சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?

‘மலேசியாவிருந்து சிங்கப்பூர் பிரிந்து 50 ஆண்டுகள் ஆகிறது. நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. சுற்றுலாவாக நீங்கள் சிங்கப்பூர் வரமுடியுமா?’ என்று தோழர் ஜெகன் தங்கதுரை, புதுமாப்பிள விஜயபாஸ்ர் இருவரும் கேட்டார்கள்.

‘என்னடா இது சிங்கப்பூர் தோழர்களுக்கு வந்த சோதனை?’ – என்று நினைத்துக் கொண்டு, ‘சரி’ என்றேன்.

உடனே அவர்களே ‘விசா – போக, வர’ டிக்கெட் எடுத்து ‘வருக, வருக’ என்று வாழ்த்து தெரிவித்து மெயில் அனுப்பி விட்டார்கள்.
இந்த மாதம் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சிங்கப்பூரில்.
பாவம்.. யார் பெத்த புள்ளங்களோ.. அவுங்க அப்பா அம்மா, அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பிய கூடக் கூப்பிடாம என்னைக் கூப்பிடுதுங்க.

இது எனது முதல் வெளிநாட்டு பயணமட்டுமல்ல; முதல் விமானப் பயணமும்.

“போயா.. போ.. நீ போற அல்லது வர விமானம் அப்படியே உன்ன கடலுக்குள்ளே இறக்கட்டும்” என்று வாழ்த்துகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்… (இருக்கமாட்டாங்களா.. பின்ன.. எவ்வளவு பேர திட்டிருக்கோம்..’)
‘பாத்து வாழ்த்துங்க.. நான் தனி விமானத்தல போல.. கூட உங்கள மாதிரி ஆளுங்களும் வருவாங்க.’
*
சிங்கப்பூர் தோழர்கள் தொடர்புக்கு: விஜயபாஸ்கர்:93455163 – ஜெகன்:82835233