ஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்

2
ஜாதி ஒழிப்புப் பணியில் டாக்டர் அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு வழியை ஏற்று செயல்பட்டவர் தந்தை சிவராஜ். தமிழ் நாட்டில் டாக்டர் அம்பேத்கரை தலித் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர்.

மிக நெருக்கடியான காலங்களில் பல தலித் தலைவர்கள் காந்திக்கும் காங்கிரசுக்கும் தீவிர ஆதரவாளர்களாக மாறி டாக்டர் அம்பேத்கருக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்தபோது, அவர்களை அம்பலப்படுத்தி டாக்டர் அம்பேத்கருடன் நின்றவர்.

1940 ல் மகாராஷ்ட்டிரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரம்மாண்ட மாநாட்டை டாக்டர் அம்பேத்கர்; தந்தை சிவராஜ் தலைமையில் தான் நடத்தினார். அந்த அளவுக்கு சிறப்பு மிக்கவர்.

ஜாதி ஒழிப்பை இந்து மத எதிர்ப்பு வழியாகத்தான் செய்ய முடியும் என்று புரிந்து மனு தர்மத்தை கொளுத்தியவர். பெரியார் மீது பேரன்பு கொண்ட தலைவர்.

இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கரையும் தமிழகத்தில் பெரியாரையும் வழிகாட்டியாக ஏற்று செயல்பட்டவர். சிறப்புமிக்க தந்தை சிவராஜின் பிறந்த நாள் இன்று.(29-09-2015)

29 September