எம்.ஆர்.ராதா சமாதிக்கே சமாதி

13319895_10206479348964592_5821073637055254482_n

IMG_20160529_181512
‘திருச்சியில், சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருக்கிறது எம்.ஆர். ராதா நினைவிடம். போய்ப் பாத்துட்டு வரலாம்’ என்றார் நண்பர் திலிப்.

சரின்னு நான், கனிவண்ணன், சந்திரன், திலிப் 4 பேரும் 29 மாலை சங்கிலியாண்டபுரம் போனோம். நினைவிடத்தைத் தேடு தேடுன்னு தேடினால்.. அது அந்தப் பகுதியின் பிரம்மாண்டமான அப்பார்மெண்டாக மாறியிருந்தது.

நினைவிடம், சிலை அகற்றப்பட்டு அந்த இடம் பூங்காவிற்காகவோ நிச்சல் குளத்திற்காகவோ காத்திருப்பது போல் தோன்றியது.
நினைவிடத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை விற்று இருக்கலாம்..
ஆனால் ‘சமாதி இருக்கும் இடத்தில் யாரும் வீடு வாங்க வரமாட்டார்கள்’ என்ற அபசகுனம் குறியீடால் பகுத்தறிவாளனின் நினைவிடம் அகற்றப்பட்டிருக்கலாம்.

தந்தையின் சமாதியைக்கூட விற்றுவிட்ட வாரிசுகள்.
திலிப் சொன்னார், ‘என்னங்க எம்.ஆர்.ராதா சமாதிக்கே சமாதி கட்டிடாய்ங்க..’