தமிழர்கள் வாழும் நாடுகளில் சிங்கப்பூரில் மட்டுமே..

13001216_1183913694952321_5661511143283410782_n

மீண்டும் சிங்கப்பூர்.
இரண்டு மாதத்திற்கு முன்னே முடிவானது. ‘17 தேதி வைத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அதற்கு முன்பே 17 தஞ்சை இலக்கிய வட்டம் சார்பாகத் தஞ்சையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிவானதால்

‘24 வைத்துக் கொள்ளலாமா?’ என்றேன். சரி என்றார்கள். நன்றி தோழர்களுக்கு.
*
வெளி மாநிலங்களில், நாடுகளி்ல் வாழும் தமிழர்கள் ‘தமிழ் சங்கம்’ பெயரில் தீபாவளி போன்ற பல இந்து பண்டிகைகளை விமர்சியாகக் கொண்டாடுவார்கள். எப்போதுமே எல்லா மாநிலங்களிலும், நாடுகளிலும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் பாரதி விழாவை தவறாமல் செய்வார்கள். அதற்கு மாற்று என்றால் கண்டிப்பாகக் கம்பன் விழாவாக இருக்கும். இன்னும் காந்தியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

டாக்டர் அம்பேத்கர், பெரியார் பிறந்தநாள் விழா வாய்ப்பே இல்லை. அது மட்டுமல்ல, இவர்கள் இருவரையும் முன்னுறுத்தி செயல்படுகிற என்னைப் போன்றவர்களைக் கண்டிப்பாக வேறு நிகழ்ச்சிகளுக்குக் கூடக் கூப்பிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.

ஆனால் சிங்கப்பூரில் உள்ள எனது அன்பிற்குரிய தோழர்கள் போனமுறை பெரியார் விழாவிற்கு என்னை அழைத்தார்கள். ‘அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்’ சிங்கப்பூரில் நானே துவக்கி வைத்தேன்.

இந்த முறை டாக்டர் அம்பேத்கர் விழா. இந்த விழாவை நடத்துவதில் அதிகம் தலித்தல்லாதவர்கள் பங்கெடுக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் சிங்கப்பூரில் மட்டுமே டாக்டர் அம்பேத்கர் விழா கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியர்கள், தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுக்கிறார்கள் என்றால், கடல் கடந்த நாடுகளில் ஜாதியற்று வாழ்கிறார்கள் என்பதற்குச் சாட்சி.

இதோ என் சிங்கப்பூர் தோழர்கள் ஜாதியற்று வாழ்கிறார்கள்.
12968539_1180624521947905_650725584_n