இயக்குநர்களை, நடிகர்களை வீழ்த்திய இசையமைப்பாளர்

இஸ்லாமிய இசை, நாகூர் அனிபா வை அறிமுகப் படுத்தியதும் மெல்லிசை மன்னரே. அவரின் இசை வாரிசு இசைஞானி மட்டும் தான். தாய் 8 அடி பாயந்தால் குட்டி 16 அடியல்ல 32 அடி பாய்ந்தது.

(பாட்டு வேற பாடியிருக்கேன்.. தைரியமிருந்தா பாருங்க)
நன்றி சிங்கப்பூர் தோழர்களுக்கு.. (வெளிநாட்டில் மெல்லிசை மன்னருக்கு நடந்த முதல் நினைவு நிகழ்ச்சி)
ஒளிப்பதிவு தோழர் Ashok Kumar

பெரியார்; நேற்று இன்று நாளை

Alif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்

Alif-10

maxresdefault
கேரளாவில் 2015 பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படத்தை நேற்று இரவு DVD யில் பார்த்தேன்.

‘முகமது நபியிடம் ஒருவர் கேட்டார், நான் வாழ்க்கையில் அதிகம் மதிக்கப்பட வேண்டியது யாரை? அதற்கு நபிகள் நாயகம் தாயை என்றார். ழூன்று முறை கேட்டபோதும் தாயை தான் என்றார். நான்காவது முறை தான் தந்தையை என்றார்’ இப்படியான பின்னணி குரலோடு துவங்கிறது படம்.

‘தலாக்’ என்கிற திருமண முறிவால் பாதிக்கப்படுகிற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை முஸ்லிம் தாய்மார்களைக் குறித்துக் கனிவோடும், துணிவோடும் பேசுகிறது படம்.

கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா, பேத்தி என்று நான்கு தலைமுறை பெண்களோடு அவர்களின் துயரங்களோடு நம்மையும் பங்குபெறச் செய்திருக்கிறார் இயக்குநர் MK முகமத் கோயா. கதை, திரைக்தை, வசனம் இவரே.

‘தலாக்’ என்கிற விவாக ரத்தால் பாதிக்கப்பட்ட பெண், முஸ்லீம்களுக்கான பொதுவான கூட்டத்தில் மதச் சட்டங்கள் குறித்து அறிவுரை சொல்கிறவரை இடைமறித்து, பெண் குரலாய் வெகுண்டு பேசுவதால், அந்த நான்கு இஸ்லாமியப் பெண்களும் இஸ்லாமிய ஆண்களிடம் சந்திக்கிற துயரங்களைத் துணிவோடு சொல்லியிருக்கிறார் இஸ்லாமிய ஆணான இயக்குநர்.

ஒரே மதம், ஒரே இறைவன் இருந்தும் வசதியானவர்க்கும் ஏழைக்கும் இடைவெளியில் இருக்கிற வர்க்க வேறுபாடுகளையும் காட்டியிருக்கிறார்.
தடைகளோடு தனித்து விடபட்ட பெண்களுக்கு ஆதரவாக, ஒரு கம்யுனிஸ்ட் குடும்பம் இருப்பதாகக் காட்டியிருப்பது, இயக்குநரின் மெல்லிய கம்யுனிச ஆதரவை மரியாதையுடன் அடையாளப்படுத்துகிறது.

‘தலாக்’ பெற்ற பெண்ணுக்கு அரசு வேலை கிடைக்கப் பெற்ற பின், நான்கு பெண்களுக்கும் கிடைக்கிற உறுதி, மெல்லிய புன்னகையோடு தன் பேத்தியின் எதிர்கால வாழ்க்கையை வரவேற்கிற கொள்ளுப் பாட்டி. அவர்களோடு நமக்கும் பிறக்கிறது நம்பிக்கை.

வேலைக்குப் போகிற தன் மகளுக்குச் சோறுடன் துவையல் அரைத்து ஊறுகாயுடன் டிபன் பாக்சில் தருகிற தாயின் அன்பில் ஒளிர்கிறது வாழ்க்கை. அதுவரை, கடும் உழைப்பால், குடும்பத்தை மட்டும் அந்தத் தாய் தாங்கவில்லை. இந்தப் படத்தையும் அவர் தான் தாங்கிப் பிடிக்கிறார்.

இறுதியில், மகளைப் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு, வேலைக்குச் செல்கிறார் அந்தப் பெண். பின்னணியில் கருணையும், நம்பிக்கையையும், அன்பையும் வலியுறுத்தி ஒலிக்கிறது பாடல்.

இவர்கள் இருவருக்கும் எதிரில் பர்தா அணிந்த பெண்கள் கூட்டமாக வருகிறார்கள். புடவையும், பள்ளிச்சீருடையும் அணிந்த இவர்கள், அந்தக்கூட்டத்திற்குள் நுழைந்து எதிர்திசையில் பயணிப்பதுபோல் வருகிற காட்சி தற்செயலானதாக இருந்தாலும், அது கலகத்தின், நம்பிக்கையின் குறியீடாகவே இருக்கிறது.

சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin

NH 10

சத்தியஜித்ரே vs மிருணாள் சென்

சவால்.. தயாரா..? 3 நிமிடம் மட்டுமே

பெரியார் பிறந்த நாள் அன்று, பெரியார் திடலில் பேசிய தமிழறிஞர் அவ்வை நடராசன், ‘திருக்குறளை ஆதரித்து மாநாடு நடத்திய ஒரே தலைவர் பெரியார் ஒருவர் தான்’ என்றார். மகிழ்ச்சி.

போற இடமெல்லாம் இததானே திரும்ப, திரும்பச் சொல்லிகிட்டு இருக்கேன்.

இவர் போன்ற தமிழிறிஞர்கள், இதை 30 வருசத்துக்கு முன்னாலேயே சொல்லியிருந்தா.. சில மூதேவிகள் பெரியாரை தமிழ் விரோதி என்று சொல்வதை அப்பவே தகர்த்திருக்கலாம்.

என்னைப் போன்றவர்களுக்கும் இந்த இம்சைகளுக்குப் பதில் சொல்ற வேலை மிச்சமாயிருக்கும். (வீடியோவிலிருக்கிறது என்னுடைய சவால்)

டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிப்பது எப்படி?

பெரியார்; நேற்று இன்று நாளை

‘பெரியார் நேற்று என்ற கடந்தகாலமாக இல்லை. அவர் எப்போதும் நிகழ்காலமாகவே இருக்கிறார். நாம் சென்று தொட முடியாத எதிர்காலமாகவும் இருக்கிறார்.’
இனிய பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்.

மிகச் சிறப்பாக இந்த விழாவை நடத்திய அன்பிற்கினிய அனைத்து சிங்கப்பூர் தோழர்களுக்கும் நன்றி.

நான் நெகிழ்ந்து உருகுகிற அளவிற்கு கொள்கையை அன்பால் நிரப்புகிற பேரன்பாளர் தோழர் Ashok Kumar. ஒளிப்பதிவும் செய்து, இணையத்தில் வெளியிடவும் செய்தார். நன்றி அசோக்.

‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

நான் என்ன சொல்றது?

சிங்கப்பூரில் தோழர். Mohamed Ismail 200 டாலர், தோழர். பரிமளம் 200 டாலர் கட்டாயப்படுத்தி ‘சுற்றி பார்க்க செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று அன்போடு கொடுத்ததை, என்னை அழைத்த தோழர்கள் விஜயபாஸ்கர் – ஜெகனிடம் அவர்கள் எனக்காகச் செய்த செலவை பகிர்ந்து கொள்ளக் கொடுத்து விட்டேன்.

‘உங்கள் வருகையின் செலவை பகிர்ந்து கொள்ளவும், பெரியார் பற்றிக் கூட்டம் நடத்தியதற்காகவும், பல தோழர்கள் அதன்பிறகு நன்கொடையாகப் பணம் தந்தார்கள்’ என்று செலவு போகத் தங்கள் பங்களிப்பையும் சேர்த்து, 15 நாட்களுக்கு முன் எனது வங்கிக் கணக்கில் ரூ. 30 ஆயிரம் செலுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.
நான் என்ன சொல்றது?
*
என்னை அழைத்ததைக் குறித்து தோழர் விஜயபாஸ்கர் தனது பக்கத்தில் எழுதியதை இங்குத் தருகிறேன்.
*
சிங்கப்பூரில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்ததில் செய்த ஒரே உருப்படியான காரியம்
பெரியாரிய கருத்தாளார், பேச்சாளர், எழுத்தாளர் தோழர் வே.மதிமாறனை சிங்கப்பூர் அழைத்து “நேற்று, இன்று நாளை: தந்தை பெரியார்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு பண்ணி சிறப்பாக நடத்தியது தான்.

“தோழர் மதிமாறனை சிங்கப்பூருக்கு அழைப்போம்” என்ற யோசனையைத் தோழர் ஜெகன் கூறியபோது “அழைக்கலாமே தோழர்” என்று கூறினாலும், அவரை இங்கு அழைத்து என்ன செய்யமுடியும் என்ற தயக்கம் இருந்தாலும் அழைப்போம் என முடிவு செய்தோம். முடிவு எடுத்தவுடன், படவென விசா எடுத்து டிக்கெட் எடுத்து தோழர் மதிமாறனுக்கு அனுப்பி வைத்தோம்.

“நான்கு நாட்கள் தோழர் மதிமாறன் இங்குத் தங்க உள்ளாரே, அவருக்குச் சிங்கப்பூரை சுற்றிக் காண்பிப்போம் ” என்று நானும் ஜெகனும் நினைத்துக் கொண்டு இருந்த வேளையில் தோழர் மதிமாறன் சிங்கப்பூருக்கு வருகிறேன் என்று பேஸ்புக்கில் எழுதியவுடன் அவரை நேசிக்கும் நண்பர்கள் பலர் கொடுத்த ஆதரவினால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவேந்தல் நிகழ்வை ஒருநாளும், பெரியார் பற்றிய கலந்துரையாடலை மறுநாளும் ஏற்பாடு செய்து நடத்தினோம்.
கடைசியில் நான்கு நாட்கள் போதாமல் ஆகிவிட்டது.

தோழர் மதிமாறன் மீது தோழர்கள் கொண்டிருந்த அன்பினால் தோழர் மதிமாறன் திக்குமுக்குயாடியது மட்டுமில்லாமல் எங்களையும் திக்குமுக்காட செய்துவிட்டனர்.

இஸ்மாயில், அசோக், மில்டன், தமிம் அன்சாரி, அபு ஜாகித், தங்கவேலு, புருசோத்தமன், பரிமளம், பகுத்தறிவாளன், பிரபு, தமிழ் கரிகாலன், நரசிம்மன், சுரேஷ் சுரேகா, ராஜராஜன், மோகன், கார்த்திக், சிலம்பரசன் மற்றும் பலர் தோழர்கள் பணமும் ஆதரவும் தந்து, இரு நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்திக் கொடுத்து, தோழர் மதிமாறனின் சிங்கப்பூர் வருகையை வெற்றிகரமாக மாற்றிய தோழர்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது.

எங்களுக்குப் பல வகைகளில் உதவி செய்த தோழர்களுக்கும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த தோழர் மதிமாறனுக்கும் மனமார்ந்த நன்றி. !!!
-விஜயபாஸ்கர்

‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்

முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நியம்

அந்நிய முதலீடு nokia வால் ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் தெருவில் நிற்கிறார்கள். இன்னொரு அந்நிய முதலீடு hyundai மூட்ட முடிச்சு கட்டிக்கிட்டு இருப்பதாகத் தகவல்.

மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாய நிலங்களில் கம்பெனி நடத்துகிற அந்நிய நிறுனங்கள் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நிய அரசாகத்தான் இருக்கிறது.

அரசை விட அந்நிய நிறுவனங்கள் சிறப்பாகத் தொழில் நடத்துமென்றால்,
அரசாங்கத்தையே அந்நிய முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே..?

9 September at 13:53

பூந்தமல்லியைத் தாண்டி இருங்காடுக்கோட்டையிலிருந்து ‘அந்நிய முதலீடு’ hyundai கம்பெனியில் துவங்குகிறது. ஸ்ரீபெரும்பந்தூர் வழியாகச் சுங்குவார் சத்திரம் வரை nokia , saint gobain என்று சாலையெங்கும் நிரம்பி வழிகிறது அந்நிய முதலீடு.

எந்த இந்திய தொழிலாளர் சட்டங்களும் அங்குச் செல்லுபடி ஆகாது. பல விபத்துகளில் தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள். கேட்க நாதியில்லை. காரணமே இல்லாமல் பல தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். யார் கேட்டது?

‘வெளிநாட்டு கம்பெனி வருவதால் நம்ம ஊரு சிங்கப்பூர் மாதிரி மாறிடும்’ விவசாயிகள் ‘நல்ல விலை’ என்று நிலங்களை விற்றுவிட்டு செய்வதறியாது விழிக்கிறார்கள்.

இதோ nokia ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களை விவசாயக் கூலிகளாக போவதற்குக்கூட வழியில்லாமல் செய்திருக்கிறது.
‘நாங்க தான் வெளிநாட்டு கம்பெனியை கொண்டு வந்தோம்’ என்று மாறி மாறி மார் தட்டியது திமுகவும், அதிமுகவும்.
அப்படியானால், தெருவில் நிற்கும் தமிழர் நிலைக்கு நீங்கள் தானே காரணம்.
இருந்தும் குற்ற உணர்வே இல்லாமல் எப்படி மீண்டும் அந்நிய முதலீடு? கூச்சமே இல்லாமல் குடுமிபிடி சண்டை?
*
அந்நிய முதலீடு நாடகமாகவே முடிந்தால் மகிழ்ச்சி. தப்பிப்
பார்கள் தமிழர்கள்.

10 September

பட்டாசு: வெடித்து சிதறும் தொழிலாளர்கள்

பட்டேல் பாலிடிக்ஸ்

கிரிக்கெட்டில் பட்டேல்.*
மும்பையை கைப்பற்ற நினைத்த பட்டேல்கள். தகர்த்த டாக்டர் அம்பேத்கர்.
இடஒதுக்கீடு குறித்து தெளிவாகவும் ஆழமாகவும் பேச வைத்த தோழர் சுதிதாவிற்கும் கலைஞர் டிவிக்கும் நன்றி. (facebook.com/sugitha.sugi)
பதிவு செய்து வெளியிட்ட facebook.com/palani.kumar. அருமைத் தம்பி பழனிக்குமாருக்கும் நன்றி

Forward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும்

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள்

எந்தக் காலத்திலுமே ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள் தான். மாணவர்களிடம் மதம், ஜாதி உணர்வு கிடையாது.

ஆசிரியர்களிடம் இருந்தது. இருக்கிறது. ஆதிக்க ஜாதிகளை மட்டும் சொல்லவில்லை, எல்லா ஜாதிகளையும் சொல்கிறேன். இந்து மதத்தை மட்டும் சொல்லவில்லை, எல்லா மதங்களையும் சொல்கிறேன்.

மாணவர்கள் மதம், ஜாதியற்று இருக்க விரும்பினால் அதைக் கெடுப்பது ஆசிரியர்கள் தான். ‘நம்ம மதப் பழக்கத்தை விட்டு விடக்கூடாது’ என்பதும், தன் ஜாதி மாணவன் என்று தெரிந்தால் ஜாதிப் பாசம் காட்டுவதும் இப்படியான மத, ஜாதி வேறுபாடுகளைக் கற்பிப்பதும் ஆசிரியர்கள் தான். தன் மத நம்பிக்கையை மற்ற மத மாணவர்களிடம் திணிப்பவர்களும் இவர்களே தான்.

ஆசிரியர்கள் பெற்றோராகவும் இருக்கிறார்கள். பெற்றோராகத் தன் மத, ஜாதி பழக்கத்தை வலிந்து தன் குழந்தைகளிடம் திணித்து விட்டு,
மற்ற குழந்தைகளை மத, ஜாதியற்று பார்ப்பார்கள் என்பது நம்பக்கூடியதா?

6 September at 23:29

ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர் அம்பேத்கர்

இனிமே ஆட்டத்த அடிச்சி ஆட வேண்டியதுதான்

கேரளாவை சொந்த ஊராகவும் மேகலாயாவை தனது மனைவியின் ஊராகவும் கொண்டு இப்போது துபாயில் வாழ்கிற தோழர் Backer Jisthi நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு,

‘கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் தோழர். நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். பதில் சொல்ல முடியாத அளவிற்குக் கேள்விக் கேட்டு முற்றிலுமாக அம்பலப்படுத்துகிறர்களைப் பழைமைவாதிகள், பிழைப்புவாதிகள் விட்டுவைக்க மாட்டார்கள். இது வரலாறு முழுக்க நடைபெற்றிருக்கிறது.

திருத்திக்கொள்ள மாட்டார்கள், மாறாக அம்பலப்படுத்துபவர்களைத் தீர்த்துக் கட்டுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்’
என்று மிக அன்போடு அதிக அழுத்தம் கொடுத்து அக்கறையோடு பேசினார். தோழருக்கு நன்றி.

இவரைப் போலவே Khathiravan Mumbaiபோன்ற பலத் தோழர்கள் என் தொலைக்காட்சி விவாதங்களைப் பாரத்து பலமுறை அக்கறையாக பேசியிருக்கிறார்கள்.

இவர்களைப் போன்ற ஏராளமான தோழர்களும் நண்பர்களும் என்னைச் சுற்றி இருக்க.. நம்மை யார் என்ன செய்ய முடியும்?

அதை விடத் தலைவர் பெரியார், சமூக விரோதிகளிடம் ஏராளமான அடிகள் வாங்கி, என்னைப் போன்றவர்கள் அடி வாங்காமல் வேலை பார்ப்பதற்கு வழி வகுத்திருக்கிறார். துணையாக பெரியார் பாதை இருக்கும் வரை நமக்கென்ன பயம்..?
இன்னும் ஆட்டத்தை அடிச்சி ஆட வேண்டியதுதான்.

1 September at 16:42

தந்தி ‘பாண்டே.. ஆண்டே’ களுக்கு..

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

‘அங்க.. கூடுதலா சீட்டுத் தராங்கலாம்..’

சூறைத் தேங்காய் உடைத்தால், சடாரென்று.. ஓடிபோய்ப் பொறுக்குவதுபோல்…

தேர்தல் நேரத்தில் ‘அங்க.. கூடுதலா சீட்டுத் தராங்கலாம்..’ என்று எத்தனபேர் ஒருத்தருக்குத் தெரியாமல் ஒருத்தர் ஓட போறாங்க … பாக்கதானபோறோம்.. ஏற்கனவே நெறைய பாத்திருக்கோமே..

வீம்பு வீராச்சாமி.. சவடால் சாமிநாதன்..தேசபக்தி தெனாலிராமன்.. பஞ்ச் டயலாக் பஞ்சாட்சரம்.. பல மாவீரர்களைப் பச்சையா அம்பலப்படுத்துவது தேர்தல் தான்.

அதிகமில்லை ஜென்டில்மேன் வெறும் ‘ஆறே’ மாதம் தான்

1 September at 09:32

அதிகமில்லை ஜென்டில்மேன் வெறும் ‘ஆறே’ மாதம் தான்

தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா?

அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்

மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே!