போலீஸ் தொல்லையுடன் சிறப்பாக நடந்த நாத்திகர் விழா
தவ முனிவர்களிடமிருந்து, தனக்குக் கிடைத்த சாபத்தையே வரமாக மாற்றத் தெரிந்த அசுரர்களைப்போல், காவல்துறையின் தடையை உயர்நீதிமன்றம் சென்று தகர்த்தும்,
அதன்பிறகும் காவல்துறை தந்த தொல்லையையே துணைக்கு வைத்து, மிகச் சிறப்பாக மே 30 அன்று ‘நாத்திகர் விழா’ வை நடத்தி முடித்தார்கள், மேட்டூர் புதுச்சாம்பாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள்.
‘உங்களை மக்களுக்குப் பிடிக்கவில்லை,. உங்களால் பிரச்சினை வந்துவிடும்’ என்றெல்லாம் பூச்சாண்டிக் காட்டிய காவல்துறையைக் கேலி செய்வது போல் புதுச்சாம்பாளையம் மக்கள் குறிப்பாக மிக அதிகமாகப் பெண்கள்; குடும்பம், குடும்பமாக வீதிகளில் நின்று தோழர்களின் எழுச்சிமிகு ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக அணிவகுத்தார்கள். தோழர்களுக்குத் தண்ணீர் கொடுத்து உபசரிக்கவும் செய்தார்கள்.
திவிக தலைவர் கொளத்தூர் மணி அவர்களை, தீவிரவாதிபோல் சித்தரித்து அனுமதி மறுத்திருக்கிறது காவல்துறை. ஆனால் வழியேற மக்கள் பலரும் அவரை அன்போடு நலம் விசாரித்து, மரியாதையாகப் பழகியது காவல்துறையின் பொய் நடுத்தெருவில் அம்பலமானது. திட்டமிட்டு பிரதானசாலையிலிருந்து மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஊர்வலத்தைத் திசைமாற்றி விட்ட காவல்துறைக்கே அந்தப் புகழ் சேரும்.
விழாவை சிறப்பாக நடத்திய, திவிக சேலம் மாவட்ட செயலாளர் சக்தி, நக்கலாகக் காவல்துறைக்கு நன்றி சொன்னதை அவர்கள் உண்மையிலேயே நன்றி என்று நினைத்திருக்கிறார்களோ என்னவோ? தோழர் அருண், தோழர் திருமூர்த்தி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில், தடையைத் தகர்த்து வெற்றி வீரர்களாக விழாவிலும் கலந்து கொண்டார்கள்.
எல்லாவற்றையும் விடச் சிறப்பு, பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து ‘நாத்திகர் விழா’ மேடையை உள்ளூரில்
உள்ள பிரபல கோயில் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது தான். அதற்கும் ‘நம்ம’ காவல்துறையின் தொல்லையே.
கோயில் அருகில் மேடை போட்டால் பிரச்சினை என்று வேறு இடத்திற்கு மாற்றியது. ‘மாற்றினால் மேடை செலவை நீங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தோழர்கள் சொல்லியிருக்கிறார்கள். சரி என்று செலவை கோயில் நிர்வாகத்திடம் தள்ளவிட்டிருக்கிறது காவல்துறை.
காவல் துறை ‘நல்லா’ பாதுகாப்பு கொடுப்பதைவிட ‘நல்லா’ தொல்லை கொடுக்கிறாங்க.. அவர்கள் பாதுகாப்பை விடத் தொல்லையே பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி. எல்லாருக்கும் தான்.
3 June
அருமை! ஆத்திகர்களுக்கு ஊர்வலம் செல்ல உரிமை உள்ளது போலவே நாத்திகர்களுக்கும் உரிமை உண்டு.
ஆத்திகர்களுக்கு ஊர்வலம் செல்ல உரிமை உள்ளது ..அதனால்தான் ஆத்தீக போலீஸ் தொல்லை கொடுத்துள்ளது
இருவருக்கும் உரிமை என்பதே சரி.
Jayaseelan Ganapathy · 36 mutual friends
மண்டையில் மசாலா இல்லாத மடையர்களுக்கு, பெரியார் அன்றே ஒரு வாக்கியம் பதிவு செய்துவைத்துவிட்டு போய்விட்டார்.
பக்தி வந்தால் புத்தி போகும்.
Unlike · Reply · 16 · 3 June at 15:56
Rajesh Kumar · 3 mutual friends
arumai
Unlike · Reply · 2 · 3 June at 16:18
Nagoor Mohaideen · 2 mutual friends
Nagoor Mohaideen’s photo.
Unlike · Reply · 3 · 3 June at 16:41
Gopal Krishnan அருமை! It is encouraging to see such large gathering of Rationalists particularly women …
Unlike · Reply · 5 · 3 June at 17:01
BK BK பெண்கள் கூட்டத்தை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது
Unlike · Reply · 4 · 3 June at 17:32
Madurai Baski · Friends with Yeskey Murugan
அருமை!
Unlike · Reply · 2 · 3 June at 18:26
Sathya Chella · 6 mutual friends
podra podra podrA
Like · Reply · 1 · 3 June at 19:28
Yeshuswamy Swamy · 38 mutual friends
இந்த செயல்களை இந்துத்துவ கூட நம்பவில்லை இதனை நிங்கள் எதிர்ப்பது பயன்இல்லை. இந்த செயல்களுக்கு நாம் முன்நேர்கள் தான் காரணம் நாம் வணங்கிய குல தெய்வம்தான் இதர்க்கு நாமல் இயன்ற பரிகாரங்கள் செய்ய முடிந்தது. இதனை பயன்படுத்தி கும்பாபிஷேகம் நடத்த ஐய்யர் வழியில் பணம் சம்பாதிக்க வழி வகுக்கும் செயல் இது தான் நம்மை இந்துக்கள் இடத்தில் நம்மை இனைக்கிறது.
Unlike · Reply · 1 · 4 June at 11:23
Thamaraikko Thamarai · 30 mutual friends
சட்டம், நேர்மை, ஞாயம் என ஒருபக்கம் இருந்தாலும், காவல் துறை என்பது ஆளுங்கணதிற்கு எப்போதும். ஏவல் துறையாகவே உள்ளது. சீருடை அணிந்த அடியாட்களாகவே செயல் புரிகின்றனர்.
Like · Reply · 2 · 4 June at 12:32
Cb Kaja · Friends with Vilavai Ramasamy and 3 others
[ இவன்: கமேன்ட் காஜா ]
Cb Kaja’s photo.
Unlike · Reply · 2 · 4 June at 22:47
பூ.ஆ.இளையரசன் பெரியார் · 149 mutual friends
வலியை பொறுத்துக்கொண்டு மக்களை மூடநம்பிக்கையிலிருந்து விடுதலைசெய்யும் தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.!
Unlike · Reply · 2 · 4 June at 23:15
அறிவன் தமிழ் தில் இருந்தா இதையும் கொண்டாடுங்கள் ”மொகரம் பண்டிகை”
அறிவன் தமிழ்’s photo.
Like · Reply · 5 June at 11:36
Udaya Kumar எல்லாம் முடநம்பிக்கை என்றும் கடவுள் இல்லை என்று கூறுபவர்களாலும் இதை போன்ற வித்தைகளை செய்ய முடியும் இந்த மூடத்தனத்தை செய்ய எந்த நாதியற்ற கடவுளும் தேவை இல்லை என்பதை சுட்டிக்காட்டவே இந்த நாத்திகர் விழாவே தவிற எல்லா முட்டாள்தனத்தையும் மக்களுக்கு காட்டத்தான் இத செய்ய துணிந்த எங்கலுக்கு அத செய்ய முடியாத தோழர்
Like · Reply · 1 · 6 June at 07:33
Subbiah Nagarajan Saravana Kumar · 3 mutual friends
Valathukul. Will be continue in other places in tamil nadu.
Like · Reply · 6 June at 19:40
Antony Aadhitamizhan · 11 mutual friends
பகுத்தறிவு தான் எனது நம்பிக்கை
Like · Reply · 7 June at 06:44