அதற்காகவும் அவருக்கு கூடுதல் நன்றி

10497509_791899577516509_9180693148955871736_o
இருசக்கர வாகனத்தை அதிகமாக ஓட்டியவர்களின் பட்டியலில் உலகளவிலேயே எனக்கு நிச்சயம் முக்கிய இடமிருக்கும். அதுவும் 13 ஆண்டுகளாக ஒரே வாகனத்தை ஓட்டி வருகிறேன் என்பது கூடுதல் தகுதி.

இதனால் என் உடலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் மிக முக்கியமானது, தலையை வேகமாகத் திருப்பும்போதும், படுத்து எழுந்திருக்கும்போதும், படுத்திருக்கும்போதே திரும்பிப் படுக்கும்போதும் எழுந்து நிற்கவும் முடியாமல் மீண்டும் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் மயக்கமும், அதன் தொடர் கொடுமையாக வாந்தியும் என்னை ஒரு மாத்திற்கு மேல் தொடர்ந்து தொந்தரவு செய்தது.

‘தளுக்கா’ அப்டியே அந்தப் பிரச்சினை ஏமாற்றி, அதைத் திசைத்திருப்பிதான் வாழ்ந்து கொண்டிருந்தேன். தோழர்களின் அன்பு அழைப்பை தவிர்க்க முடியாமல் வெளியூர் கூட்டங்களிலும் கலந்தும் கொண்டேன்.

மேடையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வேகமாகத் தலையை ஆட்டி பேசும்போது, ‘உலகம் உருண்டைதான்’ என்பதை மிகத் தீவிரமாக உணர்வேன். இதெல்லாம் 2 மாதங்களுக்கு முன்.

முற்றிலுமாக அந்தப் பிரச்சினையிலிருந்து என்னை விடுவித்து, பழைய முறைக்கு என்னை மாற்றி அமைத்துவிட்டார் அன்புத் தோழர், நமது கொள்கையாளர் மருத்துவர் எழிலன். (Ezhilan Naganathan)
வெறும் வைட்டமின் மாத்திரைகளாலும் அதை விடச் சத்து நிறைந்த அவரின் அன்பான வார்த்தைகளாலும்.
இது முற்றிலும் எனக்கு நடந்த இலவச மருத்துவம். அதற்காகவும் அவருக்கு நான் கூடுதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 June

One thought on “அதற்காகவும் அவருக்கு கூடுதல் நன்றி

  1. Marimuthu Pandiyan · 13 mutual friends
    Long live anna!!!!!!!!!!!
    Unlike · Reply · 1 · 10 June at 10:24

    Shanthi Narayanan M · Friends with BK BK and 12 others
    மக்கள் பணிகளுக்காகவும் உடல் நலம் பேணல் நலம்.

    மருத்துவருக்கு நன்றி. like emoticon
    Unlike · Reply · 3 · 10 June at 10:30

    Gopal Ramakrishnan நீங்க என்ன வண்டி ஓட்டுறிங்கன்னு தெரியல ஆனா நான் 2003 லருந்து ஓட்டுறேன் பேஷன் இப்ப யுனிகான் .. கிட்டத்தட்ட 2 லட்சம் கி மீ ஓட்டியாச்சு இதுவரை எந்த தொந்தரவும் இல்லை
    Like · Reply · 3 · 10 June at 10:31

    வே மதிமாறன் நான் 2 லட்சத்தை தாண்டி பல வருடமாச்சு. hero honda – dawn.
    Like · 10 · 10 June at 10:33

    Dhayalan Ramaiyan எங்கள் அன்பு தோழருக்கு உதவி செய்த மருத்துவர் எழிலன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ,நன்றிகளும் !!
    Unlike · Reply · 8 · 10 June at 10:33

    வேந்தன். இல மருத்துவர் எழிலன் அவர்களின் உதவி பெரிதும் பாராட்டுதற்குரியது. எனக்கு தெரிந்து பல தோழர்களுக்கும் மருத்துவ உதவி புரிந்திருக்கிறார் அவர். நன்றி மருத்துவர் எழிலன் அவர்களுக்கு..
    Unlike · Reply · 5 · 10 June at 10:35

    சு.விஜய பாஸ்கர் ஆம். மருத்துவர் Ezhilan Naganathan சமூகத்திற்கும் மருத்துவம் பார்க்கிறார். உடலுக்கும் மருத்துவம் பார்க்கிறார். sinus பிரச்சினைக்காக எனது அக்காவை தலையில் அறுவை சிகிச்சை என பயமுறுத்திய மருத்துவர்களிடம் இருந்து காப்பாற்றி, பயத்தை போக்கி, நோயையும் போக்கியவர்.

    உடலின் செயல்பாடுகளை குணப்படுத்த அவர் படித்த மருத்துவத்தையும் , மூளையின் செயல்பாடுகளை குணப்படுத்த பெரியாரிடம் அவர் படித்த சமுக மருத்துவத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார்.
    Unlike · Reply · 9 · 10 June at 10:55

    Veerapandiyan Kaliappan · 8 mutual friends
    மருத்துவரின் முகவரி கூறவும் தோழர்களே…
    Like · Reply · 1 · 10 June at 11:16

    யுவான் சுவாங் சென்னை கல்யாணி ஆஸ்பிட்டல்,மைலாப்பூர்
    Like · 10 June at 11:26

    Veerapandiyan Kaliappan · 8 mutual friends
    நன்றி தோழா,
    Like · 10 June at 11:34
    வே மதிமாறன்

    Write a reply…

    Jagan Babu மருத்துவர் Ezhilan Naganathan அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 4 · 10 June at 11:17

    யுவான் சுவாங் எங்க பாசத்துக்குரிய மருத்துவர் அவர்
    Unlike · Reply · 5 · 10 June at 11:19

    யுவான் சுவாங் கல்யாணி ஆஸ்பிட்டல்
    Like · Reply · 1 · 10 June at 11:20

    சூ.ம. ஆரோக்கியராசு நீங்கள் மகிழுந்து வாங்கிவிடுவது நல்லது தோழர்.இன்னும் நீங்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியது காலத்தின் கடமையாக இருக்கிறது.மருத்துவர் எழிலன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    Unlike · Reply · 2 · 10 June at 11:21

    வே மதிமாறன் உங்கள் அன்பிற்கு நன்றி.
    Like · 1 · 10 June at 13:54

    யுவான் சுவாங் என் நண்பர் ஒருவரிடம் இருந்து போன்,எப்போ பார்த்தாலும் சோர்வாக இருக்கு,சுகர் டெஸ்ட் செய்தேன்,650 இருக்கு,வேலைக்காக வெளிநாடு வேற கிளம்பனும்,எந்த மருத்துவரை பார்க்கனும்னு தெரியல என்றார்,நான் உடனே மருத்துவர் எழிலனுக்கு போன் செய்து பரிந்துரைத்தேன்,சிறப்புக் கவனம் செலுத்தி இப்போது அவர் நார்மலாகி விட்டார்,அவருக்கு குடும்ப மருத்துவராகி விட்டார் எங்கள் மருத்துவர்.
    Unlike · Reply · 8 · 10 June at 11:24

    யுவான் சுவாங் என்னை முகநூலில் எழுதத் தூண்டி ஊக்கப்படுத்தியவரும் மருத்துவர் எழிலந்தான். Ezhilan Naganathan
    Like · Reply · 11 · 10 June at 11:25

    Govi Lenin மகிழ்ச்சி… நலம் பெற்ற தோழருக்கும் நலம் பெறச் செய்த மருத்துவருக்கும் வாழ்த்துகள்.
    Unlike · Reply · 7 · 10 June at 11:30

    யுவான் சுவாங் அண்ணே சின்ன வயசு உங்களுக்கு முதுகுவலி வராதுன்னே
    Like · 2 · 10 June at 11:35
    வே மதிமாறன்

    Write a reply…

    Golden Nasar · Friends with Kasim Sindha and 3 others
    Golden Nasar’s photo.
    Unlike · Reply · 1 · 10 June at 11:54

    Parimalam Raman · 52 mutual friends
    மருத்துவர்! தமிழில் எழுதினால் நானும் படிக்கலாம்.
    Like · Reply · 10 June at 12:04

    Venkat Raman அண்ணே விலாசம்… உங்களுக்கு தெரியும் எனக்கும் அந்த பிரச்சினை இருப்பது…
    Like · Reply · 10 June at 12:06

    Venkat Raman விரட்டிக்,டினிட்டஸ்…
    Like · Reply · 10 June at 12:07

    வே மதிமாறன் வியட்நாமிலிருந்து சென்னைக்கு வா..
    Like · 10 June at 12:39

    Linda Rayan · Friends with Shyama Shyama
    அதுவும் 13 ஆண்டுகளாக ஒரே வாகனத்தை ஓட்டி வருகிறேன் என்பது கூடுதல் தகுதி.
    ada ivarum nammala mathiri thaan pola
    Like · Reply · 10 June at 12:43

    Venkat Raman இதோ கிளம்பிட்டாங்க…கோவை வந்து பிறகு முதல் வேலை சென்னை தான்…
    Like · Reply · 10 June at 13:56

    Shyama Shyama குணமடைந்த உங்களுக்கும், தோழர் மருத்துவர் எழிலனுக்கும் வாழ்த்துக்கள்..
    Unlike · Reply · 1 · 10 June at 14:06

    Olivannan Gopalakrishnan நன்று..மகிழ்ச்சி
    Unlike · Reply · 1 · 10 June at 14:18

    தமிழ் ஓவியா ஓவியா எனக்கும் இதே பிரச்சினை உள்ளது. உடற்பயிற்சிமூலம் ஓரளவு சரிசெய்து கொண்டு பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
    Unlike · Reply · 1 · 10 June at 15:42

    Jeeva Sagapthan super and valuable information
    Unlike · Reply · 1 · 10 June at 16:22

    தமிழ் மகன் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் தீராமல் இருந்த என் வயிற்றுவலியை ஒரே நாள் மருந்தில் குணப்படுத்தியவர் எழிலன் மருத்துவர் எழிலன். அவருடன் பேசுவதே நோய் தீர்க்கும்.
    Unlike · Reply · 2 · 10 June at 16:46

    Karnan · Friends with ந. நாத்திகன் and 16 others
    மருத்துவர் எழிலன் அவர்களைப்பற்றி நிறைய பேசலாம். மருத்துவத்தை கடந்து அவரது சமூகப் பணிகள் ஏராளம். குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக கிராமங்களுக்கு நேரில் சென்று கருத்தரங்கம் விழிப்புணர்ச்சிகளை ஊட்டுகிறார்.
    அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை குக்கிராமங்களில் கொண்டாட வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
    ஜோசியம் சம்பிரதாய மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இளைஞர் இயக்கம் ஆரம்பித்து அறிவியல் விழிப்புணர்வை விதைத்துள்ளார்.
    இப்படி இன்னும் பல வகையிலும் மனிதகுல பகுத்தறிவு முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருப்பவர்.
    தோழர் மதிக்கு மட்டுமல்ல…
    அவரது செவிக்கு சென்றவரை…
    யாராக இருந்தாலும் உதவி செய்வதை அவர் நிறுத்தியதில்லை.
    பணத்தை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் மமருத்துவர்கள் நடுவில் மருத்துவர் எழிலன் ஓர் இளைய பெரியார்.
    இளைய அம்பேத்கர்.
    Unlike · Reply · 5 · 10 June at 16:47

    Seralathan Palaniappan · 3 mutual friends
    மதி மதிய உணவிர்க்குப்பிறகு ஒரு சிறு உறக்கம் அவசியம்.
    Like · Reply · 1 · 10 June at 17:29

    வே மதிமாறன் ஆமாம். நீங்கள் நேரிலும் இதை வலியுறுத்தினீர்கள். நன்றி அய்யா.
    Like · 1 · 10 June at 17:48

    Narendar Art · Friends with Bala G and 19 others
    nangalum avarukku nanri solla kadamai pattu ullom , ungalai gunapaduthiyamaikku smile emoticon
    Unlike · Reply · 1 · 10 June at 19:17

    Ezhilan Naganathan மருத்துவருக்கு வைட்டமின் கொடுத்த அணைத்து தோழமைக்கு நன்றி
    Unlike · Reply · 6 · 10 June at 21:26

    கடற்கரய் செம்புலப்பெயல் நீரார் நண்பர்களே யார் அந்த மருத்துவர் எழிலன்? கடந்த சில வருடங்களாக முதுகு வலியால் அவதிப்படுகிறேன். வண்டி மூன்று லட்சத்தை தொட்டுவிட்டது. அவர் சிகிச்சை கிடைத்தால் மகிழ்வேன்.
    Like · Reply · 10 June at 21:45

    தமிழ் மகன் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு அடுத்த தெரு. சற்றே உள்ளே சென்று அங்குள்ள கடைகளில் கேட்டால் சொல்லிவிடுவார்கள் கரய்.
    Like · 11 June at 12:31

    தமிழ் மகன் தி.மு.க திட்டக்குழு தலைவர் நாகநாதன் அவர்களின் மகன். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்த ஜமதக்னி அவர்களின் பேரன்
    Like · 11 June at 12:32

    வே மதிமாறன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை அல்ல… மூலதனத்தை.
    Like · 11 June at 12:33

    Gunaa Gunasekaran அண்ணா சாலை Dms பின்புறம்
    Like · 11 June at 12:38
    வே மதிமாறன்

    Write a reply…

    யுவான் சுவாங் இந்தப் பதிவுக்கு நன்றி,நீண்ட நாட்கள் கழித்து மருத்துவர் ஃபோனில் தொடர்பு கொண்டார்,நாந்தான் அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.
    Like · Reply · 2 · 10 June at 21:55

    Mohamed Arif ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துக்கள் ..
    Like · Reply · 10 June at 22:07

    விஜய குமார் · Friends with சோலை மாரியப்பன் and 4 others
    மருத்துவரின் விலாசம் smile emoticon
    Like · Reply · 10 June at 23:59

    Gopinath Kubendran மருத்துவர் எழிலன் அவர்களின் பேச்சும் வித்தியாசமாக இருக்கும்…
    Like · Reply · 11 June at 01:22

    Prabhu Raj · Friends with Ezhilan Naganathan
    Great sir, hearty wishes
    Like · Reply · 11 June at 01:52

    Dinesh Kumar மருத்துவர் எழிலன் அவர்களுக்கு எங்கள் கொள்கை தோழரை குணப்படித்தியதற்காக நன்றி
    Like · Reply · 11 June at 08:43

    நாகேந்திரகுமார் திலகவதி ~
    எழிலன், உடலை குறைத்துவிட்டாரா!?
    Like · Reply · 11 June at 09:33

    Hussain Sikkandar · 13 mutual friends
    Sir I am riding CD 100 Hero Honda since 1992
    Like · Reply · 11 June at 14:52

    மணி கண்டன் i have same prob pls tell simple treatment
    Like · Reply · 11 June at 15:07

    Jose Freeda · Friends with Ezhilan Naganathan
    sir u r always best..really happy that i got a chance to work with u for last 5 years…..

Leave a Reply

%d