ஒட்டகம் வெட்டத் தடையும் இன்னும் சில சிக்கல்களும்

‘ஒட்டகம் வெட்டத் தடை’ ஒட்டக குறியீடு முஸ்லிம்.

மோடி ஆதரவு – ரவிக்குமார் – ஷாநவாஷ் – விசிக.

சபாநாயகர் அதிமுக மாவட்ட செயலாளரைப்போல்தான்..

வைரமுத்து கண்ணீரும் ஆலோசனையும். ஓட்டப்பந்தயம். லாபம்

கொழிக்கும் கொசு வணிகம். சாந்திக்குத் தடை. இந்தியா தங்கம் வாங்க ஒரே வழி.

‘சட்டையை கழட்டுனது, கோட் போட்டது’

என்னை நினைவுகூர்ந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு. நன்றி.

குழந்தைகளின் கிருஷ்ண ஜெயந்தியும் பெண் சிசுகொலைகளும்

சொல்லி வச்சா மாதிரி மிக அதிகமாகப் பள்ளிக்கூடங்களில் மாறுவேட போட்டி என்றால், குழந்தைகளுக்குக் கிருஷ்ணன் வேசம்தான். ( புதிய இந்துக்களும், `நவீன’ இலக்கியக் கூமுட்டைகளும், முற்போக்கு மூடர்களும்கூட)

‘வெண்ணைத் திருடி தின்றான்..’ என்று பெருமை பொங்க பாட்டுக்கு ஆட வைச்சிட்டு, பிறகு ‘பக்கத்து பையனோட ரப்பரை திருடினான்’ என்று தண்டிப்பது.

பத்தாம் வகுப்பை தாண்டுவதற்குள், படிக்கிற பொண்ணுங்கள கைய புடிச்சி இழுத்தான்னா.. அசிங்க அசிங்கமா திட்றது. ‘ஒழுங்கு’ நடவடிக்கை எடுக்கறது.

கிருஷ்ண வேசம் போட்டால் பொண்ணுங்க கைய புடிச்சி இழுக்காமா.. கையெடுத்தா கும்புடுவான்.

*
கிருஷ்ணன் – கண்ணன் வழிபாடு பெண் குழந்தைகளுக்கு எதிரான மனநிலை.

கிருஷ்ண ஜெயந்தியின் சிறப்பே ஆண் குழந்தையின் சேட்டைகளை, சுட்டித் தனத்தை வியந்து போற்றுகிற, ரசிக்கிற மனோபாவத்தைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துவதுதான்.

வீட்டில் கிருஷ்ணனின் பாதம் வரைந்து ‘கண்ணன் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான் . வரப்போகிறான்’ பிறக்கப் போவது ஆண் குழந்தைதான் என்று முடிவாகி மகிழ்கிற மனோபாவம்.

ஒரு காலின் கட்டை விரலை வாயில் வைத்து, ஆணுறுப்பு தெரிவது போல் அமர்ந்த நிலையில் கண்ணனின் படம்;
குழந்தை ‘ஆண்’ என்கிற பெருமிதமும். ‘ஆண் குழந்தை’ அப்படி இருப்பதில் தவறல்ல என்கிற குறியீடும்.

‘குழந்தைகளை அப்படிதான் பார்க்க முடியும்? அதிலென்ன தவறு?’ என்று அதை அரசியலற்று அன்பாகப் பார்க்க முயற்சிக்கலாம்.
ஆனால், அந்த அன்பை குழந்தைகள் என்பதற்காகப் பெண் குழந்தைகளையும் அப்படி இருப்பதில் என்ன தவறு? என்ற கட்டத்திற்கு அது செல்வதே இல்லை.

ஏனென்றால், எந்தப் பெண் கடவுள்களின் குழந்தை வடிவத்தையும் பிறப்புறுப்பு தெரிவது போல் பார்க்க முடியாது. அவ்வளவு ஏன்? பெண் கடவுள்களைக் குழந்தை வடிவத்தில் பார்ப்பதே முடியாத காரியம்.

ஆக, ‘கிருஷ்ணனை போல் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்’ கிருஷ்ண வழிபாட்டில் முதன்மை பாத்திரம் வகிக்கிறது. இந்த ஆண் உளவியல் பெண்களின் விருப்பமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

விருப்புவது ஆண் குழந்தைதான். பிறப்பது பெண்ணாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்கிற ‘பெருந்தன்மை’தான் இங்கே இருக்கிறதே தவிர, விருப்பம் முதன்மையாக இல்லை.

அதானல் தான் பிறந்த பிறகு, பெண் குழந்தைகளுக்கும் கிருஷ்ணன் வேடம் போட்டு அழகுப் பார்த்து ஆறுதல் அடைகிறார்கள்.

‘குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், கிருஷ்ணனின் பிறந்த நாளில் விரதம் மேற்கொண்டால் கிருஷ்ணனே மகனாக அருளிப்பான்’ என்பது ஆணாதிக்க ஆ‘ண்’மீக நம்பிக்கை.

இப்படியாக, ஆண் குழந்தைதான் சிறப்பானது என்கிற கருத்தை தீவிரமாகப் பரப்புகிற, புனிதப்படுத்துகிற ‘கிருஷ்ண ஜெயந்தி’ யை கொண்டாடவதற்கு அரசு விடுமுறை விட்டு விட்டு;
இன்னொருபுறம், திருவண்ணாமலையில் ஸ்கேன் சென்டரில், பெண் சிசுக்களை ‘கருகலைப்பு’ செய்த பெண்ணைக் கைது செய்வது, அரசின் கையாலாகாத்தனம்.

‘பெண் குழந்தை வேண்டாம்’ என்று முடிவு செய்கிற பெண்களும், அதைச் செய்து முடிக்கிற பெண்ணும் அல்ல குற்றவாளி;
அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிற குடும்பமும் குடும்பத்திற்கு அந்த கொடூரத்தை புனிதமாக்கிய இந்த ஆணாதிக்க ஆன்மீக பண்பாடுகளே காரணம்.

குற்றங்களோடு சேர்ந்து கும்மியடித்துவிட்டு குற்றவாளிகளாக சிலரை மட்டும் கை காட்டி ஒதுங்குவது கோமாளித்தனம் மட்டுமல்ல, கொடூரம்.

‘ஒரு வௌம்பரம்..’ – ‘என்னடா வௌம்பரம்…’

அந்த சினிமாக்காரங்கதான் அப்படி செய்யிறாங்க..’
*
‘நாளை மற்றுமொரு நாளே’ என்றுதான் என் பிறந்தநாளை கடந்து செல்வேன். நானாக யாரிடமும் ‘எனக்கு அன்று பிறந்தநாள்’என்று சொன்னதுமில்லை. அதன் காரணத்திற்காகவே facebook ல் என் பிறந்த தேதியை நான் குறிப்பிட்டவும் இல்லை.

ஆனாலும் என் பிறந்த தேதியை எப்போதோ என்னிடம் தற்செயலாகக் கேட்டறிந்த நண்பர்கள், தோழர்கள் இந்த ஆண்டு அதை நினைவில் வைத்திருந்து facebook ல் தங்கள் பக்கத்தில் வாழ்த்து சொல்லி நேற்று (17) பதிவிட்டிருந்தார்கள்.

சில மணிநேரங்களில் பல தோழர்கள் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி facebook முழுவதும் வாழ்த்துகளால் நிரப்பி விட்டார்கள். பிறகு அது வாட்ஸ் அப், தொலைபேசி என்று நேற்று ஆரம்பித்த வாழ்த்து மழை இன்றுவரை முடிந்தபாடில்லை.

பழகிய தோழர்கள் மட்டுமல்ல, நான் இதுவரை பார்த்திராத பல தோழர்கள் ஏதோ பெரிய தலைவர், பிரமுகரைப் போல் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னது, எனக்குக் கூச்சமாகப் போய் விட்டது.

இந்த வாழ்த்துகள் என் பிறந்தநாள் சார்ததுதான் என்றாலும் அது என் ஜாதி, மதம் என்ற பிறப்பு சார்ந்து வந்த வாழ்த்தல்ல, என் அரசியல் நிலைபாடு காரணமாகக் கிடைத்த வாழ்த்து.
இதை இப்படிப் புரிந்து கொள்கிறேன். ஜாதி, மதத்திற்கு வெளியிலிருந்து ஜாதி பின்னணியில்லாமல் ஜாதி எதிர்ப்பை பேசியதால் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்.

எதையும் யாரையும் ஆதரிப்பது எதிர்ப்பது என்பதை ஜாதிய பின்புலத்தோடே பார்க்கிற இன்றைய சூழலில்,
‘ஜாதிக்கு வெளியில் செயல்பட்டாலும் தோழர்களின் ஆதரவு பெருமளவில் கிடைக்கும்’ என்று எனக்கு உணர்த்திய, புரிய வைத்த, உற்சாகப்படுத்திய தோழர்களுக்குத் தனித் தனியாக நன்றி சொல்லவதானால் ஒரு வாரம் தாண்டி விடும் என்பதால்,

என் இனிய தோழர்கள் அனைவருக்கும் இதன் மூலம் ஓரே நன்றியாகச் சொல்லி விடுகிறேன். நன்றி.

‘புதியதலைமுறை’ என் கண்டனத்தை மறுத்து விளக்கம் தந்திருக்கிறார்கள்

மரியாதைக்குரிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு வணக்கம்,
நேற்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான ”விளிம்பின் விடுதலை” என்ற நிகழ்ச்சியில் தங்கள் பேட்டி திருத்தி வெளியிடப்பட்டதாக தாங்கள் முகநூலில் எழுதியுள்ள பதிவு குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளவன் என்கிற அடிப்படையில் இந்த பதிவை எழுதுகிறேன்

தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள முதல் விடயம் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற தலித் தாக்குதல்கள் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள் என்பது ஆனால் நிகழ்ச்சியின் தலைப்பே “விளிம்பின் விடுதலை” என்பது தான்.

70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதே நிகழ்ச்சியின் மையப் பொருள். அப்படி இருக்க பிரதமர் மோடி போன்ற ஒருவர் 70 ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களை சுடாதீர்கள் என்னை சுடுங்கள் என்றும் சொல்லும் இழி நிலையில் இந்த நாடும் சமூகமும் தலித் மக்களை வைத்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே பிரதமரின் அந்த உரையை முதலில் வைத்தோம்.

பிரதமரின் பேச்சு குறித்த எதிர்வினை பேட்டிகளின் தொகுப்பு அல்ல இந்த நிகழ்ச்சி. தங்களது முகநூல் பதிவிற்கு முந்தைய பதிவில் கூட தாங்களே தலித் மக்கள் விடுதலை அன்றும் இன்றும் என்று தான் குறிப்பிட்டிக்கிறீர்கள். ஆக நிகழ்ச்சியின் மையப் பொருள் மோடியின் உரையல்ல விளிம்பு நிலை மக்களின் நிலை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மேலும் 18 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் நிகழ்வில் களப்பணியாளர்கள் 15 பேரின் பேட்டிகளை பயன்படுத்தியுள்ளோம். அதில் சாதி இந்துக்களின் கண்ணோட்டம் மாறினால் மட்டுமே தலித் மக்களின் விடுதலை சாத்தியமாகும் என்று தாங்கள் மிக ஆணித்தரமாக பேசிய பகுதி அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எடிட் செய்தால் அந்த இடத்தில் WIPE எனப்படும் காட்சி மாற்றியை வைக்க வேண்டும் அப்படி உங்கள் பேட்டியில் ஒரு இடத்திலும் நீங்கள் காட்சி மாற்றியை பார்க்க முடியாது.

விளிம்பின் விடுதலை என்கிற நிகழ்ச்சி தலைப்பிற்கான வரைகலையை மீண்டும் ஒரு முறை பாருங்கள் அதில் மலக்குழியில் இருந்து ஒரு ராக்கெட் புறப்பட்டு செல்லும் இது தான் நிகழ்ச்சியின் இலக்கு.

மேலும் இனி என்னை நிகழ்ச்சிக்கு கூப்பிட மாட்டார்கள் என்றும் தாங்கள் பதிவிட்டு உள்ளீர்கள். விமர்சனங்களை முன் வைப்போருடன் என்றைக்கும் விவாதித்து அவர்களோடு இணைந்து பயணப்படவே இந்த 6 ஆண்டுகளில் புதிய தலைமுறை விரும்பியிருக்கிறது இனியும் விரும்பும், நீங்கள் சொன்னது போல் உங்களைப் போன்றோரை இழப்பது எங்களுக்கே இழப்பாகும்.

எங்களின் இந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளித்தால் தாங்கள் இதனை மீள்பதிவாக தங்கள் முகநூலில் வெளியிடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

– தியாகச் செம்மல்
உள்ளீட்டுப் பிரிவு ஆசிரியர் / நிகழ்ச்சி
*
//மோடியின் ஆட்சியில் நடைபெற்ற தலித் தாக்குதல்கள் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள்// என்று நான் எங்கேயும் குறிப்பிடவில்லை. ஏனென்றால் என்னிடம் அப்படிக் கேட்கவில்லை.

தலித் மக்களின் வாழ்க்கையை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு 3 நிலைகளில் அணுகியிருந்தேன். நிகழ்காலத்தில் மோடி ஆட்சியின் தலித் விரோதம் குறித்தும் பேசியிருந்தேன்.
பரவாயில்லை. இருக்கட்டும்.

இந்தக் கடிதத்தின் வார்த்தைகளில் இருக்கிற பொறுப்பிறக்காகவும் அன்பிற்காகவும் மீண்டும் வார்த்தைக்கு வார்த்தை லாவணி பாட விரும்பவில்லை.

ஆக, ஒரு பங்களிப்பாளரின் அதிருப்பதியை அலட்சிப்படுத்தாமல் பொறுப்புடன் பதில் சொன்னமுறை சிறப்பு. ஊடகத்துறையில் இப்படி ஒரு அணுகுமுறை புதுசு. தோழர் தியாகச் செம்மலுக்கு நன்றி.

அதற்காக இதில் சொல்லப்பட்ட விளக்கத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமல்ல. முழுவதுமாக மதிக்கிறேன்.
-வே. மதிமாறன்.

என்னை மோடியின் ஆதரவாளைனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்குக் கண்டனம்

என்னை மோடியின் ஆதரவாளைனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்குக் கண்டனம்.

புதியதலைமுறையில் இன்று (15.08.2016) இரவு 8.30 மணியிலிருந்து 9 மணிவரை ஒளிபரப்பான ‘விளிம்பு நிலை மனிதர்கள்’ நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை மையமாக வைத்து, அதற்கு வலு சேர்ப்பது போல் பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முற்போக்காளர்களையே மோடியின் ஆதராவாளர்களைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு சாட்சி நான் பேசும் போது ‘2000 ஆண்டுகளில் இந்த இரண்டு ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில்தான் மிக மோசமான தலித் வன்முறை நிகழ்கிறது’ என்று சொன்னதில் பா.ஜ.க என்று சொன்னதை நீக்கிவிட்டிருக்கிறார்கள்.

‘இந்து மன்னர்கள் மட்டும் இருந்தபோது கொடுமைப்படுத்தப்பட்ட தலித் மக்கள், வெள்ளைக்காரர்கள் வருகைக்குப் பிறகே அடையாளம் காணப்பட்டார்கள். மகாராஷ்டிரத்தில் இந்து பேர்ஷ்வா ஆட்சியின் மிகக் கொடூரமான தலித் விரோதத்தைச் சுட்டிக் காட்டி,
அதற்குப் பழி தீர்க்கதான் மகர் ஜாதி தலித் மக்கள் வெள்ளையர் ராணுவத்தில் பங்கெடுத்தனர்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் ‘மகர் ரெஜிமெண்ட்’ என்ற ஒன்று இருந்ததைக் குறிப்பிட்டிருந்தேன்.

‘மாட்டுக்கறி உன்பதை இழிவாக பார்த்து அவமானப்படுத்திய இந்துக்கள் மத்தியில், அதே மாட்டுக்கறி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் தலித் மக்களுக்கும் உறவை ஏற்படுத்தியது.
மாட்டுக்கறி சமைக்கத் தெரிந்தவர்கள் தலித் மக்கள் மட்டும்தான் என்பதால் அவர்களுக்கு உயரிய சமையல் கலைஞர்கள் வேலை கிடைத்தது.’ என்றும்

‘டாக்டர் அம்பேத்கரின் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்ற பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டும் தான் பேசப்படுகிறது. தலித் இயக்கங்களும் அப்படிதான் பேசுகின்றன.

ஆனால் பண்பாட்டு ரீதியாகத் தலித் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற செத்த மாட்டை அப்புறப்படுத்துவது, பிணம் எரி்ப்பது போன்ற இழிவான வேலைகளிலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதுதான் அவர்கள் மீதான வன்முறையைத் தடுக்கமுடியும். தலித் விடுதலையும் சாத்தியப்படும்.

அதற்கு அம்பேத்கரின் அரசியலான தீவிர இந்து மத எதிர்ப்பும், ஜாதி எதிர்ப்பும் செய்ய வேண்டும். இந்து மத எதிர்ப்பின் மூலமாகதான் டாக்டர் அம்பேத்கர் இடஓதுக்கீடு போன்ற பொருளாதார உரிமைகளையே பெற்றுத் தந்தார்’ என்று இந்து, ஜாதி எதிர்ப்புக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருந்தேன்.
‘இந்து’ என்கிற வார்த்தையே வராமல் பா.ஜ.க. பாணியில் தொகுத்திருக்கிறார்கள்.

‘கையல் மலம் அள்ளும் கொடுமையை வைத்துக் கொண்டு சுதந்திரதின வாழ்த்துகள் சொல்வது, அந்த மக்களை அவமானப்படுத்துவது. மலம் அள்ளும் கொடுமை இந்தியாவின் பிரதான பிரச்சினையாக மாற வேண்டுமென்றால், அது முதலில் ஒட்டுமொத்த தலித் இயக்கங்களின் பிரச்சினையாக மாற வேண்டும்.

ஆனால், அதற்கு எல்லாத் தலித் இயக்கங்களும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. துப்புரவு பணியில் ஈடுபடுகிற சமூக மக்களுக்கான இயங்கங்கள் மட்டும்தான் தொடர் போராட்டங்களை நடத்துகின்றன.

பாஜக அரசுக்கு எதிரான குஜராத் தலித் மக்கள் எழுச்சி தலித் இயக்கங்கங்கள் உட்பட்ட முற்போக்காளர்க்கும் வழி காட்டுகிறது’ என்றேன்.

இந்து மதம், பாஜக, மோடி, குஜராத் என்ற சொற்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கிறது. அதனால் என்னுடைய பேச்சு மிகச் சுருக்கமாக ஒளிபரப்பனாது.

நீண்ட நேரம் பேசிய விசிக தலைவர் திரு. திருமாவளவன், பேராசிரியர் சுப.வீ அவர்கள். திரு. புனிதபாண்டியன், இன்னொருத்தர் பேச்சில்கூட மோடி, பாஜக, இந்து மதம் குறித்த எந்தக் கண்டனங்களும் இடம் பெறவில்லை.

இப்படியும் சொன்னேன். ‘காந்தி, நேருவைப் போல் பொதுதலைவராக டாக்டர் அம்பேத்கர் என்று புரிந்து கொள்ளப்படுகிறாரோ, அன்றுதான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்’ –
இதையும் ஒளிபரப்பவில்லை புதியதலைமுறை.

மோடியின் கருத்தை முன் வைத்து அதற்கு வலு சேர்ப்பதுபோல், என் கருத்தை பயன்படுத்தி என்னை அவமானப்படுத்திய புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு என்னுடைய கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.

‘என்ன.. இனிமேல் என்னை அவர்கள் கூப்பிடமாட்டார்கள்?’
கூப்புடாட்டி போறாங்க.. எனக்கா இழப்பு?

வெட்கம்..

அன்று இஸ்லாமியர்களைக் கதற வைத்தார் மோடி. இன்று மோடியை கதற வைத்திருக்கிறார்கள் தலித் மக்கள்.

குஜராத் தலித் எழுச்சியில் மோடியும் மோடியின் கூட்டமும் சிதறுண்டு கதறுகிறது. கதவிடிக்கில் மாட்டிய எலி போல் கத்துகிற ஒலி, மோடியின் ‘தலித் கருணை’ யாகத் தமிழகத்தில் எதிரொலிக்கிறது.

மோடியை தலித் தோழனாகப் பார்க்கிற அளவிற்குத் தமிழகம் இவ்வளவு மோசமான அரசியல் களமாக மாறிவிட்டதே? இதுவா பெரியார் பிறந்த மண். அசிங்கம்.

12 August at 23:25

1000 ல் ஒருவன் – இன்றும் புதுசு

‘காஸ்டியும்’ வெறும் கலர் கலராக உடுத்துவதல்ல. காட்சியின் உணர்வை அழகுற சொல்வது.

சண்டைக் காட்சியில், அடிமையாக உழைக்கும் போது, கப்பலில் பயணிக்கும்போது, காதல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். உடுத்தும் உடைகள் அந்த உணர்வுகளை அள்ளித் தெளிக்கும்.

இன்னும் ஜெயலலிதா, நம்பியார் துணை நடிகர்கள் வரை அவர்களின் உடை இந்தப் படத்தில் அது தனி கலை.

கபாலியை விட அரை மணிநேரம் அதிகம்

13734931_1070836779674437_1957812941907095019_o ‘கபாலி படமே ரெண்டரை மணி நேரம்தான். நீங்க 3 மணிநேரம் பேசிட்டிங்க தோழர். அதுல கூட இடைவேளை விட்டாங்க.. நீங்க இடைவெளியே இல்லாமல் பேசினீங்க. சிறப்பான பேச்சு’
என்று என் பேச்சை வெகுவாகப் பாரட்டியும் பேசினார் தோழர் கார்க்கி.

‘சமத்துவக் கழகம்’ சார்பில் கோவையில் ஜுலை 31 அன்று நடந்த கருத்தரங்கத்தில் ‘ஜாதியின் தீவிரமும் முற்போக்காளரின் செயல்பாடும்’ என்ற தலைப்பில் 3 மணி நேரம் உரையாற்றினேன்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்து உரை முழுவதையும் கேட்ட தோழர்களுக்கு நன்றி.

‘நமஸ்தே கோவை’ யை மாற்றிய பெரியார் தொண்டர்

IMG_20160708_154313958
2 நாட்களுக்கு முன், (ஜுலை 26) மதுரையில் போக்ஸ் வேகன் கார் கம்பெனி அலுவலக முகப்பில் ‘நமஸ்தே மதுரை’ என்று எழுதியிருந்ததையும், தோழர்களுடன் அந்த அலுவலகம் சென்று அதைக் கண்டித்ததையும் எழுதியிருந்தேன்.

அதைப் படித்த கோவை தோழர் வழக்கறிஞர் பாலசந்தர், (Bala Chander) கோவையிலும் அந்த நிறுவனம் ‘நமஸ்தே கோவை’ என்று எழுதியிருப்பதைக் கண்டித்து, அதன் நிர்வாக மேலாளருக்கு தனது கண்டனத்தைத் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்.

பாலசந்தர் போக்ஸ் வேகன் கார் வைத்திருக்கிறார். நிர்வாக மேலாளரிடம் அதைச் சுட்டிக் காட்டி, ‘நமஸ்தே கோவை என்று எழுதியிருக்கிற உங்கள் கம்பெனியின் காரை வாங்கியதற்காக வெட்கப்படுகிறேன். அதை வணக்கம் கோவை என்று மாற்றுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

பொறுப்புள்ள நிர்வாக மேலளார், ‘நிச்சயம் மாற்றுகிறேன்’ உறுதியளித்தது மட்டுமல்லாமல், ‘நம்ஸ்தே கோவையை நீக்கி விட்டேன்’ என்று பாலசந்தருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

மகிழ்ச்சி. நன்றி நிர்வாக மேலாளருக்கும், என் அருமைத் தோழன் பாலசந்தருக்கும்.
ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்