இதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை

12279121_1094048800607324_2725703425716751393_n
தோழர் கோவன், கலைஞரை சந்தித்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள், திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாகக் கொண்ட பலரும்.

கோவன் கைது செய்யப்பட்டபோது, அன்றே – முதலில் அதைக் கண்டித்துக் கைதை பிரச்சினையாக்கி மய்ய அரசியலுக்குத் தள்ளியவர் கலைஞர் தான். அவர் கண்டிக்காமல் இருந்திருந்தால், அது ஒரு துண்டு செய்தியாககூட ஊடகங்களில் வந்திருக்காது.

அதன் பிறகே பலரும் அதைக் கண்டித்தார்கள். அது இந்தியா வரை கவனத்திற்குப் போனதற்குத் திமுக வின் கண்டனமே காரணம்.
தேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தும்போது அதை ஊடங்கள் பத்து பைசாவிற்குக்கூட மதிப்பதில்லை.

அந்த அடிப்படையில் பார்த்தால் மக்கள் அதிகாரம் குழுவினரும் தோழர் கோவனும் கலைஞரை தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்திருக்க வேண்டும். அதனால் கலைஞரை கோவன் சந்தித்தது சரியான அரசியல் கண்ணோட்டம் தான்.

மதுஒழிப்பில் கூட ஜாதி பார்ப்பவர்கள், அதாகப்பட்டது தன் ஜாதித் தலைமை பேசுகிற மது ஒழிப்பை மட்டும் ஆதரிப்பவர்களும் கூடக் கோவன் – கலைஞர் சந்திப்பைக் கண்டிப்பது வேடிக்கை. இதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை.

இப்போதும் டாஸ்மாக் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து தீவிரமாகச் செய்கிறவர்கள் கோவன் பங்கெடுத்திருக்கிற மக்கள் அதிகாரம் அமைப்பினர் தான்.

கட்சி சாராமல், உதிரிகளாக டாஸ்மாக் ஒழிப்புப் பேசுகிறவர்கள், இயங்குகிறவர்கள் ஏன் இவர்களோடு சேர்ந்து இயங்குவதில்லை?

உண்மையில் டாஸ்மாக் ஒழிப்பு தான் நோக்கமா அல்லது அதைத் தன் ஜாதித் தலைமை அல்லது ‘அவரு’ ஜாதியை சேர்ந்தவர்கள் நன்கொடை தருகிறார்கள் அதனால் அவரை மட்டும் தான் ஆதரிப்போம் என்ற மனோபாவமா?

தலைவரும்.. ரமணனும்.. அபசகுனமும்

தலைவர் ஊர்ல இருந்தா.. இந்நேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ‘உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு’ எவ்வளவு உதவியா இருந்திருப்பார்.

வரட்டும்.. வந்த உடனேயே கண்டிப்பா செய்வார்; ஏற்கனவே உள்ள பழைய பாக்கியான தன் மகளின் திருமணத்திற்கான அரைப் பிளேட் பிரியாணியும்.. நதிநீர் இணைப்பு ஒரு கோடியும் பின்னே வெள்ள நிவாரணமும்.

எப்பவுமே ஏழைகள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவர் இப்பகூட மலேசியாவில்.. பணக்காரர்களுக்கு எதிராகவும் ஏழைக்களுக்கு ஆதரவாகவும் ‘பன்ஞ்’ டயலாக் பேசிக்கிட்டுதான் இருப்பார்.
21 November at 23:08

‘பெய்யன பெய்யும் மழை’ – பெண்பாலுக்குச் சொல்லியிருந்தாலும் வள்ளுவர் சொன்னது, நம்ம வானிலை அறிக்கை ரமணனுக்குத்தான் பொருந்துகிறது.
சூழலை புரிந்து.. முன்கூட்டி நடக்கப்போறத எச்சரிக்கையா நாம சொன்னா, ‘வாய வைச்சிக்கிட்டு சும்மா இரு..அபசகுனமா பேசாதே’ என்பர்களே..
ஒருவேளை ரமணன் ‘இன்னும் இரண்டு நாட்களுக்குக் கனமழை பொழியும்’ என்று முன்னாலேயே அபசகுனமா..சொல்றதினால் தான் மழை பெய்யுதோ..?
24 November at 18:39

pepsi; ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் = தமிழ் விரோதம்

pepsi ; மாணவர் போராட்டம் நடக்கிறது. மாணவர் தலைவர் மீடியாக்களிடம் ‘எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்க மாட்டோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. அருகிலிருக்கும் ஒரு மாணவன் பெப்சி குடிக்கிறான்.

இப்படி pepsi க்குச் சோரம் போகிறவர்களாக மாணவர்களைக் காட்டுகிறது pepsi. அதுவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்தி அர்ப்பணிப்போடு மாணவர்கள் போராடிய இந்தச் சூழலில்.
ஏகாதிபத்திய நிறுவனங்கள் எப்போதும் தன் பொருட்களை விற்பதற்கு, பெண்ணை முன்னிறுந்தி, மாமா வேலைதான் பார்க்கும். இம்முறை அது கருங்காலி வேலை பார்த்திருக்கிறது.

இதில் கூடுதல் குசும்பு… மாணவர்கள் எல்லோரும் கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு கருங்காலி் வேலை பார்க்கிறார்கள்.
இனவாதம் பேசுகிறவர்கள், கறுப்புச் சட்டையை தமிழ் உணர்வுக்கு எதிராக நிறுததினாலும் ஏகாதிபத்திய நிறுவனம் தமிழ்க் குறியீடாகத்தான் கறுப்பைக் காட்டுகிறது.

‘இது யாரோ ஒரு அம்பி கொடுத்த அய்டியாவா?’ – இன்று இந்தியா இருக்கிற சூழலை மறைமுகமாக வெளிபடுத்துகிறது அந்த விளம்பர பின்னணி.
ஏகாதிபத்தியம் + பார்ப்பனியக் கூட்டின் குறியீடாக.

22 November at 16:50

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

மழை அரசியல்

சென்னை மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச் சொல்கிறார்கள். போயஸ் தோட்டத்திற்குதான் போகனும்.
18 November

நடிகர் அஜித், விளம்பரமில்லாமல் பல பத்திரிகைளாயர்களுக்குப் பிரியாணி வழங்கியிருக்கிறார். அவரே பரிமாறியும் இருக்கிறார், என்று விளம்பரம் செய்தார்கள் பத்திரிகையாளர்கள்;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாகக் கடலூர் மாவட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?
அதுகூட வேண்டாம், இந்த மழையிலும் வேதாளத்திற்கு வசூலை அள்ளிக் குவித்திருக்கிற, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ரசிகர்களின் குடும்பங்களுக்குத் தக்காளி சோறாவது கொடுத்திருக்கிறாரா?
19 November

பாசமிகு தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்குத் தக்காளி சோறு பார்சல் கட்டுவதற்கு முன் பத்திரிகையாளர்களுக்குப் போன் போட்டு சொல்லிட்டு, கேமராவுடன் கௌம்பிடுவாங்க போல..

பஞ்சத்திற்கு சோறு கொடுப்பதைப் படம் எடுத்து பப்ளிசிட்டி தேடுகிறார்கள். மக்களின் துயரத்திலும் ஒரு விளம்பர இடைவேளை.
‘எளிய மக்கள் பட்டினியால் தவிப்பதால், இவர்களுக்கு எவ்வளவு புகழ் – அன்னதான பிரபுக்கள்’

உழைப்பும் உடைமைகளுமாக வாழ்ந்த உழைப்பாளிகளை, பிச்சைக்காரர்கள் போல் உணவுக்குக் கையேந்தும் அவலநிலையைப் படம் பிடித்து, விளம்பரம் தேடுகிற இவர்களுக்கு,
காரில் இருந்தபடியே கையசைக்கிற தமிழக முதல்வரே பரவாயில்லை.
20 November

தீபாவளி இல்லை

‘எங்க வீட்ல தீபாவளி இல்லை’ என்பது தெரிந்து அக்கம் பக்கம் எங்களுக்கு நிறையத் தீபாவளி பலகாரங்கள் கொடுப்பார்கள். கொடுத்தார்கள். தீபாவளியை வசைபாடிய பிறகும் நமக்குப் பலகாரம் கெடச்சது.

ரம்ஜான் – கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள், இதுவரை மீந்துபோன பிரியாணி கூடக் கொடுத்ததில்லை.

ஆனாலும், இதுல ஒண்ணும் குறைச்சலில்லை, ‘மதிமாறன் முஸ்லீம்களிடம் பணம் வாங்கிட்டான்’ என்பதில்.
13 November

கோபக்கார மழையும் உயிரனங்களின் உற்சாகமும்

ஏரிகளை குளங்களை வயல்களை ஆக்கிரமித்து நகரமயமாக்கியவர்களை, வீடுகள், கட்டடங்கள் கட்டியவர்களை அடித்து வெளுத்திருக்கிறது, கோபக்கார மழை.
*

எங்கள் வீட்டில் மா, பலா, வாழை, பாதம், அசோகா, கொய்யா இன்னும் பல பெரிய, சிறிய மரங்களும் கொத்தாகப் பூக்கிற பூ செடிகள் உட்படச் சின்னச் செடிகளுமாக ஏறக்குறை 100 கணக்கில் வளர்திருக்கிறோம்.

இந்த மழை பெரிய மரங்களின் கிளைகளையும் ஒடிக்கவில்லை, பூ செடிகளிடமும் விரோதம் காட்ட வில்லை. ஆனால், எங்களைத் தான் சுற்றி வளைத்து விட்டது.

எப்போதும் எங்கள் வீட்டை சுற்றி நிறைய அணில்களும், பச்சைக் கிளிகள் உட்பட ஏராளமான பல வண்ணங்களிலான நீண்ட அலகுடைய பறவைகள் வரும். ஓயாமல் மாறி, மாறி ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும்.

நான்கு நாட்களாக அணில்கள் மட்டுமல்ல, காக்கா உட்பட எந்தப் பறவைகளின் இனிமையான ஒலிகளுமற்று, இரவுகளில் தவளைகளின் இரைச்சல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.
இன்று தான் இயல்பு நிலை மெல்லத் திரும்பியிருக்கிறது.

பறவைகள், அணில்கள் எல்லாம் காலையில் வந்த சிறிய வெயில் வெளிச்சத்திற்குப் பிறகு வந்திருக்கிறார்கள். உரையாடல்களை, செல்லச் சண்டைகளைத் துவங்கி விட்டார்கள்.

தங்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்திருந்தாலும், கூட்டை களைத்துப் போட்டிருந்தாலும், மழை மீது அவற்றிற்குக் கோபம் இல்லை. அவற்றின் உரையாடல்களில் வழக்கத்தை விட உற்சாகமிருக்கிறது, கொண்டாட்டத் தொனி கேட்கிறது.

மழை ஏற்படுத்திய பாதிப்புகளுக்கும் பிறகும்; மழை தருகிற, தரப்போகிற மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டாடுகிற மனநிலையை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்தில் இந்திய பிரதமர், இந்தியாவிற்கு யார் பிரதமர்?

இந்திய மக்களுக்கும் இந்திய பிரதமருக்கும் நல்லுறவு அல்ல; உறவே இல்லை. ஆனால், அவருதான் இந்தியா – இங்கிலாந்திற்குமான நல்லுறவுக்கு..

டாக்டர் அம்பேத்கர் – பெரியார் விருது

12185452_1692337617719447_1390905690079111981_o
டாக்டர் அம்பேத்கர் – பெரியார் சொன்னபடி இந்த ஆண்டு, தீபாவளி எதிர்ப்பை ஒரு இயக்கமாக மக்கள் மத்தியில் செய்து காட்டினார்கள் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்.

தீபாவளி பித்துப் பல முற்போக்களார்களையே பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் சூழலில்,

அவர்களுக்கும் பாடம் கற்பிப்பதுபோல் தீபாவளியை புறக்கணிக்க மட்டும் செய்யாமல், ‘கறி விருந்து’ என்றும் இயங்காமல், பெரியார் சொன்ன ‘தீபாவளியை துக்க நாளாக’ அனுஷ்டித்தும் எதிர்த்தும் இயங்கிய ஆதிதமிழர் பேரவை தோழர்களுக்கும் அதன் தலைவர் அதியமான் அவர்களுக்கும் நன்றி.

டாக்டர் அம்பேத்கர் – பெரியார் பெயரில் இணைந்து இதுவரை யாருக்கும் விருது தரப்பட்டதில்லை.
அந்த விருதை பெறுவதற்கு முழத் தகுதியும் கொண்டவர்கள் ஆதிதமிழர் பேரவை தோழர்கள்.

தீபாவளிக்கு எதிரான மனம் கொண்ட அனைத்து பெரியார் – டாக்டர் அம்பேத்கர் தொண்டர்கள் சார்பில் உரிமையோடு டாக்டர் அம்பேத்கர் – பெரியார் பெயரிலான மாபெரும் விருதை மானசீகமாக மிகப் பெருமையுடன் ஆதித் தமிழர் பேரவை தோழர்களுக்கு வழங்குகிறேன்.

புறக்கணிப்பும் கவனிப்பும்; ஊடகங்களின் உள்நோக்கம் ..?