பெரியார் எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டனம்

13269292_972550436175746_8929070096570504500_n

13413682_972550879509035_972040577309436584_n
பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். ஜுன் 6 திங்கட்கிழமையாக இருந்தும் நிறையப் பொதுமக்கள் சாலையின் ஓரங்களிலும் தனது வாகனங்களில் அமர்ந்தபடியே கூட்டம் முழுவதையும் கேட்டார்கள்.

ஆற்றல் மிக்கப் பேச்சாளர் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அய்யா துரை. சந்திரசேகரன் அவர்கள், என்னைக் கடைசியில் பேச வைத்து எனக்கு முன் அவர் பேசினார். நேரப் பற்றக்குறையின் காரணமாகத் தன் பேச்சை சுருக்கி எனக்குக் கூடுதல் நேரம் கொடுத்தார்.

திராவிடர் கழகத்தின் மூத்த தோழர்கள், தலைவர்கள் எனக்கு எல்லா மேடைகளிலும் முக்கியத்துவம் தருகிறார்கள். இது என் பெரியார் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்.

புதுச்சேரி திராவிடர் கழகத்தினர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை வடிமைத்து நடத்தினார்கள். என்னை அழைத்து எப்படியும் புதுச்சேரியில் சிறப்பான கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என்று ஒரு ஆண்டாக முயற்சித்த திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் ச.முகேஷின் பிறந்த நாள் அன்று.

அது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்பு சுயமரியதை திருமணம் முடித்த மூத்த பெரியார் தொண்டர்களான புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, மகளிரணி தலைவர் விலாசினி தம்பிதியரின் மணநாளும் அன்று.

பிறந்த நாள், மண நாள் வாழத்துகளுடனும்
பெரியார், திராவிடர் இயக்க எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டத்தோடு கூட்டம் நடந்தது.

ஏராளமான புதிய இளைஞர்கள் கலந்து கொண்டர்கள்.
இடைநிலை ஜாதியின் பார்ப்பன அடிமைத் தனத்தையும் தலித் விரோத மனோபாவத்தையும் அம்பலப்படுத்திப் பேசியதை கை தட்டி வரவேற்றார்கள்.

அந்த கை தட்டல் ஒலி, பெரியார் கொள்கைகளை வரவேற்கும் விதமாகவும் பெரியார் எதிர்ப்பாளர்களுக்கு கண்டனமாகவும் ஒலித்தது.