திருக்குறளும் சோசலிசமும்

13022179_2009574265933650_2060771062_n
திருக்குறளும் சோசலிசமும் – நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் இருந்து நேரலையாக YouTube வழியாக ஒளிபரப்ப படுகிறது.
நேரலையாக பார்க்க.

இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 7.30 (சிங்கப்பூர் நேரம் 10 மணி) மணிக்கு நேரலை ஆரம்பமாகும்.
சிங்கப்பூர் தோழர்கள் நிகழ்ச்சிக்கு நேரில் வந்து சேருங்கள்.

இந்தப் பேச்சுக்கு என் மீது கொலைவெறியோடு இருக்கிறது இந்துத்துவ இலக்கியக் கும்பல்

‘இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரக்கூடாது’ என்கிற பாணியில் ஒரு குரூப் என்னைக் கண்டித்து எழுதி வருகிறது.

அன்று நான் பேசிய பிறகு பேசியவர்கள் யாரும் எனக்கு மறுப்பு சொல்லவிலை. என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்கவும் இல்லை. லைட் எல்லாம் ஆப் பண்ணி, மனுஷ்யபுத்திரன் போகும் வரை அங்கே தான் இருந்தேன்.

ஆனால், அங்கு என்னிடம் பேசுவதற்குக் கூட முயற்சிக்காதவர்கள், facebook ல் கோடு கிழித்துச் சவடால் பேசுகிறார்கள் வடிவேல் பாணியில்.

அன்று நான் கொஞ்சம் அவசரமாகப் பேசியதால் என் இயல்பிலிருந்து கொஞ்சம் விலகிதான் பேசினேன். காரணம், தோழர் சண்முகசுந்தரம், ‘நிறங்களின் நிஜம்’ புத்தகத்தில், ராமாயணம், இந்து மதம், பார்ப்பனியம், ராஜராஜசோழன், சி.பி.எம்., கீழ்வெண்மணி என்று பல செய்திகளைச் சொல்லியிருந்தார். எனக்கு ஒதுக்கப்பட்ட 15 நிமிடங்களில் இவ்வளவையும் பருந்து பார்வையில் விடுபடாமல் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் சின்னப் பதட்டத்தைக் கொடுத்தது.

புத்தகத்தில், ‘பிராமணியம்’ என்றே பயன்படுத்தியிருந்தார். பிராமணர் என்பது ஜாதியல்ல. வர்ணம். நான்கு வர்ணத்தில் இன்றும் இருப்பது பிராமணர் வர்ணம் தான். பிராமணர் என்றால், அடுத்தவர்களைச் சூத்திரர் என்று இழிவு படுத்துவதாகும்.

அதனால் பார்ப்பனர் என்று தான் குறிக்க வேணடும். அது மரியாதைக்குறைவான சொல்லல்ல. பாரதியே பயன்படுத்தியிருக்கிறார்..’ என்றேன். அந்தப் பகுதியை இந்த வீடியோவிலிருந்து விலக்கி இருக்கிறார்கள்.

பரவாயில்லை. தம்பி Kiru Karikalan என்னைக் கண்டித்து எழுதியவர்களைப் பார்த்து கேட்டார். ‘அங்கு அமைதியாக இருந்து விட்டு facebook ல் எழுதுவது கழிவறையில் எழுதுவதைப் போல்’ என்று.

எதுக்கும் அடுத்தமுறை கவிக்கோ அரங்கத்திற்குப் போனால், முதலில் கழிவறையைத் தான் போய்ப் பார்க்கனும். என்னைத் திட்டி கக்கூஸ்ல எதவாது எழுதி வைச்சிருக்காங்கல என்று.

காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு

12810353_1153885424621815_986532201_o

12837212_1153885261288498_572620592_o

12837216_1153885451288479_1516261225_o
‘கண்டிப்பா ஜாதி மறுப்புத் திருமணம் தான் செய்யணும். அதுவும் இடைநிலை ஜாதியோ அதற்கு மேல் உள்ள ஜாதிகளுடன் கூடாது. நிச்சயம் தலித் பெண்ணைத்தான் திருமணம் முடிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்து, சிறப்பாகத் தன் திருமணத்தை நடத்திக் காட்டினார் விஜயபாஸ்கர்.

இது காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு. காதலில் ஜாதி மறுப்பு தற்செயலாக நிகழ்ந்து விடும். அதை ஜாதி உணர்வாளர்கள் கூடச் சாதாரணமாக நிகழ்த்தி விடுவார்கள்.

ஆனால் இந்தத் திருமணம் திட்டமிட்டு ஜாதியை எதிர்த்து, புறக்கணித்து நடந்த திருமணம். அதுவும் ஜாதி கணகணவென்று எரிந்து கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 8.7.2015 அன்று நடந்தது. மணமகள் காயத்திரி சென்னை. (படங்கள் இப்போதுதான் கிடைத்தது)

அதில் இன்னுமொரு சிறப்பு, ‘ஜாதி உணர்வு தீவிரமாகக் கொண்ட தன் குடும்பம், ஊர் மக்கள் மத்தியில் தான் நடக்க வேண்டும்’ என்று அதை நிகழ்த்தியது. மணமகனின் பெற்றோர்கள் திருமணத்தைப் புறக்கணித்தனர்.

ஆனால், ஊர் மக்கள் விஜயபாஸ்கர் மீது கொண்ட அன்பினால் கலந்து கொண்டனர். தனது ஊர் மக்களின் நலனில் அக்கறை கொண்டவன் விஜயபாஸ்கர் என்பதினால்.

ஆனாலும் ஆரம்பத்தில் துக்க வீட்டுக்கு வந்ததைப் போல் இருந்தவர்கள், பிறகு ஜாதி குறித்தும் பெரியாரின் சுயமரியாதை திருமணம் குறித்தும் பேசியதைக் கேட்டு, மெல்ல கல்யாண வீட்டின் கலகலப்பிற்கு வந்தார்கள். பெரியாரின் வெற்றி இதுதான்.
திருமணத்தைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நடத்தி வைத்தார்.

சூழலை புரிந்து கொண்டு, மணமகளும், மணமகளின் குடும்பத்தாரும் நடந்து கொண்ட விதம் மிக, மிகச் சிறப்பானது. மணமகளுக்கு ‘மணமகள் அலங்காரங்கள்’ பிடிக்காதபோதும் அந்தச் சூழலுக்காக பொறுத்துக் கொண்டார்.
மணமகள் குடும்பம் திராவிடர் கழகம். அங்கும் பெரியார் தான் இருக்கிறார்.

ஜாதி வெறியர்கள் எவ்வளவு ஊளையிட்டாலும், பெரியார் எதிர்ப்பாளர்கள் எவ்வளவு இழிவான நாடகம் நடத்தினாலும்,
காலத்தைத் தாண்டி ஜாதிக்களுக்கு எதிராக இளைஞர்களிடம் எப்போதும் நிற்பான் அந்த 139 வயது இளைஞன்.

கண்டிப்பாக 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக் கூடாது

ஆனால், கண்டிப்பாக 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்த்தே ஆகவேண்டும்
9 நிமிடங்கள். new year special.

திருமா வை ஆதரிக்கும் திமுக; ஜெயலலிதா எதிர்த்து திருமா

p38
ஆர்.கே. நகர் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நின்றால்,
அது சமூகநீதி அரசியலின் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல். அவர் வெற்றி பெற்றால், இந்தியாவிற்கே வழி தமிழகம் காட்டும்.
முதல் சிறப்பு. பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்.

இரண்டாவது அதுவும் ஒரு தலித் தலைவர். மூன்றாவது முதல்வர், மிகப் பெரிய கட்சியின் தலைவரை எதிர்த்து ஒரு தலித் தலைவர் வெற்றிபெற்றார் என்பது.
திருமா நின்றால், திமுக தனது வேட்பாளரை பின்வாங்கி, அவரை ஆதரிப்பது ஒரு சமூகநீதி கடமை.

மண்ணின் மைந்தன் கோரிக்கை பேசுகிற தமிழ்தேசியவாதிகள், தலித் கட்சிகள், திராவிட இயக்கங்கள் ஒட்டுமொத்தமாகத் திருமாவளவனை ஆதரிப்பதுதான் அவர்கள் பேசுகிற அரசியலுக்கு ஆதாரம்.

முதலில், விசிக தலைவர் திருமாவளவனை ஆர்.கே. நகரில் கட்டாயம் நிற்கச்சொல்லி அவருக்கு நெருக்கமானவர்கள் நிர்பந்தியுங்களேன் .
* *
நான் எழுதியதற்குப் பிறகு பதட்டமைந்து சிலர்,
‘ஆர்.கே.நகரில் திருமா நிற்கவேண்டாம். ஜெயலலிதா அவரை தோற்கடித்துவிடுவார்’ என்று சென்டிமெண்ட் வசனம் எழுதுகிறார்கள்.

திருமா மேல் கரிசனம் தெரிந்தாலும்..
இந்த அவசர அன்பில் ஒரு பதட்டம் இருப்பதை உணரலாம்.
மநகூ வை தீவிராமக ஆதரிப்பதாக நடிக்கிற அதிமுக அபிபானிகளின் திருமா மீதான கரிசனத்திற்குப் பின் இருப்பது, ‘ஜெயலலிதா தோற்றுவிடக்கூடாது’ என்ற கவலை தான்.
திருமா நின்று, திமுக வாபஸ் பெற்றால் ஜெயலலிதாவின் தோல்வி உறுதி. திருமாவின் அந்த வெற்றி இந்தியளவில் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றி.
* *
மநகூ ஜெயலலிதாவின் பினாமி என்ற பிரச்சாரத்தை தகர்ப்பதற்கும்,
திமுக வன்னியர் ஓட்டை பெறுவதற்கு தான், திருமா வை கழட்டி விட்டது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கும் அரிய வாய்ப்பு,
திருமா; ஜெயலலிதாவை எதிர்த்து நிற்பதும் அவரை திமுக ஆதரிப்பதும்.

இந்தப் பெண்களை யார் பாதுகாப்பாது?

?????????????????????????????????????????????????????????

இன்று சென்னையில் அனல் காற்று வீசும். பகல் 12 லிருந்து 3 வரை வெளியில் செல்லாதீர்கள். பாதிப்பை ஏற்படுத்தும். தவிர்க்க முடியாதபோது பாதுகாப்பாகச் செல்லுங்கள்’ என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.
அரசும் அதைப் பரிந்துரைத்து மக்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது.

நாமும் வேலையிருந்தாலும் அந்த நேரத்தில் வெளியில் போவதை தவிர்க்க விரும்புகிறோம். தவிர்த்தும் விடுகிறோம். நம் குடும்ப உறுப்பினர்களையும் அக்கறையோடு பாதுகாக்கிறோம். இது முறையானதுதான்.

ஆனால், கல்குவாரியில், சாலைபணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த வெப்பத்தை தவிர்க்கவும் முடியாது, தப்பிக்கவும் முடியாது.
குறிப்பாகப் பெண்கள், அதிலும் நிறைமாத கர்பிணிகள், குழந்தைப் பெற்று 10 நாட்கள் கூட ஆகாமல் வேலைக்கு வந்திருக்கும் பெண்களின் துயரம் கொடூரம்.

பொதுவாக எப்போதுமே இவர்களுக்குக் கர்பகால விடுறையும் கிடையாது. பேறுகால விடுப்பும் கிடைக்காது. இடையில் இந்த கூடுதல் துன்பங்கள்தான் இவர்களுக்கு கிடைக்கும் ஒரே ‘போனஸ்’

குறைந்தபட்சம் இதுபோன்ற அதிக வெப்பமான நாட்களில் சம்பளத்துடன் அவர்களுக்கு விடுமுறை அளிப்பது அவசியம். அப்படிச் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்ற உத்தரவை பிறப்பித்துவிட்டு, பிறகு அரசு இந்த வானிலை அறிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்தால் அது உண்மையான அக்கறையாக இருக்கும்.

அரசின் மக்களுக்கான அறிக்கைகளில் எப்போதும் கடின உழைப்பில் ஈடுபடுகிற மக்கள் கணக்கில் வைக்கப்படுவதே இல்லை.

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

தமிழர்கள் வாழும் நாடுகளில் சிங்கப்பூரில் மட்டுமே..

13001216_1183913694952321_5661511143283410782_n

மீண்டும் சிங்கப்பூர்.
இரண்டு மாதத்திற்கு முன்னே முடிவானது. ‘17 தேதி வைத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அதற்கு முன்பே 17 தஞ்சை இலக்கிய வட்டம் சார்பாகத் தஞ்சையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிவானதால்

‘24 வைத்துக் கொள்ளலாமா?’ என்றேன். சரி என்றார்கள். நன்றி தோழர்களுக்கு.
*
வெளி மாநிலங்களில், நாடுகளி்ல் வாழும் தமிழர்கள் ‘தமிழ் சங்கம்’ பெயரில் தீபாவளி போன்ற பல இந்து பண்டிகைகளை விமர்சியாகக் கொண்டாடுவார்கள். எப்போதுமே எல்லா மாநிலங்களிலும், நாடுகளிலும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் பாரதி விழாவை தவறாமல் செய்வார்கள். அதற்கு மாற்று என்றால் கண்டிப்பாகக் கம்பன் விழாவாக இருக்கும். இன்னும் காந்தியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

டாக்டர் அம்பேத்கர், பெரியார் பிறந்தநாள் விழா வாய்ப்பே இல்லை. அது மட்டுமல்ல, இவர்கள் இருவரையும் முன்னுறுத்தி செயல்படுகிற என்னைப் போன்றவர்களைக் கண்டிப்பாக வேறு நிகழ்ச்சிகளுக்குக் கூடக் கூப்பிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.

ஆனால் சிங்கப்பூரில் உள்ள எனது அன்பிற்குரிய தோழர்கள் போனமுறை பெரியார் விழாவிற்கு என்னை அழைத்தார்கள். ‘அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்’ சிங்கப்பூரில் நானே துவக்கி வைத்தேன்.

இந்த முறை டாக்டர் அம்பேத்கர் விழா. இந்த விழாவை நடத்துவதில் அதிகம் தலித்தல்லாதவர்கள் பங்கெடுக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் சிங்கப்பூரில் மட்டுமே டாக்டர் அம்பேத்கர் விழா கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியர்கள், தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுக்கிறார்கள் என்றால், கடல் கடந்த நாடுகளில் ஜாதியற்று வாழ்கிறார்கள் என்பதற்குச் சாட்சி.

இதோ என் சிங்கப்பூர் தோழர்கள் ஜாதியற்று வாழ்கிறார்கள்.
12968539_1180624521947905_650725584_n

திமுக ஏன் கள்ளமவுனம் காக்கிறது?

‘சீட்டு குடுக்கிறேன் வா’ என்று கண்ட கண்ட கழிசடைகளையெல்லாம் இன்னும் கூவி கூவி கூப்பிடுகிற திமுக,
தன்னுடனே இருக்கும் ஆதித் தமிழர் பேரவைக்கு இன்னும் எத்தனை தொகுதிகள் என்பதை ஏன் அறிவிக்காமல் இருக்கிறது?

அங்கீகாரமே தரக்கூடாத பல சந்தவர்ப்பாவத கட்சிகளுக்கும், ஜாதிக் கட்சிகளுக்கும் சீட்டு தருகிறவர்கள், தலித் மக்களிலேயே மிகவும் பின் தங்கியிருக்கிற,அருந்ததியர் மக்களுக்கான கட்சியின் தேர்தல் அங்கிகாரத்தை மறுக்கிறார்கள்?

திமுக; ஆதித் தமிழர் பேரவைக்கு தேர்தலில் வாய்ப்புத் தராமல் புறக்கணித்தால், நிச்சயம் அது அருந்ததியர் மக்களின் அங்கீகாரத்தை மறுப்பதாகவே வரலாற்றில் பதியப்படும்.

கொண்டாட்டம்

‘எந்த நாட்டுடன் விளையாடினாலும், வெஸ்ட் இண்டிஸ் தான் ஜெயிக்கணும்’ அப்படிதான் எப்போதும் விரும்புவேன்.
இந்தியா மட்டும் விதிவிலக்கா?
இந்த முறை ‘CUP’ நாங்கதான் வாங்குறோம்.

எங்கள் பெண்கள் அணியும் பட்டைய கிளப்பிக்கிட்டிருக்கு.
1 April at 12:35

கொல்கத்தாவில் ஏகப்பட்ட ஆதரவு எங்கள் அணிக்கு. /ரசிகர்கள்/
எங்கள் பெண்கள் அணி ஆஸ்திரேலிய வெள்ளைக்காரிகளை தோற்கடித்து CUP வாங்கியாச்சி.

ஆண்கள் அணி, ஆஸ்திரேலியாவின் முதாதையர்களான இங்கிலாந்துக்கார்களை ஜெயிக்கணும். ஜெயிப்போம். 21 பந்துக்கு 40. அடிப்போம்.
3 April at 22:17

ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அசிங்கமல்ல; இங்கிலாந்திடம் தோற்றிருந்தால் தான் மாபெரும் சோகம்.
3 April

அதேதான்..

வெள்ளைக்கார நாடுகளுக்கு எதிராக எழுதுவதைக் கூட, ‘மறைமுக பார்ப்பன எதிர்ப்பு’ என்கிறார் ஒருவர்.
ஆமாம்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அய்ரோப்பா உங்களின் நேசத்திற்குரிய நாடுகள் என்றால்;
ஆப்பரிக்கா, அரேபியா, லத்தின் அமெரிக்க இவை எங்கள் பிரியத்திற்குரிய நேச நாடுகள்.
3 April

இனி அவள் என்ன கதிக்கு ஆவாள்?

இன்று நிறைய நேரம் இருந்தது. அதனால் காலைக் காட்சி வீட்லயே சாப்ளினின் ‘LIME LIGHT’ பார்த்தேன். ‘24 frames per sec’ என்ற இயல்பான சினிமா பாணிக்கு சாப்ளின் மாறிய பின் வந்த படம். அவரின் 65 வயதில்.

எப்போதும் சாப்ளின் படங்களில் பேரன்பு பொங்கி வழியும். உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அள்ளிக் கொடுக்கும். இந்தப் படமும் அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
ஆனால், இதுவரை அவரின் எந்தப் படமும் தராத, மீள முடியாத சோகத்தை இந்தப் படம் தந்துவிட்டது.
31 March at 17:55 ·

இளம் பெண் தெரசா (Terry). சிறந்த நடனக் கலைஞர். தன் வாழ்க்கையின் துயரங்களைத் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்து, படுத்த படுக்கையாக இருந்தபோது பக்கத்து அறையிலிருந்த 65 வயதான Calvero (சாப்ளின்) அவளைக் காப்பாற்றி, தன் பேரன்பால் மிகச் சிறந்த நடனக் கலைஞராக மீட்டு விடுகிறார்.

Calvero வின் பேரன்பால் திக்குமுக்காடிய தெரசா. Calvero வை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொண்டால், உங்களைதான் செய்து கொள்வேன் என்று தன் கண்ணீரில் காதல் சொல்கிறாள்.

வயது வித்தியாசம் பொருந்தாது என்று பக்குமாகவும் கோபமாகவும் சொல்லியும் கேட்காததால், Calvero தலைமறைவாகி விடுகிறார்.
Calvero வும் ஒரு கலைஞன் தான். மேடைகளி்ல் கோமாளி வேடம் போடுகிறவர். அதைவிட அதிகமாகக் குடிக்கிறவர். தன் கலைக்கு வரவேற்பு குறைந்து விட்டதால் துயரம் அவருக்கும்.

ஒரு Bar ல் பாட்டுப் பாடி பிழைத்துக் கொண்டிருக்கும் Calvero தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் தன் காதலை உறுதி செய்கிறாள் தெரசா. புகழின் உச்சியில் இருக்கும் அவள், தன் குழுவிலே Calvero வின் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை மீண்டும் மேடை ஏற்றுகிறாள்.

‘Calvero… Calvero… Calvero…’ என்று அவள் ஒவ்வொரு முறையும் துடிக்கிற துடிப்பில், ‘இந்த உலகம் அன்பால் மட்டுமே இயங்குகிறது. மனிதர்கள் மகத்தானவர்கள்’ என்று அறிவித்துக் கொண்டே இருக்கிறது.

Calvero மேடை நிகழ்ச்சியின் போது காயம் பட்டுவிடுகிறார். அதோடு அவருக்கு ஹார்ட் அட்டாக்கும். தெரசா துடிப்பும், பதட்டமுமாய்த் துவண்டு போகிறாள். ஆனால், அடுத்து அவள் நிகழ்ச்சி. ஆடித்தான் ஆக வேண்டும்.

தெரசா ஆடிக் கொண்டிருக்கும்போது, Calvero (சாப்ளின்) அவள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டே இறந்து விடுகிறார். அது அறியாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள் தெரசா. படம் முடிகிறது.
*
Calvero வின் மரணத்தை என்னாலேயே தாங்க முடியவில்லையே? எப்படித் தாங்கப் போகிறாள் தெரசா? Calvero வைத் தவிர அவளுக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்? இனி அவள் என்ன கதிக்கு ஆவாள்?

மதியத்திலிருந்து தெரசா வை நினைத்து என் மனம் படபடத்துக் கொண்டே இருக்கிறது.
31 March at 22:41