பெரியார் திடலை பாதுகாத்தவர்களுடன்..

11188076_709953682446594_559395885_o
இந்து மதவாத குண்டர்களிடமிருந்து பெரியார் திடலை பாதுகாக்க சிறை சென்ற, திராவிடர் கழகத் தோழர்களுடன்.

‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’

தேசத் துரோகி – குருத் துரோகி பாரதிதாசனும் தேசப்பக்த அறிஞர்களும்

20FRERODE1_TAMILAN_2346295g
என்னுடைய ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ புத்தகத்தில் ஓர் இடத்தில்கூட பாரதிக்கு மாற்று பாரதிதாசன் என்று குறிப்பிடவில்லை. அப்படியிருந்தும் அறிஞர்கள், அவர்களின் விவாத வசதிக்காக, ‘‘இவர்கள் பாராட்டுகிற பாரதிதாசனே, பாரதியை புகழ்ந்தும், அவரை இகழ்ந்து பேசியவர்களை இகழ்ந்தும் பேசி இருக்கிறார். அதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள்?’’ என்று மிகப்பெரிய ‘பாயின்டை’ எடுத்து விட்டு மடக்கி விட்ட பாணியில்.

பாரதியின் சிஷ்யனான பாரதிதாசன், பாரதியை தனிப்பட்ட முறையில் பாராட்டிப் பேசியதைத் தவிர, மற்றபடி பாரதியின் கருத்துகளை, தத்துவங்களைப் பின்தொடர்ந்து எழுதியிருக்கிறாரா? இல்லை.
குரு துரோகியாகி, குருநாதன் எழுத்துகளுக்குப் பதிலடி தந்திருக்கிறார்.

‘திராவிடம்’, ‘ திராவிடன்’ என்று எழுதுவதற்கே கை நடுங்கி, திராவிடர்கள்’ என்று பேசினால் ‘தேசத் துரோகிகள்’ என்று வசை பாடிய பாரதியின் சிஷ்யனான பாரதிதாசன், தன் இருப்பை பாரதிக்கு நேர் எதிரான திராவிட அரசியலில்தான் வைத்திருந்தார்.
பாரதியின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு தேசத் துரோகியாகத்தான் இருந்தார்.
இன்னும் சொல்லப் போனால், பாரதியின் எழுத்துக்களுக்கான மறுப்பை முதலில் எழுதியது பாரதிதாசன்தான்.

அறிஞர் பெருமக்கள், ‘ஆரியன்’,‘ஆரியம்’ என்பதை உயர்ந்தவர் & உயர்ந்தது, மேன்மையானது என்கிற பொருளில்தான் பாரதி பாடியிருக்கிறான். அது, பார்ப்பனர்களைக் குறிக்கிற சொல் அல்ல என்று வாதிடுகிறார்கள். ஆனால், சிஷ்யன் தன் குருநாதனுக்கும், அறிஞர்களுக்கும் சேர்த்தே இப்படிப் பதில் சொல்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களை தன்னிலும் மட்டமானவர்களாகப் பார்க்கும் பிற்படுத்தப்பட்டவர்களைக் குறிக்கிற இடத்தில்,
கொல்லா விரதம் கொண்டோர்
கொலை செய்யும் ஆரியர்தம்
சொல்லுக்கிசைந்தாரடி
என்று குறிப்பிடுகிறார்.
இதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் யாரும் ஆரியர்கள் அல்ல; பார்ப்பனர்கள்தான் ஆரியர்கள் என்று தெளிவாகச் சொல்கிறார்.

இன்னொரு இடத்தில்,
ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதை மறைத்துத்
தாமட்டும் வாழச்சதை நாணா ஆரியத்தை
நம்புவார் நம்பட்டும் நாளைக்குணர்வார்கள்
அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெல்லாம்
என்கிறார்.
அன்று ‘ஆரியர் என்கிற பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள்’ என்று பாரதி சொன்னதற்கும்,
இன்று ‘ ஆரியர் என்று பாரதி, பார்ப்பனர்களைக் குறிப்பிடவில்லை. உயர்ந்தவர்களை, மேன்மையானவர்களைச் சொல்கிறான்’ என்று அறிஞர்கள் சொல்வதற்கும் பதிலடிதானே இது.

‘இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லோரும் ஹிந்துக்கள்’ என்று எழுதிய பாரதிக்குப் பதிலாக,
ஏசு மதத்தாரும் முஸ்லீம்கள் எல்லாரும்
பேசில் திராவிடர் என் பிள்ளைகளே என்றுணர்க
என்று எழுதுகிறார் பாரதிதாசன்.
இந்தக் குரு துரோகம் எப்படி நேர்ந்தது?
*
01.01.2004 அன்று நான் எழுதியது. ‘பாரதி பக்தர்களின் கள்ளமவுனம்’ புத்தகத்திலிருந்து. அங்குசம் வெளியீடு.

பாரதி-தாசன்; பி.ஜே.பி, சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ், சி.பி.ஐ

‘பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்’

புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்

பாரதி-தாசன்; பி.ஜே.பி, சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ், சி.பி.ஐ

c0113115
பாரதியின் ‘இந்து’ உணர்வை நான் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியபோது, எனக்குப் பதில் சொல்வதாக,
“பாரதிதாச‘னே’ பாரதியை தீவிரமாக ஆதரித்தவர்.” என்று ‘னே’ போட்டுப் பாரதிதாசனை மிகப் பெரிய கவிஞராக விளித்தவர்கள் யாரும்; அப்போதும், இப்போதும், எப்போதும் அவரை ஒரு கவிஞராக, பாரதியைக் கொண்டாடுவது போல் கொண்டடுவதில்லை.

பார்ப்பனர்கள், இந்து அமைப்புகள் மட்டுமல்ல, கம்யுனிஸ்டுகள், பகுத்தறிவுப் பொங்கும் பேராசிரியர்கள், ‘நவீன’ பெரியாரியல் ஆய்வாளர்கள் வரை இப்படித்தான்.
அதாவது பாரதிதாசனை, பாரதிக்கான அடியாளாகப் பயன்படுத்த மட்டும் அவரைப் பெரிய கவிஞராகச் சுட்டுவார்கள்.

கம்யுனிஸ்டுகளில் பெரியாரை விமர்சித்தவர்கள்கூட பாரதியை விமர்சித்ததில்லை; ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ மட்டுமே பாரதியைக் கடுமையாக விமர்சித்து, பாரதிதாசனை ஆதரிப்பவர்கள்.

தவிர, மற்றவர் ‘இந்து’ பாரதிக்குத் தாசனாகவும் ‘பகுத்தறிவு’ பாரதிதாசனை ‘இந்து’ மணிரத்தினத்தை மதிக்கும் அளவிற்குக் கூட பொருட்படுத்தியவர்கள் இல்லை.
*
பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், சி.பி.எம்., சி.பி.ஐ., இந்திய கம்யுனிஸட் கட்சிகள்; பாரதியை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகக் கொண்டாடுவதும், பாரதிதாசனை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும் செய்கிறார்கள்.

‘நமக்குள் சில விசயங்களில் முரண்பாடு இருக்கலாம். ஆனால், இன்றைய சூழலில், எது நம்மை இணைக்கிறதோ அதோடு சேர்ந்து நாம் செயல்படவேண்டும்’ என்று ‘தோழர்’கள் அடிக்கடி சொல்வார்கள்.

இந்தக் கொள்கை ஒற்றுமையோடு தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்.

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

பாரதியும் பாரதிதாசனும் சின்ன விவாதமும்

புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்

கோமாதா Vs மாட்டுக்கறி – நிலநடுக்கம்

1000 கணக்கான மக்கள், நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களை அவமானப்படுத்துவது போல் ‘மாட்டுக்கறிச் சாப்பிட்டதினால் பூகம்பம் வந்தது’ என்கிறார் ஒரு இந்து தலைவர்.
உலகின் ஒரே இந்து நாடு நேபாளம். பதிலுக்கு ‘இந்து நாடாக இருப்பதினால்தான் நிலநடுக்கம் வந்தது’ என்றால்… இந்து தலைவர்கள் என்ன விளக்கம் தருவார்கள்?

அது சரி. இந்து நாடாக அறிவித்திருக்கிற அங்கேயே மாட்டுக்கறிச் சாப்பிடுகிறார்கள். அப்புறம் இங்க.. மதசார்பற்ற நாட்ல மாட்டுக்கறிக்குத் தடை விதிப்பதுதான் இந்து தர்மமா?
*
‘மாட்டுக்கறி’ நில நடுக்கத்தைக் கொடுக்கல… இந்து அமைப்புகளுக்குத்தான் ‘நடுக்க’த்தைக் கொடுக்குது. ஆட்சியில் இன்னைக்குப் பில்டிங் ஸ்ட்ராங்கா இருந்தாலும்… பேஸ்மெண்ட் ஆட்டக் காணுதில்ல..
இது ‘கோமாதா’விற்கும் ‘மாட்டுக்கறி’க்கும் நடக்குற யுத்தம்.
10 hrs · Edited ·

மாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்

வாஞ்சிநாதன்; தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறி

‘ஆள்’ அதே ‘..மால்’ தானே

டீ கடையில் டீ குடிக்கும் போது, தற்செயலா இரண்டு வார்த்தைக்கூட பேசுவதற்கு லாயக்கற்றவர்களோடு, டீ.வி யில எல்லாம் பேச நேரிடுவது கொடுமை.
23 April at 08:50

‘ஆள்’ அதே ‘..மால்’ தானே
*
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும், பி.ஜே.பி மற்றம் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதம், வேதம், புராணம் குறித்து‘ம்’ அடிப்படை அறிவுகூட இல்லை;
ஆனால், அவர்கள்தான் பெரியாரை முற்றிலும் கற்றவர்கள் போல் அவதூறு பேசுகிறார்கள்.
‘முரட்டு முட்டாளாக பொய்தான் பேசுவேன்’ என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.
எச். ராஜா என்பது ஒரு ஆள் அல்ல; எல்லோரிலும் எச். ராஜாத்தான் இருக்கிறார்.
‘அவதாரம்’ வேற வேற என்றாலும் ‘ஆள்’ அதே ‘..மால்’ தானே
24 April at 17:04 · Edited ·

‘தந்தி’ தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல..

நெற்றியில் குங்குமம், திருநீர் வைத்திருக்கிற ஒரு நபரை, இந்துவாக மட்டும் பார்க்காமல், அவரை ஒரு பொதுநபராகக் கருதி, பல பிரச்சினைகள் குறித்துக் கருத்துக் கேட்கிற ஊடகங்கள்;

தொப்பியும், தாடியும் வைத்திருப்பவரை பொதுநபராகக் கருதி, அவரிடமும் பொதுப் பிரச்சினைகளைக் கேட்காமல், ‘முஸ்லிமாக’ மட்டுமே அவரை அடையப்படுத்துவது ஏன்?
இந்தக் கேள்வி ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல..

12 April at 22:43

இந்து Vs இந்து – முஸ்லிம்?

தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!

முடியில.. நன்றியோ நன்றி..

11158181_1595091224081075_1587411150_n
‘சக்கரவள்ளி கிழங்கே சமைஞ்சது எப்படி..?’ என்று தமிழ் உணர்வை ஊட்டி தமிழர்களைத் தட்டியெழுப்பிய அய்யா பெருந்தமிழர் ‘வாலி’ அவர்களின் படத்தை, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாட்டியிருக்கிறார்கள்.

பச்சைத் தமிழர் அய்யா ‘வாலி’ அவர்களின் வீரமரணத்திற்குப் பிறகு இது நடந்திருக்கிறது. அன்புத் தம்பி Thilip Kumar இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து ‘ரசித்தது’ மட்டுமல்ல; தாங்க முடியாமல் படமாக எடுத்தும் அனுப்பியிருக்கிறார்.

தமிழர்களை அலைகடலெனத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை நடுங்கச் செய்யும் போராட்டங்களை நடத்தி வரும் பழந்தமிழர் அய்யா மாவீரன் பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டியது தமிழ்க் கடமை.

இந்த நன்றி காவியக்கவிஞர் ‘வாலி’ அவர்களின் படத்தை மாட்டியதற்காக மட்டுமல்ல; பெரியார் படத்தை மாட்டாமல் விட்டதற்கும்.
அய்யா மாவீரன் பழ. நெடுமாறன் அவர்களுக்குக் கோடான கோடி நன்றிகள்.
20 April at 09:12

இதுதான்.. இது மட்டும் தான்..

‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

கால்டுவெல்லுக்கு நேர்ந்த அவமானம்!

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

C.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா?

அருணாக்கயிறு பூணூல் கயிறு தூக்குக் கயிறு

Janeu9_1414836526

பூணூல் அறுப்புக்கு, ரொம்பக் கவலைப்படுகிறார்களே.. பிராமணாளை விடச் சூத்திராள்?
தனக்குத் தெரிந்த ‘பிரமணாள்ஸ்’ இடம் அட்டனஸ் போடறதிலேயே கவனமா இருக்காங்க சூத்திராள்ஸ்.

இந்தச் சர்.. சூத்திராள் போல.. மதம் மாறினாலும் இன்னும் மனம் மாறாத ‘பாய்’ சூத்திராளும். இருக்கிறார்கள்.

எப்படியோ பூணூல் அறுப்புலேயும் உங்க மார்க்கெட்டிங்க நல்லா பண்றேள். வாழ்த்துகள். பிராமணாளோட உங்கள் ‘உறவு’ நல்லபடியா நடந்து, உங்கள் ‘பிராஜெக்ட்’ வெற்றிபெற.

*
தமிழர்கள் மட்டுமா… இந்தியர்களே கோவணம் கட்டுகிற பழக்கத்தில் இருந்து ஜட்டிக்கு மாறியப் பிறகு; இடுப்பில் கட்டிருந்த அருணாக்கொடியை அறுத்து எறிந்தார்கள்.

ஒன்றை தொடர்வதற்கும் கை விடுவதற்கும் காரணம் இருக்கும். எதையும் மனிதர்கள் தன் பயன்பாடு, எப்படியாவது பயன்படும் என்ற நம்பிக்கை அல்லது லாபம் (சமூக அந்தஸ்து) இல்லாமல் கடைப்பிடிக்க மாட்டார்கள்.

ஆனால், இந்தப் பூணூலில் பூ கட்டுவார்களா? இல்லையென்றால் எதற்கு பூணூல் என்ற பெயர்? அதன் பயன் பாடென்ன? இது இரண்டும் இல்லை என்றால்.. சமூக அந்தஸ்தா? அப்படியானால் பூணூல் இல்லாதவர்கள் சமூக அந்தஸ்து இல்லாதவர்களா?

*
‘தூக்குக் கயிறு’ க்கு எதிரா பேசுங்க என்றபோது, ‘முடியாது’ என்றவர்கள்; ‘பூணூல் கயிறு’க்கு ஆதரவா பேசுகிறாரகள்.
‘என்ன ஒரு மனிதாபிமானம்?’
22 April at 12:26 ·

‘பூணூல் அணிவது தவறு என்று அவர்களுக்குப் புரிய வைத்து, அவர்களையே கழட்ட வைக்க வேண்டும்’ என்று இப்போது நியாயம் பேசுகிற எத்தனைப் பேர்,
இதற்குமுன் ‘தவறு’ என்று அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள்.

இதை ‘பூணூல் நியாயம்’ பேசுகிற ‘பார்ப்பன – சூத்திர’ உணர்வாளகளிடமே கேட்கிறேன்.
*
‘மேக்கப்’ நாடகத்திற்கல்ல..
*
பெரியார் அடிக்கடி பேசிய எழுதிய வலியுறுத்திய ‘பார்ப்பான்’ ‘பார்ப்பனர்’ என்ற வார்த்தையை ரகசியமாக பேசக் கூட தைரியமில்லாதவர்கள், விரும்பாதவர்கள்;

பூணூல் அறுப்பு சம்பவத்தை கண்டிக்கும் போதும் மட்டும், ‘பெரியாரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையான பெரியாரியர் தொண்டர்களாக இருக்க மாட்டார்கள்’ என்று தீவிர பெரியாரிஸ்ட்டை போல் ‘மேக்கப்’ போடுகிறார்கள்.
23 April at 12:26 ·
தாலியோ தாலி..

கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

தாலியோ தாலி..

இவ்விழாவில் தாலியை அகற்றுவது பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் செயலாகும். எனவே பிறர் மனதை புண்படுத்தும் இதுபோன்ற இழி செயல்களில் வீரமணி தயவு செய்து ஈடுபட வேண்டாம் என்று தனியார் கல்லூரிகளின் மொதலாளி, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ‘முதலியார் முன்னேற்றம்’ ஏ.சி.சண்முகம் கவலை.

அடப்பாவிகளா, நீங்க கல்லூரி நடத்தி நன்கொடை என்ற பெயரில் எத்தனப்பேர் தாலிய அறுத்து, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நடுரோட்ல நிறுத்தியிருக்கீங்க.. அது தான் பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் செயல்.
14 April at 07:21 ·

பொண்ணோட அம்மா தாலிய அறுத்து, வரதட்சினை என்ற பெயரில் கொள்ளையடிச்சு கல்யாணம் பண்ணவனெல்லாம் சொல்றான்ய்யா…

‘தாலி அறுக்கும் நிகழ்ச்சி பெண்களுக்கு எதிரானது’ என்று.
14 April at 09:06 ·

‘தாலி’ தமிழர் பண்பாடு என்றால், அப்புறம் எப்படி இந்திக்காரனிலிருந்து இந்தியா முழுக்க ‘தாலி’ கட்டுகிறார்கள்?அப்போ இந்தச் சீர்கேடை தமிழன் தான் இந்தியா முழுக்கப் பரப்பியவனா?

‘ஏன்ய்யா தமிழன அசிங்கப்படுத்துறீங்க?’
15 April at 12:26 ·

தாலிக்கு எதிரான போராட்டம்! – பரபரக்கும் சர்ச்சை

கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

19 April at 13:47 · Edited ·sankarachari-su-swamy-pon-radhakrishnan
‘கி.வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தரையில உட்கார வைக்கும்போதே இவ்வளவு விசுவாசமா இருக்காரே,
இன்னும் ‘சேர்’ ல உட்கார வைச்சா, ‘கி.வீரமணியை தூக்கில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்பார் போலும்.
20 April at 13:47 ·

ஒரு மாத காலத்திற்குள் பெரியார் சிலைக்கு கீழே, ‘கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்’ என்ற வாசகத்தை அழிக்கா விட்டால்,அதற்குப் பக்கத்தில் கடவுள் இல்லை என்பவன் பொறுக்கி என்று எழுதி வைத்து விடுவோம் : எச்.ராஜா .

‘கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்’ என்று தலைவர் பெரியார் எவ்வளவு சரியா சொல்லியிருக்கிறார்.
19 April at 13:47 ·

தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு