தாலியோ தாலி..

இவ்விழாவில் தாலியை அகற்றுவது பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் செயலாகும். எனவே பிறர் மனதை புண்படுத்தும் இதுபோன்ற இழி செயல்களில் வீரமணி தயவு செய்து ஈடுபட வேண்டாம் என்று தனியார் கல்லூரிகளின் மொதலாளி, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ‘முதலியார் முன்னேற்றம்’ ஏ.சி.சண்முகம் கவலை.

அடப்பாவிகளா, நீங்க கல்லூரி நடத்தி நன்கொடை என்ற பெயரில் எத்தனப்பேர் தாலிய அறுத்து, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நடுரோட்ல நிறுத்தியிருக்கீங்க.. அது தான் பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் செயல்.
14 April at 07:21 ·

பொண்ணோட அம்மா தாலிய அறுத்து, வரதட்சினை என்ற பெயரில் கொள்ளையடிச்சு கல்யாணம் பண்ணவனெல்லாம் சொல்றான்ய்யா…

‘தாலி அறுக்கும் நிகழ்ச்சி பெண்களுக்கு எதிரானது’ என்று.
14 April at 09:06 ·

‘தாலி’ தமிழர் பண்பாடு என்றால், அப்புறம் எப்படி இந்திக்காரனிலிருந்து இந்தியா முழுக்க ‘தாலி’ கட்டுகிறார்கள்?அப்போ இந்தச் சீர்கேடை தமிழன் தான் இந்தியா முழுக்கப் பரப்பியவனா?

‘ஏன்ய்யா தமிழன அசிங்கப்படுத்துறீங்க?’
15 April at 12:26 ·

தாலிக்கு எதிரான போராட்டம்! – பரபரக்கும் சர்ச்சை

3 thoughts on “தாலியோ தாலி..

  1. என் அனுபவத்தில் கண்டது: தாலி கட் டுவது தமிழ்நாட்டில் மட்டும் தான். ஆந்திரம்,கர்நாடகத்தில் நல்ல பூசல தாடு என்ற கருமணி சங்கிலி தாலியாகக் கருதப்படுகிறது. அதையும் கணவன் கட்டுவது, எப்போ து ம் கழுத்தில் அணிவது என்றெல்லாம் இல்லை. மராட்டி, கருமணி; ஆனால் எப்போதும் அணிவது என்று இல்லை. ஒரிஸ்ஸா,வங்கம்,அஸ்ஸாமில் கழுத்தில்.சங்கிலி போட்டுக்கொள்வதே அரிது.; தாலி என்று ஒன்று அறியாதது. கேரளத்திலும் வங்கம் போன்றே என்று நினைக்கிறேன். அதாவது, தமிழகர்களுக்கேயான தாலி அகற்றப்பட்டு .விட்டது. சுபம்.
    Anyone with more exposure than me is welcome to offer alternate comments.

Leave a Reply

%d bloggers like this: