எல்லா ஜாதிக்காரர்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு

நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன,
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா!
‪#‎கபாலி‬

Rajarajan RJ தன் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். இது ரஜினி ரசிகராக அவரே எழுதியது என்று நினைத்து அதற்குக் கீழ்,
‘ஒண்ணும் புரியல..உண்மையிலேயே ரஜினி பேசுனா மாதிரியே இருக்கு.’ அப்படின்னு நான் எழுதினேன்.

அதற்கு Rajarajan RJ ‘ மலேசியா கதைக்குப் பொருந்தும் வரிகள் போல’ என்று எழுதியிருந்தார்.

அதற்குப் பிறகுதான் அது கபாலி படப் பாடல் என்று எனக்குத் தெரியும். பிறகு நான்,
‘முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதாலும் முதல் வரிசொல்லுகிற செய்திக்கு இரண்டாவது வரி எதிர் நிலையில் இருப்பதாலும்.. மலேசியாவிற்கு மட்டுமல்ல…
மங்கோலியாவிற்குக் கூடப் பொருந்தாது.’
என்று எழுதினேன்.

உடனே ஒரு ஆளு ரஞ்சித் தலித் அதான் உங்களுக்குப் புடிக்கல. இன்னொரு ஆளு இவன் ஒரு மதி கெட்டவன்.
இந்த ரஜினி ஆதரவு மனோபாவம் குறித்து என் பக்கதில் எழுதினேன்.

அதற்கு ‘இவன் ஒரு பாடு’ அப்படிங்கிறார் ஒருத்தர். இன்னொருத்தர் எங்கம்மாவை தேவடியாளக்கி கோபத்தைத் தீர்த்துகிறார். மற்றொருவரோ என் பொண்டாட்டி நடத்தை குறித்துக் கடுமையா விமர்சிக்கிறார்.

இன்னொரு நபரோ என் முப்பாட்டன் கோவணம் கட்டல என்பதைக் கண்டித்துத் தனிபதிவு எழுதி எனக்கு டெக் செய்கிறார். இன்னும் கடுமையான எச்சரிக்கைகள். மிரட்டல்கள். பெரியார் பற்றி இழிவான வார்த்தைகள்.

தலித் விரோத சினிமாகக்கள் குறித்து அதிகம் எழுதியவன் நான் மட்டும் தான். ஆனால் என் பக்கத்திலேயே ஒருவர் வந்து தேவர், கவுண்டர் படங்களைப் பற்றி எழுதுவியா? என்று எழுதுகிறார். இதையெல்லாம் ஒரு பத்துபேரு லைக் செய்கிறார்கள்.
கவுண்டர், தேவர் மட்டுமல்ல சபாஷ் நாயுடு வரை நான் கண்டித்து எழுதியபோது ஆகா.. ஓகோ..ன்னு என்னைப் பாராட்டியவர்களும் அடக்கம்.

நான் கேட்டது ரஜினியை மட்டுமல்ல அல்ல, ரஞ்சித்தையும் தான்னு இருக்கட்டுமே. அதுக்கு இதான் உங்க பதிலா?
என் முப்பாட்டன் கோவணம் வரைக்கும் பேசுன ஆட்கள், ஒரு வரி அந்தப் பாடல் வரிக்கு விளக்கம் கொடுத்திருக்கலாமே?

வெறும் ஜாதி உணர்வை மட்டும் வைச்சி அரசியல் பண்ணா.. எல்லா ஜாதிக்காரர்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு.

13 June at 10:00

‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’

என்ன ஒரு துல்லியமான பார்வை.

‘டேய் தொரை அது என்ன அந்த அண்டாவுல ஓரமா ஒரு கறை’