நாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்

13254665_1002647616471467_6075004334720533280_o
இந்துமதமே தனித்தனி ஜாதி வழக்கம்தான். இப்படியான பலநூறு ஜாதிகளை இரண்டு சமயங்கள் தனிதனியாகப் பிரித்து இயக்கி இருக்கிறது. மிக நுட்பாக இயங்கிய முறையின் மிச்சசொச்ச வழக்கங்கள் இன்றும் ஆதிக்கஜாதி உணர்வாளர்களிடம் இருக்கிறது.

ஜாதி படிநிலையில் ஒரேஅந்தஸ்தில் இருந்தாலும், வரலாறில் சைவம்xவைணவம் என்கிற சமயச்சண்டை, அதிகாரத்திற்கான ஆதிக்கஜாதிகளுக்குள்ளான சண்டைதான். பி.ஜே.பி. உள்ளே நடக்கும் பதவி சண்டை மாதிரி.

‘ஓம் நமசிவாய’ எனும் பஞ்சாட்சரத்திற்கும் ‘ஓம் நமோ நாராயாணாய’ எனும் அஷ்டாஷரத்திற்கும் நடந்த சண்டை. சிவன்xவிஷ்ணு யார் பெரியவர் என்பதற்காக மாறிமாறி எழுதிக் கொள்ளப்பட்ட கதைகளே இதற்குச் சாட்சி.

‘சிவனின் விஸ்வரூபததைத் தரிசிப்பதற்காக அவர் பாதம் நோக்கி பயணித்தவர்தான் விஷ்ணு’ என்கிற கதை சிவனின் பெருமைக்காக மட்டுமல்ல, விஷ்ணுவை பன்றி என்று இழிவாக சித்திரிக்ககவும்.
இந்தச் சமயச் சண்டையில் புராணங்களில் சிவன் மற்றும் சைவர்களின் கை ஓங்கி இருந்தாலும், இதிகாசங்களிலோ வைணவர்களின் செல்வாக்கு மட்டும்தான்.

இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் வைணவ பெருமை உடையவை. இரண்டிலும் ராமன், கிருஷ்ணன் வைணவக் கடவுள்கள்தான் நாயகர்கள்.
அனால்தான் பெரியார் இயக்கம் ராமாயணத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு முன்,
சைவ சமயத்தார் ராமாயண எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்கள். மறைமலையடிகளைப் போல்.

ஏனென்றால், ராமாயணத்தின் வில்லன் தீவிர சிவபக்தனான ராவணன். பிரகலாதன் கதையும் அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை மூட்டிய வைணவப் பெருமை. அசுரன் இரணியன் சிவபக்தன். அதனாலேயே குடலை மாலையாக்கிக் கொண்டான் நரசிம்மன்.
ஆனாலும் வைணவத்தில் உயர்வானவர்கள் அய்யங்கார்கள்.
சைவத்தில் அய்யர்கள்.

சைவ-வைணவ சச்சரவுகள் இருந்தாலும் அய்யர் – அய்யங்கார்களுக்கு வேதம் அது வலியுறுத்துகிற நாலுவர்ணம் பொது. அதில் எந்தச் சச்சரவும் இல்லை. புராணம், இதிகாசம் இரண்டிலும் அடிப்படை நாலுவர்ணமே.

பவுத்தமும் சமணமும்; பிறப்பிலே உயர்வு, தாழ்வு சொல்லுகிற நாலு வர்ணத்திற்கு எதிராக, ‘வைணவம்–சைவம் ஒண்ணு. இத அறியாதவன் வாயில மண்ணு’ என்று அம்பலப்படுத்தியது. இந்த நெருக்கடியின் காரணமாகத்தான் ‘ஹரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவன் வாயில மண்ணு.’ என்று சேர்ந்து புழங்க ஆரம்பித்தார்கள்.

அதற்கு அடையாளமாகத்தான், சிவராமன் போன்ற பெயர்கள் சைவ, வைணவ ஒற்றுமையின் குறியீடானது. கிறித்துவ, இஸ்லாம் வருகைக்குப் பிறகு சைவ-வைணவ வேறுபாடுகள் கடைப்பிடிப்பது தேவையற்றது என்கிற நிலை தீவிரமானது.

ஆனாலும் அய்யங்கார், நாயுடு (நாயக்கர்) மத்தியில் இன்றும் பெயர் வைப்பதில் சைவ சமய பெயர்களைத் தேர்தேடுப்பதில்லை. ஒற்றுமையின் குறியீடாக வந்த, சிவராமன் போன்ற பெயர்களைகூட வைப்பதில்லை. சிவராமன் என்பதில் சிவன் பெயர் முதலில் வருகிறது என்பதினாலும் இருக்கலாம்.
பழுத்த வைணவப் பெயர்கள்தான் வைத்துக் கொள்கிறார்கள். பெருமாள் மற்றும் அவர் புனைப்பெயர்கள். மனைவயின் பெயர்.

வைணவ அரசியலை ஒட்டுமொத்தமான இந்தியர்களின் அடையாளமாகவும் மாற்ற முயன்று அதில் அதிகம் வெற்றி பெற்றவர் காந்தி. அவர் தீவிர வைணவர்.
வைணவ பெருமையைத் தமிழ் சினிமாவில் தீவிரமாகக் காட்டியவர் ‘நாத்திகர்’ கமல். அவர் இயக்கத்தில் வெளியான ஹேராமில் அய்யங்கார் குடும்பப் பின்னணியில், வைணவக் கலாச்சாரத்தை ஒவ்வொரு ஷாட்டிலும், உச்சரிப்பிலும் சிலாகித்திருப்பார். காந்தியையும் வைணவராகதான் பார்த்திருப்பார்.

காந்தி மதநல்லிணக்கத்தை வலியுறுத்த, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலில் ராமனுக்கு முக்கியத்துவம் கொடுத்து. பிறகு ‘ஈஸ்வர, அல்லா’ என்று தான் வரிசைப்படுத்தியிருப்பார்.
ஆனால், கமல் ஹேராமில் அந்தப் பாடலை டைட்டில் சாங்கின் துவக்க வரியாக மட்டும் வைத்து, வைணவப் பெருமையான காந்திக்கு பிடித்த, 15 நூற்றாண்டில் நரசிம்மேத்தா என்ற குஜராத்தியால் எழுதப்பட்ட ‘வைஷ்ணவ ஜன தோ’ பாடலைதான் காந்திக்குப் பின்னணியாக வைத்திருப்பார்.

இந்தப் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி, லதாமங்கேஷ்கர் என்று பலர் பாடி புகழ் பெற்றிருந்தபோதும், அவர்கள் வைணவர்கள் அல்ல என்பதால், பட்டம்மாள் என்ற அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவரைதான் பாட வைத்திருப்பார்.
அந்தப் படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவிற்கு முன் வேலை செய்த எல். சுப்பிரமணியத்திற்கும் கமலுக்குமான சண்டை, சைவ, வைணவ சண்டையாகதான் இருந்திருக்க வேண்டும்.

காந்தியை கொலைசெய்யச் சாகேத்ராமன் (கமல்) தேர்தேடுக்கப்பட்டவுடன் அவன் கங்கையாற்றில் மூழ்கி பூணூலையும் குடுமியையும் அறுத்து வேறு வேடத்திற்கு மாறுவது போன்ற காட்சியில், அவரை சங்கராச்சாரி தண்ணீரில் முக்கி ஆசிவழங்குவதுபோல் காட்டியிருப்பார்.
சங்கராச்சாரிகள் சைவசமய குறியீடு.
எல்.சுப்பிரமணியமோ அய்யர். அதனால் அந்தக் காட்சிக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்திருக்கக் கூடும்.

சைவத்திற்கு இல்லாத வேறொரு வடிவம் வைணத்திற்கு உண்டு. காதல், காமம். இவையும் பக்தியின் ஒரு வடிவமாகவே போற்றப்படும். மீரா, ஆண்டாள் போன்ற மானுடப் பெண்கள் திருமால், கண்ணன் உடனான காதலையும், காமத்தையும் வெளிப்படையாக அறிவிப்பதும், கண்ணனின் வரைமுறையற்ற பாலியல் லீலைகளும் வைணவத்தில் புனிதப்படுத்தப்பட்டவை. அதனால்தான் ஹேராமில் மனைவிகளுடன் சாகேத்ராமன் உறவில் ஈடுபடுபதை லயித்துக் காட்டினாரோ?

பிறகு வந்த தசவதாரம் முழுக்கச் சைவ, வைணவ சண்டையைப் பகிரங்கமாகச் சொன்ன படம். சோழ மன்னனின், வைணவத்திற்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்துதான் ரங்கராஜ நம்பியாக அறிமுகமாவார் கமல்.
கமலை கட்டித் தொங்கவிட்டு கல்லால் அடிப்பது போன்ற காட்சியில், திருநீர் அணிந்தவர்களே அதைச் செய்வார்கள். சைவ சமயத்தைச் சேர்ந்த திருஞானச் சம்பந்தனை குறியீடாக்கி, ஒரு சிறுவன் கல்லால் அடிப்பதுபோன்றும் காட்டியிருப்பார்.

அதேபோல் அமெரிக்காவிலிருந்து வருகிற நாயகனின் பெயர் கோவிந்த் ராமசாமி. அய்யங்கார் அடையாளத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அம்பலமாகிப் போகும் என்பதால்,
அவரை நாயக்கராக அடையாளப்படுத்தியிருப்பார். இது நாயுடுகள் மேல் உள்ள ஈடுபாடல்ல. வைணவக் குறியீடு. ஆனால் கமல் அதையும் முற்போக்கான அடையாளமாகக் காட்ட முயற்சித்திருப்பார்.
‘உன் அப்பா யாரு?’ என்றதற்கு, ‘ராமசாமி நாயக்கர்’ என்று மறைமுகமாகப் பெரியாரை அடையாளப்படுத்துவார். பெரியாரையும் வைணவராக.
பல்ராம் நாயுடு மட்டுமல்ல, அவரின் அஸிஸ்டெண்ட் அப்பாராவ். அவரும் வைணவரே.

அய்யங்கார்களுக்குப் பதில் நாயக்கர்களைக் காட்டுவது இயக்குநர் பாலசந்தர் பாணி. இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாலசந்தர் படம் எடுத்தால் அதில் பார்ப்பனர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்டமாட்டார். மாறாகச் சைவ முதலியார்களைப் பார்ப்பனக் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார். (வானமே எல்லை)

தசவதாரம் படத்தின் திரைக்கதையை அறிவியலையும் வைணவ சக்தியையும் ஒப்பிட்டே காட்டியிருப்பார். உலகத்தையே அழிக்கக் கூடியதை அய்யங்கார் பெண்ணாக வரும் அசின் கையில் இருக்கும் அந்த வைணவ சக்தியே தடுத்து நிறுத்தும்.
கோவிந்த் ராமசாமிக்கு (கமல்) ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து பெருமாளே தற்செயலாகக் காப்பாற்றவார். பாலத்திலிருந்து அவர் குதித்தாலும் ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற லாறி வந்து அவரைக் காப்பாற்றிவிடும்.

12 நூற்றாண்டில் கோவிந்தராசர் சிலையுடன் ரங்கராஜ நம்பியை கடலில் வீசியக் காட்சியோடு துவங்கிய படம், 2004 சுனாமியுடன் முடியும். உயிர்களின் பேரழிவை தடுப்பதற்காகதான் பகவான் சுனாமியை ஏற்படுத்தினான் என்பது நீதி.
கடற்கரையில் சிதறுண்டு கிடக்கிற பல காட்சிகளில், சிலுவை குறியீடோடு சிதைந்து போயிருக்கிற தேவாலயத்தைக் காட்டியிருப்பார். மற்ற மதங்கள் சுனாமியை தாங்க முடியாமல் வீழ்ந்து கிடக்க, சுனாமியை கொண்டுவந்தவனே திருமால்தான் என்கிற குறியீடு.

இந்த வைணவப் பெருமையைக் கமல் தன் சொந்த விருப்பமாக, பெருமையாக அறிவித்துக் கொண்டாலும், தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்யாத இன்னொரு மிக மோசமான செயலை செய்தார்.

ஜாதி பட்டத்தைப் போராடி ஒழித்தவர் தந்தை பெரியார். இந்தியாவிலேயே இந்தச் சாதனையைப் பெரியார் ஒருவர்தான் செய்தார். பெரியாரின் பேரனாகத் தன்னை அறிவித்துக்கொள்ளும் கமலோ, ஜாதி பெயரில் ‘தேவர் மகன்’ என்று படம் எடுத்தார்.

அது மேலோட்டமாக ஜாதி பெருமை பேசினாலும், உள்ளீடாக அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் முரடர்கள், தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்கிறவர்கள் என்றே காட்சிப்படுத்தியிருப்பார்.
தேவர் சமூகத்தினர் தீவிரமான குலதெய்வ வழிபாடு கொண்டவர்கள். அதோடு முருகன் மற்றும் சைவ சமய சார்பு கொண்டவர்கள். எப்போதும் விபூதிதான் இட்டுக்கொள்வார்கள். நாமம் அவர்கள் பழக்கமல்ல.

விருமாண்டியிலும், தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளேயே கொலை செய்து கொள்கிறவர்களாகவும், விருமாண்டியைத் தவிர எல்லோருமே கெட்டவர்களாகவே வருவார்கள்.
ஆனால், அதில் நெப்போலியன் பாத்திரமும் அவரின் உறவினர்களும் மிகுந்த மனிதாபிமானகளாகவும் தேவர் ஜாதியை சேர்ந்த விருமாண்டிக்கும் உதவி செய்பவர்களாகவும் அதனால் தன் உயிரை இழப்பவர்களாகவும் காட்டியிருப்பார். அவர்கள் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த வைணவர்கள்.

கமலின் இந்த வைணவப் பெருமை அய்யங்கார்களின் ஆதிக்கஜாதி பெருமையாகதான் பதிவாகிறது. அதன் மறைமுக வடிவமே நாயுடு (நாயக்கர்) அடையாளம்.
அதன் முழு வடிவம்தான் ‘சபாஷ் நாயுடு’.

தசவதார பல்ராம் நாயுடு பாத்திரத்தை விரிவாக்கி, ஆந்திராவிலிருந்து வந்தவர் என்கிற பின்னணியில் தெலுங்கு கலந்த தமிழ் உச்சரிப்பில் வசனம பேச வைத்து கதை சொல்லப்பட்டால்;
தமிழ் நாட்டில் தமிழர்களாக வாழும் நாயுடு சமூகத்தினருக்கு நெருக்கடியான சூழலை அது உருவாக்கும்.

ஏற்கனவே இனவாதிகள் நாயுடுகளைத் தெலுங்கர் என்று அவதூறு கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தப் படம் அந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றும்.

அது மட்டுமல்ல, தலித் விரோதமும் ஜாதிவெறியும் கொண்ட சூழலில் இதுபோன்ற ஜாதி பெயர்களில் படம் வருவது, மோசடியானது. ஜாதிகளுக்கு எதிராகப் போராடிய பெரியார் பிறந்த மண்ணில் இது அநீதியானது. இதை அனுமதிக்கக் கூடாது.

எந்த ஜாதியின் பெயரிலும் திரைப்படம் எடுப்பதை இனியும் அனுமதிப்பது, ஜாதிய தாக்குதல்களை ஊக்குவிப்பதாகும்.
அதுபோக, ‘பள்ளர் மகன். பறையர் மகன். அருந்ததியர் மகன்’ என்று படம் எடுக்க முடியாதபோது, மற்ற ஜாதிகளின் பெயரில் படம் எடுப்பது சமூக விரோதம்.

‘எனக்கு ஜாதி பின்னணி கிடையாது’ என்கிற கமல், ’சபாஷ் சக்கிலியர்’ பெயர் வைப்பரா?
*
‘ஜனனம்’ இதழின் ஆசிரியர் நண்பர் முத்துராமலிங்கம் (Muthu Ramalingam) கேட்டுக் கொண்டதற்காக மே 19 தேதி எழுதியது. நன்றி முத்து.

கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு

‘அரசியலை விட்டு போறேன்..’

‘எவனாவது ஒருத்தன் அரசியல விட்டு போகாதீங்ன்னு.. சொல்லுவான்னு பாத்தா… பயபுள்ளைங்க போகும்போதுகூட அசிங்கமா திட்டி வழியனுப்புதுங்க.. ரொம்ப திட்டாதீங்க.. அப்புறம் திரும்பி வந்துடுவேன்’
*

உங்களையெல்லாம் அறிவாளி ன்னு சிறப்புக் கட்டுரை எழுத வைச்ச பத்திரிகையாளர்கள் மாதிரி வெவரமில்லாதவர்கள் அல்ல மக்கள்;
தெளிவானவர்கள்.

ஆமாம், இப்படி ஒருத்தர் இருப்பதே மக்களுக்குத் தெரியாதே. அப்புறம் எதற்கு ‘அரசியலில் இருந்து வெளியேறுவதாக’ அறிக்கை.
உங்கள ஆதரிக்கிற அந்த வெவரமான 4 பத்திரிகையாளர்கள் கவனத்திற்கா? இத வெச்சும் விளம்பரமா?

*
ஜுனியர் விகடனில் ‘திராவிடர் இயக்க எதிர்ப்பு’ தொடர் எழுதியதாலேயே உங்களை ‘தலைவர்’ என்று ஜுனியர் விகடனும் நீங்களும் இன்னும் 3 பேரும் கருதலாம்.

ஆனால் அதனாலேயே மக்களும் உங்களுக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு நினைக்கிறதும்.. அப்புறம் கோச்சிக்கிட்டு ‘அரசியலை விட்டு போறேன்..’ என்று மக்களை வசைப்பாடுவதும்..

இதைக் கோமாளித்தனம் என்று கூட சொல்ல முடியாது. மக்களை மூடர்களாக கருதுகிற திமிர். மனநோய்.

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு …

ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..

அதிமுக ‘ரெட்டி’ அமைச்சர்

தனிநபர்களுக்கு பின் இருந்த ஜாதி பட்டங்களை ஒழித்த தமிழ்நாட்டில்; திரு. பாலகிருஷ்ண ரெட்டி. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜாதி பட்டத்துடன் ஒரு அமைச்சரே. பண்பாட்டு அரசியலில் தமிழகம் 50 வருடம் பின்னோக்கி.
ஜாதி ஒழிப்பு பேசுகிறவர்கள் மட்டுமல்ல, இனவாதம் பேசுகிறவர்கள் கூட‘கமுக்கமா’ இருக்காங்களே என்ன காரணம்?

கணவன் துணையில்லாமல்..

‘கணவன், ஆண் துணையில்லாமல் குழந்தைகளை தனியாகவே வளர்க்கும் தாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.

தந்தை பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.’
கணவனை பிரிந்து வாழும் பெண், தன் மகளுக்கு பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பித்தப் போது,தந்தை பெயர் கேட்டு அவமானப்படுத்திய, ஆணாதிக்க பாஸ்போர்ட் நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதி மன்றம் அளித்தத் தீர்ப்பில்.

இது எல்லாத் துறைகளிலும் வரவேண்டும். கணவனற்ற பெண்களை அவமானப்படுத்துகிற எல்லா தந்தை சட்டங்களையும் உடைத்து நொறுக்கி பாலின ஆதிக்கமில்லாத சட்டமாக மாற்ற வேண்டும்.

22 May at 07:40

பெரியாரிய பயணமாக அமைந்தது

13235425_1208264625850561_3923910172422156023_o

13181220_1197461493597541_584730875_n
13268251_10206420584255511_921737011546111898_o
சிங்கபூரிலிருந்து மலேசியாவிற்குச் சுற்றலாதான் சென்றோம். ஆனால், நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்று மாலையே கருத்தரங்கம் ஏற்பாடு செய்துவிட்டார்கள் திரு. நாக. பஞ்சு அவர்களைத் தலைவராகக் கொண்ட மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தினர்.

அதைவிடச் சிறப்பாகப் பெரியார் பெரும் தொண்டர் விருது கொடுத்து என் பெரியாரிய பணியை வாழ்த்தி கவுரப்படுத்தினார்கள். இந்த விருதைப் பெறும் முதல் மலேசியர் அல்லாதவர் நான் என்பது கூடுதல் பெருமைக்குரியது.

அய்யா நாக. பஞ்சு நேரில் தன் மகளுடன் வந்து கருத்தரங்கத்திற்கு அழைப்பு கொடுத்து, பகுத்தறிவு பயணமாக முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். எங்கள் அனைவரையும் சிறப்பாக உபசரித்தார்.

மூத்த பெரியார் தொண்டர் அய்யா ரெ.சு. முத்தையா அவர்கள், நான் விவாதங்களில், மேடையில் பேசுகிற முறை, பல இடங்களில் நான் பேசிய விசயங்களை எல்லாம் நினைவில் கொண்டு மேடையில் பாராட்டிப் பேசியது எனக்கு இன்னொரு விருது.

என்னுடன் வந்த தோழர்களையும் மேடையில் அழைத்துக் கவுரவித்தது அவர்களின் பேரன்பை வெளிப்படுத்தியது.
இந்தக் கருத்தரங்கம் நடப்பதற்கு முதல் காரணமாக இருந்த தோழர் கவிமணி, கூட்டத்திற்கு வரும்போது எனக்கொரு அழகிய டி. சர்ட் வாங்கி வந்தார். அதை அணிந்து கொண்டுதான் பேசினேன்.

மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் முனைவர் பெரு. அ. தமிழ்மணி அவர்களும் பொதுச்செயலாளர் திரு. த.சி. அழகன் அவர்களும் பகுத்தறிவு களஞ்சியம், தமிழ்மறை களஞ்சியம் நூல்களை எனக்குப் பரிசளித்தனர்.

மலேசிய சுற்றுலா பெரியாரிய பயணமாக அமைந்தது பெரும் மகிழ்ச்சி. நன்றி அனைவருக்கும்.

சிறப்பான சுயமரியாதை திருமணம்

WhatsApp-Image-20160518
WhatsApp-Image-20160518 (1)

WhatsApp-Image-20160518 (2)
‘மக்கள் எல்லோரும் எப்போது வந்து சேருகிறார்களோ.. அப்போது திருமணம்’ நல்லநேரம் பார்ப்பதற்கு பதில் மற்றவர் நேரத்திற்கு மதிப்புக் கொடுத்து நடந்த சிறப்பான சுயமரியாதை திருமணம். அதுவும் எல்லோருக்கும் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில். 15-5-2016

திருநெல்வேலி வள்ளியூரில் துர்காதேவி – பன்னீர் செல்வம் திருமணத்தை, நான் தலைமையேற்று உறுதிமொழி வாசித்து நடத்தி வைத்தது மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துகள். மணமகன் டாக்டர் அம்பேத்கர் பெரியார் அரசியல் கண்ணோட்டம் கொண்டவர். மணமகள் Phd மாணவி.

இறுதியான கருத்துக் கணிப்பு

‘என்னங்க இப்படி பண்ணீட்டிங்க.. போடலன்னா.. உங்க ஓட்டு வீணா போயிடுங்க…’
போட்டாலும் வீணாதான் போ..போது.
16 May at 19:01

இறுதியான கருத்துக் கணிப்பு
பி.ஜே.பி போன்ற மதவாதக் கட்சிக்கு மட்டுமல்ல, நேரடியான ஜாதிக் கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் முடிவு, முடிவு கட்டும்.

2 மணிக்குக் கட்சி ஆரம்பித்து 3 மணிக்கு முதல்வராக ஆசைப்பட்ட, பேராசை பேர்வழிகளுக்கும் இது முதல் தேர்தல் மட்டுமல்ல, கடைசித் தேர்தலும் என்பதையும் அறிவிக்கும்.

நாட்டாம சொம்ப தூக்கிக்கிட்டு வந்துடுறாங்க

‘என்ன நீங்க போயும் போயும் கருணாநிதியை ஆதரிக்கிறீங்க..’
ஆமாம். நான் கருணாநிதியை ஆதரிக்கிறேன். நீங்க எல்லாம் காரல் மார்க்ஸ், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா வை ஆதரிக்கிறீங்க.
*

கண்ட கழிசடைகளெல்லாம் ‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் பெரியாரை இழிவாக அவதூறு செய்யும்போது மூடிக்கிட்டு இருக்கிற ‘முற்போக்காளர்கள்’; பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திமுக வை ஆதரித்தால் உடனே தீவிர பெரியாரிஸ்ட் போல,
‘இது பெரியாருக்கு செய்யும் துரோகம். நீங்கள் கை கூலி, இனி பெரியாரை பேச உனக்கு யோக்கியதை இல்லை’ என்று புகையிலையை மென்னபடி, தங்கள் நாட்டாம சொம்ப தூக்கிக்கிட்டு வந்துடுறாங்க.

திராவிட இயக்கம் இல்லை என்றால் காமராஜர் இல்லை

20 நிமிடம். ஜாதி பிண்ணனி கொண்ட சிவாஜியை விட, ஜாதி பின்னணியில்லாத எம்.ஜி.ஆர். தான் வெற்றிப் பெற்றார். நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்றக் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியுறும்.

திராவிட இயக்கம் இல்லை என்றால் காமராஜர் இல்லை. விஜயகாந்திற்கு நன்றி.

scooty திட்டம் மக்களுக்கு அல்ல. tvs அய்யங்காருக்கு

‘வெற்றி பெற்றால் பெண்களுக்கு tvs scooty’ என்று கம்பெனி பெயரோடு அறிவிக்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை.

டெண்டர் முறையெல்லாம் கிடையாதோ.
தேர்தல் வாக்குறுதியிலேயே ஊழல்.
tvs scooty’ திட்டம் மக்களுக்கு அல்ல. tvs அய்யங்காருக்கு.