திருமா வை ஆதரிக்கும் திமுக; ஜெயலலிதா எதிர்த்து திருமா

p38
ஆர்.கே. நகர் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நின்றால்,
அது சமூகநீதி அரசியலின் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல். அவர் வெற்றி பெற்றால், இந்தியாவிற்கே வழி தமிழகம் காட்டும்.
முதல் சிறப்பு. பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்.

இரண்டாவது அதுவும் ஒரு தலித் தலைவர். மூன்றாவது முதல்வர், மிகப் பெரிய கட்சியின் தலைவரை எதிர்த்து ஒரு தலித் தலைவர் வெற்றிபெற்றார் என்பது.
திருமா நின்றால், திமுக தனது வேட்பாளரை பின்வாங்கி, அவரை ஆதரிப்பது ஒரு சமூகநீதி கடமை.

மண்ணின் மைந்தன் கோரிக்கை பேசுகிற தமிழ்தேசியவாதிகள், தலித் கட்சிகள், திராவிட இயக்கங்கள் ஒட்டுமொத்தமாகத் திருமாவளவனை ஆதரிப்பதுதான் அவர்கள் பேசுகிற அரசியலுக்கு ஆதாரம்.

முதலில், விசிக தலைவர் திருமாவளவனை ஆர்.கே. நகரில் கட்டாயம் நிற்கச்சொல்லி அவருக்கு நெருக்கமானவர்கள் நிர்பந்தியுங்களேன் .
* *
நான் எழுதியதற்குப் பிறகு பதட்டமைந்து சிலர்,
‘ஆர்.கே.நகரில் திருமா நிற்கவேண்டாம். ஜெயலலிதா அவரை தோற்கடித்துவிடுவார்’ என்று சென்டிமெண்ட் வசனம் எழுதுகிறார்கள்.

திருமா மேல் கரிசனம் தெரிந்தாலும்..
இந்த அவசர அன்பில் ஒரு பதட்டம் இருப்பதை உணரலாம்.
மநகூ வை தீவிராமக ஆதரிப்பதாக நடிக்கிற அதிமுக அபிபானிகளின் திருமா மீதான கரிசனத்திற்குப் பின் இருப்பது, ‘ஜெயலலிதா தோற்றுவிடக்கூடாது’ என்ற கவலை தான்.
திருமா நின்று, திமுக வாபஸ் பெற்றால் ஜெயலலிதாவின் தோல்வி உறுதி. திருமாவின் அந்த வெற்றி இந்தியளவில் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றி.
* *
மநகூ ஜெயலலிதாவின் பினாமி என்ற பிரச்சாரத்தை தகர்ப்பதற்கும்,
திமுக வன்னியர் ஓட்டை பெறுவதற்கு தான், திருமா வை கழட்டி விட்டது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கும் அரிய வாய்ப்பு,
திருமா; ஜெயலலிதாவை எதிர்த்து நிற்பதும் அவரை திமுக ஆதரிப்பதும்.

இந்தப் பெண்களை யார் பாதுகாப்பாது?

?????????????????????????????????????????????????????????

இன்று சென்னையில் அனல் காற்று வீசும். பகல் 12 லிருந்து 3 வரை வெளியில் செல்லாதீர்கள். பாதிப்பை ஏற்படுத்தும். தவிர்க்க முடியாதபோது பாதுகாப்பாகச் செல்லுங்கள்’ என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.
அரசும் அதைப் பரிந்துரைத்து மக்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது.

நாமும் வேலையிருந்தாலும் அந்த நேரத்தில் வெளியில் போவதை தவிர்க்க விரும்புகிறோம். தவிர்த்தும் விடுகிறோம். நம் குடும்ப உறுப்பினர்களையும் அக்கறையோடு பாதுகாக்கிறோம். இது முறையானதுதான்.

ஆனால், கல்குவாரியில், சாலைபணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த வெப்பத்தை தவிர்க்கவும் முடியாது, தப்பிக்கவும் முடியாது.
குறிப்பாகப் பெண்கள், அதிலும் நிறைமாத கர்பிணிகள், குழந்தைப் பெற்று 10 நாட்கள் கூட ஆகாமல் வேலைக்கு வந்திருக்கும் பெண்களின் துயரம் கொடூரம்.

பொதுவாக எப்போதுமே இவர்களுக்குக் கர்பகால விடுறையும் கிடையாது. பேறுகால விடுப்பும் கிடைக்காது. இடையில் இந்த கூடுதல் துன்பங்கள்தான் இவர்களுக்கு கிடைக்கும் ஒரே ‘போனஸ்’

குறைந்தபட்சம் இதுபோன்ற அதிக வெப்பமான நாட்களில் சம்பளத்துடன் அவர்களுக்கு விடுமுறை அளிப்பது அவசியம். அப்படிச் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்ற உத்தரவை பிறப்பித்துவிட்டு, பிறகு அரசு இந்த வானிலை அறிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்தால் அது உண்மையான அக்கறையாக இருக்கும்.

அரசின் மக்களுக்கான அறிக்கைகளில் எப்போதும் கடின உழைப்பில் ஈடுபடுகிற மக்கள் கணக்கில் வைக்கப்படுவதே இல்லை.

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக