தாலி-மாட்டுக்கறி அரசியல்; கலைஞர், வைகோ – திருமாவளவன், இளங்கோவன்

download
தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி உண்ணும் விரதம் போன்ற பெரியாரின் போராட்டங்களை ஆதரித்தால் இடைநிலை ஜாதிகளின் ஓட்டுக் கிடைக்காமல் போகும் என்பதினாலேயோ அல்லது அந்தக் கருத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தினாலேயோ திமுக அதில் கலந்து கொள்வதில்லை. சரி.

தமிழக அரசு இப்படித் தடை போடுவதும், சிவசேனா குண்டர்களுக்கு ஆதரவாகத் தமிழகக் காவல் துறை தி.க தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதைக்கூடக் கண்டிக்க முடியவில்லை கலைஞரால் என்பது என்ன வகை அரசியல்? இது தான் ரெட்டைகுழல் துப்பாக்கியா?

இனவாதம் பேசுகிற தமிழ் தேசியவாதிகளைப் போல், தமிழ் அடையாளப் போராட்டங்களை மட்டும் நடத்துகிற அல்லது அதிக முக்கியத்துவம் கொடுக்கிற ‘திராவிட’ இயக்கத் தலைவரான வைகோ, தமிழ் இனவாதிகளைப் போலவே, பெரியாரிய கருத்துக்களுக்குப் பகுத்தறிவுக்குப் பெயரளவில் கூட ஆதரவு தருவதில்லை.

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் இரண்டையும் ஈழம் மற்றும் தமிழ் அடையாளப் போராட்ங்களுக்கு தன்னுடன் இணைத்துக் கொள்கிற வைகோ;

தந்தை பெரியார் திராவிடர் கழகமும், திராவிடர் விடுதலைக் கழகமும் நடத்துகிற கடவுள் மறுப்பு, இரட்டை டம்பளர் ஒழிப்பு, தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி உண்ணும் விரதம் போன்ற போராட்டங்களில், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.
இது தான் மதிமுகவின் திராவிட இயக்க பெரியார் அரசியலா?

பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராகத் திராவிட இயக்கங்கள் இப்படிப் பச்சையான சந்தர்ப்பவாதிகளாக இருக்கும் சூழலில்,

திக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையையும் தமிழக அரசையும் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் தமிழகக் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ‘மாட்டுக்கறி எனக்குப் பிடித்த உணவு’ என்று இளங்கோவன் அழுத்தம் கொடுத்து கூறியதும் மிக முக்கியமானது.

அதிலும் திருமாவளவன் தாலி அகற்றும் விழாவில் பங்கெடுத்ததும், அதைத் தொடர்ந்து பல இடங்களில் ஆதரித்துப் பேசியதும் இன்றைய மதவாத, சந்தர்ப்பவாத சூழலில் மிகவும் தைரியமான செயல். தேர்தல் கட்சியாக இருந்து கொண்டு அவர் பேசியது மிகச் சிறப்பான ஒன்று.

இருவருக்கும் நமது நன்றி.
15/04/2015

அதுதான் பெரியாரின் பணியும் கூட

‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’

3 thoughts on “தாலி-மாட்டுக்கறி அரசியல்; கலைஞர், வைகோ – திருமாவளவன், இளங்கோவன்

  1. Neelson Jenn unmai thozhar…….. periya mariyaadhai vandhu vittadhu avargal mel….
    9 hrs · Unlike · 4
    Benesh Sundaram · Friends with Venkat Raman
    Bro, what about pork? If you accept, why not dogs and cats as consumed in other countries? Do you support or oppose?
    9 hrs · Like
    Mahalingam Kannan இருவருக்கும் மனமார்ந்த நன்றி ! தோழர் !
    9 hrs · Unlike · 4
    Benesh Sundaram · Friends with Venkat Raman
    Forget thali, its a slavary chain hooked in to a girl’s neck.
    8 hrs · Like · 1
    Cb Kaja · Friends with Ramesh Periyar and 1 other
    நம்மை எதிர்ப்பவர்கள் மதவாத அரசியல் வாதிகள் ” திராவிட கட்சிகள் என்று சொல்லும் பெயர் தாங்கி அரசியல்வாதிகள் மித வாத அரசியல் வாதிகள் ” புரியவில்லையா உங்களுக்கு [ இவன். கமேன்ட்காஜா ]
    8 hrs · Edited · Like · 1
    Mohamed Ashik EVKS-E, பெரியாரின் ஒன்றுவிட்ட பேரன் என்பதால்… காங்கிரஸில் இருந்தாலும் கொஞ்சம் அந்த இரத்தம் இருக்கத்தான் செய்யும். அப்புறம், திருமாவளவன் – எதிரக்காவிட்டால்தான் ஆச்சரியம்.
    ஆனால்…
    கலைஞர், வைகோ… ஆச்சரியங்கள்..!
    8 hrs · Edited · Unlike · 6
    Benesh Sundaram · Friends with Venkat Raman
    Dear Mathi, would request to reply for pork and snake dishes. (Remember, snake is portrayed as God and Pig as evil) I love to eat both of them. Could you tell me how the current Indian government will treat me?
    8 hrs · Edited · Like
    Samsu G Bas · Friends with Haja Gani and 10 others
    கலைஞர்கருணாநிதி எப்பவோ முடிஞ்சி போச்சு! இந்த வைகோ சின்ன முனகல்கூட இல்லை ! இருந்தாலும் பெரியார் பேர் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள் இனி பெரியார் படத்தை பயன்படுத்த வேண்டாம்!
    8 hrs · Unlike · 6
    சிட்டு குருவி
    சிட்டு குருவி’s photo.
    7 hrs · Like
    செம்மொழி அரக்கன் · 43 mutual friends
    சேட்டன் மலையாளி சீமான் அண்ணன் என்ன சொல்லறாரு???
    7 hrs · Like · 3
    Kaja Mohideen · Friends with ரஹீம் கஸாலி and 1 other
    காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோ அவர்களை மாற்றாமல் ஒரு பத்து வருடம் விட்டால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் மீண்டும் சிறப்பாக வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை.சிறப்பாக கட்சியை வளர்க்கும் வகையில் பணியாற்றி வரும் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    6 hrs · Like · 3
    Ponnusamy Purushothaman I like this post atleast some one understand Dravidian parties are not following periyar concepts
    4 hrs · Like
    Sundararajan Govindan · 28 mutual friends
    தி க வின் போராட்டத்தை ஆதரித்த இடதுசாரிகளை மறந்ததேன்?
    2 hrs · Like · 1
    Kalaitamil Kalai · 17 mutual friends
    கலைஞர் ஒரு மாணமிகுசுயமரியாதைக்கார ர்.
    2 hrs · Like
    Sakthivelu Govindaraj · 45 mutual friends
    பாராட்டுக்குரிய தலைவர்களே என்பதில் பெருமைப்படலாம்.
    2 hrs · Like
    Dravida Puyal · 41 mutual friends
    தலைவர் கலைஞர் அவர்களை பற்றி விமர்சிக்க உங்களுக்கு தகுதி கிடையாது தோழர்
    2 hrs · Like
    Pa Dileepan மாடு என்ன பாவம் செய்தது, இந்துத்வா ஓநாய்களின் நஞ்சுக்கு அவைகள் ஏன் தன் உயிரை கொடுத்து பதிலளிக்ககேண்டும்? இந்த மடமைக்கு என்ன பதில்?
    1 hr · Like
    Sabari Valanaattaar · 4 mutual friends
    அடங்க மறுத்து அத்து மீறுவதுதானே சிறுத்தைகள், தற்போது இளங்கோவனும் சிறுத்தையாய் சீறுகிறார் ஒரே குழப்பமாய் உள்ளது…..
    1 hr · Like
    Pdv Flash · Friends with என் தாய்நாடு மீடியா
    எதிரானவர்களை விட நட்பானவர்களாக நடிப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இந்த சந்தர்பவாத அரசியலில் திருமா அவர்களும், இ.வி.கே.ஸ் அவர்களும் பயனிக்கும் பாதை நேர்மையானது.
    1 hr · Like · 1
    Thozhar Shanthakumar · 211 mutual friends
    இருவருக்கும் நமது
    நன்றிகள்
    1 hr · Unlike · 1

  2. thozhar mathi,
    vanakkam . pls upoad ur speech@ pondicherry,periyar maniammai univ,ranipet makkal manram speech.on your site.

    ranganathan

  3. ஹலோ சார் டிவி விவாத நிகழ்ச்சிக்கு போகும் போது தயவு செய்து உங்கள் தோழர்களை நன்றாக தயார் செய்துகொண்டு போக சொல்லுங்கள்.என்னவோ தந்தி டிவி பாண்டே நீதிபதி மாறி கேள்வி கேட்பதும் இவர்கள் என்னவோ குற்றவாளிகள் போல பதில் சொல்லுவது போல இருகின்றது அந்த விவாதங்கள்,,,,,,.உங்களை போல சரியாக பதில் சொல்ல கூடிய நபர்களை அந்த பாண்டே கூப்பிடுவது இல்லை போல தெரிகிறது….பேசவரும் கருத்தை என்னவென்றே சொல்லவிடாமல் செய்யும் பாண்டேவின் விவாத யுத்தி உங்களுக்கு தெரியாமலா இருக்கும்.சாதி மத வெறி கும்பல்களை அதிக நேரம் பேசவிட்டு ..அப்புறம் குமரேசன் மாறி இருக்கும் தோழர்களை இதற்கு நீங்கள் என்ன சொல்லபோறிங்க என்று கேட்கின்றார்.அவரும் பதில் சொல்ல ஆரம்பிக்கின்றார்..உடனே அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை முழுவதும் கேட்காமல் ,அவரை குறுக்கு கேள்வி கேட்கின்றேன் என்று கடைசி வரை அவரின் பதிலை சொல்லவிடாமல் செய்யும் யுத்தி இருகின்றதே ஐயோ சாமி சத்தியமா முடியல.ஒன்று முழுவதும் என்ன சொல்லுகின்றார் என்று பேச விட சொல்லுங்கள்.இல்லையா விவாததிருக்கு கூப்பிடாமல் இருக்க சொல்லுங்கள்..இது ரெண்டும் இல்லியா தயவு செய்து யாரும் போகாதிங்க.அப்புடி போனால் அந்த பாண்டேய்விடம் சொல்லுங்கள் என் கருத்தை கேட்கும் போது இடைமறிக்காமல் இருக்கவேண்டும் என்று உறுதியாக சொல்லிவிடுங்கள்….நீங்கள் இப்புடி செய்யாமல் போனால் என்னவோ பாண்டே சொல்லும் பார்ப்பன மத வெறி கருத்துகள் தான் உண்மை என்று நினைக்கும் நிலை தான் ஏற்படும் …இல்லை என்றால் தயவு செய்து உங்களை மாறி பேச தெரிந்த ஆட்கள் மட்டும் செல்லுங்கள்….நன்றி

Leave a Reply

%d bloggers like this: