நமஸ்தே மதுரை

WhatsApp-Image-20160724

‘அண்ணே மதுரையில் போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் அலுவலக முகப்பில்என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் சென்று கண்டிக்க வேண்டும்’ என்று தம்பி அமர்நாத் (Amarnath Pitchaimani) சொன்னார்.

மதுரையிலிருந்து பொதுக்கூட்டத்திற்காக அத்திப்பட்டி செல்லும் வழியிலிருந்த அந்த நிறுவனத்திற்கு 23 ஆம் தேதி மாலை திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடர் கழகத் தோழர்களுடன் சென்றோம். உடன் தோழர் அன்புமதியும் (Anbu Mathi) வந்திருந்தார்.

‘மோடி, ராகுல் வந்தாலே வணக்கம் மதுரை என்றுதான் சொல்கிறார்கள். இது முறையல்ல.’ என்று எங்கள் எதிர்ப்பை தெரிவித்து, அதை ‘வணக்கம் மதுரை’ யாக மாற்ற வேண்டும் என்றோம். ‘மாற்றுவதாக’ உறுதியளித்தார் அதன் மேலாளர்.

25 July at 19:02

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

கபாலி எதிர்ப்பு; நன்றி பேராசிரியர் சுபவீ – இயக்குநர் ரஞ்சித்

கபாலி; திரைப்படத்தைத் தாண்டியும் அதைக் கடுமையாக எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் ‘காந்தி-அம்பேத்கர் உடை ஒப்பீடு வசனம்’தான்.

‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைச்சோம்’ என்று நுற்றாண்டு அடிமைப் புத்தியேடு பணக்கார கவுண்டராக நடித்த ரஜினிகாந்தைப் பார்த்து மக்கள் பாடுவதுபோல் வந்தபோது, வராத கோபம்,
‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்குப் புரியாது’ என்ற தெளிவான அரசியல் கண்ணோட்டத்திற்கு வருகிறது என்றால்,
இன்னும் நீங்கள் ‘தேவர் காலடி மண்ணே..’ என்ற ஜாதிய பின் புல திரைப்பட உணர்வுகளிலிருந்து மீளவில்லை என்பதையே காட்டுகிறது.

பெரியார் எதிர்ப்பிற்காகவே ‘தலித் ஆதரவு அரசியல்’ பேசுகிற பார்ப்பனர்கள், இந்த முறை இடைநிலை ஜாதி உணர்வு நிலையில், ‘தலித் எதிர்ப்பு அரசியல்’ பேசுகிறார்கள்.

கோட் – சட்டை வசனத்திற்காகவே பார்ப்பன ஜாதி உண்ர்வு, இடைநிலை ஜாதிக்கார்களின் முதுகில் சவாரி செய்கிறது.
‘சொல்லுங்க கவுண்டர் வாள்..’ சொல்லுங்க முதலியார் வாள்’ ‘சொல்லுங்க தேவர் வாள்’ என்று சொல்லுகிற பார்ப்பனர்களால்;

ஒரு தலித் எவ்வளவு செல்வாக்குப் பெற்றவராக இருந்தாலும் ‘சொல்லுங்க பறையர் வாள்’ ‘சொல்லுங்க பள்ளர் வாள்’ ‘சொல்லுங்க சக்கிலியர் வாள்’ என்று ஒருபோதும் சொல்லமுடியாது.
இதுதான் ஜாதி சிஸ்டம் இயங்கும் நிலையும், இயக்கம் நிற்குமிடமும்.

ஜாதிய அபிமானிகளை கொந்தளிக்க வைக்கும், ‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல்’ – இந்த வரியை விரிவாக விளக்கி அய்தாண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறவன் நான், என்பதால் கூடுதல் பெருமை கொள்கிறேன்.
இதைப் பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்த இயக்குனர் ரஞ்சித்துக்கு நன்றி.

திருமதி கீதா. மத்தியரசு நிறுவனத்தில் அதிகாரி. என் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவர். நெய்வேலியில் வசிக்கிறார். தஞ்சை, பாண்டி என்று நான் பேசும் கூட்டங்களுக்கும் நீண்ட தூரம் பயணம் செய்து வந்து கேட்டு பாராட்டி விட்டுப்போவார்.
அம்பேத்கர் – பெரியார் அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்.

இன்று காலை போனில் அழைத்திருந்தார். ‘கபாலி பட எதிர்ப்பாளர்களைக் கண்டித்தும், வசனம் குறித்தும், உங்களைப் பற்றியும் புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசினார்’ என்றார்.

நான் எழுத ஆரம்பித்த புதிதில் என்னை உற்சாகப்படுத்தியதிலிருந்து இன்று தொலைக்காட்சிகளிலும் மேடைகளிலும் என் எழுத்துக்களை, என் பேச்சை மேற்கோள் காட்டி என்னை ஒரு அறிஞனைப் போல் கொண்டாடி மகிழ்பவர் பேராசிரியர் சுபவீ.

நன்றி பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே.

கபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

தருண் விஜய் வள்ளுவரை ஆதரித்ததே அவருக்கு செய்த அவமானம்தான்

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’

கபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

கபாலி: காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்கு புரியாது. (பெரியார் உடை?)
*
அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு, காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.-2011 அக்டோபர்.
*
டாக்டர் அம்பேத்கருடைய உடல் மொழியும் எப்போதும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும். காந்தி, நேரு போன்ற தலைவர்களை சந்திக்கும் படங்களில் கம்பீரமும், அலட்சியமும் வெளிப்படும்.

எல்லோரையும் குற்றவாளிகளாக பார்க்கிற தொனியும், என்னை விட பெரிய அறிவாளி எவன் இருக்கான் இங்கே, என்கிற ஆயிரம் ஆண்டு கோபம் அவருடைய ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிப்படும்.

கோட் சூட் அணிந்து, கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிற அந்த கம்பீரம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
‘காந்தி, நேரு, பட்டேல் இன்னும் அனைத்து ஆதிக்க ஜாதிக்காரர்கள் நீங்க எல்லோரும் ஒரு அணி. நான் தனி. மோதிப் பாக்கலாமா? தில்லு இருக்கா?’ என்று சவால் விட்டு கூப்பிடுவதுபோலவே இருக்கும் அவர் கம்பீரம்.

அந்த எதிர்ப்பு குறியீட்டின் வடிவமாகத்தான் அவருடைய உடையும் இருக்கும். அவருடைய உடல் மொழியும், அவரின் எழுத்துக்களைப்போல் கூர்மையானது.

காந்தி உடை அவருடைய சிந்தனைகளைப்போலவே செயற்கையாக இருக்கும். அது அவருக்கு தேவையான உடை என்பதை விடவும், அவர் போட்டுக் கொண்ட வேடத்திற்கு பொருத்தமான உடை என்கிற பாணியில்தான் இருக்கும்.

அதனால்தான், கடும் குளிர் கொண்ட டெல்லி போன்ற ஊர்களில் இருக்கும்போது கூட அந்தக் குளிருக்கு ஏற்ற உடை உடுத்தாமல், தன் வேடத்திற்கு ஏற்ற அரை ஆடை உடுத்தினார். காரணம் ‘கன்டினியுட்டி காஸ்ட்யூம்’ என்பதினால்தான்.

‘ஏழைகள் உடுத்துகிற உடை’ என்று காரணம் சொன்னார் காந்தி. ஆனால், ஏழைகளை தன் வசப்படுத்துகிற பாணியில்தான் அதை உடுத்தினார். அதனால்தான் பிர்லா மாளிகையில் இளைப்பாறினார்.
அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு என்றால், காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.

காந்தி எளிமையாக வாழ்வதற்கு நிறைய செலவு செய்தார். உண்மையில் எளிமை என்பது, ஒரு இடத்தில் எது எளிதில் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்வதுதான்.

இஸ்லாமியர் வீட்டு திருமணத்தில், பிரியாணி மட்டும்தான் கிடைக்கிறது என்றால் அங்கு அதை உண்பதுதான் எளிமை. மாறாக, அங்கு இல்லாத தயிர்சாதம் தான் நான் சாப்பிடுவேன் என்றால், அந்த நேரம் அதை வாங்குவதற்கு நிறைய செலவு செய்யவேண்டும். அதுபோல் எளிமைக்காக நிறையச் செலவு செய்தவர் காந்தி.

பெரியார்தான் தனக்கென்று எந்த சுயமதிப்பும் கொள்ளாதவர். பெரியார் தன்னை ஒரு தமிழனாகவோ, இந்தியனாகவோ, தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதுபோல் கன்னடனாகவோ, தன்னை ஒரு பார்ப்பனரல்லாதவனாகவோ, தன்னை ஒரு ஆணாகவோ கூட அவர் மதிப்பிட்டது கிடையாது. அது அவர் உடுத்தும் உடையில் எப்போதும் பிரதிபலிக்கும்.

எது சவுகரியமாக இருக்கிறதோ அதுதான் அவருக்குரியது. வீட்டில் இருக்கும்போது ஒரு உடை. வெளியில் இருக்கும்போது வெறு ஒரு உடை என்கிற பாணி ஒருபோதும் அவரிடம் இல்லை.
வீட்டிலும் லுங்கிதான். டெல்லியில் ஜின்னா வீட்டு விருந்தில் கலந்து கொண்டபோதும் லுங்கிதான்.

நல்ல உடை, கெட்ட உடை என்றெல்லாம் அவர் யோசித்ததாகவே தெரியவில்லை.மக்களின் சுயமரியாதைக்கு பாடுபட்ட அவர் ஒருபோதும் தன் சுயமரியாதை குறித்து அக்கறை எடுத்துக் கொண்டதே இல்லை.

தன் மீது வீசப்பட்ட செருப்பையும், அணிவிக்கப்பட்ட மாலையையும் ஒரே மாதிரியாக பார்த்தவர்.
துறவிகள் பற்றற்ற நிலை என்கிறார்களே அது பெரியாரிடம் மட்டும்தான் இருந்திருக்கிறது. தன்மதிப்பு அற்ற தலைவர் பெரியார்.

அண்ணல் அம்பேத்கரின் உடை ஆதிக்க எதிர்ப்பு குறியீடு. காந்தியின் உடை ஏழ்மையை தன் செல்வாக்கிற்கு பயன்படுத்திய பாணி, (கிழிந்த உடையில் இருக்கும் கிழவியை கட்டிப்பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த எம்.ஜி.ஆர். பாணி) பெரியாரின் உடை இயல்பானது, எளிமையானது.
**
2011 அக்டோபர் மாதம் தங்கம் இதழில் எழுதியது.
**
2 ஆண்டுகளில் 4 பதிப்புகள் வந்த என்னுடைய ‘காந்தி நண்பரா? துரோகியா?’ என்ற நூலிலிருந்து..

‘நெருப்புடா’

201607210534037380_Protests-rock-Gujarat-after-Hindu-vigilantes-brutally-beat_SECVPF
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிற குஜராத்தில் உனா என்ற இடத்தில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காகத் தலித் மக்கள், இந்துமத ஜாதிவெறி கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகினர்.

அந்தக் கொடூரத்தைக் கண்டித்து, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி குஜராத்தை நிலைகுலைய வைத்தனர் தலித் இளைஞர்கள்.

பட்டேல் சமுகத்தினர் நடத்திய அநீதியான போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகள், தலித் மக்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டதை இருட்டடிப்பு செய்கின்றனர்.

ஆனாலும் தீ யை காகிதம் கொண்டு மூட முடியுமா?
‘நெருப்புடா’

மலையாள தேவரும் தமிழ் நாயரும்

சுவாதி படுகொலையை ஜாதியோடு தொடர்புபடுத்துவது மோசமானது.

மற்ற ஜாதிக்காரர்கள் மீது நடத்துகிற தனிமனித தாக்குதல்களையும் தலித் மக்கள் மீது நடத்துகிற ஜாதிய தாக்குதல்களையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு.

அது தலித் விரோத ஜாதிய கண்ணோட்டம் தான்.
சுவாதி மீது நடத்தப்பட்டிருக்கிற கொடூரம், பெண்களுக்கு எதிரான வன்முறை.

பெண் ஆணுக்கான நுகர்வுப் பொருளாகப் பார்க்கப்படுகிற புத்தியின் கொடூர வன்முறை வடிவம்.
2 July at 13:27

‘கேரள நாட்டிளம் பெண்களுடனே..” என்ன ஒரு கவி உள்ளம். அழகியல்.
‘கேரள நாட்டிளம் ‘ஆ’ண்களுடனே..” ச்சீ இவளெல்லாம் ஒரு பொம்பளையா. நடத்தக் கெட்டவள்.
7 July at 13:27

மலையாள தேவரும் தமிழ் நாயரும்

கே. பாலாஜி. பல படங்கள் தயாரித்தவர். சிவாஜி படங்களை எடுப்பதற்காகவே தயாரிப்பாளர் ஆனவர். மலையாளி. ஆனால் மலையாளி என்தபற்காக எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட தயாரிக்காதவர்.

சின்னப்பா தேவர். ஏராளமான எம்.ஜி.ஆர் படங்களை தயாரித்தவர். எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

பெயரிலேயே ‘தேவர்’ என்ற ஜாதி அடையாளமும் தன் நிறுவனத்திற்கு ‘தேவர் பிலிம்ஸ்’ என்று பெயரும் வைத்தவர்.

ஆனால், தன் ஜாதிக்காரரான சிவாஜி யை வைத்து ஒரு படம் கூட தயாரிக்காதவர்.

‘மர்மம்’ விசாரணையில்தான் இருக்கிறது; சுவாதியின் படுகொலையில் அல்ல

கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதில் எந்தச் சிக்கலும் இருப்பதாய் தெரியவில்லை. மிக எளிதாகக் குற்றவாளியை அடையாளம் காணக்கூடிய வழக்கு.

யாருக்கும் தெரியாமல், காட்டில் வைத்து நடந்ததல்ல சுவாதியின் படுகொலை. பகல் நேரத்தில் அதிகம் மக்கள் கூடுகிற பொது இடத்தில் நடந்தது.

கொலைக்காரன் எந்த முகமூடியும் அணியாமல் பதட்டமில்லாமல் கொலை செய்துவிட்டு, அதன் பிறகு‘ம்’ அவன் முகத்தை மறைக்காமல்தான் சென்றிருக்கிறான்.

அதனால் அவனை அடையாளம் காண்பது, அங்கிருந்த கடைக்காரர்களுக்கு மட்டுமல்ல ரயிலுக்குக் காத்திருந்தவர்களுக்கும் எளிது. அப்படியிருக்க அந்தச் சாட்சிகளைக் குறித்து ஊடகங்கள் உட்படக் கள்ள மவுனம் காப்பது ஏன்?

சுவாதியின் செல்போன் முக்கியச் சாட்சி. அது கொலை செய்யப்பட்டவனால் கொண்டு செல்லப்பட்டது. அது கை பற்றப்பட்டிருக்கிறதா?

எளிமையாகக் குற்றவாளியை அடையாளம் காணக்கூடிய இந்த வழக்கு மேலும் சிக்கலாக நகர்த்தப்படுவதுதான் மர்மமாக இருக்கிறதே தவிர. சுவாதியின் படுகொலையல்ல.
11 July at 18:32

வில் x வேல் ; ஆரியர் x திராவிடர் / திருக்குறள்

WhatsApp-Image-20160625

‘அம்பு’ ஆரியர் குறியீடு. மறைந்திருந்து தாக்குவதற்குப் பயன்படுவது வில். மகாபாரதம், ராமாயணம் வில்-அம்பு முக்கியப் பாத்திரம். அரிதான காட்டுயிர்களை வில்-அம்பு தான் வேட்டையாடி அழிக்கும்.

‘வேல்’ திராவிடக் குறியீடு. நேருக்கு நேர் நின்று சண்டையிடுவது. வேட்டையாடுவதிலும் வேல் அரிதான உயிர்களைக் கொல்லாது.

‘கான் முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ – வள்ளுவர்.

காட்டில் ஓடும் முயலை குறி தவறாமல் எய்த அம்பை ஏந்துதலை விட, வெட்ட வெளியல் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

தொடர்புக்கு 90923 90017 – 97508 71000 – 91594 30004