12 நாளா?

4 நாட்களாகத் தொடர்ந்து வேலை, போனில் பேசிய தோழர்களிடமும் விரிவாக பேச முடியாதளவிற்கு.

ஏன்?

நாளையிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து வெளியூர்.

12 நாளா?

ஆமாம். திருச்சி திலிப்பிடம் (Thilip Kumarr) போன மாதம் ஒரு நாள் ‘நான் குற்றலாமே போனதில்லை’ என்றேன். உடனே அவர் 29 தேதி இரவு ரயிலுக்கு டிக்கெட் போட்டு அனுப்பி விட்டார்.
கொல்லிமலைக்குப் போனோமே அதே குரூப்.

திலிப், கனிவண்ணன், ஆண்டிராஜ், சந்திரன், பஞ்சலிங்கம் இவர்களுடன் ஏழுமலையும் இன்னும் 3 நண்பர்களும். நான் போகும் அதே வண்டியில் இன்று இரவு 2 மணிக்குத் திருச்சியில் ஏறிக்கொள்வார்கள்.

நாளையும் நாளை மறுநாளும் குற்றாலமும் சுற்று வட்டாரமும். கொல்லிமலையோ, குற்றாலமோ எதுவாக இருந்தால் என்ன? தோழர்கள் துணையிருந்தால் எல்லா ஊருமே கொண்டாட்டம்தான். மீட்டிங்கெல்லாம் இல்லாமல் இப்படிப் பயணமாகி ரொம்ப நாளாயிற்று.

2 தேதி காலை கோவை. என் மீது பேரன்பு கொண்ட சிவகுமார் யு.எஸ். ல இருந்து வந்திருக்கான். அவனோடு இருபதற்கும் என் அன்புற்குரிய மற்ற தோழர்களைச் சந்திப்பதற்கான பயணம் மட்டுமே.

ஆனால், பிறகு முடிவானது, 2 தேதி மாலை உடுமலைபேட்டையில் கருத்தரங்கம். 6 ஆம் தேதியே திரும்புவதாக இருந்தேன். பிறகு 9 – 10 தேதிகளில் சத்தியமங்கலத்தில் பெரியாரியல் கருத்தரங்கம்.

எல்லாத்தையும் முடிச்சிட்டு ஒரேடியா 12 தேதிதான் திரும்புறதா இருக்கேன். விபத்து நடந்து எனக்கு எதுவும் ஏற்படாமல் இருந்தால் கண்டிப்பாக 11 தேதி வரைக்கும் இருப்பேன்.

என்ன மலையா ஏறப்போற? விபத்து நடக்க.

ஆமாம். மலையும் ஏறுவேன். சொல்லியிருக்காங்க மலை ஏறலாம்ன்னு.

யாரு?

புல்லட்டிலேயே நாக்பூர் வரை சென்று வந்த அஞ்சாநெஞ்சன் பாலசந்தர்,(Bala Chander) உலகம் சுற்றும் வாலிபன் வெங்கட்,(Venkat Raman) நடிகர் முரளி மாதிரி என்றும் மாணவனாக இருக்கிற பல விதங்களில் நிழற்படங்கள் எடுத்து கலக்குற டென்னிஸ். (தமிழ் டெனி) பத்தாததுக்குக் காட்டுக்குப் போய்ப் படம் எடுக்குற குமணனும் (Kumanan Maruthamuthu ) இருக்காபோல. கண்டிப்பா காட்டுக்கு போவோம்.

சொல்ல முடியாது. காந்திபுரம், பூ மார்க்கெட், சாய்பாபா காலனியை சுத்தி காண்பிச்சிட்டு, ‘இந்தப் பகுதி எல்லாம் ஒரு காலத்தில காடாதான் இருந்ததது தோழர்’ என்று சொன்னாலும் சொல்வார்கள்.
‘பாத்துவாங்க இங்கதான் ஒரு காலத்துல புலி நடந்ததுன்னு’ கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டிலேயே டச்சிங்கோடு சொல்ற ஆட்கள்தான்.

மாப்பிளை ஆகபோகிற கார்த்தி (Karthik AP) என்னுடன் உடுமலைபேட்டை வருவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். என்னுடைய பேச்சை கேட்பதற்காக என்று அவர் சொல்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல. பொண்ணு அந்த ஊர்.

ஆக, ஒரு வாரம் கோவை, கோவையைச் சுற்றிய பகுதிகளில் தான் நட மாட்டம். நான் சென்னைக்குப் பிறகு அதிக நாட்கள் தங்கியது கோவைதான். காரணம், அந்த ஊரல்ல. என் இனிய நண்பர்கள்.

ஆக, நாளை குற்றாலத்தில் குளிக்கலாம் என்று ஆர்வமாகக் கிளம்பினால், ‘அதிகத் தண்ணீர் வருவதின் காரணமாக அருவியில் குளிப்பதற்குத் தடை’ என்று செய்தி சொல்கிறது.

என்னதான் நாம விரும்பினாலும் நமக்கு மேல ஒருத்தன் இருக்கான். அவன் என்ன செய்கிறானே அதுதான் நடக்கிறது. மனிதர்கள் நாம என்ன செய்ய முடியும்?

அட மழையைச் சொன்னேங்க.

கொலைகாரன் முஸ்லிமாகவோ தலித்தாகவோ இருந்துவிடக் கூடாது. இருந்து விட்டால்..

கொலை, திருட்டு போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் ஜாதி இந்துக்களாக ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தால், அதை யாரும் அவர்களின் ஜாதியோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. அவர் என்ன ஜாதி என்பதை கூட வெளியில் சொல்வதில்லை.

மாறாக அவர் தலித்தாக இருந்துவிட்டால், அடுத்த நொடியே அவர் ஜாதி அடையாளப்படுத்தப்பட்டுவிடும். தனி கிரிமினலை தாண்டி பிரச்சினையை அப்பாவியான ஒட்டு மொத்த தலித் மக்களையும் கிரிமினல்களாகச் சித்திரிகிற முறைக்கு மாற்றி விடுவார்கள்.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாவரசு என்ற மாணவனைக் கொலை செய்த நபர், தலித் என்று வலிந்து அடையாளப்படுத்தியது அப்போது தினமணி.
இதுபோன்ற ஜாதி அடையாளங்களை வேறு எந்த ஜாதி கிரிமனல்களுக்கும் அது சொன்னதில்லை. தலித்தல்லாத ஜாதி உணர்வுதான் ஊடகங்களின் பொது விதி.

காவல் நிலையத்தில் கூடக் கிரிமினல் ஜாதி இந்துவாக இருந்தால், நாலு அடி அடிக்கிற போலிஸ், அதே நபர் தலித்தாக இருந்துவிட்டால் எட்டு அடி அடிக்கும்.
நாலு அடி கிரிமினல் நடவடிக்கைக்கு. நாலு அடி தலித் என்பதற்காக.

இதுபோலவே தான் இஸ்லாமியர்களும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். கிரிமினல் முஸ்லிமாக இருந்தால் உடனே ஒட்டுமொத்த முஸ்லிகளையும் கிரிமினல்களாக அடையாளப்படுத்தி,
பிறகு அவர்கள் தேசத்துரோகிகளாகி சர்வதேச தீவிரவாதிகளாகவும் மாறிவிடுகிறார்கள்.

சுவாதியை கொடூரமாகக் கொலை செய்தவன் முஸ்லிமாகவோ, தலித்தாகவோ தற்செயலாகக்கூட இருந்து விடக் கூடாது என்ற பதட்டம் எனக்கு இருக்கிறது.
இருந்து விட்டால்,

ஏற்கனவே தலித் விரோத, இஸ்லாமிய எதிர்ப்புத் தலைவிரித்தாடுகிற சமூகத்தில், இந்தக் கொலை ஒரு கிரிமினல் நடவடிக்கையிலிருந்து, பெருவாரியான மக்களுக்கு எதிரான மோசமான அரசியல் நிலைக்கு மாற்றப்பட்டுவிடும்.
மாற்றுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் ஜாதி வெறியர்களும், மத வெறியர்களும்.

ஒரு வேளை அப்படி இருந்து விட்டால், நாம் கவனமாகக் கையாள வேண்டும். தலித், இஸ்லாமியர்களைக் கிரிமினல்களுக்கு ஆதரவாக மடை மாற்றும் வேலையைச் செய்வார்கள் ஜாதி, மத வெறியர்கள்.

அந்தச் சதிக்குப் பலியாகாமல் எக்காரணம் கொண்டும் கிரிமினல்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையைக் கூடப் பயன்படுத்தாமல்,
மத, ஜாதி வெறியர்களை அம்பலப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை.

தூக்குல போடறதுல என்ன தப்பு?

தூக்குல போடறதுல என்ன தப்பு?

சுவாதியை கொடூரமாகக் கொலை செய்தவனைத் தூக்குல போடறதுல என்ன தப்பு?

தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை, கோகுல் ராஜை கொன்ற ஜாதிவெறியனை, கர்பிணி வயிற்றைக் கிழித்துக் குழந்தையோடு கொன்ற மதவெறியனை, சங்கரராமன் அய்யரை கொன்ற கொலைக்காரனை;

இவர்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் குற்றங்கள் குறையுதோ இல்லையோ, கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும்.

கொலைகாரன் முஸ்லிமாகவோ தலித்தாகவோ இருந்துவிடக் கூடாது. இருந்து விட்டால்..

அடப்பாவிகளா.. இப்படி நிக்கறதுக்கு 1½ கோடி ரூபாயா?

FE_2506_MN_26_Cni4588
1½ ரூபா தன் கை காசை கொடுத்து நெரிசலில் பஸ்ஸில் டிக்கெட் வாங்குறதுக்கு எங்கள் பெண்கள் படற பாடு சொல்லிமாளாது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்விலும் உழைப்போடு வாழ்கிற எங்களுக்கு சோம்பேறிகளெல்லாம் ஒண்ணா சேந்து யோக செய்யச் சொல்லிட்டு,
1½ கோடி ரூபாயை கொடுத்து, நடிகையின் பின் பதுங்கி இருக்கிறதுக்குப் பேர்தான் யோகாவா? எவன் அப்பன் வீட்டுப் பணம்?

2 ரூபா கொடுத்தா போதும் இத விடச் சூப்பரா நிப்பேன் நான்.
ஆனால், இவுங்க பின்னால இருந்து பாக்கறதுக்கு நான் பொருத்தமா இருக்க மாட்டேனே? அதுக்குதானே 1½ கோடி போல.

உண்மையிலேயே அங்க யோகாவா நடக்குது?
பின்னால ஒருத்தர் சும்மா உட்கார்ந்திருக்கார். இன்னொருத்தர் பேப்பர் படிப்பது போல நடிக்கிறார்.

‘என்னடா நடக்குது அங்க’

பெரியார் எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டனம்

13269292_972550436175746_8929070096570504500_n

13413682_972550879509035_972040577309436584_n
பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். ஜுன் 6 திங்கட்கிழமையாக இருந்தும் நிறையப் பொதுமக்கள் சாலையின் ஓரங்களிலும் தனது வாகனங்களில் அமர்ந்தபடியே கூட்டம் முழுவதையும் கேட்டார்கள்.

ஆற்றல் மிக்கப் பேச்சாளர் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அய்யா துரை. சந்திரசேகரன் அவர்கள், என்னைக் கடைசியில் பேச வைத்து எனக்கு முன் அவர் பேசினார். நேரப் பற்றக்குறையின் காரணமாகத் தன் பேச்சை சுருக்கி எனக்குக் கூடுதல் நேரம் கொடுத்தார்.

திராவிடர் கழகத்தின் மூத்த தோழர்கள், தலைவர்கள் எனக்கு எல்லா மேடைகளிலும் முக்கியத்துவம் தருகிறார்கள். இது என் பெரியார் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்.

புதுச்சேரி திராவிடர் கழகத்தினர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை வடிமைத்து நடத்தினார்கள். என்னை அழைத்து எப்படியும் புதுச்சேரியில் சிறப்பான கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என்று ஒரு ஆண்டாக முயற்சித்த திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் ச.முகேஷின் பிறந்த நாள் அன்று.

அது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்பு சுயமரியதை திருமணம் முடித்த மூத்த பெரியார் தொண்டர்களான புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, மகளிரணி தலைவர் விலாசினி தம்பிதியரின் மணநாளும் அன்று.

பிறந்த நாள், மண நாள் வாழத்துகளுடனும்
பெரியார், திராவிடர் இயக்க எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டத்தோடு கூட்டம் நடந்தது.

ஏராளமான புதிய இளைஞர்கள் கலந்து கொண்டர்கள்.
இடைநிலை ஜாதியின் பார்ப்பன அடிமைத் தனத்தையும் தலித் விரோத மனோபாவத்தையும் அம்பலப்படுத்திப் பேசியதை கை தட்டி வரவேற்றார்கள்.

அந்த கை தட்டல் ஒலி, பெரியார் கொள்கைகளை வரவேற்கும் விதமாகவும் பெரியார் எதிர்ப்பாளர்களுக்கு கண்டனமாகவும் ஒலித்தது.

சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’

‘யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை’

தலித் மக்கள் வீடுகளுக்குப் பா.ஜ.க. வை சேர்ந்த ஜாதி இந்துக்கள், ஒரு வேளை சோற்றுக்காகப் பயணமாகிறார்கள்.

18 June at 10:11 · Yesterday at 13:08 ·

சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’

ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனால், விருந்துக்கு அழைப்பவர்களுக்குதான் செலவு. சாப்பிடறவனுக்கு எந்தச் செலவும் இல்லை. லாபம்தான்.

தர்மத்திற்குச் சோறு போட்டாலும், ‘அய்யா நீங்க நல்லாயிருக்கனும்’ என்று வாழ்த்துகிற பண்பு பிச்சைக்காரர்களிடமும் இருக்கிறது. அதுகூட இவர்களிடம் இல்லை.

இப்படியிருக்க.. ‘தலித் வீட்ல சாப்பிடுறோம்’ என்ற அறிவிப்போடு,
சோறு போடறவங்கள இழிவாகவும் சாப்பிடுகிறவர்களை உயர்வாகவும் பார்க்கிற இந்த ஈனத்தனமான செய்கை, உலகில் எங்கும் இல்லாத மோசடி.

அது மட்டுமல்ல தலித் வீட்டில் சாப்பிடுவதினாலேயே ஒருவருக்கு ‘தலித் மக்களை இழிவாகப் பார்க்காத மனோபாவமோ தலித் விரோத ஜாதி உணர்வோ இல்லை’ என்று அர்த்தமாகிவிடாது.

படிநிலையில் தன் ஜாதிக்குக் கீழ் உள்ளவர்கள் வீட்டில் சாப்பிடுவதையே இழிவாக நினைக்கிற மனோபாவம் பார்ப்பனர், பிள்ளை, முதலி, செட்டி, நாயுடு போன்ற ஆதிக்க ஜாதிகளிடம் தான் உண்டு. இவர்கள் நாடார், வன்னியர், கள்ளர், மீனவர் வீடுகளில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுவார்கள்.

அப்படியென்றால் தலித் மக்களை எப்படிப் பார்ப்பார்கள்?
வன்னியர், கள்ளர் சமூக மக்கள் தன்னைப்போன்ற வர்க்க நிலையில் இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடுவது இன்று இயல்பானதாக மாறி வருகிறது. நேரடியான தீண்டாமை மறைந்திருக்கிறது. ஆனால், தலித் மக்கள் மீதான வன்முறை குறையவில்லை.

‘ரெண்டு நாளைக்கு முன்னால.. எங்க வீட்ல வந்து சாப்பிட்டுப் போன என் நண்பன்.. தன் ஜாதிக்காரர்களோடு சேர்ந்து வந்து என்னை வீட்டை இடித்துத் தள்ளியிருக்கிறான்’
என்று தன் சொத்துக்கள் சூரையாடப்பட்டதை விடத் தன் நண்பனின் செயல் குறித்துக் கண்ணீர் மல்க கூறினார் தர்மபுரியில் வன்னிய ஜாதி உணர்வாளர்களால் தாக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்.

ஆக, தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் உணவருந்துவதையே ஒருவர் பெருமையாகக் கருதுவதே ஆதிக்க ஜாதி மனோபாவம் தான், தலித் விரோத நடவடிக்கைதான்.
இவ்வளவு ரணகளத்திலேயும் சில காமெடிகள் நடந்து கொண்டிருக்கிறது.

திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’ என்று தன்னுடைய மாபெரும் தியாகத்தை அறிவித்திருக்கிறார்.
அதெல்லாம் இருக்கட்டும். உங்க வீட்டில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுகிற பலர் உங்க கட்சியில இருக்கிறாங்க.. மொதல்ல அவுங்கள கூப்பிட்டு உங்க வீட்ல் சாப்பிட வையுங்க.

20 June

‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’

‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’
என்ன ஒரு துல்லியமான பார்வை.
‘டேய் தொரை அது என்ன அந்த அண்டாவுல ஓரமா ஒரு கறை’
13 June at 18:39 ·

‘அவன் தமிழனில்லை. இவன் என் ஜாதிக்காரனில்லை’ என்கிற ஆட்கள் எல்லாம் எதுக்கு ‘சே‘ விற்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்?
14 June at 23:29 ·

‘நெருப்புடா.. பருப்புடா..’ என்று ரஜினிக்குக் கொடுத்த பில்டப், ஒரு வழியா இந்த இரண்டு நாளில் முடிவு வந்திருக்கு.
‘மகிழ்ச்சி’
15 June at 23:49 ·

‘அம்பேத்கர் என்ன தமிழரா? அவர் டீ சர்ட் எதுக்கு போடனும்?’
‘சே’ டி சர்ட் போட்டுக்கிட்டே என்னிடம் இதை கேட்ட தலித் வீரோத ஜாதி வெறியனெல்லாம் கூட,

இப்போ என்னைய கண்டிச்சிட்டு.. கபாலி படம் ஆதரவு மூலம் தன்னுடைய ‘தலித் ஆதரவு’ கணக்கு எழுதி, அப்படியே என்னை பழி தீக்கிறாங்களாமா?
என்னா தந்திரம்?
15 June

எல்லா ஜாதிக்காரர்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு

நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன,
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா!
‪#‎கபாலி‬

Rajarajan RJ தன் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். இது ரஜினி ரசிகராக அவரே எழுதியது என்று நினைத்து அதற்குக் கீழ்,
‘ஒண்ணும் புரியல..உண்மையிலேயே ரஜினி பேசுனா மாதிரியே இருக்கு.’ அப்படின்னு நான் எழுதினேன்.

அதற்கு Rajarajan RJ ‘ மலேசியா கதைக்குப் பொருந்தும் வரிகள் போல’ என்று எழுதியிருந்தார்.

அதற்குப் பிறகுதான் அது கபாலி படப் பாடல் என்று எனக்குத் தெரியும். பிறகு நான்,
‘முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதாலும் முதல் வரிசொல்லுகிற செய்திக்கு இரண்டாவது வரி எதிர் நிலையில் இருப்பதாலும்.. மலேசியாவிற்கு மட்டுமல்ல…
மங்கோலியாவிற்குக் கூடப் பொருந்தாது.’
என்று எழுதினேன்.

உடனே ஒரு ஆளு ரஞ்சித் தலித் அதான் உங்களுக்குப் புடிக்கல. இன்னொரு ஆளு இவன் ஒரு மதி கெட்டவன்.
இந்த ரஜினி ஆதரவு மனோபாவம் குறித்து என் பக்கதில் எழுதினேன்.

அதற்கு ‘இவன் ஒரு பாடு’ அப்படிங்கிறார் ஒருத்தர். இன்னொருத்தர் எங்கம்மாவை தேவடியாளக்கி கோபத்தைத் தீர்த்துகிறார். மற்றொருவரோ என் பொண்டாட்டி நடத்தை குறித்துக் கடுமையா விமர்சிக்கிறார்.

இன்னொரு நபரோ என் முப்பாட்டன் கோவணம் கட்டல என்பதைக் கண்டித்துத் தனிபதிவு எழுதி எனக்கு டெக் செய்கிறார். இன்னும் கடுமையான எச்சரிக்கைகள். மிரட்டல்கள். பெரியார் பற்றி இழிவான வார்த்தைகள்.

தலித் விரோத சினிமாகக்கள் குறித்து அதிகம் எழுதியவன் நான் மட்டும் தான். ஆனால் என் பக்கத்திலேயே ஒருவர் வந்து தேவர், கவுண்டர் படங்களைப் பற்றி எழுதுவியா? என்று எழுதுகிறார். இதையெல்லாம் ஒரு பத்துபேரு லைக் செய்கிறார்கள்.
கவுண்டர், தேவர் மட்டுமல்ல சபாஷ் நாயுடு வரை நான் கண்டித்து எழுதியபோது ஆகா.. ஓகோ..ன்னு என்னைப் பாராட்டியவர்களும் அடக்கம்.

நான் கேட்டது ரஜினியை மட்டுமல்ல அல்ல, ரஞ்சித்தையும் தான்னு இருக்கட்டுமே. அதுக்கு இதான் உங்க பதிலா?
என் முப்பாட்டன் கோவணம் வரைக்கும் பேசுன ஆட்கள், ஒரு வரி அந்தப் பாடல் வரிக்கு விளக்கம் கொடுத்திருக்கலாமே?

வெறும் ஜாதி உணர்வை மட்டும் வைச்சி அரசியல் பண்ணா.. எல்லா ஜாதிக்காரர்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு.

13 June at 10:00

‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’

என்ன ஒரு துல்லியமான பார்வை.

‘டேய் தொரை அது என்ன அந்த அண்டாவுல ஓரமா ஒரு கறை’

கபாலிடா..

தேர்தலின் போது விஜயகாந்தை விமர்சனம் பண்ணாலே ஒரு குரூப் ‘தலித் வீரோதி’ – ‘தலித் துரோகி’ பட்டங்களை வாரி வழங்கியது.

இப்போ அடுத்து ரஜினிகாந்த். காபாலி படம் வெளியாகி ஓடுறவரைக்கும் ரஜினி போன்ற கழிசடைகளை விமர்சனம் பண்ணா.. அதே குரூப்பு அதே பட்டங்களை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறது.

அரசியல் அறிவோடு இருப்பவர்களை விடவும் பிழைப்புவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் தான் இங்கே சகல விஷயங்களையும் தீர்மானிக்கிறார்கள்.

ரெடி.. ஸ்டார்ட்..

*

பெரியாரை தலித் விரோதி ன்னு திட்டித் தீர்க்கிற கும்பல்; விஜயகாந்திற்கு பிறகு ரஜினிகாந்தை தலித் தோழன் மாதிரி கொண்டாடி மகிழ்கிறார்கள்.

என்ன கொடும சார் இது?

எம்.ஜி.ஆரின் கண்ணியம் ரஜினியின் அற்பம்; லிங்கா ரிசல்ட்

Beef பக்கோடா ஸ்டால்

ஒரு வழியா நாளை (11) மாலை புத்தகக் காட்சிக்கு போகலாம்னு இருக்கேன். வேடிக்கை பார்க்கதான். அதுக்காகத்தானே அதுக்குக் காட்சின்னு பேரு வச்சிருக்காங்க.

நாளை யாரெல்லாம் அங்க வருவீங்க?

அடுத்த ஆண்டாவது ஒரு ஸ்டால் எடுக்கலாம்ன்ணு இருக்கேன்.
Beef பக்கோடா ஸ்டால். அனுமதி குடுப்பாங்களா?