‘விழிப்புணர்வு’ காமராஜ்

dscf46985.
2006 ஆம் ஆண்டு அறிமுகம் ‘பூ உலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன் நினைவுக் கூட்டத்தில் என்னை முதல் முறையாகச் சந்தித்தான்.

பிறகு கேள்வி – பதில் பகுதி என்னைத் தன் இதழில் எழுத வைத்து, வே. மதிமாறன் பதில்கள் என்று அது புத்தகமாக வந்தபோது அதன் விமர்சனக் கூட்டத்தைத் தோழர் டார்வின் தாசனோடு இணைந்து சிறப்பாக நடத்தியவன்.

அதன் பிறகு 3 ஆண்டுகள் 2009 வரை என்னோடு தான் எப்போதும் இருப்பான். சென்னையிலும் நான் வெளியூருக்குச் செல்லும்போது என்னுடனே வருவான். என் குடும்பத்தாருக்கும் நல்ல பழக்கமானவன்.

சில பிரச்சினைகளில் நான் உரிமையோடு பல நேரங்களில் கோபமாக, கடுமையாகப் பேசினாலும், பதிலுக்குக் கோபமாக ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டான். ‘அட விடுங்கங்க..’ என்று சாதாரணமாகக் கடந்துபோவான்.

நண்பன், தோழன் என்ற நிலையிலிருந்து சகோதரனாக மாறியவன். 2009 ஆண்டில் காமராஜ்க்குத் தமிழ் தேசிய நிலையில் ஈடுபாடு அல்லது என் அரசியல் நிலையில் மாறுபாடு ஏற்பட்டது.

என்னைச் சந்திப்பதை தவிர்த்தான். அரிதான சந்திப்பாக மாறியது. கடைசியாக 8 மாதங்களுக்கு முன்பு பார்த்தது. அதன் பிறகு தொலைபேசியில் கூடப் பேசவில்லை.

இத்தனை நாள் என்னிடம் தொடர்பற்று இருந்தவன், இன்றோ முற்றிலுமாகத் தொடர்பை துண்டித்து விட்டான்.
அவன் மரணச் செய்தி கேட்டபோதும், மருத்துவமனை மார்ச்சுவரிக்கு சென்றபோதும் கூட எனக்குக் கண்ணீர் வரவில்லை. காமராஜ் பற்றிய நினைவுகளே வேதனை தருகிகிறது.

அவனைப் பற்றிய நினைவுகள் அலைஅலையாக மனதில் மோதுகிறது. அது பெரும் மனவேதனைக்குள் என்னைத் தள்ளி துன்புறத்தாமல் இருக்க வேண்டும். முடிந்த வரை அவன் நினைவுகளைத் தவிர்க்க விரும்புகிறேன். பார்ப்போம்.
25 December at 16:54

2 thoughts on “‘விழிப்புணர்வு’ காமராஜ்

  1. மரணச்செய்தியை கேட்கும் போது:
    “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என முஸ்லிம்கள் சொல்ல வேண்டும்.
    ————————–

    பொருள்: இன்னா லில்லாஹி; நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
    வ இன்னா இலைஹி ராஜிவூன்; மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திருப்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.

  2. பாரத்மாதாவை ஆப்படிக்க காலிஸ்தான் வருகிறது:

    http://static2.demotix.com/sites/default/files/imagecache/a_scale_large/1900-0/photos/1366066996-thousands-of-sikhs-march-fight-for-justice-and-freedom-london_1961000.jpg

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அய்.நா. தலைமையகத்துக்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சீக்கியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    அய்.நா.தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு உச்சி மாநாட்டில், நீடித்த வளர்ச்சி என்ற தலைப்பில் நரேந்திர மோடி உரை யாற்றிக் கொண்டிருந்த நிலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    சீக்கியர்களுக்கு நீதி வேண்டும் (எஸ்எப்ஜே) என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட் டத்தில் சீக்கியர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாபில் மனித உரிமைகள் மீறப் படுவதாகக் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், இந்தியா, மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேடேல் இனத்தவர்கள் லும் காலிஸ்தான் பகுதியை தனி மாநிலமாக பிரிப்பது தொடர்பாக 2020இ-ல் பொது வாக் கெடுப்பு நடத்த அய்.நா. நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். எஸ்எப்ஜே அமைப்பின் முக்கிய தலைவர் பக் ஷிஷ் சிங் சாந்து கூறும்போது, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர் களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றார்.

Leave a Reply

%d bloggers like this: