‘பெரியார் தமிழனத் துரோகி – வைகோ தமிழினத் தலைவர்’

‘பெரியார் கன்னடர், அவர் தமிழருக்கு எதிரானவர்’ – என்று சொல்கிற மணியரசன்;
‘வைகோ சிறந்த தலைவர். அவர் தான் அடுத்த முதல்வர்’ என்கிறார்.
‘பெரியாரே சரியில்லை.. அப்போ வைகோ மட்டும் எப்படிச் சரி?’ என்று மிகத் தன்மையாகக் கூட கேட்கிற தைரியம் பல பெரியாரிஸ்டுகளிடம் இல்லை.

இவர்கள் ‘பெரியாரிடம் இல்லாதது.. பிரபாகரனிடம் இருக்கிறதா?’ என்பதாக மணியரசனைப் பார்த்துக் கேட்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது ரொம்ப அதிகப்படிதான்.

25 February at 14:00 ·
பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்..?; ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

… திங்கறதுக்கு பெரியாரா சொன்னாரு..

… திங்கறதுக்கு பெரியாரா சொன்னாரு..

யாருடனும் சேர்ந்து கொண்டு, எப்படி வேணுனாலும் பொறுக்கித் திங்கறது. அப்போ கொள்கையெல்லாம் பாக்கறது கிடையாது. பொறுக்கித் திங்கறதுல பிரச்சினை ஆகி தகராறு ஆயிடுச்சின்னு வைச்சிகுங்க…

உடனே ‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’ என்று பெரியாரின் தாடி மயிர வந்து புடுங்குறது.
இதுதான் பெரியார் எதிர்ப்பாளர்களின் அரசியலாக இருக்கிறது.

பெரியாரின்; ‘இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பை’ யார் சரியாகப் பின் தொடர்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்,
பெரியாரை எதிர்ப்பதற்கு மட்டுமல்ல; ஆதரிப்பதற்கே அருகதையுண்டு.

25 February at 09:54

தமிழ்த்தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

இதுதான்.. இது மட்டும் தான்..

எளிய மக்களின் வாழ்க்கைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, இந்து மதத்தை, ஜாதியை, பார்ப்பனியத்தைக் கந்தலாக்கிய டாக்டர் அம்பேத்கரை எதிர்த்து அல்லது புறக்கணித்து விட்டு;

இந்து வெறி, ஜாதி வெறியோடு கட்சி நடத்திய பால்தாக்ரேவிடம் தமிழ் தேசிய கூறுகளைப் பார்ப்பது
தமிழ் உணர்வல்ல.. தலித் விரோத இடைநிலை ஜாதி உணர்வு.
மணியரசனிடம் மட்டுமல்ல, பழ. நெடுமாறன் உட்பட இன்னும் பல தமிழ் தேசியவாதிகளிடம் இருப்பது இதுதான். இது மட்டும் தான்.
22 February at 12:17

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்..?; ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

இரண்டில் ஒன்று.. எது?

ஜாதி: யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு

சன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்

இரண்டில் ஒன்று.. எது?

பகுத்தறிவை ஊட்டுங்கள், அது தமிழ் உணர்வை ஊட்டும். அதைத்தான் என் தலைவன் தன் வாழ்நாளையே அர்பணித்து 95 வயது வரை செய்தான். அவன் ஒருவனால் தான் தமிழும் நிமிர்ந்தது. தமிழனும் நிமிர்ந்தான்.

அதனால் தான் அவன் யார் பின்னாலும் சென்றதில்லை; அவன் பின்னால் மற்றவரை வர வைத்தான்.

தமிழ் உணர்வு வழியாகப் பகுத்தறிவை ஊட்ட முயற்சித்தால்; அது ஜாதி உணர்வை தான் ஊட்டும். பிறகு நாம் தான் பகுத்தறிவு விரோத ஜாதி உணர்வாளர்கள் பின்னாலெல்லாம் செல்லவேண்டி வரும்.

முடிவு செய்து கொள்ளுங்கள்; பகுத்தறிவு வழி, தமிழ் உணர்வா? இல்லை, தமிழ் உணர்வு வழி, ஜாதி உணர்வா?

19 February at 16:46
பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

‘பெரியாரிடம் தத்துவமும் இல்லை. கோட்பாடும் இல்லை’ என்று அவதூறாகப் பேசுகிற தீவிர விடுதலைப்புலி ஆதரவு பெரியார் எதிர்ப்புத் தமிழ்த்தேசியவாதிகளைப் பார்த்து,

‘இவை இரண்டும் பிரபாகரினடம் இருக்கிறதா?’ என்று தன்மையாகக் கூடக் கேட்கிற தைரியம், பெரியார் தொண்டர்களுக்கும் பெரியார் இயக்கங்களுக்கும் சுத்தமாக இல்லை.

இது தான் பெரியாருக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி. பெரியாருக்கு இந்த நெருக்கடியை ஏற்படுத்தியது பெரியார் இயக்கங்களே. அவர்களின் தமிழ்த்தேசிய உணர்வே.

17 February 2015 at 18:31″>17 February at 18:31

<a

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

சுயமரியாதை இயக்க மாநாடு நினைவுக் கூட்டம்

10269522_743058485771850_3434282620334184537_n

இடஒதுக்கீடு தேசத்துரோகம்

இடஒதுக்கீடு தேசத்துரோகம்

 

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு

தோழர் மதிமாறனுடன் ஓர் உரையாடல்

10917719_319178838282243_503870746_n

2012 ஆம் ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மனுசாஸ்திர எரிப்பு விளக்கமாநாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு மாவட்டங்கள்தோறும் கழகத்தோழர்கள் மனுசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவத்துக்கு எதிரான, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் பகுதிகளை எரிக்கும் போராட்டம் நடத்தி கைதானார்கள். ஈழப்போராட்டம், மரணதண்டனை ஒழிப்பு, முல்லைப்பெரியாறு உரிமை, அணுஉலை எதிர்ப்பு என பல களங்களில் நம்முடன் இணைந்து நின்ற சில இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கூட மனுசாஸ்திர எரிப்புப்போராட்டத்தில் ஒதுங்கி நின்றார்கள்.

அதேபோல பிராமணாள் கபே பெயரழிப்பு போராட்டத்தில் களமிறங்கிய தந்தை பெரியார் திராவிடர்கழகத் தோழர்களும் பல விமர்சனத்திற்கு உள்ளானார்கள். அன்று விலகிநின்றவர்களும் விமர்சனம் செய்தவர்களும் இன்றைய அரசியல் போக்கைப் பார்த்து நமது போராட்டங்களின் தேவையை உணரத்தொடங்கிவிட்டார்கள்.

பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, சமத்துவமற்ற நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றின் மூலம் மக்களின் மனங்களில் அடிப்படைவாத மூடக்கருத்துக்களைப் பரப்பினார்கள். அவை வழக்கொழிந்துவிட வில்லை. இன்றளவும் சமயச்சொற்பொழிவாகவும், நவீனத்துவ, பின்நவீனத்துவ கலைஇலக்கிய வடிவங்கள் வழியாகவும் பரப்பப்பட்டு வருகின்றன. அச்சு, காட்சி ஊடகங்களில் அறிவியலின் முன்னேற்றம், கருவிகளாகப் பரிணமித்திருக்கிறதே தவிர, அதைப் பயன்படுத்தும் மனிதர்களில் பலர் ஆயிரமாண்டு பழமையான அடிப்படைவாதிகளாகவே உலவிவருகின்றனர். இன்னும் சொன்னால் இப்படிப்பட்டவர்களை நம்பியே ஊடகங்களின் வணிகமும் செழித்திருக்கிறது.

இந்த நிலைமையை மாற்றாமல் இதை நாகரீக சமூகமாக நாம் கருதமுடியாது என்பதால்தான், பெரியாரியக்கத் தோழர்கள் எந்த விமர்சனம் வந்தாலும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள். அமைப்பாகவும் தனிமனிதக் கடமையாகவும் ஜாதி, மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக கருத்தியல் தளத்திலும் செயல்பட்டு வருகின்றனர். அப்படியான பெருமைக்குரிய பெரியாரியக் கருத்தாளர்களில் ஒருவர்தான் தோழர் மதிமாறன்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் அண்மையில் நடைபெற்ற திராவிடர் திருநாள் நிகழ்வில் தோழர் மதிமாறனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பொருத்தமானது. அவருக்கு சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தற்கால கலை இலக்கிய மற்றும் அரசியல் போக்கு குறித்தும், அதைத் தொடர்ந்து நாம் கவனம் கொள்ள வேண்டியவை பற்றியும் தோழர் மதிமாறனுடன் ஓர் உரையாடலுக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 15 ல் திண்டுக்கல்லில் உரையாடல் நடைபெறஉள்ளது. அவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை முன்னதாகவே அனுப்பலாம். கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு அரங்கில் அவரிடம் கேட்கப்படும். கேள்விகளை சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகத்தின் முகநூல் பக்கத்திற்கு அரட்டை செயலியில் (CHAT) அனுப்பலாம். சு.க.ப.க மின்னஞசலிலும் அனுப்பலாம். sukapaka@gmail.com

தோழமையுடன்
கொளத்தூர் குமார் 98427 57550
செல்லையா முத்துச்சாமி 94456 82092
அ.ப.சிவா 98430 68294

நன்றி: சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

இரண்டாம் பகுதி

நன்றி: BK BK.

தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு