வைகோ வை ஏமாற்றிய வைணவ பக்தர்கள்

secvpf

‘குணதிசை காலை நீட்டி, குடதிசை தலையை வைத்து, தென்திசை நோக்கும் பெருமாள்’ என்று, ஆழ்வார்களால் பாடப்பட்ட ஏழுமலையான், தெற்கே தன் பார்வையைத் திருப்பி இருக்கின்றார்; திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார், தமிழ் உணர்வுள்ள வைணவ பக்தர்கள் கூறுகின்றனர். – வைகோ.

வைகோ விடம் தவறாக ஆழ்வார் பாடலை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் அவருக்குத் தெரிந்த வைணவ பக்தர்கள். ஏழுமலையான் படுக்கவே மாட்டான். நின்ற நிலைதான். அவன் தான் திருப்பதியில் இருப்பவன். படுத்த நிலை ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதன்.

அதைத்தான் தொண்டரடிப் பொடி ஆழ்வார்:
‘குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி’ என்று ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதன் பள்ளி கொண்ட நிலையைப் பாடுகிறார்.

சரி இருக்கட்டும். ‘திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார், தமிழ் உணர்வுள்ள வைணவ பக்தர்கள் கூறுகின்றனர்.’ என்கிறார் வைகோ.

‘குழந்தைகள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றபோது எழுந்த மரண ஓலத்தில்.. உலகமே அதிர்ந்து பார்த்தது. அப்போ உங்க திருமால் தெற்கு பக்கம் பார்க்காமல்.. எந்த அக்கிரகாரத்து பலகாரக் கடையை வேடிக்கைப் பார்த்தான்?’
என்று தமிழ் உணர்வுள்ள பெரியார் தொண்டர்கள்;

ஆழ்வார் பாடலை தவறாக மேற்கோள் காட்டிய வைணவ பக்தர்களையும் அதை அப்படியே நம்பி, அதைக் கொண்டு வந்து மக்களிடம் சொன்ன அவர்களின் தூதுவர் வைகோ வையும் பார்த்துக் கேட்கின்றனர்.

9 January at 05:06

‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..

4 thoughts on “வைகோ வை ஏமாற்றிய வைணவ பக்தர்கள்

  1. வளவன் வசந்தா சித்தார்த்தா அற்புதம்!!!
    9 January at 05:08 · Unlike · 1

    வே மதிமாறன் நன்றி.
    9 January at 05:09 · Like

    Govi Lenin
    9 January at 05:14 · Unlike · 1

    வே மதிமாறன் நன்றி.
    9 January at 05:14 · Like · 1

    Ashok Kumar · Friends with Jeeva Sagapthan and 138 others
    9 January at 05:16 · Like

    Chandrasekaran Gopalakrishnan · 67 mutual friends
    அருமை.
    9 January at 05:17 · Like

    வே மதிமாறன் நன்றி.
    9 January at 05:18 · Like

    Kampuli Ayupkhan Cpi சரியான சாட்டையடி .வைகோ போன்றவர்கள் உணர்ச்சி மேலீட்டில் தான் என்ன பேசுகிறோம் என்றே உணராமல் பேசுபவர்கள் .பெரியாரின் விரல்பிடித்து வளர்ந்ததாக பேசுபவர்கள் பெரும்பாலோர் இன்று பெரியாரியத்தை கைகழுவி விட்டவர்களாக மாறிவிட்டனர் .அந்த பட்டியலில் வைகோவும் இணைந்துள்ளார் ….
    9 January at 05:23 · Unlike · 5

    Senthilkumar Venkatachalam வைகோ நாத்திகரல்லவே.,அதனால் அப்படி தான் உளறுவார்.,நாயுடுகரு அப்படிதான் .,விடுங்க அய்யா.,!
    9 January at 05:23 · Like

    Parimalan Manickam இன்னைக்கி வைகோ ஃபேன் கிளப்புல இருக்கவுங்க கிட்ட உங்களுக்கு பாட்டு இருக்கு…
    9 January at 05:25 · Unlike · 1

    Thahir Ahmed திருமால் வேறு ரெங்கன் வேறா? Total a குழப்பிட்டீங்க
    9 January at 05:29 · Like

    செல்வேந் திரன்.கு · 346 mutual friends
    கோயிலில் போய் சுப்ரபாரதம் பாடுகிறவர் தப்பி அரசியலுக்கு வந்துவிட்டார் வந்து நம்ம உயிரை எடுக்கின்றார்
    9 January at 05:30 · Like · 3

    வே மதிமாறன் அதையும் தப்பாதான் பாடுகிறார்.
    9 January at 05:31 · Like · 3

    Sivakumar Shanmugam · 35 mutual friends
    புராணங்களை உதாரணம் காட்டும் இவர் பெரியார் வழி வந்தவரா? அய்யா ஒரு நாளும் எந்த புராண இதிகாசங்களையும் மருந்துக்கு கூட உதாரணமாக காட்டியதில்லை .. புராணங்களில் இதிகாசங்களில் மற்றும் மூடநம்பிக்கைகளை பரப்பக்கூடிய இந்த புத்தகங்களை உதாரணமாக கூறுவது xxx லிருந்து அரிசி பொறுக்குவது போல என்பார்….
    9 January at 05:45 · Unlike · 3

    Sakthivelu Govindaraj · 37 mutual friends
    தெரியாமல் பேசவில்லை வைகோ, அவாளை குளிர வைக்க இப்படி எல்லாம் பேசுன்னு அவரின் அரசியல் அரிச்சுவடி சொல்லிக் கொடுக்குது. திரும்பவும் வண்டி பிஜேபி பக்கம் போக கூட முடிவு எடுத்திருக்கலாம். எப்படி இந்த வண்டியை எங்க கொண்டுபோய் சேர்க்கறதுன்னு தெரியாம அல்லாடும் அரசியல்வியாதி….!
    9 January at 05:49 · Unlike · 5

    Arulmozhi Varman · 68 mutual friends
    Though I follow Vaiko, I salute for this status….
    9 January at 05:59 · Unlike · 1

    Arulmozhi Varman · 68 mutual friends
    He used to quote from Bible,quran ,and Hindu literature too…he might have been belligerent mood of rajaphakses defeat,and wanted to connect it with his tirupathi visit…but u are so brilliant, keep rocking man…
    9 January at 06:02 · Like

    Arulmozhi Varman · 68 mutual friends
    In the belief of vaishnavites,they are different versions & incarnations…
    9 January at 06:04 · Like

    Venki Mohan · Friends with த.அறிவு மதி and 45 others
    திருமால் அன்று மற்றொன்றையும் கவனிக்க வில்லை தோழர்.
    நம்ப புரட்சி புயல் வைகோ
    RAW – வின் ஆலோசனைக்கினங்க கள்ளத் தோனியில் ஏறி போய் என்ன தகவலை கொண்டு போய் சேர்த்தார் என்பதையு திருமால் தன் ஊனக் கண் மூலம் பார்க்கவில்லையே.
    9 January at 06:26 · Like · 3

    Benesh Sundaram · Friends with Venkat Raman
    Do you guys still consider what Kapil sibil’s brother (Vaiko) is barking…. Let’s discuss something good for the people.
    9 January at 07:40 · Like

    Kathir Vel · Friends with பாவெல் இவானவிச் and 6 others
    நெத்தி அடி
    9 January at 08:05 · Unlike · 1

    பாலசுப்ரமணியன் ஆரஞ்ச் · 3 mutual friends
    பாலசுப்ரமணியன் ஆரஞ்ச்’s photo.
    9 January at 08:29 · Like

    Shivas Sivakumar · 13 mutual friends
    ஈழத்தில் மரண ஓலம் கேட்கும் போது நம்ம பகவான் ரங்கன் பாரி வேட்டை எனும் தாசி வேட்டைக்கு பொயிருந்தார் என்பது கூடவா தமிழர்களாகிய எங்களுக்குத் தெரியாது ?
    இலட்சுமியை ஏழு மலைக்கு கீழே நிற்க வைத்துவிட்டு பத்மாவதியுடன் திருப்பதியில் பட்டையை கிளப்பும் பெருமாள், அதே இலட்சுமியை சிரிரஙத்திலும் தவிக்க விட்டுவிட்டு தாசி வீட்டிற்கு பரிவாரங்களோடு போகும் கேவலம் தான் பாரி வேட்டை.. இந்தக் கேடு கெட்ட பெருமாளா தமிழர்களுக்கு அருள் பாலித்துவிடுவார் ?
    9 January at 17:52 · Unlike · 3

    பழநி பெரியசாமி · Friends with பிரபா அழகர் and 296 others
    ஒரு பெர்பார்மன்ஸ் பண்ண விடமாட்டேன்றேளே, அவரும் எவ்ளோ நாளைக்கு அலெக்சாண்டர் அரிஸ்டாட்டில்னு மட்டும் சொல்லிண்டிருப்பார்.
    9 January at 18:57 · Unlike · 2

    Gnanabharathi Chinnasamy · 19 mutual friends
    ஒரு சவுக்கடி போதாது.தார்குச்சியும் போடவேண்டும்.ஸ்ரீசேனாவைப் பெருமாள் அத்துமீறாமல் பார்த்துக் கொள்வாராமா?
    9 January at 19:25 · Unlike · 1

    Gnanabharathi Chinnasamy · 19 mutual friends
    கையால் ஆகாதவர்களுக்கு கடவுள் தானே புகலடம்.
    9 January at 19:28 · Like · 2

    Gnanabharathi Chinnasamy · 19 mutual friends
    மோடியையே ராமபிரான் என்று நினைத்து தோளில் தூக்கிய அங்கதனாயிற்றே.
    9 January at 19:29 · Unlike · 2

    Gnanabharathi Chinnasamy · 19 mutual friends
    ராஜா நெட்டி வெளியே தள்ளியவுடன் பெருமாளோடு கூட்டா?
    9 January at 19:37 · Like

    Gnanabharathi Chinnasamy · 19 mutual friends
    பெரிய திருவடிக்கு இந்த முறை கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளும் வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறார்.
    9 January at 19:46 · Like

    மஞ்சுநாத் தாய்மொழி தமிழ் · Friends with பிரபா அழகர்
    9 January at 20:50 · Unlike · 1

    Selvaraj Ksraj · 8 mutual friends
    ஒட்டுப்போட்ட மக்களை இழிவுபத்துகிரார்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின்போது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே தூங்கிக்கொண்டு இருந்தன மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பதை மக்கள தேர்தலின் மூலம் உலகத்திர்க்கு தெளிவுபடுத்தி உள்ளனர்
    Yesterday at 01:15 · Unlike · 1

    Rangaraju Raju · 14 mutual friends
    நல்ல பதிவு. — சரியான சந்தர்ப்பவாதி. இந்த இலட்சணத்தில் தாங்கள்தான் பெரியாரின் வாரிசு என்று வெறுங் கூச்சல். // குழந்தைகள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றபோது எழுந்த மரண ஓலத்தில்.. உலகமே அதிர்ந்து பார்த்தது. அப்போ உங்க திருமால் தெற்கு பக்கம் பார்க்காமல்.. எந்த அக்கிரகாரத்து பலகாரக் கடையை வேடிக்கைப் பார்த்தான்?’ //
    Yesterday at 08:25 · Edited · Unlike · 1

  2. ஏன் கைவிட்டாய் எம்மை ?என கடவுள் நம்பிக்கை உள்ளவன் கேட்கலாம்.
    பார்த்தாயா? கைவிட்டுவிட்டார்? என கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரை குறிப்பிட்டு கேட்கிறார்கள்?
    கடவுள் இருக்கிறார் என்பதில் ஆத்திகர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைவிட நாத்திகர்களுக்கு அதிகமாகவே நம்பிக்கை இருக்கிறது.
    இது நண்பர் மதிமாறனின் பல பதிவுகளில் தெளிவாகவே தெரிகிறது.
    “இருக்கிறான், காப்பாற்ற வருவான்” என்பவனுக்கு இருக்கும் நம்பிக்கையைபோலவே “அவனில்லை, காப்பாற்ற வரமாட்டான்” என்று கூறுபவர்களின் நம்பிக்கையையும் கவனிக்கையில் நம்பிக்கைதான் கடவுள், நம்பிக்கைதான் வாழ்க்கை எனும்போது இதில் ஆத்திகம் ஏது? நாத்திகம் ஏது?இல்லாதவன் எனும்போது அவன் வரமாட்டான் எனும் தனி வாதம் எதற்கு?
    படைத்தல் ,காத்தல்,அழித்தல் மூன்றுமே கடவுளின் செயல் (அவன் என்ன பெயரிலோ இருக்கட்டும்)எனும் பொழுது இதில் தமக்கு வேண்டிய ஏதேனும் ஒன்று நடைபெறும்பொழுது மட்டும் இருக்கிறான் என்றோ, இல்லை என்றோ வாதிட்டுகொள்வது இருவருமே(நாத்திகர்கள்,ஆத்திகர்கள் ) முழுமையாக தத்தம் கருத்துக்களை உணர்ந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

  3. //என்று தமிழ் உணர்வுள்ள பெரியார் தொண்டர்கள்//
    appadiye kalaigraiyum kekkarathu thaanee

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading