திமுக விற்கு இழப்பு; குமரி முத்து மரணம்

NTLRG_150616152956000000
சிறந்த நடிகர், திராவிட இயக்க வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பேசக் கூடிய சிறந்த பேச்சாளர் குமரிமுத்து மரணம். அவருடைய மரணம் அவர் குடும்பத்தாரைவிடவும் கலைஞரின் குடும்பத்தாருக்குத்தான் பெரிய இழப்பு.

தேர்தல் நேரத்தில் அவருடைய இழப்பு, அவர்களால் ஈடு செய்து கொள்ள முடியாது.

கிராமங்கள், நகரங்களின் இடுக்குகளில் எல்லாம் சென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், திமுகவிற்காகத் தீவிர பிரச்சாரம் செய்தவர். அதனால் அவர் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பல திரைப்பட வாய்ப்புகளை இழந்திருக்கிறார்.
*
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!’ என்ற தலைப்பில் திரவிட இயக்க அறிஞர் குமரிமுத்து அவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன் இப்படி:

திமுக விற்காக அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை நடிகர் குமரிமுத்து, சந்திரசேகர் போன்றவர்கள் எதிர்பார்ப்பில்லாமல் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதனாலேயே அவர்கள் பல பட வாய்ப்புகளை இழந்தும் இருக்கிறார்கள். கலைஞர் மீதும் கட்சி மீதும் ஆழ்ந்த பற்று இருப்பதால் அந்த நஷ்டத்தை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.

இவர்களுக்குப் பின் திமுக விற்கு வந்த சரத்குமார், நெப்போலியன் போன்றவர்கள் பெரிய அளவில் கட்சியால் கொண்டாடப்பட்டார்கள். இப்போது குஷ்பு.
சரத்குமார், நெப்போலியன், குஷ்பு இவர்களுக்குத் திராவிட இயக்க அரசியல் வரலாறோ, மொழி உணர்வோ அவ்வளவு ஏன் கலைஞரின் எழுத்துக்கள் பற்றிக் கூடத் தெரியாது.

ஆனால் குமரிமுத்துவிற்கும் சந்திரசேகருக்கும் திராவிட இயக்க வரலாறும் தெரியும். மொழி உணர்வும் உண்டு. தனித் தமிழில் சிறப்பாகப் பேசக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். கலைஞரின் வசனங்கள் எழுத்துக்கள் இவர்களுக்கு மனப்பாடம்.

ஆனால் இவர்கள் இருவரும் அப்போதும் இப்போதும் தாங்கள் புறக்கணிப்படுவதாக உணர்ததில்லை. முன்பை விடத் தீவிரமாகக் கட்சி பணி செய்தார்கள். செய்கிறார்கள். கட்சியைப் பயன்படுத்தித் தன்னை முன்னேற்றிக் கொள்ளும் திட்டம் இல்லாதவர்கள். அதனால் தொடர்ந்து திமுக வில் பயணிக்கிறார்கள்.

இப்போது நடிகர்கள் சந்திரசேகர், குமரிமுத்து இவர்களைவிட அதிகப் பிரபலமாக இருக்கிற நடிகர்கள் உதயநிதி ஸ்டாலினும் அருள்நிதியும். திமுகவிற்கான தேர்தல் பிரச்சாரத்தில் இவர்கள் இருவரும் ஏன் கலந்து கொள்ளவில்லை?
(4.04.2014 அன்று facebook ல் எழுதியது)

வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!

இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்
ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

இளையராஜா ஆயிரம்; ரசிகர்களுக்கு அபராதமும் தண்டனையும்

raja1_music

25 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம், 3 ஆயிரம், ஆயிரம், 5 நூறு ரூபாய்களில் டிக்கெட். யாருக்கோ நிதி உதவிக்காக இவ்வளவு கட்டணம் போல. அந்த ‘யாருக்கோ’தான் யாருன்னு தெரியல.

பாவம் ரசிகர்கள். தீவிர ரசிகர்களாக இருந்தால் இப்படிதான் அபராதம் கட்டவேண்டும் போலும். கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தார்கள் திடல் முழுக்க.
இவ்வளவு விலை வைத்த பிறகும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் அது இசைஞானி இளையராஜா ஒருவருக்காக மட்டும்தான் நடக்கும்.

குவாட்டரும், கோழிபிரியாணியும் வாங்கிக் கொடுத்து ஜாதிப் பாசத்தோடு மாநாட்டிற்கு ‘அழைத்து’ வருகிற அரசியல் கட்சிகள் உள்ள தமிழகத்தில்; இளையராஜாவிற்குகாகத் தன் பணத்தைச் செலவு செய்து வருகிற ரசிகர்கள் கூட்டம்,
பணத்திற்கு விலைபோகாத மற்றும் ஜாதி உணர்வுகளுக்கு எதிராக மக்கள் எப்போதும் அணித்திரள காத்திருக்கிறார்கள் என்பதற்கான குறியீடு.

தேர்தல் நேரத்தில், ராஜாவிற்குகாகக் கூடுகிற இந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு, ‘நீங்கதான் முதலமைச்சர்’ என்று அவரைக் கூப்பிடாமல் இருக்கணும்.
விரும்பமில்லை என்பதால் எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போனதில்லை. ஆனால், நேற்று போனேன்.

‘உன்னை எவன்டா வரச் சொன்னது?’ என்பதுபோலவே நடந்தது நிகழ்ச்சி. மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு இவ்வளவு ஈடுபாட்டோடு வருகிறார்களே என்ற எந்தப் பொறுப்பும், திட்டமும் இல்லாத நிகழ்ச்சி.

நான் போனதற்குக் காரணம் கோவையிலிருந்து வந்திருந்த நண்பன் வெங்கட். (Venkat Raman) இவன் இளையராஜாவின் ரசிகர்களில் தீவிரவாதி பிரிவைச் சேர்ந்தவன், ராஜாவிடம் இல்லாத அவருடைய பாடல்கள் கூட இ்வனிடம் இருக்கும். சர்வதேச இசை குறித்த ரசனை உள்ளவன்.

உலகம் முழுக்கப் பயணம் செய்திருக்கிறான். லுட்விக் வான் பீத்தோவன், மொசார்ட் போன்ற இசை மேதைகள் பிறந்த ஊர்களுக்கெல்லாம்கூடப் போய் வந்திருக்கிறான். ஆனாலும் ராஜா என்றால் அவனுக்கு அவ்வளவு அன்பு, காதல், நேசம், பாசம் இன்னும் இன்னும்..

எனக்கும் டிக்கெட் போட்டிருப்பதே நேற்றுதான் தெரியும். வெங்கட்டும், நண்பர் பாலசந்தரும் (Bala Chander) செய்த வேலை இது. ஆனால், என்னைக் கோத்துவிட்ட பாலச்சந்தர் வரல.
வெங்கட் கோவையிலிருந்து இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கிறானே, என்று அவனைப் பார்க்க போய்தான் சிக்கிக் கொண்டேன். இரவு 8 மணிக்கு தான் போனேன். இன்னும் கூட லேட்டா போயிருக்கலாம்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுக்க வரும்போதெல்லாம் எனக்கு ரொம்ப முடியாம போச்சு. அப்படி ஒரு தொகுப்பு.
விஜய் டி.வியில் பிரமுகர்களுடனான பேட்டியிலேயே நடனத்திற்குரிய அபிநயங்களும், நடிகைக்குரிய பாவனைகளோடும் பேட்டி எடுக்கிற அவர் தான் தொகுப்பு. என்ன பண்றது.. நட்புக்காக நண்பனுக்காக அதையும் தாங்கிக்கிட்டுதான் இருந்தேன்.

ஆனாலும் முடியில. இடையில் எஸ்.பி.பி ஆறுதலாக இருந்தாலும், 12 மணியைத் தாண்டியும் தொடர்ந்து கொண்டிருந்ததால், நான் அங்கிருந்து தாண்டிவிட்டேன். பாவம் இதையெல்லாம் எப்படிதான் பொறுத்துக்கொள்கிறாரோ ராஜா?

நடிகர்களின் அல்லது சினிமா பாடகர்களின், பிரபல இசையமைப்பாளர்களின் ரசிகர்களைப் போன்றவர்கள் அல்ல, இளையராஜாவின் ரசிகர்கள். அவர்கள் தமிழர்களின் ரசனை சர்வதேசத்தரத்திற்கு நிகரானது என்பதின் அடையாளம்.

அவர்களுக்குரிய தரத்தோடும், சிறப்போடும் நடத்த வேண்டும் நிகழ்ச்சியை. அதுதான் இளையராஜவிற்குச் செய்கிற உண்மையான கவுரவம். சிறப்பு. மரியாதை.

இல்லையென்றால் அவர் பெயரை பயன்படுத்தி, திரைபிரபலங்களை வைத்துக் கும்மியடித்து, ராஜாவின் ரசிகர்களைச் சூறையாடுகிற திட்டமாகத்தான் அது அம்பலமாகும். இதுபோன்ற கமர்சியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளை இசைஞானியும் புறக்கணிக்க வேண்டும்.

அது அவருக்கும் அவரை வெறிகொண்டு நேசிக்கிற ரசிகர்களுக்கும் நன்மை.

பாலா vs கங்கைஅமரன்

அவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை..

பிறந்தநாள் பரிசு எப்போதுமே அவர் தான் நமக்குத் தருவார்

நீயா – நானா? ‘நான்’

பெரியாரின் பெண்ணியம்

PERIYARIN PENNIYAM WITHOUT MASK
‘பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசாம்..’ – -பட்டினத்தார்.
அவரே தாயை பற்றி ‘ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று..’

‘அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள..’ – தனுஷ்.
அவரே அம்மாவைப் பற்றி ‘அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா’ – .
நூற்றாண்டுகள் ஆனாலும் பெண்களைப் பற்றிய ஆண்களின் இரட்டை வேடம் மட்டும் மாறுவதே இல்லை..

வடிவமைப்பு தோழர் Chelliah Muthusamy – தொடர்புக்கு: 90923 90017 / 97508 71000 / 91594 30004 – ; 1 மணி 40 நிமிடங்கள் பேச்சு. ஒளி-ஒலி வடிவம் (DVD)

ஆமோகமான ஆப்பு; யாருக்கும் வெட்கம் இல்லை

‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ – பிரேமலதா விஜயகாந்த்
‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’ எனறு தமிழக முதல்வரை பார்த்து, பிரேமலதா பேசிய வன்முறையான பேச்சு,

‘மலடி’ என்று மருமகளைத் துன்புறுத்துகிற மாமியாரின் பேச்சை விட இழிவானது. அதுகூட அறியாமையிலும் தன் மகன் மற்றும் குடும்ப வாரிசு ஏக்கத்திலும் வருகிற சொல்.

ஆனால் பிரேமலதாவின் பேச்சு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களை வாழத் தகுதியற்றவர்களாகச் சித்திரிக்கிறது.

ஒரு முதல்வரையே இப்படிப் பார்க்கிறார் என்றால் சாமான்ய பெண்களை எவ்வளவு இழிவாக மோசமாகப் பார்ப்பார்.
இந்த லட்சணம் கொண்ட இவர், எதிர்க்கட்சியின் தலைவர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், குழுந்தைப் பெற்றுக் கொள்ள முடியாவர்களை எல்லாம் கொலை செய்துவிடுவார்கள் போலும்.

பாவம், இவருக்கு மருமகளாக வரப்போகிற பெண்களை நினைத்தால் மனம் பதறுகிறது.

ஒரு நொடிக்கு முன் பேசிய வார்த்தையைகூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் அடுத்த வார்த்தையைத் தொடர்பற்றுப் பயன்படுத்திக் கேட்பவனைக் கேலி செய்கிற, எவனுக்கும் புரியாத விஜயகாந்தின் பேச்சு; பிரேமலதா பேச்சை விடப் பல மடங்கு முற்போக்கானது.
ஏன் பிரேமலதா மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து சிறையில் வைக்கக்கூடாது? அதை ஏன் நாம் வலியுறுத்துக் கூடாது?
21 February at 13:54

10352264_10205756539374804_6625702127910378502_n

’உனக்குக் குடும்பம் இல்லை அதனால் ஆண்களை மதிப்பதில்லை’ – ‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’
குடும்பமும் குழந்தையும் இருந்தால்தான் ஒரு பெண் முழுமையானவள் அன்பானவள் என்று பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

இதோ, இந்தப் பெண்ணுக்கு இணையாகக் குழந்தை பெற்ற ஒரு குடும்ப் பெண்ணை உங்களால் காட்ட முடியுமா?

இவரைப் பற்றிகூடத் தெரியாமல் பேசிய நீங்கள் தலைவராக அல்ல.. பெண்ணாகப் பேசுவதற்குக்கூட உரிமையில்லை.
22 February

யாருக்கும் வெட்கம் இல்லை

தேர்தல் அரசியல் எவ்வளவு இழிவான முறை என்பதை, ஒவ்வொரு தேர்தலின்போதும் அது தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொள்கிறது. நிரூபிக்கிறது.

தமிழகத்தில் கடந்த தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அதைக் கூடுதலாக அம்பலப்படுத்துகிறது விஜயகாந்த் குடும்பத்தாரால் நடத்தப்படுகிற கட்சி.

‘வாரிசு அரசியல்’ நேரு குடும்பம் இந்த நாட்டுக்கு கற்றுக் கொடுத்த ‘தியாக’ மெத்தட். அதையே தூக்கி சாப்பிட்டு விட்டார் விஜயகாந்த். அரசியலுக்கு வரும்போதே பொண்டாட்டி, மச்சினன், கொழுந்தியா, மாமியார், சகலபாடி என்ற புதுபாணியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் நாட்டின் கடந்த 50 ஆண்டுகால அரசியலின் அடிப்படை. 1. இடஒதுக்கீடு, சிறுபான்மை மக்களின் உரிமையை உள்ளடக்கிய சமூகநீதி அரசியல். 2. மொழி உணர்வு.

இந்த இரண்டு பற்றியும் எந்தக் கருத்தும், பெயரளவிலான புரிதலும் கூட அந்தக் கட்சிக்கு இல்லை.
1 மணி நேர வித்தியாசத்தில் கூட்டணி பற்றி எந்தக் கட்சியோடும் பேச்சு நடத்துகிறார்.
கூட்டணி வைப்பதற்கு அரசியல் ரீதியாகப் பொதுப் பிரச்சினையில் என்ன நிபந்தனை என்பதைப் பெயரளவில் கூட எப்போதும் அறிவிக்க மறுக்கிறார். மிக வெளிப்படையாகத் தனக்கான முக்கியத்துவம் மட்டுமே அவரிடம் இருக்கிறது.

இந்தத் தேர்தல் அரசியலை முழு நிர்வாணமாக்கி அதை முச்சந்தியில் நிறுத்துகிறார்.
ஆனால், கூச்சமே இல்லாமல், அவரிடம் தான் கூட்டணி வைப்பதற்குக் காத்துக்கிடக்கிறது சமூகநீதியும், மொழி உணர்வும் நிரம்பிய கட்சியாகத் தன்னை அறிவித்துக் கொள்கிற திமுக.
விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு ஜெயலலிதாவுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளலாம் கலைஞர். ஒட்டுமொத்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துடும்.

திமுகவும் சரியில்ல, அதிமுகவும் சரியில்ல மாற்று என்று முழுங்குகிறவர்கள் ‘உங்களை முதல்வராக்குகிறோம்’ என்று எந்தக் குற்ற உணர்வும், கூச்சமும் இல்லாமல் தைரியமாகக் கெஞ்சுகிறார்கள் தேமுதிக தலைமையிடம்.

விஜயகாந்தை முதல்வராக்குவோம் என்று அறிவித்த பிறகு இவர்களுக்கு பி.ஜே.பி யை எதிர்ப்பதற்குக் கூட குறைந்தபட்ச நேர்மை இல்லை.

கோமாளி என்கிறார்கள், விஜயகாந்தின் பேச்சைக் கேட்பவர்கள். அவரல்ல கோமாளி. இந்தத் தேர்தல் முறை எவ்வளவு கோமாளித்தனமாக இருக்கிறது என்று அம்பலப்படுத்தியிருக்கிறார் அந்தக் காரியக் கோமாளி. அந்த வகையில் அவரைப் பாராட்டிதான் ஆகவேண்டும்.
23 February at 21:27 ·

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், திமுக வை விட விஜயகாந்துக்கும் அவர் கட்சிக்கு தான் பிரச்சினை. ஆப்பு அமோகமா இருக்கும்.

அதனால், திமுக இப்படி அவரிடம் தொங்குவதை விட்டு விட்டால், அவராகவே திமுகக் கூட்டணிக்கு வருவார்

கூடுதல் சீட், துணை முதல்வர் பதவி இதெல்லாம் கொடுத்துதான் அவர கூட்டணிக்குச் சேர்ப்பதாக இருந்தால்,
இப்போதைய அதிமுக ஆட்சி நீங்கள் அமைக்கப்போகும் துணை முதல்வர் விஜயகாந்த் ஆட்சியை விடப் பல மடங்கு சிறப்பானது.

திமுக இன்று இருக்கும் நிலையோ அதை விடச் சுயமரியாதை உள்ளது. ஆப்பை தேடி போய்த் திமுக அடித்துக் கொள்வதற்குப் பதில், அம்மாவிடம் தோற்பதே அதுக்குப் பாதுகாப்பானது.

பெயரளவில் கூடச் சமூகப் பொறுப்பு இல்லாத தேமுதிகவிற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்தும்,
அதிமுக மற்றும் அம்மா மேல் தான் மரியாதையை ஏற்படுத்துகிறது.
25 February

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

விசாரணை

நேற்று இரவு காட்சி பார்த்தேன்.(12 February) விசாரணை.

தீவிரமாக விமர்சிக்கப்பட வேண்டிய அளவிற்கு ஒன்றுமில்லை. தூக்கி வைத்துக் கொண்டாடுமளவிற்கும் இல்லை.

ஆனால், அவரின் இரண்டு படங்களில் இருந்த யதார்த்தம், செய்நேர்த்தி இதில் இல்லை. பாத்திரப் படைப்பில், நடிப்பில் செயற்கைத் தனம் இருக்கிறது. குறிப்பாக நான்கு இளைஞர்கள் நடிப்பும் பாத்திரப்படைப்பும்.

கோர்ட் வாசலில் வைத்து பிரமுகரை கடத்துவது போன்ற காட்சிகளும் செயற்கைத் தனத்தைக் கூட்டுகிறது.
சென்னை போலீஸ் ஸ்டேசனில் காலையிலிருந்து மூவரும் பக்கெட்டை வைத்துக் கொண்டு சுத்தப் படுத்துகிறேன் என்று சுற்றி சுற்றி வருவதும் அப்படிதான். அவர்கள் போலீஸ் அதிகாரிகள் பேசுகிற சதியை ஒட்டுக் கேட்க வேண்டும் என்பதற்காக அதை அவ்வளவு நேரம் இழுந்திருக்கிறார்.

குண்டூரில் பிறகு சென்னை என்று இரண்டு காவல் நிலையங்கள் வேறு வேறு சம்பவங்கள் என்று இருந்ததற்குப் பதில், ஒரே சம்பவமாக இன்னும் வலுவான பிரச்சினையோடு இருந்திருந்தால் போலீசின் கொடூரத்தை கூடுதலாக உணர்த்தியிருக்கலாம்.

காவல் துறையின் மனித உரிமை மீறல்களைக் காட்டுகிற இயக்குநர், தீர்வாகக் கோர்ட்டை பரிந்துரைக்கிறார். சில அற்ப வழக்குளில் ஒன்று இரண்டு மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் நேர்மையாக நடத்திருக்கலாம்.

ஆனால், இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுக்கச் சிறையிலிருக்கிற எந்தத் தவறு செய்யாத பலர் போலீஸ் மற்றும் நீதித்துறையின் கூட்டோடுதான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் எவ்வளவோ மன்றாடியும், கதறியும், முறையிட்டும் முடியவில்லை.

இப்போதுகூடத் தேசிய கொடியை எரித்த வழக்கில், மிகக் கடுமையாகப் போலீசால் தாக்கப்பட்டிருக்கிறார் திலீபன். ஊடகங்களில் வந்திருக்கிறது. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கிறது. உலகத்திற்கே தெரிந்திருக்கிறது. ஆனால் நீதிமன்றத்திற்குத் தெரியவில்லை.

நீதிமன்றத்தில் காவல்துறையின் பொய்யை, வன்முறையை அம்பலப்படுத்திய ஒருவரை நீதிமன்றம் உடனே விடுதலை செய்துவிடுவதில்லை. போலீசை வெறும் வார்த்தைகளால் எச்சரித்துக் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் காவல்துறைக் கட்டுப்பாட்டிற்கே ஒப்படைத்து விடுகிறது. அதன் பிறகு அவரின் துயரம் சொல்லிமாளாது.

எந்தத் தவறும் செய்யாதவர்கள் காவல்துறையால் தண்டிக்கப்படுகிறார்கள் என்று படம் சொல்கிறது. ஆமாம். அப்படித்தான்.
ஆனால், நீதிமன்றத்தாலோ குற்றவாளிகள் விடுதலை அடைந்திருக்கிறார்கள். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிரிமனல்களாகச் சித்திரிக்கப்பட்டுத் தண்டனை அனுபவித்திருகிறார்கள்.

குறிப்பாகத் தலித் மக்கள் ஜாதிவெறியர்களின் தாக்குதல்களிலும் சிதைந்து, போலீஸ் மற்றும் நீதித் துறையாலும் சிதைக்ப்பட்டுச் சிறைகளில் வாழ்கிறார்கள். அவர்களைப் போலவே இஸ்லாமியர்களும்.

இருந்தாலும், இந்தக் காரணங்களுக்காகப் படத்தை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அதையெல்லாம் தாண்டி இயக்குநரிடம் எளிய மக்களைக் குறித்துக் கருணையும், அக்கறையும் இருக்கத்தான் செய்கிறது.
அது சரியான அரசியல் வடிவம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

13 February at 23:13

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

பார்த்திட வேண்டியதுதான்..

‘விசாரணை படம் பார்த்தீர்களா?’ என்று நிறையத் தோழர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பார்த்த எல்லோருமே பாராட்டுகிறார்கள். பார்த்துப் படம் புடிச்சிருந்தா சந்தோசம். பிடிக்காமல் போனாதான் சிக்கல்.

பிறகு அதுகுறித்து எழுதினால் ‘இவுனுக்கு இதான் வேலை..’ என்பார்கள் எப்போதும் என்னை எதிர்ப்பவர்கள். நெருக்கமான தோழர்களும் கூட வருத்தப்படுவார்கள்.

அப்படிதான் ‘காக்க முட்டை’ யை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று பார்த்தேன். எனக்கு அந்தப் படம் சுத்தமா பிடிக்கல. சென்னை வாழ் தலித் மக்களை மோசமான குறியீடாகவே படம் முழுக்கக் காட்டப்பட்டிருந்தது.

அதை உடனே எழுதினால் பாராட்டி எழுதிய பல தோழர்களையும் விமர்சிப்பதுபோல் ஆகிவிடும் என்பதால் பிறகு எழுதலாம் என்றிருந்தேன்… அப்படியே போயிடிச்சி..

‘விசாரணை’ படம் பார்ப்பது குறித்தும் அந்தத் தயக்கம் இருக்கிறது.. பார்த்தப் பிறகு படத்தை நம்ம விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிவருமோ..

இன்றைய சூழலில் தேர்தல் கூட்டணி உட்பட கும்பலாகப் பலர் சொல்கிற கருத்து தவறாக இருந்து அதற்கு மாற்றோ விமர்சனமோ சொன்னால், சொல்வர் மீது எவ்வளவு கேவலமான அவதூறு சொல்வதற்கும், தயராக இருக்கிறார்கள்.

இதில் தன் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு வைத்து விட்டு, மற்றபடி மற்றவரை வெளுக்கிறார்கள்.
அதையெல்லாம் பார்த்த வேலை நடக்குமா? விசாரணை பார்த்திட வேண்டியதுதான்.
10 February at 20:39

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்களில் யதார்த்தமாகக் கதாபாத்திரங்களை உருவாக்கியதில் வெற்றிமாறன் முதன்மையானவர். இன்னும் நெருக்கிச் சொன்னால் பாலுமகேந்திராவை விடச் சிறப்பாகச் செய்தவர்.

இரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன். இரண்டு படங்களிலும் எனக்கு விமர்சனம் இருந்தாலும் பாத்திரப் படைப்பு குறிப்பிடத் தக்கதாக இருந்தது.

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால்.. அவர் குறித்து எனக்குத் தீவிரமான எதிர்மறையான கருத்துக்கள் இல்லை. அதனால் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் தான் ‘விசாரணை’ பார்க்கப் போகிறேன்.
12 February at 21:20

‘தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும்’ ; எதுக்கு பாலசந்தர் பாணி?

‘முழுமையாக முடிக்கப்பட்ட script பிறகு படமாக எடுக்கப்படுகிறது என்ற முறையான சினிமா பாணி, பெண் குத்துச்சண்டையை முதன்மைப்படுத்துகிறது, அதை விட மிக முக்கியம் இயக்குநர் பெண்.’ இந்தக் காரணங்களால் ‘இறுதிச்சுற்று’படம் பார்க்கலாம் என்றிருந்தேன்.

இன்று காலை தற்செயலாகத் தொலைக்காட்சியில் அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி, சூழல் மீனவ கிராமம். வீடு. நாயகியின் தந்தை சாமிக்கண்ணு, குடித்துவிட்டு வந்து ‘நான் இனி சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்’ என்கிறார்.

மனைவி, மகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘அடப்பாவி காசுக்கு மதம் மாறிட்டியா?’ என்று சாமிக்கண்ணு என்கிற சாமுவேலை தொடப்பைக் கட்டையாலேயே அடிக்கிறார்கள்.
கர்ப்பிணியைக் கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். மதவெறியன் சினிமா எடுத்தால் கூட இவ்வளவு இந்து மதவெறியுடன் இழிவான காட்சியை வைத்திருப்பானா?

கிறிஸ்துவத்திற்கு மதமாறிய மீனவர்கள் எல்லோரும் சாராயத்திற்கும், பணத்திற்கும் தான் மாறினார்களா?
சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகை, திருந்செந்தூர், ராமேஸ்வரம் வரை மீனவர்கள் இந்துக்கள் தான். ஆனால், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் மீனவர்கள் 100 சதவீதம் கிறஸ்துவர்கள். கத்தோலிக்கக் கிறஸ்துவர்கள்.

இந்து மீனவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும், கிறித்துவ மீனவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. குறிப்பாகக் கல்வியில், பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதுபோன்று.

கிறிஸ்துவ மீனவர்கள் ஏறக்குறைய எல்லோரும் படித்திருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் இந்து மீனவ பெண்களை விட அதிகம் படித்தவர்கள். அதுமட்டுமல்ல சென்னை, கடலூர் போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற இத்துப்போன குடிசைகளிலும், சுகாதரமற்ற சூழலிலும் தான் இந்து மீனவர்கள் வாழ்கிறார்கள்.

தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கிறித்துவ மீனவர்கள் குடியிருப்புகளில் குடிசைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த மீனவர்களின் கல்விக்கு 300 – 400 ஆண்டுகளுக்கு முன் வந்த கிறிஸ்துவ மிஷ்னரிகள் தான் காரணம். மீனவர்களின் மதமாற்றம் அந்தச் சுயமரியாதையை ஒட்டிதான் நடந்தது.

சரி. நூற்றாண்டு சங்கதிகளை விடுங்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று, சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்து மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினார்கள். எத்தனை சுனாமி வந்தாலும் தாங்குக்கூடிய பிரம்மாண்ட சுவர்களைக் கொண்ட பார்த்தசாரதி, கபாலீஸ்வரர் கோயில்களின் மிகப் பெரிய கதவுகள், உயிர்காக்க ஓடி வந்த இந்து மீனவர்களைப் பார்த்ததும் மூடிக் கொண்டது.

திருஞானசம்பதனும், திருநாவுக்கரசும் திரும்ப வந்து, சன் மியுசிக் போல் ஓயாமல் பாடியிருந்தாலும் ஒருபோதும் திறந்திருக்காது.
மயிலையிலிருந்த ராமகிருஷ்ண மடமோ கண்ணை மூடிக் கொண்டு, ‘ஹரே ராம.. ஹரே கிருஷ்ண..’ என்று பஜனை பாடிக் கொண்டிருந்தது.

ஏனென்றால், இந்து மீனவர்களை இந்து கோயில் உள்ளே தங்க வைப்பது ஆகம விதிகளின் கீழ் வராது. காரணம்,
இந்து மதத்திற்கு மனிதர்களின் உயிரை விடவும் ‘புனிதம் – ஆச்சாரம்’ என்ற புனைப்பெயரில் இருக்கிற ‘ தீண்டாமை’ தான் முக்கியம்.

ஆனால், 100 சதவீதம் இந்து மீனவர்களை அதே கடற்கரையிலிருந்த சாந்தோம் தேவாலயம் தான் அடைக்கலம் தந்து பாதுகாத்தது. சுயமரியாதையோடு இந்து மீனவர்கள் அப்போதே கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருக்க வேண்டும்.

ஆக, ஒருவர் இந்து மதம் மாறியதற்கே, தொடப்பைக் கட்டையாலேயே அடிப்பது போல் காட்டினால், இந்துக்களின் உயிரை பாதுகாக்காமல் விரட்டியடித்த இந்து ஆகமங்களையும், நிறுவனங்களையும் எதைக் கொண்டு அடிப்பது?

இயக்குநர் சுதா கோங்கரா; மணிரத்தினித்தின் உதவியாளராக இருந்தவராம். இன்னும் என்னென்ன கத்து வைச்சிருக்காரோ?
பாரதியார்;
‘ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக ‘பெண் கல்வி வேண்டும்‘ ‘பெண் கல்வி வேண்டும்‘ என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் பைபிள் வாசித்துக் கொண்டுவரும் பொருட்டாகத்தானா? ’ என்று கோபத்துடன் வருத்தப்பட்டார்.

பாரதியின் வரிகளையே கொஞ்சம் மாற்றி இப்படிச் சொல்கிறேன்: , ‘ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக ‘பெண் இயக்குநர் வேண்டும்‘ ‘பெண் இயக்குர் வேண்டும்‘ என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் மணிரத்தினம் மாதிரி சினிமா எடுக்கவரும் பொருட்டாகத்தானா? ’
31 January at 22:50

எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணி?

Mary Kom உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியா பெண். உலகளவில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் 4 ஆவது இடத்தில் இருப்பவர்.

மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்.(ST) கிறிஸ்துவர். இவர் வாழ்கிற மணிப்பூர் மாநிலமே கிறிஸ்துவர்களால் நிரம்பியதுதான்.
இப்படியிருக்க, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் தன் படத்தில் குத்துச்சண்டை வீரராக உருவாகும் பெண், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தன் தந்தையைத் தொடப்பக் கட்டையாலேயே, அடிப்பதாகக் காட்டியது, கிறிஸ்துவர்கள் மீது சுதா கோங்கரா செய்த வன்முறை.

நேர்மையாகப் படம் எடுப்பதாக இருந்தால் தன் நாயகியை கிறிஸ்துவராகதான் காட்டியிருக்க வேண்டும். Mary Kom வாழ்க்கை வரலாறு இந்தியில் 2014 ஆம் ஆண்டுத் திரைப்படமாக வந்தது.
பிரியங்கா சோப்ரா தான் Mary Kom ஆக நடித்திருந்தார். அந்தப் படத்தைச் சுதா கோங்கரா கண்டிப்பாகப் பார்த்திருப்பார். இருந்தும், என்ன பயன்?

இந்தியா முழுவதும் குத்துச்சண்டை வீராங்கணைகளை ஒருங்கிணைத்துப் படம் எடுத்ததாகச் சொல்கிறார் சுதா. கண்டிப்பாக அவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் முஸ்லிம்களாகவும் தான் இருந்திருப்பார்கள். அப்படியிருந்தும் ஏன் இப்படி?
ஒருவேளை அந்தக் கடுப்புலதான் இப்படிக் காட்சி வைத்திருப்பாரோ?

எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணி. அவர் பாணி சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே எதிரானது.
3 February

‘அது போன மாசம்’

‘Caste System in Tamil Nadu‘
தன் கட்சியில் உள்ள சக்கிலியர், பள்ளர், பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பொதுதொகுதியில், திராவிட இயக்கங்கள் ஒருபோதும் வேட்பாளராக நிறுத்தாது.
பள்ளர் – பறையர் பெரும்பான்மையாக இருக்கிற தொகுதிகளில் தன் கட்சியில் இருக்கிற சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவரை தலித் இயக்கங்களும் ஒரு போதும் வேட்பாளராக அறிவிக்காது.
8 February at 13:11

‘அது போன மாசம்’
வடிவேலுவையே வீழ்த்தி விட்டார்கள் நம்ம ஊர் தேர்தல் அரசியல்வாதிகள். வடிவேலுக்கும் நம்ம அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம், மூணு வாரம்.
இனி தேர்தலில் கொள்கை முழக்கம் ; ‘அது போன வாரம்’
8 February at 18:28

இப்படியும் ஒரு திமுகக் காரர் – ஆனால் ம ந கூ விற்கு பொருத்தமானவர்

//அ.தி.மு.கவா தி.மு.கவா என்றால் இன்று நான் தி.மு.கவுக்கே என் ஓட்டை அளிப்பேன். தி.மு.கவா மக்கள் நலக்கூட்டணியா என்றால் இன்று நான் மக்கள் நலக் கூட்டணிக்கே என் ஓட்டை அளிப்பேன்.. – ஞாநி//

ம ந கூ உருவாவதற்கு முன் ஞாநி, திமுக விற்கு ஆதரவாகப் பேசவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக வுடன் இருக்கும்போதும் அவர் திமுக விற்குதான் ஓட்டுபோடுவேன் என்றதுமில்லை. ம ந கூ வையே அவர் திமுக விற்கு எதிராகதான் பயன்படுத்துகிறார்.

சோ வின் திமுக எதிர்ப்பிற்கும் ஞாநியின் திமுக எதிர்ப்பிற்கும் 6 வித்தியசாத்திற்கும் குறைவாகதான் இருக்கும். ஆனால், அடிப்படையில் வித்தியாசம் இருக்காது.

//மாற்று வேண்டும் என்று மெய்யாகவே கருதுகிற, அனைவரும் அவரவர் தொகுதியில், வேட்பாளராக இருக்க தகுதியானவர் என்று தாங்கள் கருதுவோர் பெயர்களை, மக்கள் நலக்கூட்டணிக்குப் பரிந்துரைத்து அனுப்பவேண்டும் என்று விரும்புகிறேன். – ஞாநி//

என்னுடைய பரிந்துரையாக ம ந கூ வின் ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளராக ஞாநி அவர்களை பரிந்துரைக்கிறேன். (இதில் அவருக்கு உடன்பாடு உண்டா என்பது தெரியாது. ஒருவேளை வேறு தொகுதியை விருப்புவாரோ?)

9 February at 12:51

கண்டனமும் வாழ்த்தும் ஆதரவும்

1618677_755441964550282_1446892407834512736_n
6 ஆம் தேதி மாலை மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இரவு அறையில் தோழர் கொளத்தூர் மணி தோழர் விடுதலை ராஜேந்திரன் உட்படப் பல தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தான், இரவு 12 மணியளவில்

கவிதா முரளிதரனை (Kavitha Muralidharan) இந்து அமைப்பைச் சேர்ந்த நபர் இழிவாக எழுதிய செய்தியை facebook ல் படித்தேன். உடனே தோழர் கொளத்தூர் மணி தோழர் விடுதலை ராஜேந்திரன்
இருவரிடமும் அந்தச் செய்தியை சொன்னேன்.

இந்து அமைப்பைச் சேர்ந்தவன் இழிவாக எழுதியற்கு காரணமான அந்தச் சபரிமலை பற்றிய விவாதத்தை இப்போதுதான் பார்த்தேன். மிகத் தன்மையாக, அமைதியாகத் தன் கருத்தை கவிதா பகிர்ந்திருக்கிறார். இயல்பாகவே கடுமையாகவோ, கோபமாகவோ பேசுகிற பழக்கமில்லாதவர் கவிதா.

இவ்வளவு தன்மையாகப் பேசியவரையே ஒருவன் பொறுக்கித்தனமாக எழுதுகிறான் என்றால், அதுதான் இந்து அமைப்புகளின் இயல்பான மனோபாவமாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகளை எவ்வளவு விமர்சனம் செய்தாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். இந்து மதத்தை கடவுள்களின் யோக்கியதையை சொன்னால் தான் அவர்களுக்கு நாண்டுகிட்டு சாகலாம்போல் போல் வரும். அந்த இயலாமையைதான் கோபமாக மாற்றி பொறுக்கித் தனமாக பொங்குகிறார்கள்.

தலித் விரோதமும் பார்ப்பனிய மனோபாவமும் ஆணாதிக்கத் திமிரும் தான் இந்து அமைப்புகளின் அடிப்படை அரசியலாக இருக்கிறது.

ரவுடித் தனத்திற்கு அஞ்சாமல், பொறுக்கித் தனத்தை அம்பலப்படுத்தி அந்த நபரை மன்னிப்பும் கேட்க வைத்து, இன்னும் வேகமாக இந்து அமைப்புகளுக்கு எதிராக எழுதிய தோழர் கவிதா விற்கு என் வாழ்த்துகளையும் உறுதியான ஆதரவையும் தெரிவிக்கிறேன். வாழத்துகள்.
8 February at 23:41

திருமணமும் திடீர் கருத்தரங்கமும்

1444d1b2-a5e8-4537-9b71-b4cc8e7875b1

4e899dba-453a-4a50-8de9-c0e2b82272db

29 காலை தஞ்சை அருகே கோவில் வெண்ணியில் ரமேஷ் – ரம்யா இருவருக்கும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த திருமணத்தில் நான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டேன். மிகச் சிறப்பாக நடந்தது திருமணம். திருமணத்தில் மாமிச உணவு (பிரியாணி) விருந்து வைத்தது கூடுதல் சிறப்பு.
*

திருமணத்திற்கு முதல் நாள் பிற்பகலே தஞ்சை சென்று விட்டேன். தோழர் சண்முகசுந்தரம் நான் இருந்த இடத்திற்குச் சந்திக்க வந்தார். நாளை மாலை உங்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்றால் தஞ்சை இலக்கிய வட்டம் சார்பில் ஒரு கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாம் என்றார். மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.

‘மாலை 4 மணிக்கு எழுத்தாளர் வே.மதிமாறனுடன் ஒரு கலந்துரையாடல்’ என்று தனது face book ல் பதிவும் போட்டு விட்டார்.

வேலை நாளாக இருந்தும், பல தோழர்கள் வந்து கலந்து கொண்டார்கள். 2 மணிநேரத்திற்கும் மேல் மிக விரிவாக ஜாதி ஒழிப்பும் முற்போக்களார்களின் கண்ணோட்டத்தில் மாற்றமும் என்ற அளவில் பேசினோம்.

face book ல் பதிவை பார்த்து விட்டு நெய்வேலியிலிருந்து தோழர்கள் கீதா, சுந்தர் இருவரும் வந்திருந்தது தோழர்கள் பலரையும் நெகிழ வைத்தது.

குறுகிய நேரத்தில் ஒரு கருத்தரங்கத்தை வடிவமைத்து சிறப்பாக நடத்திய தோழர் சண்முகசுந்தரத்திற்குத் தான் நான் சிறப்பு நன்றியை சொல்ல வேண்டும்.
IMG-20160130-WA0001

IMG-20160130-WA0002

IMG-20160130-WA0003

IMG-20160130-WA0004

IMG-20160130-WA0005

IMG-20160130-WA0006

IMG-20160130-WA0007

IMG-20160130-WA0008

IMG-20160130-WA0009

IMG-20160130-WA0010