விசாரணை

நேற்று இரவு காட்சி பார்த்தேன்.(12 February) விசாரணை.

தீவிரமாக விமர்சிக்கப்பட வேண்டிய அளவிற்கு ஒன்றுமில்லை. தூக்கி வைத்துக் கொண்டாடுமளவிற்கும் இல்லை.

ஆனால், அவரின் இரண்டு படங்களில் இருந்த யதார்த்தம், செய்நேர்த்தி இதில் இல்லை. பாத்திரப் படைப்பில், நடிப்பில் செயற்கைத் தனம் இருக்கிறது. குறிப்பாக நான்கு இளைஞர்கள் நடிப்பும் பாத்திரப்படைப்பும்.

கோர்ட் வாசலில் வைத்து பிரமுகரை கடத்துவது போன்ற காட்சிகளும் செயற்கைத் தனத்தைக் கூட்டுகிறது.
சென்னை போலீஸ் ஸ்டேசனில் காலையிலிருந்து மூவரும் பக்கெட்டை வைத்துக் கொண்டு சுத்தப் படுத்துகிறேன் என்று சுற்றி சுற்றி வருவதும் அப்படிதான். அவர்கள் போலீஸ் அதிகாரிகள் பேசுகிற சதியை ஒட்டுக் கேட்க வேண்டும் என்பதற்காக அதை அவ்வளவு நேரம் இழுந்திருக்கிறார்.

குண்டூரில் பிறகு சென்னை என்று இரண்டு காவல் நிலையங்கள் வேறு வேறு சம்பவங்கள் என்று இருந்ததற்குப் பதில், ஒரே சம்பவமாக இன்னும் வலுவான பிரச்சினையோடு இருந்திருந்தால் போலீசின் கொடூரத்தை கூடுதலாக உணர்த்தியிருக்கலாம்.

காவல் துறையின் மனித உரிமை மீறல்களைக் காட்டுகிற இயக்குநர், தீர்வாகக் கோர்ட்டை பரிந்துரைக்கிறார். சில அற்ப வழக்குளில் ஒன்று இரண்டு மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் நேர்மையாக நடத்திருக்கலாம்.

ஆனால், இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுக்கச் சிறையிலிருக்கிற எந்தத் தவறு செய்யாத பலர் போலீஸ் மற்றும் நீதித்துறையின் கூட்டோடுதான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் எவ்வளவோ மன்றாடியும், கதறியும், முறையிட்டும் முடியவில்லை.

இப்போதுகூடத் தேசிய கொடியை எரித்த வழக்கில், மிகக் கடுமையாகப் போலீசால் தாக்கப்பட்டிருக்கிறார் திலீபன். ஊடகங்களில் வந்திருக்கிறது. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கிறது. உலகத்திற்கே தெரிந்திருக்கிறது. ஆனால் நீதிமன்றத்திற்குத் தெரியவில்லை.

நீதிமன்றத்தில் காவல்துறையின் பொய்யை, வன்முறையை அம்பலப்படுத்திய ஒருவரை நீதிமன்றம் உடனே விடுதலை செய்துவிடுவதில்லை. போலீசை வெறும் வார்த்தைகளால் எச்சரித்துக் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் காவல்துறைக் கட்டுப்பாட்டிற்கே ஒப்படைத்து விடுகிறது. அதன் பிறகு அவரின் துயரம் சொல்லிமாளாது.

எந்தத் தவறும் செய்யாதவர்கள் காவல்துறையால் தண்டிக்கப்படுகிறார்கள் என்று படம் சொல்கிறது. ஆமாம். அப்படித்தான்.
ஆனால், நீதிமன்றத்தாலோ குற்றவாளிகள் விடுதலை அடைந்திருக்கிறார்கள். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிரிமனல்களாகச் சித்திரிக்கப்பட்டுத் தண்டனை அனுபவித்திருகிறார்கள்.

குறிப்பாகத் தலித் மக்கள் ஜாதிவெறியர்களின் தாக்குதல்களிலும் சிதைந்து, போலீஸ் மற்றும் நீதித் துறையாலும் சிதைக்ப்பட்டுச் சிறைகளில் வாழ்கிறார்கள். அவர்களைப் போலவே இஸ்லாமியர்களும்.

இருந்தாலும், இந்தக் காரணங்களுக்காகப் படத்தை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அதையெல்லாம் தாண்டி இயக்குநரிடம் எளிய மக்களைக் குறித்துக் கருணையும், அக்கறையும் இருக்கத்தான் செய்கிறது.
அது சரியான அரசியல் வடிவம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

13 February at 23:13

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

One thought on “விசாரணை

 1. Purushothaman Chinnappillai · 7 mutual friends
  நானும் பார்த்தேன் Just documentary only.
  Like · Reply · 13 February at 23:23
  தங்கராஜ் காசி
  தங்கராஜ் காசி · 3 mutual friends
  அண்ணே, உங்க விமர்சனம் படிக்கும் போது தான் தெரிகின்றது சினிமா எவ்வளவு பெரிய விழிப்புணர்வு மேடை என்று….
  Unlike · Reply · 6 · 13 February at 23:36
  பெரியார் விரும்பி
  பெரியார் விரும்பி தோழர் எனக்கு தெரிந்து இந்த படம்தான் உங்களிடம் சிறிதளவு பாராட்டு பெற்ற படம். அதில் வரும் கோட்டாவில் வேலைக்கு சேந்துட்டு வேலை தெரியாம இருக்கானுங்க என்ற வசனத்தை விட்டுவிட்டீர்களே
  Unlike · Reply · 6 · 14 February at 00:33
  Balasubramaniam Muthusamy
  Balasubramaniam Muthusamy · 6 mutual friends
  அய்யா, நீங்கள் ஏன் இன்னும் உலகை உய்விக்கும் ஒரு கலைக் காவியம் படைக்காமல் இருக்கிறீர்கள்?
  Like · Reply · 3 · 14 February at 01:20
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi உங்களைப் போன்ற முதலாளிகள் கருணை செய்தால் செய்யலாம்.
  Like · Reply · 6 · 14 February at 08:59
  Balasubramaniam Muthusamy
  Balasubramaniam Muthusamy · 6 mutual friends
  இதற்கும் பழி முதலாளிகள் தானா? அய்யா நானும் உம்மைப் போல் தொழிலாளிதான்..
  Like · Reply · 1 · 14 February at 09:23
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Mohamed Ismail
  Mohamed Ismail கடைல சாப்டுட்டு சாப்பாட்டை பத்தி கருத்து சொல்றவங்க உணவகம் வைக்க வேண்டும், பயண ஊர்தியில் பயணம் செய்பவர்கள் அந்த ஊர்தியின் பராமரிப்பை கேள்வி கேட்பவர்கள் பயணூர்தி நிறுவனம் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு சரியல்ல என்பது தாழ்மையான கருத்து
  Unlike · Reply · 8 · 14 February at 07:45
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi ஆமாம். ஒருவரை ஒன்றை பாராட்டுவதற்கு இதுபோன்ற தகுதிகளையெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அதுவும் ஜாதிக்காரனாக இருந்தால் அவன் திட்டுவது பாராட்டுவது என்று எதை செய்வதற்கும் சர்வல்லமை படைத்தவனாக கருதுவார்கள்.
  Like · Reply · 13 · 14 February at 09:10
  Thanikasalam Arumugam
  Thanikasalam Arumugam · 15 mutual friends
  உங்கள் விமர்சனம் மேம்போக்காக உள்ளது.
  Like · Reply · 14 February at 13:29
  Ilango Ilaa
  Ilango Ilaa · Friends with Divya Bharathi and 2 others
  thank u brother our criticism should motivate our creators to do better creation instead of not discourage because the creator however decide and does something with some responsibility so we audience always support to the good creators or else we loose our creators
  Like · Reply · 1 · 14 February at 14:07
  Kathir Kanna
  Kathir Kanna have to improve ur skills on motivating others .. but likes ur critisicism some time
  Like · Reply · 14 February at 22:35
  சூ.ம. ஆரோக்கியராசு
  சூ.ம. ஆரோக்கியராசு சந்திரகுமார் அவர்களின் லாக்கப் என்ற புத்தகத்தின் மூலத்திலிருந்து இப்படம் உருப்பெற்றது.எனவே மூலக்கதையை மீறி ஒரு இயக்குனர் எதும் செய்யமுடியாது செய்யவும் கூடாது. ரெட் டீ(எரியும் பனிக்காடு)நாவலை எழுதிய எழுத்தாளரை பரதேசி என எடுத்து கேவலப்படுத்திய பாலா போல் அல்லாமல் நேர்மையாக பதிவு செய்த வெற்றிமாறனை நிச்சயம் வாழ்த்தவேண்டும்.அது மட்டுமல்ல,சமகால போலீசு படங்களில் போலீசு என்றால் செறுக்கு, மிடுக்கு, நியாமான என்கவுன்டர் என காட்சிப்படுத்தும் கௌதம் வாசுதேவ்,ஹரி, போன்ற கழிசடை இயக்குனர்கள் நடுவில் அந்த இயக்குனர்கள் பார்க்க மறுக்கும் அல்லது மறைக்கும் ஏவல்த்துறையின் கருப்பு பக்கங்களை வெற்றிமாறன் நேர்மையாக காட்சிபடுத்தியிருக்கிறார்.

Leave a Reply

%d bloggers like this: