சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’

‘யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை’

தலித் மக்கள் வீடுகளுக்குப் பா.ஜ.க. வை சேர்ந்த ஜாதி இந்துக்கள், ஒரு வேளை சோற்றுக்காகப் பயணமாகிறார்கள்.

18 June at 10:11 · Yesterday at 13:08 ·

சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’

ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனால், விருந்துக்கு அழைப்பவர்களுக்குதான் செலவு. சாப்பிடறவனுக்கு எந்தச் செலவும் இல்லை. லாபம்தான்.

தர்மத்திற்குச் சோறு போட்டாலும், ‘அய்யா நீங்க நல்லாயிருக்கனும்’ என்று வாழ்த்துகிற பண்பு பிச்சைக்காரர்களிடமும் இருக்கிறது. அதுகூட இவர்களிடம் இல்லை.

இப்படியிருக்க.. ‘தலித் வீட்ல சாப்பிடுறோம்’ என்ற அறிவிப்போடு,
சோறு போடறவங்கள இழிவாகவும் சாப்பிடுகிறவர்களை உயர்வாகவும் பார்க்கிற இந்த ஈனத்தனமான செய்கை, உலகில் எங்கும் இல்லாத மோசடி.

அது மட்டுமல்ல தலித் வீட்டில் சாப்பிடுவதினாலேயே ஒருவருக்கு ‘தலித் மக்களை இழிவாகப் பார்க்காத மனோபாவமோ தலித் விரோத ஜாதி உணர்வோ இல்லை’ என்று அர்த்தமாகிவிடாது.

படிநிலையில் தன் ஜாதிக்குக் கீழ் உள்ளவர்கள் வீட்டில் சாப்பிடுவதையே இழிவாக நினைக்கிற மனோபாவம் பார்ப்பனர், பிள்ளை, முதலி, செட்டி, நாயுடு போன்ற ஆதிக்க ஜாதிகளிடம் தான் உண்டு. இவர்கள் நாடார், வன்னியர், கள்ளர், மீனவர் வீடுகளில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுவார்கள்.

அப்படியென்றால் தலித் மக்களை எப்படிப் பார்ப்பார்கள்?
வன்னியர், கள்ளர் சமூக மக்கள் தன்னைப்போன்ற வர்க்க நிலையில் இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடுவது இன்று இயல்பானதாக மாறி வருகிறது. நேரடியான தீண்டாமை மறைந்திருக்கிறது. ஆனால், தலித் மக்கள் மீதான வன்முறை குறையவில்லை.

‘ரெண்டு நாளைக்கு முன்னால.. எங்க வீட்ல வந்து சாப்பிட்டுப் போன என் நண்பன்.. தன் ஜாதிக்காரர்களோடு சேர்ந்து வந்து என்னை வீட்டை இடித்துத் தள்ளியிருக்கிறான்’
என்று தன் சொத்துக்கள் சூரையாடப்பட்டதை விடத் தன் நண்பனின் செயல் குறித்துக் கண்ணீர் மல்க கூறினார் தர்மபுரியில் வன்னிய ஜாதி உணர்வாளர்களால் தாக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்.

ஆக, தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் உணவருந்துவதையே ஒருவர் பெருமையாகக் கருதுவதே ஆதிக்க ஜாதி மனோபாவம் தான், தலித் விரோத நடவடிக்கைதான்.
இவ்வளவு ரணகளத்திலேயும் சில காமெடிகள் நடந்து கொண்டிருக்கிறது.

திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’ என்று தன்னுடைய மாபெரும் தியாகத்தை அறிவித்திருக்கிறார்.
அதெல்லாம் இருக்கட்டும். உங்க வீட்டில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுகிற பலர் உங்க கட்சியில இருக்கிறாங்க.. மொதல்ல அவுங்கள கூப்பிட்டு உங்க வீட்ல் சாப்பிட வையுங்க.

20 June