போலீஸ் பாதுகாப்போடு சிறப்பாக நடந்தது..

IMG_20171004_194125_1

IMG_20171004_201044
காவல் துறையினர் மட்டும் 20 க்கும் மேற்பட்டவர் 2 ‘ஜீப் ல வந்து அரங்கத்திற்கு வெளியில் நின்று பாதுகாப்பு தந்தனர். நேற்று திப்பு சுல்தான் பற்றி ‘மனித நேய மக்கள் கட்சி’ நடத்தியக் கருத்தரங்கத்திற்குத் தான் இந்த பாதுகாப்பு.

நிகழ்ச்சியை நெறிபடுத்திய தோழர் Shameem Ahamed சொன்னார் ‘எங்களின் அரங்கக் கூட்டத்திற்கு போலிஸ் வருவது இது தான் முதல்முறை’ என்று. நானே கூட்டம் நடக்கிற இடத்தை போலீஸ் ஜிப் நிற்பதை வைத்துதான் அடையாளம் கண்டேன்.

போஸ்டர் ஒட்ல.. நோட்டிஸ் போடல.. என்னோட facebook தகவல் மட்டும்தான். என் பக்கத்தை காவல்துறை அதிகாரிகள் பார்த்தார்களோ.. இல்லை இந்து அமைப்புகள் தகவல் கொடுத்தார்களோ..? எப்படியோ காவல்துறைக்கு நன்றி சொல்லித்தான் துவங்கினேன்.

கூடுவாஞ்சேரி, கொளத்தூர், ஆவடி என்று பல பகுதிகளிலிருந்து பெரியார் – டாக்டர் அம்பேத்கர் இயக்கத் தோழர்களும் வந்திருந்தனர். அனைவருக்கும் நன்றி.

10 பேர் வந்தாலே.. ரொம்ப நேரம் பேசுவோம்… இவ்வளவு பேர் வந்தா… உட்ருவோமா.. 1 மணி 50 நிமிடங்கள் பேசினேன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

நான் பேசிக் கொண்டிருக்கும்போது, இரண்டாம் தொழுகைக்கு அழைப்பு விடுத்து மசூதியிலிருந்து பாங்கு ஒலித்தது,
‘தோழர் மதிமாறன் பேசி முடித்தப் பிறகு தொழுகையை வைத்துக் கொள்ளலாம்’ என்று அறிவித்து கூட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த தோழர்களுக்கு சிறப்பு நன்றி.