‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

IMG_20150808_142923
சிங்கப்பூரில் அன்பிற்கினிய தோழர்களுக்குப் பிறகு எனக்கு அதிகம் பிடித்தது சீன உணவும் சீன பெண்களும் தான். (இளங்கோவன் பாணியில் விளக்கம் கொடுத்து விடாதீர்கள்)
‘சீன பெண்கள் அழகாக இருக்கிறார்கள்’ என்ற அர்த்ததில் மட்டுமல்ல. பொதுவாகப் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள் தான். ஆனால், சிங்ப்பூரில் சீன பெண்கள் நேர்த்தியாக இருக்கிறார்கள்.

அழகாக இருக்கிற எல்லோரும் நேர்த்தியாக இருப்பதில்லை. நேர்த்தியாக இருக்கிற எல்லோரும் நிச்சயம் அழகாகத் தெரிவார்கள்.

நடுத்தர வர்க்கத்திலிருந்து அதற்கு மேல் எல்லா வர்க்க நிலையிலும் உள்ள தமிழ் பெண்கள் அல்லது இந்திய பெண்கள் தங்களை அழகானவராகக் காட்டிக் கொள்வதற்கு அல்லது அழகை இன்னும் கூடுதலாகக் காட்டுவதற்கு அதிகம் மெனக் கெடுகிறவர்களாகவே தெரிகிறார்கள்.

பாரம்பரிய முறையில் உடை உடுத்துகிற பெண்கள் மட்டுமல்ல; நவீன முறையில் உடை உடுத்துகிற பெண்களும், நவீன சிந்தனை கொண்ட பெண்களும் காதுல, கழுத்துல, காலுல, மூக்குல;

தங்கம், வெள்ளி, மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், மணி மாலைகள், பிளாஸ்டிக், பீங்கான் பொருட்களை அணிந்து கொண்டு இவற்றுடன் நீண்ட தலைமுடியை சீவி சிங்காரித்து, தலையைச் செடியாகப் பாவித்துப் பூ க்கள் சூடிக் கொண்டு.. இன்னும் வித விதமான பொருட்கள் கலர் கலரான உடைகள் என்பதாக ‘கச்சா முச்சா’ என்று தெரிகிறார்கள்.

அதுவும் கல்யாண வீடுகளில் நமது பெண்களைக் கண்கொண்டு பார்க்க முடியாது.
அழகான தோற்றத்திற்கான மெனக்கெடல்கள் மட்டுமல்ல; கவுரத்தை பாதுகாக்க, தங்களின் பொருளாதார அந்தஸ்தை அறிவிக்க அவர்கள் படுகிற பாடு.. பாவம். கோமாளிகளைப் போலவே தோற்றமளிக்கிறார்கள்.
அதுவும் மணப்பெண்ணின் தோற்றம் பரிதாபத்திற்குரியது.

மார்வாடி பெண்களோ இந்த ‘கச்சா முச்சா’ உடையலங்காரத்தில் மகத்தானவர்கள். முழுக்க இவர்களின் அலங்காரம் ‘தனது ஸ்டேட்டஸ்’ சார்ந்தது. படித்த தமிழகப் பெண்களிடம் ‘கச்சா முச்சா’ பாணி தாக்கத்தை மார்வடி பெண்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், சீன பெண்கள் சிறுமிகளிலிருந்து வயதான பெண்கள் வரை தொடையை இறுக பற்றி நன்றாக மேல் உயர்ந்த சிறிய கால் டவுசரை தான் அணிகிறார்கள். மேலே ஒரு டி. சர்ட். தலை முடியோ ஆண்களை விடக் கொஞசம் அதிகம் கொண்ட கிராப். ஆஹா.. எவ்வளவு அழகு..

இதைப் பார்த்துக் கொண்டாட தலைவர் பெரியார் இல்லையே என்ற ஏக்கம் அந்தப் பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படத்தான் செய்தது.
‘பெண்கள் உடுத்துகிற உடை தான் ஆண்கள் வன்முறை செய்வதற்கு காரணமாக அமைகிறது’ என்று எவனாவது அங்கு சொன்னால்.. சொன்னவன் மேல் தான் வன்முறை நடக்கும்.

எளிமையான உடையில் அந்தப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது அவர்களைக் குறைத்து மதிப்பிடுவது. நேர்த்தியாக, கம்பீரமாக இருக்கிறார்கள்.

அலைபாயும் கண்கள் அவர்களிடம் இல்லை. குறிப்பாக, தான் பார்ப்பதை யாராவது கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் சட் டென்று பார்வையை மாற்றிக் கொள்வது, வேறோங்கோ பார்ப்பது போல் துப்பறியும் பாணியில் இன்னொரு இடத்தில் கவனத்தைக் குவித்துப் பார்ப்பது – இப்படியான பொய் பார்வைகள் அந்தப் பெண்களிடம் தென்படவில்லை.

பெண்களிடம் இது போன்ற பொய் பார்வைகளை அந்தச் சமூகத்தில் உள்ள ஆணாதிக்கப் பண்பாட்டு சூழலே ஏற்படுத்துகிறது. மிக அதிகமாக நடுத்தர வர்க்க பெண்களிடம் இவை குவிந்து கிடக்கிறது.
உடை அதில் முக்கியப் பங்காற்றகிறது. எளிமையாக உடை உடுத்துகிற பெண்களுக்கும் பந்தாவாக உடை உடுத்துகிற பெண்களுக்கும் பார்வையில் நிறைய வித்தியாசம் இருப்பதாகவே உணர்கிறேன்.

எளிமையான உடை என்றால் சீனப் பெண்கள் அணிவது போன்ற உடையை மட்டும் சொல்லவில்லை. நமது ஊரில் விவசாயக் கூலிகள், கடும் உடல் உழைப்போடு கூலி வேலை செய்கிற பெண்கள், திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அவர்கள் நடந்து கொள்கிற விதத்தில் ஆண்களை ஒரு பொருட்டாக மதித்து அதற்கேற்றபோல் அவர்கள் நடந்து கொள்வதேயில்லை.

‘வழியில நிக்கிற கொஞ்சம் தள்ளி நில்லு’ என்று ஆணை அதட்டுகிற தொணியில் தான் அவர்கள் வளைய வருவார்கள்.
அவர்கள் உடுத்துகிற உடையில் நேர்த்திக் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உடல் மொழியில் கம்பீரமும் நேர்த்தியும் கண்டிப்பாக இருக்கும்.

பொருளாதாரத்தில் உயரந்த மற்றும் மிடில் கிளாஸ் பெண்களிடம் உடை விஷயத்தில் தங்கள் விருப்பம், உடுத்துவதில் உள்ள வசதியை விட அடுத்தவர் பார்வைக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதே முக்கியப் பங்காற்றுகிறது. அந்த உடை அணிந்து கொள்வதற்குச் சிரமத்தை தந்தாலும் அந்தச் சுமையைச் சுமக்கவே விரும்புகிறார்கள். அழகாக தெரிவதற்காக தன்னை துன்புறுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த அலைபாயும் பார்வைக்கு அதுவே முக்கியக் காரணமாகவும் அமைகிறது. இதில் படித்த, படிக்காத பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை.

ஆனால், சிங்கப்பூரில் சீன ஆண்கள் உட்பட எல்லா ஆண்களை விடவும் நடுத்தர வர்க்கத்து சீன பெண்கள்; நேர் கொண்ட பார்வை நிமிர்ந்த நடை என்று கம்பீரமாக இருக்கிறார்கள். பெரியார் கண்ட புதுமை பெண்களாக.

*

சிங்கப்பூரில் இருந்த நான்கு நாட்களும் சீன உணவை விரும்பி சாப்பிட்டேன். முதல் முறையாகப் பன்றி இறைச்சியையும் அங்குதான் ருசி பார்த்தேன். சீன பெண்களின் நேர்த்தியான உருவத்திற்கும் சீன உணவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

என்னைப் போல் குறைவாக உண்பவர்களுக்குச் சீன உணவு சிறப்பானது. அவர்கள் உணவில் சக்கையாக, வீணாக உண்கிற உணவு அநேகமாக இல்லை. அதிகக் கொழுப்புள்ள உணவும் இல்லை.
அவர்களின் எல்லா உணவுகளிலும் பன்றி இறைச்சிக்கு முக்கியத்துவம்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி்யை அவர்கள் ஏறக்குறைய விட்டொழித்தவர்களாகவே தெரிகிறார்கள். பன்றி பிறகு மீன், கோழி.

சீனர்களின் ஆரோக்கியமான உடல் அமைப்புக்கு பன்றி இறைச்சி முக்கியக் காரணம். ஆடு, மாடு இறைச்சிகளில் கெட்ட கொழுப்பின் அளவு 60 சதவீதத்திற்கும் மேல். பன்றி இறைச்சியில் அப்படியே தலைகீழ். அதில் நல்ல கொழுப்பு 60 சதவீததத்திற்கு மேல். சீனர்களின் உடல் வனப்பின் பிண்ணனி இதுதான். இன்று அமெரிக்க, அய்ரோப்பிய வெள்ளைக்காரர்களும் முழுவதுமாகப் பன்றி இறைச்சிக்கு மாறியதின் காரணம் இதுவாகத்தான் இருக்கும்.

சிங்கப்பூரில் இந்திய உணவுகளைக் குறிப்பாகத் தென்னிந்திய அல்லது தமிழக உணவுகளை அதுவும் சைவ உணவுகளைச் சாப்பிடுவது சுய தண்டனை. கூடுதல் விலையோடு சுவையற்ற உணவைதான் நீங்கள் சாப்பிட வேண்டும். நம்மாளுங்கதான் நடத்துறாங்க.

ஆனால், சீன உணவுகள் குறைந்த விலையில் தரமானதாகக் கிடைக்கிறது. மிகச் சாதரணமான எந்தச் சின்ன உணவகத்திலும் நம்பி சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம். நேர்த்தி. சுவை.
சீன உணவில் நம்ம ஊர் டச்சஸ் வேணும் என்றால், கொஞ்சம்போல் சோறுடன் உள்ள சீன உணவை தேர்தெடுப்பது புத்திசாலித்தனம். ஆனால் பன்றி கறியை தவற விடாதீர்கள்.

அப்படித்தான் அங்கு போன மறுநாள் காலையில் சீன உணவை சாப்பிடுவதற்கு விஜயபாஸ்கர், ஜெகனுடன் சின்ன உணவு விடுதிக்கு சென்றேன்.
சிங்கப்பூரில் மிக மிகப் பெரும்பான்மை சீனர்கள். அடுத்து மலாய்காரர்கள். பிறகு தமிழர்கள். ஆனாலும் ஆங்கிலம் தான் பொது மொழி. சிங்கப்பூரில் இனவாத பிரச்சினை தலையெடுக்காமல் இருப்பதில் முக்கியப் பங்கு சீன மொழியைப் பொது மொழியாக்காமல் இருப்பதால் தான்.

சிங்கப்பூருக்கு முன்பே, இந்தியாவில், தமிழகத்தில் 1938 லிருந்து பெரியார் இயக்கம் ‘இந்தி எதிர்ப்பும் ஆங்கிலப் பரிந்துரையும்’ இதன் காரணமாகதான் சொல்லிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரின் சிறப்பை பேசுகிற யாரும் இதைக் குறிப்பிடுவது இல்லை.

சரி. அந்த உணவகத்திலிருந்த சீனரிடம் பேசவதற்குப் பிரிய பட்டு நானே ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். நான் ஆங்கிலத்தில் பேசினால் ‘எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது’ என்பதை ஆங்கிலமே தெரியாதவர்கள்கூடத் தெளிவா தெரிஞ்சிப்பாங்க.

நான் சீனரிடம் ஆங்கிலத்தில் பேச, அவரோ சிரித்துக் கொண்டே என்னிடம் தமிழில் பேசினார்.
‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’
*
25 August.

படத்தொகுப்புகள்

https://goo.gl/photos/Z6ddgR9mHwEh5WWP8

https://goo.gl/photos/EkktopjGegqND1P99

https://goo.gl/photos/7gbCmbypcA6BmKJY8

https://goo.gl/photos/F5LWvoVdRg4JxFeB9

https://goo.gl/photos/BNjGSRUNvL1Do13Y8

https://goo.gl/photos/Wo8VAWPB9o6EzABh8

சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்

முஸ்லிம்கள் Vs அப்துல்கலாம்

இந்திய முஸ்லிம்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்கலாம்.

ஒரு முஸ்லிம் உண்மையான இந்தியனாக இருக்க வேண்டுமென்றால் பகவத்கீதையைக் கொண்டாட வேண்டும். இந்து சாமியார்களை வழிபடவேண்டும். வேதங்களைப் போற்ற வேண்டும்.

‘நான் சைவம்’ என்று சொல்வதின் மூலமாக ‘மாட்டுக்கறி சாப்பிடுகிற முஸ்லிம் அல்ல’ என்பதை மறைமுகமாக வெளிபடுத்தி ‘பசுப் புனிதம்’ என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

‘அப்துல்கலாமை பார்த்தவது இங்கிருக்கும் முஸ்லிம்கள் திருந்துங்கள்’ என்று இந்து அமைப்புகள் இனி அறிவுரை சொல்லும், எச்சரிக்கும் பிறகு மிரட்டும்.

அப்துல்கலாமை எந்த அளவிற்குக் கொண்டாடுகிறார்களோ அந்த அளவிற்கு இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது….
விழித்துக் கொள்ளுங்கள் இஸ்லாமியர்களே, ‘முற்போக்காளர்களே’
ஒரு பேராபத்து இந்திய முஸ்லிம்களை அன்போடு அழைக்கிறது..
வரும் தேர்தலில் கலாமும் இந்து அமைப்புகளும் காட்டுவார்கள் தங்கள் பேரன்பை.

காத்திருக்கிறது கருணையோடு கல்லறைகள். அப்துல்கலாம் அழைக்கிறார்.

கனவின் ரகசியம்…
*
முஸ்லிம்களை விடுங்கள், அப்துல்கலாம் வாழ்ந்த ராமேஸ்வரம் பகுதியில் அவர் குடும்பத்தைப் போலவே ஒரே வர்க்க நிலையில் வாழ்ந்த ‘இந்து‘ மீனவர், தாழ்த்தப்பட்டவர் கடவுள்களைப் பொருட்டாக மதிக்காமல்;

சாமியார்களில் கூட மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாமியார்களை அலட்சியப்படுத்தி;
பார்ப்பன-பணக்கார கடவுள்கள், சாமியார்களின் பக்தராக அடையாளப்படுத்திக்கொண்டதில் இருக்கிறது ‘கலாம் கண்ட கனவின் ரகசியம்’

அதே ரகசியத்தில் தான் இருக்கிறது, இந்து அமைப்புகள் ‘தேசபக்தியின் மறுபெயர் கலாம்’ என்பதின் சூட்சம்.

24 August at 09:24

கலாமின் ஆத்மா பரமாத்மா
*
ஜெயேந்திரனுக்கு மாற்று பங்காரு கிடையாது. ஆனால், ஜெயேந்திரனை வணங்குகிற பார்ப்பனர்கள் ‘பங்காரு’ வை வேடிக்கை பார்க்கிற ஒரு ‘கங்காரு’ வாகக் கூட மதிப்பதில்லை.

இந்து சாமியார்களின் ‘காலடி’யில் வீழ்ந்து வணங்கிய ‘மரியாதை’க்குரிய அப்துல் கலாம் அவர்கள் பங்காருவை பத்து பைசாவிற்குக்கூட மதித்ததில்லை.

பங்காரு ‘அடிகள்’ இந்து இல்லையா? சாமியார் இல்லையா? ஏன் கலாமுக்கு பங்காரு ஒரு இந்து கணக்காகவே தெரியாம போச்சு.

நான் மதத்தை, கடவுளை, வழிபாட்டு முறையை ஆதரிக்கிறவன் இல்லை; அதை விமர்சிக்கிறவனும் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறவனும் கூட.

ஆனால், அப்துல்கலாம் குரானை தீவிரமாக நம்பிய இஸ்லாமியராக வாழ்ந்திருந்தாலே அவருடைய வாழ்க்கை முற்போக்கானதாக இருந்திருக்கும்.

25 August at 14:08

ஒரே ஜனாதிபதி..

மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க

ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை

வந்தாரை வாழ வைக்கும் வளம் மிகுந்த சென்னைக்காரன் நான். வீடு இருப்பவனுக்கு மட்டுமல்ல வாழ்க்கை; வாடகைக்குக் கூட வக்கற்றவர்களையும் தன் சாலைகளால் அரவணைத்துக் கொள்ளும் அன்னை – சென்னை.
சிங்கப்பூருக்கும் கிடைக்காத சிறப்பு. சென்னையின் சிங்காரமே இது தான். ‘சிங்காரச் சென்னை’
*
கோயிலை சுற்றியுள்ள அக்ரகாரங்களைத் தவிர, சென்னையில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குடியேறலாம்.
*
சென்னையை அசிங்கமாக்குவது கூவம் அல்ல; அதை விட நாத்தம் பிடித்த ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு.

22 August at 23:59

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா?

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

NH 10

anushka-sharma-in-nh10
NH 10 இது ஒரு இந்திப் படம்.

இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கச் சொல்லி தோழர் சுகிதா தான் சொன்னாங்க. (facebook.com/sugitha.sugi) அவுங்க சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று இரவு தான் பார்த்தேன். (13 August)

துணிந்து சொல்வேன்; இந்த நிமிடம் வரை இப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேயில்லை.
இப்படியும் சொல்வேன்; உண்மையான இந்தியாவைக் காட்டிய ஒரே படம்.

படத்தின் இயக்குநர் Navdeep Singh. இவரைப் பாராட்டுவதே அவருக்குச் செய்கிற அவமரியாதைதான். அவரைக் கட்டிப்பிடித்துக் கதறி அழத் தோன்றுகிறது.

‘அனுஷ்கா ஷர்மா’ – அழகான அல்லது கவர்ச்சியான நடிகை, வீராட் கோலியின் காதலி இப்படியாகத்தான் அறியப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் கவுரவங்களைக் கொலை செய்கிற அரக்கியாக அவதாரம் எடுத்து நிற்கிறார் இந்தப் படத்தில்.

அவரின் சிறப்பான நடிப்புக்காக மட்டுமல்ல, இப்படி ஒரு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார் என்பது அவர் மீதான மதிப்புக்குக் காரணம்.

நமது வீரம் பொருந்திய தமிழ் படக் கதாநாயகர்கள் அனுஷ்கா சர்மாவிடமிருந்து ஒரே ஒரு ‘சொட்டு’ தைரியத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டாலே…

கவுரக் கொலைகளை அம்பலப்படுதுவதோடு இந்தப் படத்தை முடித்து விடவில்லை இயக்குர் நவ்திப் சிங். அதற்குப் பிறகு அவர் அதை முடித்து வைக்கிற ‘கோபம்’ தான் அவர் வெறுமனே சினிமாக்காரர் அல்ல என்பதை அடையாளப்படுத்துகிறது.

‘கவுர’ கொலைகள் செய்கிறவர்களை அனுஷ்காசர்மா என்ன செய்கிறார் என்பதைப் பார்த்தால், அப்படிச் செய்கிற எதிரிகளை மட்டுமல்ல அவர்களுடன் கூட்டணி வைக்கத் துடிக்கிற துரோகிகளையும் இதுபோல் செய்யதால் தப்பில்லை என்ற உணர்வை இந்தப் படம் உங்களுக்குத்.தோற்று விக்கும்.
14 August at 09:21

சிவாஜி யை காப்பிடியத்தாரா ஹாலிவுட் நடிகர்

சத்தியஜித்ரே vs மிருணாள் சென்

சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin

கலவரம்-மோதல் X தாக்குதல்-வன்முறை

வார்த்தை விளையாட்டு: கலவரம், மோதல் X தாக்குதல், வன்முறை.
சங்கராபுரம், சேஷசமுத்திரம்; தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சம்மந்தமே இல்லாத பெயர்கள்.

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

அதிகமில்லை ஜென்டில்மேன் வெறும் ‘ஆறே’ மாதம் தான்

4 ஆண்டுகள் 6 மாதம் வரை இவுருதான் நல்லவரு.. வல்லவரு..என்றும்
அவுரு அல்லது அவுங்க வேஸ்ட்.. அரசியல் வியாபாரி.. என்பதாகவும் தொடர்ந்து மாநாடு, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என்று மிகத் தீவிரமாக இயங்கி விட்டு,

இப்போது அப்படியே தலைகீழாக மாற்றி இயங்குவதால் அந்த நான்கரை ஆண்டுகள் இயங்கியதை முற்றிலுமாக அழித்துவிட வேண்டியிருக்கிறது.

இதில் எத்தனை தொண்டர்களின் உழைப்பு, பணம், வாழ்க்கை வீணாகப் போயிருக்கிறது.
எப்படி மாற்றிப் பேசினாலும் தொண்டர்கள் ஒத்துக் கொள்ளத்தான் போகிறார்கள் என்பதால் அவர்களை ஆட்டு மந்தையைப்போல் ஆட்டி வைப்பது என்ன நியாயம்?

அதனால் எல்லாக் கட்சிகளும் இனி தேர்தலுக்கு 6 மாததிற்கு முன்பு மட்டுமே கட்சி வேலைகளைத் தொடங்கி நடத்தினால் போதும்..
கண்டிப்பாக எளிய தொண்டர்களின் உழைப்பு, நேரம், பணம் அவர்களின் வாழ்க்கையே மிச்சமாகும்.

பெரியார் கருத்துகள் வேகமா பரவ..

தேர்தலோ தேர்தல்..!

அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்

தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா?

சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்

நான் எதிர்பார்க்கவே இல்லை. சிங்கப்பூர் தோழர்கள் என் மீது இவ்வளவு அன்பு அதுவும் பேரன்பு கொண்டிருப்பார்கள் என்று. கலக்கமுற செய்து விட்டார்கள்.

என்னைச் சந்திப்பதை பெரும் ஆர்வத்தோடு எதிர்கொண்டதும். அதற்காக அவர்கள் அதிகத் தூரம் பயணம் செய்து வந்ததும், நேரில் பார்த்ததும் கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமாய்ப் பேசியதும்..

இரண்டு நாட்கள் நான் பேசிய கூட்டங்களுக்கு வந்த தோழர்களில் பலர், சொல்லி வைத்ததைப்போல், தங்களின் செல்போனில் என்னுடைய பேச்சை டவுன்லோட் செய்து வைத்திருப்பதைக் காண்பித்து, ‘காலை, இரவு இரண்டு வேளையும் உங்கள் பேச்சைத்தான் கேட்கிறோம்’ என்றார்கள்.

நான் பேசி முடித்த பிறகு பல தோழர்களின் நெருக்கமும் அன்பும் திக்குமுக்காட வைத்தது. விஜயபாஸ்கர், முகமது இஸ்மாயில் இருவரைத் தவிர வேறு யாரையும் இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை. இருந்தும்..

என்னை அவர்களின் ஒருவனாக அவர்களின் உறவினர்கள் நண்பர்களைவிடவும் என்னை நெருக்கமாக உணர்கிறார்கள்.

தோழர். முகமது இஸ்மாயில் தோழர் பரிமளம், தோழர் தங்கவேலு கட்டாயப்படுத்திச் செலவுக்குப் பணத்தை என் பாகெட்டில் திணித்து விட்டார்கள்.
முகமது இஸ்மாயில் குடும்பத்தார் அத்துடன் சிறப்பான விருந்தையும் அளித்து நெகிழச்செய்தார்கள். நேர நெருக்கடியின் காரணமாக மற்றத் தோழர்களின் வீட்டுக்குஅழைத்தும் செல்ல முடியவில்லை.

தோழர்கள் என்மீது கொண்டிருக்கிற அன்பிற்கு அரசியல் உணர்வே காரணம். அவர்களின் அரசியல் உணர்விற்கும் அன்பிற்கும் எப்போதும் நான் உண்மையுள்ளவானக இருப்பேன்.

என் அனுபவத்தில் சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான். இதற்கெல்லாம் மூலக் காரணமான என் இனிய தோழர்கள் விஜயபாஸ்கர், ஜெகன் இருவக்கும் நன்றியை மட்டும் சொல்லிவிடுவது முறையாகாது.

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் அழைக்கிறது

சிங்கப்பூரில் மெல்லிசை மன்னரின் நினைவலைகள்

சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?