‘என்னமோ போடா மதிமாறா?’

பாரதி யை ‘அம்பலப்படுத்தி’ எழுதியதற்குப் பதில், பெரியாரை ‘அவதூறு’ செய்து எழுதியிருந்தால், ஊடகங்களால் மாபெரும் எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருபாய்.

ஆனந்த விகடனில் ‘அட்டகாச’ தொடர்களும் ஜுனியர் விகடனில் ‘அதிரடி’ தொடர்களும் எழுதியிருக்கலாம். குமுதமும் கொண்டாடி இருக்கும். கல்கி உன்னை கண்ணியமிக்க அறிவாளியா அடையாளப்படுத்தியிருக்கும்.

ஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரைக்கும் பெரிய ஆளா ஆனாங்க என்றால் சும்மாவா? வேணுன்னா ரவிக்குமாரைக் கேட்டுப் பாரு.

குறைந்தபட்சம் பாரதி யை விமர்சித்து எழுதாமலாவது இருக்கக் கூடாதா? இது போதாதற்கு டாக்டர் அம்பேத்கரைக் கொண்டாடியும், அவரைப் புறக்கணிக்கிற ‘முற்போக்காளரை’ அம்பலப்படுத்தியும் எழுதினால்…
பார்ப்பன – சூத்திரப் பத்திரிகையாளர்கள் உன்ன வெத்தலப் பாக்கு வைச்சுக் கூப்பிடுவாங்களா?
8 May at 08:05

அபசகுனம்; தினமணி தினத்தந்தி ஜுனியர் விகடன்

வே. மதிமாறனை விரட்ட வேண்டும்

ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு

அரோகரா..

தமிழ் இலக்கணங்கள் கூறும், குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் என்கிற ‘தமிழ்’க் கடவுளுக்கு ‘மாட்டுக்கறி’ பிடிக்குமா? இல்ல அவரு பார்ப்பன மயமான பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் கடவுளா?

உண்மைதான். பார்ப்பனர்கள் ஆறுமுகம், முருகன் என்று பெயர் வைப்பதில்லை; அதனால்; ‘முருகன்’ என்கிற வார்த்தை பார்ப்பன எதிர்ப்பு சொல்லாகி விடாது. ‘மண்ணாங்கட்டி’ என்று கூட பார்ப்பனர்கள் பெயர் வைப்பதில்லை.

‘முருகா.. முருகா..’
‘தேவர் பிலிம்ஸ்’ முருகனை ‘மட்டும்’ நம்பியே மோசம் போச்சு. இருக்கிற இடமே தெரியல.. இன்னுமா நம்பறது முருகனை.
21 April

முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா..

‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை

உழைப்பால் உயர்ந்தவர்; யாருடைய உழைப்பால்?

ஆர்.எஸ்.எஸ். காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவதைப் போல்.. தொழிலாளைர்களை நடுத்தெருவில் நிறுத்திய அரசியல்வாதிகளும் முதலாளிகலும் மே தின வாழத்துச் சொல்கிறார்கள்.

நாலுவர்ணம் ஏகாதிப்பதியம் குலக்கல்வித் திட்டம்

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு

சன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்

அபசகுனம்; தினமணி தினத்தந்தி ஜுனியர் விகடன்

1368925_10200701709527217_287186377_n
‘அபசகுனம்’ என்று பதிப்பகத்திற்குப் பெயர் வைத்தோம். பார்ப்பன ‘தினமணி’ பார்ப்பனரல்லாத ‘தினத்தந்தி’ பகுத்தறிவு டச் சஸ் – பார்ப்பன‘ஜுனியர் விகடன்’ இவற்றிற்குப் புத்தகங்களை அனுப்பி வைத்தோம்.

‘ச்சீ இதெல்லாம் ஒரு புக்கா?’ என்றோ ‘வரப்பெற்றோம்’ ‘அறிமுகம்’ என்றும் கூட அவர்கள் வெளியிடவில்லை. ‘சகுனம் சரியில்ல’ என்று கருதி இருப்பாங்களோ?

குமுதம்; செட்டியார் – அய்யங்கார் கூட்டணியா இருக்கும்போதே.. என்னைய ஒரு பொருட்டாவே மதிக்காது. இப்ப சொல்லவே.. வேணாம். அதனால புத்தகம் அனுப்பல.

‘ஆனந்த விகடன்’இப்ப இல்ல.. எப்பவுமே என்னை அபசகுனமாகவே பார்க்கும்.
என் நூல் அறிமுகம் கூட அல்ல.. என்னுடைய இணையப்பக்கம் அறிமுகம் கூட அது வெளியிட்டது இல்ல.. ‘மதிமாறனா அது யாரு?’ என்று கேட்பதற்குக் கூடத் தயார் இல்ல..
இத்தனைக்கும் ‘இவை’ எல்லாவற்றிலும் எனக்கு ‘நல்லா’ தெரிஞ்சவங்க தான் பொறுப்பல இருக்காங்க.

இருந்தாலும், இவ்வளவு புறக்கணிப்புகளையும் தாண்டி,
என் புத்தகங்கள் ஒரே ஆண்டிற்குள் விற்று விடுகிறது, மூன்றாம், நான்காம் பதிப்பாக இருந்தாலும். அன்பிற்கினிய தோழர்களின் ஆதரவுடன்.
தோழமை எல்லாவற்றையும் விட வலிமையானது.
3 May at 22:14

ஆனந்த விகடனும் – பெரியாரும்

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு

இதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை

தெலுங்கு சினிமா புகழும் என்னை திட்டுபவர்களும்

வே. மதிமாறனை விரட்ட வேண்டும்

ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்

ராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்…

Ramanujar-1
இதனால்.. பார்ப்பனப் பத்திரிகைகள் உங்க மேல பாசமாகி.. வர தேர்தலில் ஆதரவ அள்ளி கொட்டுவாங்க ன்னு நினைக்காதீ்ங்க.
இராமானுஜர் வாழ்க்கை வரலாறு அல்ல, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோட வாழ்க்கை வரலாறை எழுதினாலும்.. அவாளிடமிருந்து…
ஒரே ஒரு செல்லாத ஓட்டுக்கூட உதயசூரியனுக்கு உழாது.
7 April

ராமானுஜர் பற்றி எழுதுவதற்குப் பதில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்க்கை வரலாறை எழுதினால்…
திகில், க்ரைம், பக்தி, சென்டிமென்ட், கிளுகிளு, விறுவிறு அடடா.. படிக்க, பார்க்க எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும்?
‘கை யைப் புடிச்சு இழுத்தியா?’
‘என்ன கை யைப் புடிச்சு இழுத்தியா?’ போன்ற காமெடிகளோடு..
ஆனாலும் அத எழுதுறதுல ஒரு சிக்கல் இருக்கே..
சுவாமிகளைக் கொலை வழக்கிலிருந்து காப்பாற்றியவர்கள் பற்றியும் எழுத வேண்டி வருமே?
8 April

இராமானுஜர் – ஜெயேந்திரன் – ஜெயலலிதா

36 வயதினிலே.. வசந்தி; அண்ணாமலையின் தங்கச்சி..

safe_image
பணக்கார நண்பன் தன்னை அவமானப்படுத்தியதால், ஒரு பாடலின் மான்டேஜ்களிலேயே பணக்காரனாகி காட்டும் அண்ணாமலையின் ‘திறமை’ யை போல் இருக்கிறது,
தன் கணவரால் உதாசினப்படுத்தப்பட்ட 36 வயதான பெண், சாடாரென ஜனாதிபதியே வியந்து பாராட்டி விருந்து கொடுக்கிற அளவிற்கு உயர்ந்தது.

பூச்சி மருந்து காய்கறி, இயற்கை வேளாண்மை ஏதோ என்.ஜி.வோ, பிராஜக்கெட் மேடையில் பேசப்படுகிற ‘இயற்கை வேளாண்மை’ பேச்சுப் போலவே இருக்கிறது வசனம்.
மொட்டை மாடியில் காய்கறி. ஆமாம், நிலங்களை அரசு விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொண்டால், அப்புறம் என்ன மொட்டை மாடியிலதான் விவசாயம்.

சொந்த வீடு இல்லாதவர்கள் நிலமையோ ‘மொட்டை’தான்.
அவர்களால் ‘இயற்கை’ காய்கறியை வாங்க கூட முடியாது. அது விக்குற விலைக்கு இந்தப் படத்துல வரா மாதிரி துணிக்கடை மொதலாளிகள் தான் காய்கறி வாங்க முடியும்?

பன்னாட்டுப் பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு ஆதரவாக இந்திய விவசாயத்தை விஷமாக்கிய அரசே; இயற்கை வேளாண்மையை உற்சாகப்படுத்துகிறதாம். படுத்தும். அப்பதானே தன்னை யோக்கியனா காட்டிக்க முடியும்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கிடப்பில் போட்ட அரசு, ஒரு ‘சாதனை’ பெண்ணை அங்கீகரிக்கிறதாம்.
இந்த மாதிரி சாதனைகளை எல்லாத்துறைகளிலும் என்.ஜி.ஓ க்கள்தான் வழக்கமாகப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. விருதும் வாங்கிக்கிட்டு இருக்காங்க. வெளிநாடு சுற்றுப்பயணங்களும் சரமாரியா போயிகிட்டுதான் இருக்காங்க.

இந்தப் படத்திலேயும் கதாநாயகி, ‘ஜனாதிபதி’ மாளிகையில் நின்று ‘அய்ரோப்பா’ சுற்றுப் பயணம் போவதாகச் சொல்கிறார்.
அது தெளிவான என்.ஜி.ஓ. குறியீடாகத்தான் இருக்கிறது.

சுற்றுச்சூழல், காடு, காட்டுயிர் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, பெண்ணியம், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு இப்படிப் பல முக்கியமான பிரச்சினைகள்; இந்திய அரசு, வெளிநாட்டு உதவியுடன் ‘சொகுசா, ஜாலியா’ வெறும் ‘பிராஜக்கெட்டா’ பல இடங்களில் போயிக்கிட்டுத்தான் இருக்கு.

‘36 வயதினிலே..’ பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிற திட்டங்களை நியாயப்படுத்துகிற திரைக்கதை, வசனம்.

மே19, facebook ல் எழுதியது.

அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்

‘பேராண்மை’ அசலும் நகலும்

நாலுவர்ணம் ஏகாதிப்பதியம் குலக்கல்வித் திட்டம்

திரு. பத்ரி ஷேசாத்ரி – திரு. ராஜன் – நான்.

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

‘கணக்குல புலி’; சிங்கம், சிறுத்தை மற்றவற்றிற்குக் கணக்குத் தெரியாதோ? அப்ப பெங்களூர் தான்..

tumblr_mvwcdel3Pl1so2j7ko1_500
வகுத்தல் சுத்தமா வராது. கால்குலேட்டர் குடுத்து வகுக்கச் சொன்னாலும் முடியாது. பெருக்கல் பேப்பர்ல எழுதி மெதுவா எப்படியாவது பெருக்கிடுவேன். கால்குலேட்டர்ல சட்டுன்னு போடுவேன்.

பேசும்போது கூட்டிக் கழிச்சி வகுத்து பெருக்கி கணக்கா பேசுறவங்க.. 287 யை 3 ல வகுத்தா என்ன வரும்? என்பது மாதிரி கேட்பார்கள், கொஞ்ச நேரம் கழிச்சி அவுங்களே விடையும் சொல்லிவிடுவார்கள் என்பதால்,
அந்த நேரம் நானும் வகுக்கிற மாதிரி மூஞ்ச வைச்சிக்கிட்டு ‘சீக்கிரம் வகுத்து முடிடா..’ என்று மனசுகுள்ள சொல்லிப்பேனே தவிர.. வகுக்க மாட்டேன். அதான் எனக்குத் தெரியாதே.

‘இதானே விடை..’ என்றவுடன் ‘அதான் தெரியுதுல்ல என்ன ஏன் கேக்குற?’ என்று நினைத்துக் கொண்டு, அவசரமாக ‘ஆமாம் ஆமாம்’ என்பேன். ‘இல்லியே தப்பா வருதே…’ என்றால்.. ‘மூதேவி மொதல்லயே சரியா வகுக்கக்கூடாதா..’ என்று மனதுக்குள் கடுப்பாகி ‘ஓ ஆமா தப்புதான்..’ என்று கணித மேதை மாதிரி வருத்தப்படுவேன்.

கூட்டல் கூட 2 + 2 = 4 ; 8 + 2 = 10 இது மாதிரி என்றால் டக் குனு சொல்லிடுவேன். 18 + 15 எவ்வளவு என்றால்.. முடிஞ்சிது என் கதை.

ஆக, கணக்குல நான் வீக் ன்னு சொல்ல முடியாது. கணக்கே தெரியாது.
‘மீதி சில்லறை வாங்குறது..’ இதெல்லாம் ஒரு குத்து மதிப்பா, முன்ன பின்ன வாங்கிக்கிட்டுதான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

ஆனால் என்னையே கணித மேதை ராமானுஜம் ஆக்கிடுவார் போல நம்ம பெங்களூரார்.
‘எல்லாவற்றிலும் ஒரு கணக்கு இருக்கு. கணக்கு இல்லாமல் எதுவுமே இல்லை. கணக்குத் தப்பானா எல்லாமே தப்பாயிடும்’ என்பார்கள் கணித மேதைகள்.
கணக்குத் தப்பானா தீர்ப்பும் தப்பாயிடுமோ?
ஆனாலும் ‘தீர்ப்பில் ஒரு கணக்கு ‘கச்சிதமா’ இருக்கு’; என்கிறார்கள் நன்றாக ‘கணக்குப் பண்ண’ தெரிந்த இன்னும் சிலர்.
*
இதில் சொல்லப்பட்டிருக்கிற பெங்களூர் ‘அந்த’ பெங்களூர் அல்ல. தீர்ப்பு ‘அந்த’ தீர்ப்பல்ல. முற்றிலும் கற்பனையே..
14 May at 12:59

ஜாதிப் பு‘ளி’ – தாலி எதிர்ப்புப் ‘புலி’?

and-symbol
நாட்டுக்கோட்டை செட்டியார் ஜாதி சங்க விழாவில் 26-1-2011 அன்று பழ. கருப்பையா:
நகரத்தாருக்குரிய அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை: நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடுதல் ஆகும்.
இந்த அடையாளகள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடரவேண்டுமென்றால், நாம் கலப்பு மணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறி கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை நம் சமூத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும். என்று பேசியிருக்கிறார்

அப்போது அப்படிப் பேசி, ‘புலியை இடறிய’ அவர்தான் இப்போது ‘புலியை இடறுகிறார்கள்! என்ற தலைப்பில் நக்கீரனில், தாலி ஆதரவு இந்து அமைப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்து எழுதியிருக்கிறார்.
இப்படியும் சொல்லலாம், அன்று ஜாதி மறுப்பத் திருமணம் செய்து கொண்டவர்களின் தாலியை அறுத்து விட்டு, இன்று தாலி அகற்றும் போராட்டத்தை எதிர்ப்பவர்களை எச்சரித்து எழுதியிருக்கிறார்.

‘தாலி இல்லாமல் கல்யாணம் பண்ணாலும் ஒரே ஜாதியிலதான் பண்ணணும்’ என்ற நிலையிலிருந்து எழுதியிருக்காரா? இல்லை ஜாதி மறுப்பாளராகவும் தாலி மறுப்பை ஆதரிக்கிறாரா? அதில் விளக்கம் இல்லை.

அந்தக் கட்டுரையை அன்புக்குரிய தோழர் விஜய்கோபால்சாமி மே 1 அன்று ‘அதிமுக முகாமிலிருந்தும் இப்படி ஒரு குரல் வருவது அதிசயம். பாராட்டுக்கள்.’ என்று குறிப்பு எழுதி அதை • Share செய்திருந்தார்.
அதில் நான் எழுதிய Comment :

//என்னுடைய பாராட்டுகளும். ஆனால் இதில் அதிசயம் ஒன்றுமில்லை.
‘நக்கீரன்’ என்பதும் அதிமுக எதிர்ப்புக் குறியீடு மட்டுமல்ல, அது திமுக ஆதரவுக் குறியீடும் தான். பழ. கருப்பையா நீண்ட நாளா அதிமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கார். தேர்தல் வருகிறது மீண்டும் அவருக்குச் சீட் கிடைக்க வாய்ப்பில்லை.
திமுக வில் கிடைக்கலாம். வாழ்த்துகள். எல்லாவற்றிற்கும்.//

6 May at 08:35

தாலியோ தாலி..

கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

ருணாக்கயிறு பூணூல் கயிறு தூக்குக் கயிறு

சல்மான்கான்; கண்ணீர் கூட காசு என்ற ‘கிளிசரின்’ இருந்தால் தான் வரும்

Salman-Khan-six-pack-abs-Body
‘கான்’ பரம்பரையின் மாவீரன், சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டி, சாலையில் படுத்திருந்த நூருல்லா வைக் கொன்றார். முகம்மது கலீமை நொண்டியாக்கினார்.

தற்செயலாக இந்த 3 பேருமே இஸ்லாமியர்கள் தான். ஆனாலும் கொலைகார சல்மான்கான்கானுக்காகக் கண்ணீர் சிந்துகிறவர்கள், கொலையுண்ட ஏழைகள் குறித்துக் கருத்துக்கூடச் சொல்ல மறுக்கிறார்கள்; இந்து – முஸ்லிம் ஒற்றுமையோடு.

‘காரை நான் தான் ஓட்டினேன்’ என்று சல்மான்கானுக்காகக் கொலைக்குற்றத்தை ஏற்றுக் கொண்டு பொய் சாட்சி சொன்ன அசோக் சிங் ஒரு இந்து. என்னடா உங்க மனிதாபிமானம்?
இது மனிதாபிமானமல்ல? வர்க்க அபிமானம்.

அதுசரி. வட்டிக்கு விடுவது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, திரைப்படத்தில் குறைந்த உடைகளுடன் ஆட்டம் போடுவது. இஸ்லாமிர்களுக்கு எதிரான படத்தில் இசையமைப்பது,
சட்டையை கழட்டி விட்டு பெண்களுக்காக கவர்ச்சிக் காட்டுவது, ‘ஜாக்கெட்டுகுள்ளே என்ன இருக்கு?’ என்ற பாட்டுப்பாடி ஊதாரித்தனமாக நடித்து ஊரை சூறையாடுவது, குடிபோதையில் இருப்பது, அதோடே காரை ஓட்டுவது, ஓட்டி ஆளைக் கொல்வது இதற்கெல்லாம் இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா என்ன?
இந்திய அரசியல் சட்டம் சல்மான்கானுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. இஸ்லாமியச் சட்டம் என்ன செய்யப்போகிறது? பத்வா வழங்குமா?
குறைந்தபட்சம் அவரை இஸ்லாமியர் இல்லை என்றாவது அறிவிக்குமா? மதத்திலிருந்து விலக்கி வைக்குமா?

தஸ்லிமாவை தண்டிக்க முடிந்தவர்களுக்கு ஏன் சல்மான்கான்களை ஒன்றும் செய்ய முடியவில்லை?
மதத்திற்கு எதிராக நேரடியாகக் கருத்துச் சொன்னால்தான் தவறு. மதக் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமாக வாழ்வது கூட தவறில்லை என்று ஏதாவது முடிவிருக்கிறதா?

7-05-2015 at 08:33
தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!

‘தந்தி’ தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல..