அவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை..

ஆதரவு, அனுசரணை, கருணை, அன்பு, காதல் என்ற உணர்வுகளை உண்மைக்குள் நிரம்பி, மனிதர்களை ஆழ்ந்து நேசிக்கச் சொல்கிறது இந்தப் பாடலின் மெட்டு.

உடன் ஒலிக்கிற பியானோ, சிதார், கிபோர்ட்; ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை இனிமைகளால் செய்யப்பட்டது என்பதை உறுதியாக அறிவிக்கிறது.

‘உன் நெஞ்சிலே பாரம்..’ – முடிவில் ஒலிக்கிற புல்லாங்குழல், ‘உனக்காகவே நானும்..’ – மீண்டும் ஒலிக்கிற புல்லாங்குழல்.. என்ன சொல்றது?
‘இந்தப் பாடலின் உன்னதத்தை இன்னும் கூடுதலாக உணர, நான் பெண்ணாக இல்லையே’ என்கிற ஏக்கத்தை, கேட்கும்போதெல்லாம் எனக்குள் ஏற்படுத்துகிற பாடல்.

ஆனால், படத்தில் ஒரு பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றுகிறவன் திட்டமிட்டுப் பாடுவதுபோல் இந்தப் பாடலை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ருத்ரையா.

ஒரு ஏமாற்றுக்காரனால் இவ்வளவு உன்னத இசையைத் தரமுடியுமா? அதெப்படி முடியும்..?
எனக்கு இந்தப் பாடல் தருகிற உணர்வை, பாடல் காட்சி தரவில்லை என்று சொல்வதை விட, தர‘வே’ இல்லை என்றே சொல்வேன்.
காட்சிக்கான சூழல் நினைவுக்கு வரும்போதெல்லாம் இயக்குநர் இந்தப் பாடலின் ‘உண்மையை’ அவமதித்துவிட்டதாகவே தோன்றுகிறது.

12 September at 12:50

இயக்குநர்களை, நடிகர்களை வீழ்த்திய இசையமைப்பாளர்

பிறந்தநாள் பரிசு எப்போதுமே அவர் தான் நமக்குத் தருவார்

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி