சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்

நான் எதிர்பார்க்கவே இல்லை. சிங்கப்பூர் தோழர்கள் என் மீது இவ்வளவு அன்பு அதுவும் பேரன்பு கொண்டிருப்பார்கள் என்று. கலக்கமுற செய்து விட்டார்கள்.

என்னைச் சந்திப்பதை பெரும் ஆர்வத்தோடு எதிர்கொண்டதும். அதற்காக அவர்கள் அதிகத் தூரம் பயணம் செய்து வந்ததும், நேரில் பார்த்ததும் கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமாய்ப் பேசியதும்..

இரண்டு நாட்கள் நான் பேசிய கூட்டங்களுக்கு வந்த தோழர்களில் பலர், சொல்லி வைத்ததைப்போல், தங்களின் செல்போனில் என்னுடைய பேச்சை டவுன்லோட் செய்து வைத்திருப்பதைக் காண்பித்து, ‘காலை, இரவு இரண்டு வேளையும் உங்கள் பேச்சைத்தான் கேட்கிறோம்’ என்றார்கள்.

நான் பேசி முடித்த பிறகு பல தோழர்களின் நெருக்கமும் அன்பும் திக்குமுக்காட வைத்தது. விஜயபாஸ்கர், முகமது இஸ்மாயில் இருவரைத் தவிர வேறு யாரையும் இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை. இருந்தும்..

என்னை அவர்களின் ஒருவனாக அவர்களின் உறவினர்கள் நண்பர்களைவிடவும் என்னை நெருக்கமாக உணர்கிறார்கள்.

தோழர். முகமது இஸ்மாயில் தோழர் பரிமளம், தோழர் தங்கவேலு கட்டாயப்படுத்திச் செலவுக்குப் பணத்தை என் பாகெட்டில் திணித்து விட்டார்கள்.
முகமது இஸ்மாயில் குடும்பத்தார் அத்துடன் சிறப்பான விருந்தையும் அளித்து நெகிழச்செய்தார்கள். நேர நெருக்கடியின் காரணமாக மற்றத் தோழர்களின் வீட்டுக்குஅழைத்தும் செல்ல முடியவில்லை.

தோழர்கள் என்மீது கொண்டிருக்கிற அன்பிற்கு அரசியல் உணர்வே காரணம். அவர்களின் அரசியல் உணர்விற்கும் அன்பிற்கும் எப்போதும் நான் உண்மையுள்ளவானக இருப்பேன்.

என் அனுபவத்தில் சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான். இதற்கெல்லாம் மூலக் காரணமான என் இனிய தோழர்கள் விஜயபாஸ்கர், ஜெகன் இருவக்கும் நன்றியை மட்டும் சொல்லிவிடுவது முறையாகாது.

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் அழைக்கிறது

சிங்கப்பூரில் மெல்லிசை மன்னரின் நினைவலைகள்

சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?