பாபநாசம்: அசைவம் சைவமாக மாறிய கதை

20-stars-go-all-in-praise-for-mohanlal-movie-drishyam

26-pabanasam-6060
திர்ஷ்யம் மலையாளப் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் இன்று வெளியாகிறது.

திர்ஷ்யம் நாயகன் மோகன்லால், ஜார்ஜ் என்ற கிறிஸ்துவராக நடித்திருந்தார். பாபநாசத்தில் நிச்சயம் நாயகனை இந்துவாக மாற்றி முதல் ‘நாசம்’ நடந்திருக்கும். சாட்சி கமல் நெற்றியில் வழியும் திருநீர்.

திர்ஷ்யம் படத்தின் இரண்டாம் பகுதியில் மிக முக்கியமானது, தொடுபுழாவில் உள்ள சர்ச்சில் குடும்பம் தியானத்திற்குச் சென்றதாகச் சாட்சிகளை உருவாக்குவதுதான். சரியாகச் சொன்னால், படமே அவ்வளவுதான்.

கத்தோலிக்க தேவாலயத்தை சாட்சியாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை, ஏராளமான இந்துக்கள் விரும்பி பார்த்து மாபெரும் வெற்றி படமாக்கினார்கள்.

ஆனால், பாபநாசத்தில் நாயகன் இந்துவாக வருவதால், வீட்டிற்குள் இந்துக் கடவுள் படங்கள், இந்துக்கோயில், குருக்கள் (அய்யர்) என்று இந்து அடையாளத்தோடே இந்தப் படம் சுற்றிவரும்.

திர்ஷயம் படத்தில் பிரியாணி (அசைவம்) மிக முக்கிய சாட்சியாக வரும். பாபநாசத்தில் தயிர் சாதமோ? புளியோதரையோ?

தமிழில் இவர்களாக உருவாக்குகிற படத்தில்தான் நாயகனை கிறிஸ்துவராகக் காட்டுவதில்லை; அடுத்த மொழி படத்தை எடுக்கும்போதும் அதில் முதல் மாற்றம் நாயகனை இந்துவாக மாற்றவதுதான் என்பது எவ்வளவு பெரிய மோசடி.

பாபநாசத்திற்கும் இயக்கம் திர்ஷயம் மலையாளப் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப். அப்படியிருந்தும் தமிழில் இந்து. தமிழ் அடையாளம் என்பதே இந்து அடையாளமா?
இதை ‘பெரியாரிஸ்ட்’ கமல் செய்கிறார் என்பது கூடுதல் இந்து ‘பகுத்தறிவு’ சிறப்பு.

இந்த இந்து மனோபாவம் ஒரு ஜாதிய மனோபாவம் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கிற கதையாகக் காட்டினால் கிறிஸ்த்துவரை கண்டிப்பாகச் சி.எஸ்.ஐ நாடாராகத்தான் காட்டவேண்டும். பார்ப்பனராகவோ அல்லது சைவ பிள்ளையாகவோ காட்ட முடியாது. கிறித்துவ நாடாராக வருவது நாயகனுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால்..? அதனால்தான் இந்து.
இந்து என்றால்… அய்யரா?

விளம்பரங்களில் கமல் பேசுகிற வசனத்தைப் பார்த்தால் அப்படித் தெரியல. எந்தக் காலத்தில் வட்டார வழக்கை அவர்கள் பேசியிருக்கிறார்கள்?
அப்போ சைவப் பிள்ளையாகதான் இருக்க வேண்டும். நல்ல வௌங்கும் தமிழ்நாடு.
*
ஜூலை காலை 10 மணிக்கு…
*
மைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்

கமல்-மதன்-திருவள்ளுவர்

கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்