நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?

நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க.
இந்த ஆண்டு எனக்குத் தருவதாக இருந்த, அமைதிக்கான நோபல் பரிசை நான் மறுத்து விட்டேன்.
பரிசுக்கான பெயர் பட்டியல் வரும்போது, அதுல என் பெயர் நிச்சயம் இருக்காது. அப்ப தெரியும் என் நேர்மையும் உண்மையும்.
*

‘நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?’ இதோ ஆதாரம்
தங்கம் 2012 சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்:
கலைமாமணி விருது, தேசிய விருது, ஆஸ்கார் விருது, நோபல் பரிசு, ஞானப்பீட விருது இவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -கு. சிவகுமார், பொள்ளாச்சி.

எப்போதாவது, சரியான நபர்களுக்கு இந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த விருதுகளின் நோக்கம் வேறு ஒரு அரசியல் பின்னணியை நிறுவுவதுதான்.

சர்வதேச அளவில் நோபல் பரிசு போன்ற விருதுகள், ஒரு உண்மையான கம்யுனிஸ்டுகளுக்குக் கொடுத்ததே இல்லை.
‘மனித குலம் தோன்றியதிலிருந்து இப்படி ஒரு மகத்தான மனிதனை பார்த்ததில்லை’ என்று வியக்கிற அளவிற்கு அறிவாளியான காரல் மார்க்சுக்கு எந்தச் சர்வதேச விருதுகளும் தந்ததில்லை.

ஏனென்றால், அந்தச் சர்வதேச விருதுகள் எல்லாம் மார்க்சியத்திற்கு எதிராக. கம்யுனிஸ்டுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டவைதான்.

மற்றபடி, பெருபான்மையான விருதுகள், நடனமே தெரியாத, சரோஜாதேவியைப் பார்த்து, ‘ஆடப் பிறந்தவளே ஆடிவா..’ என்று எம்.ஜி.ஆர், பாடினாரே அதுபோல்தான் தரப்பட்டிருக்கிறது.

இப்பவாவது நம்புறீங்களா?
*
நான் நோபல் பரிசை வேணான்னு சொன்னத, நீங்க நம்பவே இல்லங்றது எனக்குத் தெரியும். ஏன்னா அத நானே நம்பள.

நீங்களும் நானும் நம்புற மாதிரி வேற ஒரு விருது சொல்றேன்;
அடுத்த வருசம் எனக்குக் கொடுக்கப் போறதா இருந்த, ‘பத்ம ஸ்ரீ’ விருதை வேணான்னு சொல்லிட்டேன். இப்போ நம்புறீங்க இல்ல. நானும் நம்புறேன்.

அப்படியானால் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்

கம்மவர் நாயுடு சங்கம் சார்பில் நேற்று (23-01-2016) தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கட் அவுட் வைத்திருந்தனர். காரணம், ‘திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படும்’ என்று முதல்வர் அறிவித்திருந்ததால்.

அப்படியானால், நாயுடுகளைத் ‘தெலுங்கர்கள்’ என்று தமிழனவாதிகள் சொன்னால், ஏன் கோபித்துக் கொள்கிறார்கள்?

‘நாயுடு, நாயக்கர்’ என்று அடையாளப் படுத்துவதை விட ‘தெலுங்கர்கள்’ என்று அழைப்பது இழிவானதல்ல.
தெலுங்கு பேசுவது தவறில்லை. அது மொழி சிறுபான்மையினர் உரிமை. ஆனால், ஜாதி உணர்வோடு இருப்பதும் அதைப் பகிரங்கமாக அறிவிப்பதும் தான் தவறு. அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் ஜாதிய உணர்வு ஒரு குற்றம்.

ஜாதி படிநிலையில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் ஆதிக்க ஜாதியாக இருக்கிற நாயுடு, நாயக்கர் ஜாதிகளுக்கு எந்தப் பெருமையும் இல்லை. பெரியார் வார்த்தையில் சொல்வதானால், அது சூத்திர பட்டம்.

பார்ப்பன அடிமைத்தனமும் தலித் விரோதத்தையும் தவிர இடைநிலை ஜாதிகளுக்கு எந்தச் சிறப்பும் நிச்சயம் இல்லை.
‘நாயுடு, நாயக்கர்’ என்பதற்காகவே ஒரு நபரை குறித்து நீங்கள் பெருமை கொள்வதாக இருந்தால்,

19 குழந்தைகள் உட்பட 44 தலித் மக்களை எரித்துக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

‘மாமன்னன் ’

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

பரவாயில்லையே.. மாற்றி விட்டாரே – ‘பிச்சைக்காரன்’

12540978_1056453917729808_1591205592434046354_n
அதுவும் முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஜய் ஆண்டனி, ஆமாங்க, அவர் தான் சொல்லியிருக்கார். ‘கவிஞர் லோகனும் பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சாதனை படைத்தவர்கள்தான்’ என்கிறார், அப்படின்னா இவுரு முற்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதானே?

ஏதோ சாதனை படைத்தவர் என்கிறார் பாடலசிரியரை. அது என்ன சாதனைன்னு சொல்லலையே?
ஒரு வேளை முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இயக்குரை குஷி படுத்த ‘கோட்டா’ என்ற வார்த்தையைப் போட்டதைச் சொல்கிறாரோ? எப்படியோ..

19 ம் தேதி அந்த வார்த்தையை கண்டித்து நான் எழுதியிருந்தேன்:
//‘கோட்டா’ விற்குப் பதில் ‘தனியார்’ என்று ஒரே ஒரு வார்த்தையை மாற்றி,
“தனியாரிடம் சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – இடஒதுக்கிடுக்கு எதிரான பாடல் ஒரே வார்த்தையில் ஆதரவான பாடலாக மாறிடும். படத்தை ரிலீஸ் பண்ண அனுமதிக்கலாம்// என்று.

ஆனால், ‘கோட்டா’ விற்குப் பதில் ‘காசு கொடுத்து’ என்று மாற்றியிருக்கிறார். மகிழ்ச்சி.
நான் சொல்லி மாற்றினாரோ நாம சொல்லி மாற்றினாரோ? ஆனால், கண்டிப்பாக அவராக மாற்றவில்லை.

Face book ல் இந்த வரியை முதலில் அம்பலப்படுத்தி, கண்டித்து எழுதியவரையே இந்த வெற்றி சேரும். நான் பார்த்தது நமது அன்பிற்கினிய தோழர் Sibichander Dhanaraj பக்கத்தில் தான். மகிழ்ச்சி.
நமது உணர்வை புரிந்து கொண்டு, இந்த மாற்றத்தை செய்த திரு. விஜய் ஆண்டனிக்கு நன்றி.

இளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

இளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க

ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த தமிழ் உணர்வு கொண்டவர்கள் ஆங்கிலத்தில் பேசும்போது, ‘திரு, திருமதி’ என்ற தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.

Mr, Mrs என்றே ஆங்கிலத்திற்கு மரியாதைக் கொடுத்துப் பேசுவார்கள்.
ஆனால் தமிழ் – ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த ஆச்சாரமான பார்ப்பன அறிவாளிகளோ தமிழில் பேசும்போது, எழுதும்போது ‘திரு. திருமதி’ என்று குறிப்பிட மாட்டார்கள்.

ஆங்கிலத்தில் பேசும்போதும் Mr, Mrs என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள், பதிலாக ஸ்ரீ, ஸ்ரீமதி – ‘Shri, Shrimati’ என்று சமஸ்கிருதத்திலேயே குறிப்பிடுவார்கள்.

ஆனால் அவர்கள்தான் சொல்கிறார்கள் தமிழ் உணர்வாளர்களைப் பார்த்து, ‘மொழி வெறிக் கூடாது’ என்று.
13 January

மாயாண்டி பாரதி தன் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாக இருந்தார். அதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதற்கு எங்களுக்கு வாடகைக்குக் கொடுங்கள் என்று இளையராஜா சகோதரர்கள் கேட்டதற்கு,

அதைக் கட்சியிடம்தான் கேட்க வேண்டும் என்று மாயாண்டி பாரதி சொன்னது எப்படிச் சரி? அவருக்கு தேவை வாடகைதானே. யார் கொடுத்தால் என்ன?

சரி. அவர் சொன்னதுபோல் கட்சியிடம் கேட்டாரா? கட்சி என்ன சொல்லிற்று? என்பதாக விளக்கங்கள் சொல்வது தான் இளையராஜாவிற்குக் கட்சியினர் சொல்கிற பொறுப்பான பதிலாக இருக்கும்.

அதை விடுத்து, இளையராஜாவின் கடந்தகால ஏழ்மையைச் சுட்டிக் காட்டி கேலி பேசுவதும், ‘பாவலர் சகோதரர்களுக்கு உதவி செய்த, வள்ளல், தர்மபிரபு மாயாண்டி பாரதி’ என்ற பாணியில் பதில் சொல்வதும் கம்யுனிஸ்டுகளுக்கு அழகல்ல.

இதுபோன்ற மோடி மஸ்தான் பதில்கள் நகரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற ஜாதி இந்துவின் உணர்வாகவே புரிந்து கொள்ளப்படும்.
18 January

அவ்வளவுதான். சிம்பிள். போதும்.OK ரிலீஸ் பண்ணிக்க.

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – பிச்சைக்காரன்.
இந்தப் படம் ரிலீஸ் ஆகுணும்ன்னா;

‘கோட்டா’ விற்குப் பதில் ‘தனியார்’ என்று ஒரே ஒரு வார்த்தையை மாற்றி,

“தனியாரிடம் சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – இடஒதுக்கிடுக்கு எதிரான பாடல் ஒரே வார்த்தையில் ஆதரவான பாடலாக மாறிடும். படத்தை ரிலீஸ் பண்ண அனுமதிக்கலாம்.

‘இது தாண்டா நம்ம சென்சார்’
19 January

ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்

‘அம்பேத்கர் இந்து. அவர் இந்து மதத் தலைவர்’ என்ற போது நமக்குக் கோபம் வர வில்லை. ஆனால், அவனே தான் டாக்டர் அம்பேத்கர் பெயரில் அமைப்பு வைத்தால் அடித்து ஆளையே கொலை செய்கிறான்.

இந்து அமைப்புகளுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கும் தலித் இளைஞனை கொலை செய்வதும்,
டாக்டர் அம்பேத்கரை இந்து என்று சொல்வதும் வேறு வேறு அல்ல.

இந்து, பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்ற டாக்டர் அம்பேத்கரின் போர்குணத்தோடு இயங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது. அதனாலேயே அவர்கள் மீது வன்முறை நடக்கிறது. (ஹைதராபாத் பல்கலை கழகத்திலும் Rohith Vemula உட்பட அய்ந்தே மாணவர்கள் தான் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு பெயரில் இயங்கியதால் தண்டிக்கப் பட்டவர்கள்.)
இந்து அமைப்புகள் மட்டும் டாக்டர் அம்பேத்கரின், இந்து – பார்ப்பனிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்யவில்லை. இந்து அமைப்புகளின் எதிர்ப்பாளர்களாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற பலரும் திட்டமிட்டு அதையேதான் செய்கிறார்கள். அவர்களும் இந்து அமைப்புகளைப் போலவே தன்னை அம்பேத்கரின் ஆதரவாளர்களாகதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்திய சமூகம் 24 மணி நேரமும் தலித் விரோதத்தோடுதான் இயங்குகிறது. ஆனால், அதை அலட்சியம் செய்கிற அரசியல் எல்லோரிடமும் இருக்கிறது. அதைப் பேச வேண்டுமென்றால், இங்குப் பலருக்கும் ஒரு சாவு வேண்டும். அதுவும் ஊடங்களால் பிரபலப்படுத்தப்பட்ட மரணமாக இருக்க வேண்டும்
பிறகு ஒப்பாரிகளே வழிமுறைகளாக ஒலிக்கிறது. அதுவும் ஒரு கடிதம் கிடைத்துவிட்டால் அதை வைத்துக் கொண்டு, செண்டிமென்ட் புலம்பல்களே அரசியல் கண்ணோட்டமாக மாற்றப்படுகிறது.

புலம்பல்கள் போராட்டங்கள் அல்ல, மரண ஊர்வலங்களே வழி முறைகளுமல்ல. பிணத்தை அடக்கம் செய்யும் வரை ஒப்பாரி வைப்பதே லட்சியம் அல்ல.

இந்து, பார்ப்பனிய, ஆதிக்க ஜாதிகளின் தலித் விரோத வன்முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, கண்ணோட்டங்களுக்கு எதிராகவே உரத்த குரல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்குப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் போர் குணத்தை ஆழ கற்று, துணிச்சலோடு உயர்த்திப் பிடிக்க வேண்டும். அது ஒன்று தான் தற்கொலை என்ற பெயரிலும் நடக்கும், இது போன்ற தலித் கொலைகளைத் தடுக்கும்.

Rohith Vemula

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

Rohith Vemula

Rohith Vemula வின் மரணம், தற்கொலை என்பதை நிரூபிக்க மறுக்கிறது. பெரும்பாலும் தலித் மக்களிடம் இறந்த உடலை எரிக்கும் பழக்கம் இல்லை;

அல்லது எரிப்பது ஆதிக்க ஜாதி இந்துக்களின் பழக்கம் அதைத் தலித் மக்கள் செய்வதற்கு அனுமதி இல்லை.

ஆனால், ரோஹித் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. புதைக்கபட்ட உடலைதான், தோண்டி மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்ய முடியம்.

யுவராஜின் டேப்பும் கோகுல் ராஜ் கொலையும் விஷ்ணுப்பிரிய மரணமும்

ஜாதிவெறி; எவ்வளவு எச்சரிக்கையான வார்த்தை?

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

பாலா vs கங்கைஅமரன்

மிகக் கொடூரமாக அமைந்துவிட்டது இசைஞானி யின்ஆயிரமாவது படம். அவருக்கு மட்டுமா? நேற்று இரவு எனக்கும் தான். பொங்கல் எனக்கு இப்படியா விடிய வேண்டும்?
*
இசைஞானியாலும் நமக்குக் கெடுதல், அவரால் இந்த மாதிரி படங்களையும் நாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு வகையில் என் நிலைமையாவது பரவாயில்லை. இசைஞானி இளையராஜா வின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. பாவம். ரீ ரெக்கார்டிங்காகத் தாரை தப்பட்டை யின் கொடூரக் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாரோ?
அவுரும் வழக்கம்போலச் சிறப்பா வாசிக்கிறாரு.. பாடலும், பின்னணி இசையும் ஒட்டல. துறுத்திகிட்டு நிக்குது. குறிப்பா கர்நாடக சங்கீத பாணியிலான பாடல்கள்.
எனக்கென்னமோ அவுருக்கு இனிமேலும் இதெல்லாம் வேண்டாத வேலையாதான் படுது.
பேசாமல்.. சர்வதேச இசை ஆல்பம் தயாரிப்பில் ஈடுபடலாம். இன்னும் எதுக்கு.. இவுங்களோடேயே மல்லுக்கட்டிக்கிட்டு.
*

கரகாட்ட பெண் கலைஞர்கள் ஆட்டத்தின் போது, குட்டையாக உடை உடுத்துகிறார்கள் என்பதற்காக, பாடல் காட்சிகளில் கீழே சப்பனம் போட்டு உட்கார்ந்து கொண்டு அவர்களின் கால்களுக்கு இடையே சிக்கி சிக்கித் தவிப்பதும்,
கிட்டே போய்த் தொடைகளுக்கு நடுவே எட்டிப் பார்ப்பதுமாகத் தன் ஆண் பார்வையாளர்களுக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறது கேமரா?
ஒப்பிட்டால், கங்கை அமரன் மகா கலைஞன் தான். ‘தாரை தப்பட்டை’யில் வந்துபோல், ஒரே ஒரு ஷாட் கரகாட்டக்காரனில் பார்த்திருக்கவே முடியாது.
*

போஸ்ட்மார்ட்டம் செய்கிற பணியில் இருக்கிற தோழர்கள் மிகப் பரிதாபத்திற்குரியவர்கள். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் பிணத்தைக் கூறு போட்டு அறுக்கிற வேலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படுகிற கொடூரம்.
ஆனால் தாரை தப்பட்டையோ, பார்வையாளர்களிடம் அவர்களையே கொடூரமானவர்களாகச் சித்தரிக்கிறது.
*
‘நாயகி சூறாவளி யை திட்டமிட்டுத் திருமணம் செய்து கொள்கிறான் வில்லன். எதுக்காக அதைச் செய்கிறான் என்று சொல்ல வந்த இயக்குர்.. பிறகு அதை மறந்துட்டாரோ.. கடைசி வரை அதைச் சொல்லவே இல்லையே?’ – கேட்டான் உடன் படம் பார்த்த சு.ம. கவின். (Kavin Smk)
எனக்குத் தெரியல. இயக்குநர் பாலாவிற்குத் தெரியுமா?
*
தன் குழுவிலிருந்து ஒருவர் தன் தங்கையுடன் தனியாகச் சென்று சினிமா பாடலுடன் ஆபாசமான வார்த்தைகளும், அசைவுகளுமாக ஆடி பிழைப்பதைப் பார்த்த நாயகன்;
‘இதெல்லாம் ஒரு பொழப்பா’ என்று கடுமையாகத் திட்டுகிறார்.

ஒரு ஊரின் நடுவில் அதுபோல் ஆடி பிழைக்கிற அவரையே கடுமையாகத் திட்டுகிறாரே நாயகன்,
அவர் தன் தங்கையுடன் ஆடுகிற அந்த ஆபாச ஆட்டத்தை அப்படியே தனது படத்தில் வைத்து, உலகம் முழுவதும் கொண்டு போயிருக்கிற தனது இயக்குநர் பாலா வை திட்டினால் எப்படித் திட்டுவார்? (நாயகனுக்குக் கோபம் வந்தால் பெண்களையே ‘அரிப்பெடுத்தாடி..அலையிற..’ என்பார்)
*
கொலைக்காரனை கருணாமூர்த்தி ன்னு கூப்பிடறமாதிரி.. எவன்டா வைச்சான் இந்தப் படத்துக்குப் பேரு ‘தாரை தப்படை’ என்று.
படத்துக்குப் பொருத்தமில்லாமல் பெயர் வைக்கிறதுல ஆஸ்கர் அவார்டு கொடுக்கிறதா இருந்தா.. தமிழ் சினமாகாரர்கள் மொத்த ஆஸ்கர் அவார்டையும் போட்டியே இல்லாமல் தட்டிக்கிட்டு வந்துடுவாங்க.

நேற்று facebook ல் எழுதியது.

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

‘மதிமாறன் பேச்சை நிறுத்தச் சொல்லுங்கள்’

நேற்று வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திற்குள் 40 நிமிடங்களைத் தாண்டி நான் பேசி கொண்டு இருந்துபோது, இன்ஸ்பெக்டர் மேடையை நோக்கி, என்னை பார்த்தாவறே 10 போலிஸ்காரர்களோடு வேகமாக வந்தார். வந்தவர், மேடையில் அமர்ந்திருந்த, கூட்டத்தை நடத்திய தோழர் நாகராஜனை அழைத்து எதையோ சொன்னார். நான் பேசிக் கொண்டே இருந்தேன்.

இன்ஸ்பெக்டர், “மதிமாறனை இந்து மதத்தை, ஜாதியை திட்டி பேசவேணான்னு சொல்லுங்க. இந்து அமைப்பைச் சேர்ந்த 200 பேர் அவர் பேச்சை நிறுத்தச் சொல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்“ என்றிருக்கிறார்.

செய்தி என் காதுக்கு வந்தவுடனேயே அய்யப்பன் கதையை ஆரம்பிச்சிட்டேன். அதுக்கு முன்னால் நான் பேச ஆரம்பித்த 30 நிமிடங்களுக்குள் ஒரு கும்பல்,
‘பெருமாள் நாமம்’ கொண்டு போவதாகச் சொல்லி மேடைக்கு அருகில் வந்து சரமாரியாக பட்டாசு வெடித்து தொல்லை செய்தது. நான் பேச்சை நிறுத்தி தண்ணீர் குடித்து விட்டு, ‘எனக்கு தண்ணீர் குடிப்பதற்கு அவகாசம் கொடுத்தவர்களுக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்தேன்.
அந்தக் கும்பல்தான், நேராக காவல் நிலையத்தை முற்றுகையிட்டிருக்கிறது.

‘புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் பவுத்த மதம் மாறினார்?’ என்ற தலைப்பில் இந்து மதத்தை அம்பலப்படுத்தாமல் ஆதரித்தா பேச முடியும்? தொல்லைகளைத் தாண்டி தொடர்ந்து பேசினோம்.

காவல்துறை அதிகாரி ‘அப்படி பேச வேண்டாம்’ என்று தோழர்களிடம் சொன்னாலும், அதன் பிறகும் இந்து மதத்தை அம்பலப்படுத்தி பேசியதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், பாதுகாப்பாக இருந்தார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு நான் காவல்துறை அதிகாரியிடமும் காவலர்களிடமும், ‘என்னால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்’ என்றேன்.
பதட்டத்தோடு ‘அய்யயோ அதெல்லாம் ஒன்னுல்லிங்க சார்’ என்று மறுத்தார்கள்.

இன்று தோழர். நாகராசன் போனில் பேசினார்: ’நம்மக் கூட்டம் மாபெரும் வெற்றி. வாலாஜா பஸ் ஸ்டாண்டு, நகரத்தில் கடை வைத்திருப்பவர்கள் எல்லோரும் பாராட்டிப் பேசினார்கள். இது மாதிரி கூட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள்’ என்றார்.

நேற்றைய கூட்டத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு, விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தோழர்கள் கூட்டத்திற்கு அரணாக இருந்து எதிரிகளை அண்டவிடாமல், சவால் விட்டு கூட்டத்தை நடத்திக் காட்டினர். கட்சி வேறுபாடின்றி டாக்டர் அம்பேத்கருக்காக தோழர்கள் திரண்டது, கூட்டத்தின் மாபெரும் வெற்றி.
இதத் தானே நாம எதிர்பார்க்கிறோம். இதுக்காகதானே பேசுறோம். அதற்கு வழி வகுத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு நன்றி.

‘மாமன்னன் ’

‘திருமலை நாயக்கர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’ முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழ் சமூகத்தின் மீது பார்ப்பனியத்தை, ஜாதியை, தமிழர் விரோத தீபாவளி போன்ற இந்து பண்டிகையைத் தீவிரமாகத் திணித்த,
பழனி கோயிலை தமிழ் பண்டாரங்களிடமிருந்து பிடுங்கி, பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தந்த மாமன்னன் திருமலை நாயக்கன்.
திருமலை நாயக்கரை கொண்டாடுவது பார்ப்பனியத்தை கொண்டாடுவதே.
9 January

*

‘கரிகாலன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள்’ தமிழ் மண்ணில் ஆண்ட மிகச் சிறந்த மன்னர்கள். மற்றவர் பார்ப்பன அடிமைகள்.
கட்டபொம்மனும், மருதுவும் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்தததில் மட்டுமல்ல, பார்ப்பன ‘பண்பாட்டு’க்குப் பலியாகாமல் ‘சமூக நிதி’ அரசியலிலும் மன்னர்கள்.

அதனால்தான் சுதந்திரப் போராட்டம் குறித்துச் சிலாகிக்கிற பாரதி போன்ற பார்ப்பன அறிவாளிகள்; கட்டபொம்பன், மருது சகோதரர்களைக் கொண்டாட மறுக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; பெயர்களைக் குறிப்பிட கூட மறுக்கிறார்கள்.
10 January

‘புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் புத்த மதம் மாறினார்?’

DSC_0011

DSC_0013

தொடர்புக்கு 87546 30363

*
“பிரியாணி மொகலாயர் உணவு. இந்துக்கள் சாப்பிடாதீங்க ன்னு சொன்னால், இந்து மதமே வேணான்னு மதம் மாறிவிடுவார்கள்”
உணவு, திருமணம், மதம், பெண்ணியம், மொழி, உணவு, விளையாட்டு என்று பல தளங்களில் பேசியிருக்கிறோம்.

‘தமிழர் பண்பாடு’ நேற்று பரவலாகப் பலராலும் வரவேற்கப்பட்டது. இன்று மறுஒளிபரப்பு, மாலை 3 மணிக்கு. news7 tamil சேனலில். -வே. மதிமாறன்.