விஷால்-நாசர்; பெரியாரிஸ்ட் கமல்

நடிகர் என்ற பிரபலத்தையும் தாண்டி, மாட்டிறைச்சியை எதிர்த்து இந்துத்துவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட விஷால், மாட்டுக்கறி உண்ணும் நாசரை தலைவராக்கியிருக்கிறார். என்ன ஒரு பெருந்தன்மை?

ஆனாலும், நாசரால் நடிகர் என்ற பிரபலத்தையும் தாண்டி ‘மாட்டிறைச்சி உண்பது என் உரிமை அல்லது உண்பர்களின் உரிமை’ என்று சொன்னது கிடையாது. சொன்னால் நடிகர்களுக்குத் தலைவராக அல்ல, நடிகராகவே இருக்க முடியாது.

எப்போதுமே திரு. நாசர், இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்ட திரு. மணிரத்தினம், திரு. கமல்ஹாசன் போன்றவர்களின் ‘முஸ்லீம் கணக்கு’

திரையுலகின் குட்டி அப்துல்கலாம். வாழ்த்துகள் நாசர்.
21 October at 10:05

நாசர்-கமல்-மனுஷ்யப்புத்திரன்; யதார்த்தம்-நவீனம்-நவின இலக்கியம் குறித்து அதிகம் பேசுகிறார்கள். ஆனால், இவர்களின் தொலைக்காட்சிப் பேட்டியோ, செயற்கையான உச்சரிப்பும் பாவனையுமாக இருக்கிறது.
23 October at 18:36

‘மகளிர் மட்டும்’ படத்தில் தனித்தமிழ் பேசுகிற பாத்திரத்தை கேலியாகவும், ‘நம்மவர்’ படத்தில் தமிழ் பேராசிரியரை முட்டாளாக, கோமாளியாக, பிழைப்புவாதியாக காடடியதும்

‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கிரிமின்களுக்குத் தமிழ் பெயர்களும், கதாநாயகனுக்கு ‘ராகவன்’ என்கிற சுத்தமான அய்யங்கார் அல்லது வைணவ பெயரை வைத்ததும்;

அதற்கு முன் அதுவரை தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத, ஜாதி பெயரில் முதல் சினிமா (தேவர் மகன்) எடுத்த கமல்ஹாசன்; ‘தமிழ் உணர்வு கொண்ட பெரியாரிஸ்ட் நம்புங்க.’

23 October at 23:03