இரண்டில் ஒன்று.. எது?

பகுத்தறிவை ஊட்டுங்கள், அது தமிழ் உணர்வை ஊட்டும். அதைத்தான் என் தலைவன் தன் வாழ்நாளையே அர்பணித்து 95 வயது வரை செய்தான். அவன் ஒருவனால் தான் தமிழும் நிமிர்ந்தது. தமிழனும் நிமிர்ந்தான்.

அதனால் தான் அவன் யார் பின்னாலும் சென்றதில்லை; அவன் பின்னால் மற்றவரை வர வைத்தான்.

தமிழ் உணர்வு வழியாகப் பகுத்தறிவை ஊட்ட முயற்சித்தால்; அது ஜாதி உணர்வை தான் ஊட்டும். பிறகு நாம் தான் பகுத்தறிவு விரோத ஜாதி உணர்வாளர்கள் பின்னாலெல்லாம் செல்லவேண்டி வரும்.

முடிவு செய்து கொள்ளுங்கள்; பகுத்தறிவு வழி, தமிழ் உணர்வா? இல்லை, தமிழ் உணர்வு வழி, ஜாதி உணர்வா?

19 February at 16:46
பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

5 thoughts on “இரண்டில் ஒன்று.. எது?

  1. // பகுத்தறிவை ஊட்டுங்கள், அது தமிழ் உணர்வை ஊட்டும்// //தமிழ் உணர்வு வழியாகப் பகுத்தறிவை ஊட்ட முயற்சித்தால்; அது ஜாதி உணர்வை தான் ஊட்டும். பிறகு நாம் தான் பகுத்தறிவு விரோத ஜாதி உணர்வாளர்கள் பின்னாலெல்லாம் செல்லவேண்டி வரும்.//
    மன்னிக்க வேண்டும்: கொஞ்சம் எடுத்துக் காட்டுகளுடன் இந்த மர மண்டைகளுக்கு ப் புரிய வையுங்கள்.

  2. மிகவும் நல்ல சிந்தனை!!!
    பகுத்தறிவு என்னும் உண்மையை பின்பற்றினால் மனிதகுலம் செழிக்கும்.

  3. பேராசிரியாரே, தயவு செய்து பதிவைப் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள். நான் ( என்னைப் போன்ற பலர்) மலர் போலவோ, பிரகாஷ் போலவோ பதிவு இட்ட வுடன் படித்துப் புரிந்து நல்ல பதிவு என்று பின்னூட்டம் இடுவது ஆகவில்லை.

  4. பகுத்தறிவுன்னா இன்னாங்கோ மத்தவங்கள தாறுமாறா திட்டறதுதானே

Leave a Reply

%d bloggers like this: