பகுத்தறிவு ஏன்? எதற்கு?

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (தஞ்சை-வல்லம்) ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தன்று, முட்டாள்களாகவும் மூடர்களாகவும் இருந்தவர்களைத் திருத்திய தலைவர் பெரியார் பற்றிப் பேசுகிறேன். காலை 10 மணி.
Rationalist Club Invitation

இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரியத்தின் தேவை

இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரியத்தின் தேவை

புதுவைப் பல்கலைக்கழகத்தில்..
Invitation_Periyar

பாப்பாவை குழப்பாதிங்கப்பா..

ஜாதிகள் இல்லையடி பாப்பா குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் – பாரதியார்.

அதான் ‘ஜாதிகள் இல்லை’ ன்னு சொல்லியாச்சியில்ல… அப்புறம் இல்லாததில்.. குல தாழ்ச்சி உயர்ச்சி எப்படி சொல்ல முடியும்?
*
பாப்பாவை குழப்பாதிங்கப்பா..
22 March at 10:13

காலத்தைத் தாண்டி கனவு கண்டவன்..

‘என்னடா நியாயம் இது?’

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

காந்தி + சவர்க்கார் + கோட்சே = இந்து புனிதம் ; சவர்க்கார் + பாரதி + கோட்சே = பார்ப்பனப் புனிதம்.

வியட்நாம் வீடு;அவமானம்

vietnam_veedu
அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான வியட்நாம் மக்களின் வீரம் நிறைந்த போர், உலகம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் நடக்கிற குடுமி சண்டைக்கு அதே காலத்தில் ‘வியாட்நாம் வீடு’ என்று பெயர் வைத்துக் அவமானப்படுத்தப்பட்டது.
18 March

சத்தியஜித்ரே vs மிருணாள் சென்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு

comedy7

பரதநாட்டியத்திற்குத் தோதாக எப்போதும் தவில், நாதஸ்வரத்தை வைக்க மாட்டார்கள். மிருதங்கம், ஜதி தான் பிரதானமாக இருக்கும்.

நாதஸ்வரம், தவில் வைத்தால் அது தரம் குறைந்தது என்ற கண்ணோட்டம் உண்டு. இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டையும் கரகாட்டத்திற்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஏன் பரதநாட்டியத்திலிருந்து தவிலும் நாதஸ்வரமும் அப்புறப்படுத்தப்பட்டது?
பரதநாட்டியத்தை இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆடியபோது தவிலும் நாதஸ்வரமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பார்ப்பனர்கள் பரதநாட்டியத்தைக் கைபற்றிய பிறகு அவர்கள் செய்த முதல் காரியம் நாதஸ்வரத்தையும் தவிலையும் அப்புறப்படுத்தியதுதான்.

அதே தாளம், ராகம், அதே ஏழு சுவரங்கள் அப்படியே எல்லாத் தரமும் இருந்தும் ஏன் அப்புறப்படுத்தினார்கள்?
கர்நாடக சங்கீத அம்சங்கள் முழுமையாக நிறைந்த நாதஸ்வரத்தையும் தவிலையும் பார்ப்பனர்கள் தீவிரமாக ரசிப்பார்களே தவிர, ஒரு போதும் அதை வாசிக்க மாட்டார்கள்.
இவை இரண்டும் கல்யாண ஊர்வலம், சாமி ஊர்வலம் என்று தெருக்களிலும் வாசித்து எளிய மக்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது என்பதினாலும், இரண்டையும் வாசிப்பதற்கு அதிகமான உடல் உழைப்பும், சக்தியும் செலவழிக்க வேண்டும் என்ற இன்னொரு முக்கியக் காரணமும்.

செஸ், டென்னிஸ், கிரிக்கெட் விளையாடுகிறவர்கள்கள் ஏன் கால்பந்தும், கபடியும் விளையாட வருவதில்லை? என்பதற்கு என்ன விடையோ அதே தான் இதற்கும்.
இந்தச் சூழலில், தில்லானா மோகனாம்பாளில் பரதநாட்டியத்திற்கு இணையாக நாதஸ்வரத்தையும் தவிலையும் முன்னுறுத்தி சிறந்த படத்தைத் தந்ததில் இருக்கிறது, ஏ.பி. நாகராஜனின் அரசியல் கண்ணோட்டம்.

பரத நாட்டியம், கர்நாடக இசையில் பார்ப்பனர்கள் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்தபோதும்; தில்லானா மோகனம்பாள் படத்தில் சிவாஜி குருப், பத்மினி குருப் இரண்டிலும் ஒரு பார்ப்பனக் கதாபாத்திரம்கூடக் காட்டாமல்
படத்தில் தொடர்ந்து சிண்டு முடித்து வில்லத்தனம் செய்கிற ‘வைத்தி’ கதாபாத்திரத்தை ஒரு பார்ப்பனராக அதுவும் ஒரு பார்ப்பனரையே நடிக்க வைத்துக் காட்டியதிலும் இருக்கிறது, இயக்குநர் ஏ.பி. நாகராஜனிடம் பெரியாரின் தாக்கம்.

பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னைப் புறக்கணித்தவர்களிடமும் எதிர்த்தவர்களிடமும் கூட ஒளியைப்போல் ஊடுறுவினார் என்பதற்குத் தில்லானா மோகனாம்பாள் படமும் சாட்சி.
16 March at 15:00

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

காந்தி + சவர்க்கார் + கோட்சே = இந்து புனிதம் ; சவர்க்கார் + பாரதி + கோட்சே = பார்ப்பனப் புனிதம்.

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

டாக்டர் அம்பேத்கர் பார்வையில் இந்து ராஷ்டிரம் ஒழிப்பு

டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிப்பது எப்படி?

மக்கள் திலகமும் மலிவு விலை மதுவும்

mgr

‘நீ தான் ஒரு மிருகம் –
இந்த மதுவில் விழும் நேரம்’ என்று ஒரு நடிகராக மதுவிற்கு எதிராகத் தொடர்ந்து முழுங்கிய எம்.ஜி.ஆர்;
முதலமைச்சராக ஆனவுடனேயே; விஸ்கி, பிராந்தி போன்ற சீமை சரக்கல்ல; பட்ட சரக்கு சாராயத்தையே மலிவு விலை மதுவாக விற்றார்.

இதற்கு இவர் சினிமாவில் குடிகாரனாகவும், முதலமைச்சராக மதுவிற்கு எதிராகவும் இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்?

4 March

புரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து

புரட்சித்தலைவரின் புரட்சிகரப் பாடல்

…. ஜாதிய தமிழ்தேசியம்

10991585_821795564572427_5543099866752389760_o

கே. பாலசந்தர் ‘மகளிர் தினம்’: நல்லா வௌங்கும் நாடு

மரியாதைக்குரியத் தோழர்களுக்கு என் அன்பான நன்றி

கே. பாலசந்தர் ‘மகளிர் தினம்’: நல்லா வௌங்கும் நாடு

avaloruthodarkathai
பி.பி.சி தொலைக்காட்சி, ‘டெல்லியில் பெண்ணைப் பாலியல் வன்முறை செய்து கொலை செய்தவன் பேட்டியை, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒளிபரப்பும்’ என்று முன்னர் அறிவித்திருந்தது.

அதுபோல் பொதிகை தொலைக்காட்சி, ‘மகளிர் தினச் சிறப்பாக இயக்குர் கே. பாலசந்தர் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி’ என்று அறிவித்திருக்கிறது.

வேலைக்குப் போகிற பெண்கள் கவர்ச்சியாக உடையணிந்து ஆண்களைக் கவர்வது போல்தான் போவார்கள். கணவன் இல்லாதவர்கள், குடும்பப் பொறுப்பற்ற ஆண்கள் இந்தச் சூழல் தான் பெண்களை வேலைக்குப் போக வேண்டிய இழிவான நிலைக்குத் தள்ளுகிறது..
பாவம் குடும்ப வறுமை காரணமாகப் பெண் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. வீட்டிலிருந்தால், பெண்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக, மன அமைதியுடன் வாழ்வார்கள் என்று,
பெண்கள் வேலைக்குப் போவதையே ‘விலை’க்குப் போவதைப்போல் அவள் ஒரு தொடர்கதையில் சித்தரித்தார்.

தொடர்ந்து தன் படங்களில், மோசமான கணவனைப் பிரிந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வதைத் தடுத்தே வந்தார்.
அரசு தொலைக்காட்சி மகளிர் தினத்திற்கு இவரைப் பற்றிச் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பி, சிறப்புச் செய்திறதாம் பெண்களுக்கு.
நல்லா வௌங்கும் நாடு.
*

இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல