தோடு எதிர்கொண்ட எம்.ஆர். ராதா, ராவணக் காவியம் எழுதிய புலவர் குழந்தை…

‘வேலைக்குப் போகிற பெண்கள் விபச்சாரிகள்’ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்துக்கே எதிர்ப்பு வரல.. மாதொரு பாகனுக்கு எதிர்ப்பு வருது என்றால்… கதை.

இந்திய டுடே ;கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

கலைஞன் பரப்பிய வெளி: சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

‘நானும் பெரியாரிஸ்டுதான்..’ – அப்டியா?

logo_100

இந்து மத எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு – இந்த அரசியலை தீவிரமாக வலியுறுத்துகிறவர்களை; தமிழுக்கு, தமிழனுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயலுகிறார்கள்.

பெரியார் மீதான அவதூறும் இந்த வகையானதே. இந்து அமைப்புகளும் தமிழனவாதிகளும் பெரியாருக்கு எதிராக ஒன்றுபடுகிற புள்ளி இதுதான்.

இவர்களின் இந்தச் செய்கையைக் கண்டிக்கிற முற்போக்காளர்கள் இன்னும் பெரியாரை தீவிரமாக ஆதரிப்பதாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட, கொள்கிற ஞாநி, சின்னக்குத்தூசி போன்றவர்களும் கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதுவரை பெரியாருக்கு எதிராக வந்த அவதூறுகளைக் கண்டித்து ஒரு வரிகூட எழுதியது கிடையாது.

மாறாக, பாரதியின் இந்து பார்ப்பன மனம் குறித்துத் தோழர் வாலாசா வல்லன் எழுதிய புத்தகத்திற்கும் என்னுடைய பாரதி விமர்சனத்திற்கும்தான் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்து கண்ணோட்டம் கொண்ட ஜெயமோகன், பெரியாரின் அடிப்படைகளுக்கு எதிராக மிக இழிவான அவதூறுகளை எழுதியபோது, ஞாநி அதைக் கண்டித்து எழுதவில்லை என்பதுகூட முக்கியமில்லை;

ஜெயமோகனை அழைத்துத் தன் வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது வீட்டுக்குள்ளோ கருத்தரங்கம் நடத்தினார். ‘இதுதாண்டா ஜனநாயகம்’ என்று பெரியார் தொண்டர்களுக்குப் பாடம் எடுத்தார், அந்தப் பெரியாரிஸ்ட்.

சரி, அதற்குப் பிறகாவது ஜெயமோகனின் பெரியார் அவதூறை கண்டித்து, பெரியாரிஸ்டாக அல்ல, ஒரு ஜனநாயகவாதியாக எழுதினாரா என்றால்.. அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

பெரியாரை இழிவாக எழுதியவரை அழைத்துக் கூட்டம் நடத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றிய ஞாநி, பாரதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி எழுதிய வாலாசா வல்லவனையோ என்னையோ அழைத்து அவர் மொட்டை மாடியில் கேணியும் தோண்டவில்லை. ஜனநாயகத்தையும் காப்பாற்றவில்லை.

அருண்சோரி, ரவிக்குமார், குணா, ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிய பெரியார், டாக்டர் அம்பேத்கர் மீதான அவதூறுகளுக்கு எதிராகப் பெரியார் இயக்கம், பெரியாரிஸ்டுகள், பா. பிரபாகரன் எழுதிய ‘அம்பேத்கரும் அவதூறுகளும் ஜெயமோகனுக்கு மறுப்பு’ நூலும், குறிப்பாகப் பெரியாருக்கு எதிரான அவதூறுகளுக்குத் தலித் முரசு புனித பாண்டியன், மிகக் குறிப்பாகப் பேராசிரியர் அ. மார்க்சின் பங்களிப்பும் மிக முக்கியமானது.

அருண்சோரியின் அம்பேத்கருக்கு எதிரான அவதூறைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணியின் ஆய்வுரை அம்பேத்கரியத்திற்கு முக்கியமான பங்களிப்பு.

இவர்களைத் தவிர வேறு எந்த முற்போக்காளர்களும், இயக்கங்களும் ஒரு பக்க அளவிலான கட்டுரை எழுதி கூடக் கண்டிக்கவில்லை. அவ்வளவு ஏன்? போற போக்கில் நாலு வரி சேந்தாப்போலப் பதில் எழுதவில்லை என்பது அவதூறுகளை விட மோசமானது.

பெரியார் மீதான அவதூறுகள், மோசடிகள் மிகத் தீவிரமாகத் தமிழகத்தில் பரவியபோது பார்வையாளனாக இருந்துவிட்டு, அதற்குப் பிறகு ‘நானும் பெரியாரிஸ்டுதான்..’ ‘பெரியார் பிறந்த மண்ணில் இந்து வெறியர்களை அனுமதியோம்..’ என்று பேச இவர்களால் எப்படி முடிகிறது?

*

சிந்தனையாளன் பொங்கல் மலருக்காக 17-12-2013 அன்று எழுதியது. சுருக்கப்பட்ட பகுதி. அதில் எழுதாத மூன்று வரிகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.

ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி

facebook பெரியாரிஸ்ட்டுகள்..

‘நம்மத் தாலிய அறுக்குறாங்க’

image 2

‘முகூர்த்தநாள்’ என்று ஒரே நாளில் பல திருமணங்களை வைத்து, லட்சக்கணக்கானவர்கள் ஓரே நாளில் ஒரே நேரத்தில் கார்களில், பஸ்சில் இனனும் பொது இடங்களில் குவிந்து, குழப்பம் ஏற்படுத்தி;

வேலைகளுக்குப் போகிறவர்கள், உயிர்காக்க அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறவர்கள் இப்படி அதிமுக்கியமாகப் பயணக்கிறவர்களைச் சாலை மறியல் செய்வதுப்போல் தடுத்து, துன்புறுத்துகிறார்கள்.

இதை ஒரே வரியில் சொல்வதென்றால்: யாரோ சிலர் தாலிக் கட்றதுக்கு நம்மத் தாலிய அறுக்குறாங்க.

ஊதாரித்தனமான இந்தத் திருமணத்தைத் தடை செய்தாலே இந்தியாவின் பெரும் பிரச்சினையான; பட்டினிச் சாவு, பொருளாதர நெருக்கடி, பெண்களுக்கான எதிரான வன்முறை, ஜாதி வெறி இப்படியான பல பிரச்சினைகள் தீர்வுக்கு வந்து விடும்.

‘கல்யாணத்தை நடத்தி கடுப்பேத்துறாங்க மை மை லாட்’

செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி

இந்திய டுடே ;கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே

IndToday

இந்தியா டுடே யில் பெருமாள் முருகன் பிரச்சினையை ஒட்டி கருத்துச் சுதந்திரம் குறித்துக் கருத்துச் சொல்லியிருக்கிறார் அசோகமித்ரன், ‘நீ போன தகராறு ஆயிடும். நான் போயி அவன செருப்பால அடிச்சுட்டு வரேன்’ ன்னு ஒருத்தர் சொன்னா எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்கு அவருடைய கருத்து.

பெருமாள் முருகன் கதையைப் பேசச் சொன்னால், அவரு தன் கதையைப் பேசுறாரு.
‘தென்னாட்டில் சிவவாக்கியர் காலத்திலிருந்தே சிறுபான்மை சமூகம் எப்படியெல்லாம் இழிவுப்படுத்தப்படுகிறது. அந்தச் சமூகத்தினர் அதைத் தலைவிதியாக நினைத்துதான் செயல்படுகிறார்கள்’ என்று வேதனைப் படுகிறார்.

சிவவாக்கியர் காலத்துல ஏது சிறுபான்மை? என்று யோசித்தால்..
அடுத்தவரியில் குறிப்புக் கொடுக்குறார்.. ‘இவர்களுக்கு அரசியல் சாசனத்தில் எந்தச் சலுகையும் கிடையாது’ என்று.
அவர் சொல்கிற சிறுபான்மை தலையில பொறந்து நம்ம தாலி அறுக்கிற சிறுபான்மை.

பிறகு, காந்தி இந்துக்களுக்குச் செய்த ‘மோசடி’யை குறிப்பால் உணர்த்தி, அக்பர் இந்துக்களுக்குச் செய்த ‘அக்கிரம’த்தை அம்பலப்படுத்தி..
கடைசியாதான் பெருமாள் முருகன் பிரச்சினைக்கு வர்றாரு. ‘பெருமாள் முருகன் செயல் நாடகத் தன்மை கொணடது’ என்று சவுக்கடியோடு முடிக்கிறார்.

பாவம் அசோகமிதரன். அவரும் ரொம்ப நாளா தமிழ்நாட்டில் பயந்துக்கிட்டுதானே வாழ்றாரு.. பாருங்க அவரு ஒரு பிராமின் என்பதால் அவருக்கு யாருமே ஆதரவா வரல.. ரொம்பப் பாவம் அவுரும் பிராமினும்.

இருந்தாலும் அவுரு இப்ப, பெருமாள் முருகனுக்கு ‘ஆதரவா’ வர்றது.. உண்மையில் பாராட்டப்படக் கூடியது. இது தான் ‘தன் நலம் கருதாத தியாக வாழ்க்கை’.
தியாகி அசோகமித்ரனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

வாஸந்தியும் பெருமாள் முருகனுக்கு உறைப்பது மாதிரி நாலு சாத்து சாத்தி நல்லா தைரியம் கொடுக்கிறாங்க. சல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, சமீபத்தில் பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல்.. இதோடல்லாம் ஒப்பிட்டா.. இதெல்லாம் ஒரு மேட்ரே இல்ல.. இந்து அமைப்புகள் எல்லாம் சிறுபான்மை.. என்ற பொருள் படும்படி.

இந்தியா டுடேவில் பெருமாள் முருகன் பிரச்சினைக்காகக் கருத்துச் சொல்லியிருக்கிறவர்களில் ‘வாஸந்தி, அசோகமித்திரன், ஜெயமோகன், ரவிக்குமார்’ முக்கியமானவர்கள். இவர்கள் நால்வருக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை; பெரியார் மீது, திராவிட இயக்கத்தின் மீது அவதூறு செய்கிறவர்கள். காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள்.

வைதிகமானவர்கள், பிற்போக்காளர்கள் தான் எப்போதும் இந்திய டுடே விற்குக் கருத்துப் பெட்டகங்களாகத் தெரிகிறார்கள்.

அதுவும் பெரியார் எதிர்ப்பாளர்களுக்கே அதிக முக்கியத்துவம். நான் கூடப் பாரதியார் பற்றி உண்மையை எழுதியதற்குப் பதில், பெரியார் பற்றி அவதூறு எழுதியிருந்தால், தமிழகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருப்பேன். கருத்துச் சுதந்திரம் பற்றி என் கருத்தும் இந்தியா டுடே யின் இந்த இதழ்லேயும் இடம் பெற்றிருக்கும்.

பெரியாரை முன்னுறுத்தி எழுதுகிறவர்கள், பார்ப்பன-இந்து எதிர்ப்போடு எழுதுகிற அம்பேத்கரிஸ்டுகள், திராவிட இயக்க எழுத்தாளர்கள், இந்து எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்ட மார்க்சியவாதிகள் இவர்கள் எல்லாம் கருத்துச் சொல்கிறவர்களாக இப்போது மட்டுமல்ல; எப்போதுமே இந்தியா டுடே விற்குத் தெரிந்ததே இல்லை.

இப்போதும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரோடு இணைந்து களத்தில் இறங்கி பெருமாள் முருகனுக்காகத் தொடர்ந்து போராடுகிறவர்களில் இவர்களே முக்கியமானவர்கள்.

பரவாயில்லை. அந்த மட்ல.. கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவா ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வீரத் துறவி இராம. கோபாலன் இவர்களிடம் கருத்துக் கேட்காமல் விட்டதற்கு.

‘அதுக்குப் பதிலாதான் அசோகமித்ரனும், வாஸந்தியும், ஜெயமோகனும் கருத்தா பேசியிருக்காங்க’ என்று நினைக்கிறீர்களோ?

இந்திய டுடே – ‘கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே.’

20 January facebook ல் எழுதியது.

‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா

டாக்டர் முத்துலட்சுமி: பத்திரிகைகளின் ‘தந்திரம்’

சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

திட்டு வரும் கண்ட னங்கள் வரும்.. விருது வந்திருக்கிறது

10917827_591455767654529_8815641090252831910_n

‘எழுத்துப் போராளிக்கு பெரியார் விருது!’ என்று தலைப்பிட்டு ‘விடுதலை’ என்னை கவுரவித்திருக்கிறது. நன்றி :ஆசிரியருக்கும் – கவிஞருக்கும்.

தொடர்ந்து எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு, தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். முன்னதாக அவரைப்பற்றிய ஒளிப்படக் காட்சி திரையிடப்பட்டது.

தொடர்ந்து வே. மதிமாறன் ஏற்புரையாற்றினார். அவர் தனது உரையில், தான் எழுத்தாளர் ஆவதற்கு முக்கியக் காரணம் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பிறகு, பெரியார் மாதிரி பேசினால் திட்டு வரும். கண்ட னங்கள் வரும். இப்பொழுதுதான் விருது வந்திருக்கிறது என்று பலத்த கைதட்டல்களுக்கிடையில் கூறிவிட்டு, பெரியாரை எதிர்க்கின்றவர்களை நன்றாக விமரிசனம் செய்.உனக்குப் பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதாகத்தான் இந்த விருதை எனக்கு அளித்ததாக தான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு,

அதன்படியே தன் பணி இருக்கும் என்று கூறி, பேராசிரியரிடம் அடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது, தீபாவளிக்கு வழங்கும் ஊக்கத் தொகையை பொங்கலுக்குத் தரவேண் டும் என்ற வேண்டுகோளோடு தனது உரையை முடித்துக்கொண்டார்.

-விடுதலை 17-1-2014

தினத்தந்தி – சன் டிவி க்கும் மட்டுமல்ல; வெளியிடாத ‘பார்ப்பன’ தினகரன் இதழுக்கும் நன்றி

தினத்தந்தி – சன் டிவி க்கும் மட்டுமல்ல; வெளியிடாத ‘பார்ப்பன’ தினகரன் இதழுக்கும் நன்றி

CE_1701_MN_09_Cni8791 - Copy

செய்தியும் படமும் – நன்றி: தினத்தந்தி.

விருது பெற்றவர்கள் பெயரை தவறாக வெளியிட்டாலும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிய ‘சன்’ மற்றும் ‘சன் செய்திகள்’ தொலைக்காட்சிகளுக்கும் நன்றி.

பேராசிரியர் அன்பழகன் தலைமை ஏற்று நடத்தியிருந்தாலும், ‘பெரியார் விருது நிகழ்ச்சி, ஒரு காலம் அளவிற்குக் கூடச் செய்தியாகப் போடுவதற்குத் தகுதியானதல்ல’ என்று முற்றிலுமாகப் புறக்கணித்த பார்ப்பன ‘தினகரன்’ நாளிதழுக்கும் நன்றி

தினத்தந்தியின் சாட்டையடி!

‘இந்து’ காதலர் தினம் – தினகரன் – ராம.கோபாலன் – விஜயகாந்த்

குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

‘பெரியார் விருது’ எனக்கும்..

10806392_908739859145064_1275561809172972220_n

நான் பாராட்டப்படுவதை ‘தனக்கான பாராட்டாகவே’ கருதி, என்னை வாழ்த்துகளின் குவியல்களில் முழ்கடித்து, இந்த விருதால் என்னைவிட அதிக மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்ளும் என் அன்பான தோழர்களுக்கு…

என் நெஞ்சார்ந்த நன்றியைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் எனனால்.

‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா

‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’

திருவள்ளுவர் மூலம் தமிழ் உணர்வை ஊட்ட முடியாது. ஏனென்றால்.. வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது.

சன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்