நாடகத்திலிருந்து போர்குணத்திற்கு..

ரூபா நோட்ல மொதல்ல மாத்த வேண்டியது காந்தி படத்தைதான். அதற்குப் பதில் அரசியல் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர் படத்தைப் போடணும். ரைட்ஸ் கூட இருக்கு என்பதால் மட்டுமல்ல;

ஜாதி வெறியோடு தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறவன், அவர் படத்தைப் பயன்படுத்துவதே தீட்டாகி விடுவதாகக் கருதுகிறவன், அவர் சிலையை இடிக்கிறவன் இவனுங்க எல்லாம் அப்போ என்ன பண்ணுவானுங்க?

காந்தியின் ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற நாடகத்திலிருந்து தந்தை பெரியாரின், டாக்டர் அம்பேத்கரின் ‘ஜாதி ஒழிப்பு’ என்ற போர்குணத்திற்குப் போக;
காந்தியை முடித்துத் தலைவர் அம்பேத்கரை ரூபா நோட்டில் அச்சடிப்பது, பணமாக மட்டுமல்ல பண்பாட்டுக்கும் பயன்படும்.
11 November at 19:23 ·

கள்ளப் பணமல்ல..

கூலித் தொழிலாளியின் வார சம்பளத்தைப் பிளேடு போட்டு அறுத்தெடுத்தவன், கண்ணீர் மல்க பெருமையோடு சொல்றான்: ‘நான் கள்ளப் பணத்தைக் கைப் பற்றி விட்டேன்’ என்று.
13 November at 23:05

1979 ல் மொராஜி தேசாய் ‘1000 ரூபாய் நோட்டு செல்லாது’ என்று அறிவித்தார். அது வெற்றி பெற வில்லை. ஆனால் அதனால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை.

ஏனென்றால் அன்று 1000 ரூபாய் நடுத்தர வர்க்கம், தொழிலாளர்களின் சம்பளம் கிடையாது. மாதம் 500 ரூபாயே அதிகச் சம்பளம். பலர் 1000 ரூபாய் நோட்டை பார்த்ததே கிடையாது. 1000 அதிகார வர்க்கத்தின் சம்பளம்.

இன்று நிர்வாகத் திறமையற்ற அரசால் 500 மட்டுமல்ல 1000 ரூபாயும் மதிப்பற்றுக் கிடந்தது. ஆயிரம் ரூபாயை தவிர்த்து புழங்குவது தெருவில் மீன் விற்பவராலேயே முடியாது. அப்படியானால் அய்நூறு எவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தும்?

இந்த எளிய உண்மை ‘மோடி அரசுக்குத் தெரியாமல் இருக்கும்’ என்பதை நடிகர் சோ வே நம்ப மாட்டார். 500 ரூபாயையும் தடை செய்யதது, மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டது.
13 November at 23:05

தமிழக மக்கள் செல்லாத ரூபாய்களை வைத்துக் கொண்டு படுகிற வேதனை குறித்து ஒன்றுமே சொல்லாமல், இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டுப் போட சொல்லி அறிக்கை வருகிறது என்றால்;

சந்தேகமே வேண்டாம் அது நம்ம முதல்வர் அம்மா, அவரே கொடுத்த அறிக்கைதான்.
13 November at 23:05

கொடுமை செய்றது ‘இந்து’ மோடி, திட்டுறது ‘துக்ளக்’ முஸ்லிமையா?
*
மிக மோசமான இந்து – ஜாதி வெறி அரசைக்கூட ‘துக்ளக் அரசு’ என்று இஸ்லாமிய அரசோடு தொடர்புபடுத்தி விமர்சிப்பதும் கூட ஜாதி இந்து மனோபாவம் தான்.

துக்ளக், இஸ்லாமியரல்லாதவர்கள் மீது தன் மதக் கருத்தை திணிக்கவில்லை, மற்ற மதங்களின் வழிபாட்டுத் தளங்களை இடிக்கவில்லை. அடுத்த மதக்காரன் என்ன சாப்பிட வேண்டும் என்று ரெசிபி போட்டு மாட்டுக்கறியை தடை செய்த இவர்களைப் போல் அவர்;
பன்றி இறைச்சியைத் தடை செய்தவர் அல்ல.

‘துக்ளக் அரசுதான் இந்தியாவிலேயே மிக மோசமானது’ என்று விமர்சிப்பதும் பார்ப்பனிய மனோபாவம். அதற்குச் சாட்சி வேண்டுமா? ‘துக்ளக்’ சோ.
15 November

இந்த சூழலிலும் மல்லையாவின் 1201 கோடியை தள்ளுபடி செய்து எளிய மக்களை அவமானப்படுத்திய எஸ். பி. ஐ வங்கிக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த வங்கியில் உள்ள என் கணக்கை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

என் அக்கவுண்டில் இருக்கிற 650 ரூபாயை திருப்பிக் கொடுப்பாங்களா? இல்லை மல்லையா மாமியாருக்குச் சீதனமா கொடுத்துடுவாங்களா?

18 November

இதுக்குப் பேருதான் ‘அது’

மொத்தமா இருக்கறதே மூணு 500 ரூபாநோட்டு. அதையும் தட பண்ணிட்டா.. நா என்னதான் பணறது?

9 November at 09:08

இதுக்குப் பேருதான் ‘அது’
*
மூட்டை தூக்குறவர், காய்கறி, மீன், கீரை விற்கிறவர்கள், கூலி வேலைக்குப் போகிறவர்கள், தொழிலாளார்கள் இவர்களிடம் இருக்கிற 500, ஆயிரத்த உடனே பேங்குல போட வச்சி்;

மல்லையா, அம்பானி போன்றவர்களுக்கு வராக் கடனா ‘சும்மா’ குடுக்கறதுக்குப் பேருதான் ‘கருப்புப் பணத்தை ஒழிப்பது’
9 November

‘அதனால்தான் நான் இவரை லவ் பண்ணிட்டேன்’

நிகழ்ச்சி முடிந்து, Lift ல வரும்போது நடிகர் ராஜேஷ் என்னைச் சுட்டிக் காட்டி, ‘இவுரு பந்துலு சார லவ் பண்ணிட்டாருங்க..’ என்றார்.

அதற்கு இயக்குநர் ஒளிப்பதிவாளர் பி.ஆர். விஜயலட்சுமி, ‘அதனால்தான் நான் இவரை லவ் பண்ணிட்டேன்’ என்றார்.

ஒரு வருடம் ஆகிறது இது நடந்து. புதுயுகம் தொலைக்காட்சியில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் பந்துலு பற்றிய என்னுடைய சிலாகிப்புக்கு, பந்துவிலுவின் மகள் திருமதி விஜயலட்சுமியும் நடிகர் ராஜேஷ் அவர்களும் வழங்கிய பாராட்டு இது.

நானும் நடிகர் ராஜேஷ் அவர்களும் பேனல் கெஸ்ட்டாக. நடிகர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி, நடிகர் சிவாஜி, இயக்குநர் நந்தினி, ஓவியர் ஜீவா, தயாரிப்பாளர் தனஞ்செயன் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி.

நிறையப் பேசினேன். நேர பற்றாக்குறை காரணமாக முழுமையாக வரவில்லை. இந்த நிகழ்ச்சிதான் இப்போதும் புதியதலைமுறையில் ‘என்றும் புதுசு’ அதே பெயரிலேயே ஒளிபரப்பாகிறது.

இப்படியான ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் அதுவும் முதல் நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள வாய்ப்பளித்த திரு. கார்மலுக்கு நன்றி.
முதல் பகுதி

இரண்டாம் பகுதி

கர்ப்பிணியை கொலை செய்கிறவர்கள் தலாக்..

14708099_614867942029274_6253277512896524703_n
whatsapp-image-2016-10-30-at-6-48-46-pm
இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குழந்தையையும் கத்தியால் குத்தியவர்கள், ‘தலாக் பிரச்சினையால் பாவம் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று சொல்வதைக் கத்தியால் குத்திய கொலைக்காரனே நம்ப மாட்டான். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுசிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்கான தந்திரம்.

பெரியாரைவிடத் தீவிராம பெண்ணியம் பேசியவர்கள் யாரும் கிடையாது. ஆனால் அவர், ‘ ஒரு தாழ்த்தப்பட்டவர் என்னிடம் வந்து என்னால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், எனக்குத் தீண்டாமை வேணாம், கடவுள் வேணும் என்றால் என்னிடம் என்ன பதிலிருக்கிறது.

இந்து மதத்தில் கடவுளை கும்பிடுகிற எல்லாருக்கும் தீண்டாமை இருக்கிறதா? ஆனால், தாழ்த்தப்பட்டவர் மட்டும் நாத்திகனாக மாறி, கடவுள் மறுப்பு பேசி, இந்து மதத்தை ஒழித்து அதன்பிறகுதான் தீண்டைமை ஒழியனும் என்றால் என்ன நியாயாம்?’ என்று தன்னையே கடுமையாக விமர்சித்துக் கொண்டு,

‘உனக்குத் தீண்டாமையும் இருக்கக் கூடாது. கடவுள் வழிபாட்டு உரிமையும் உடனடியா வேண்டும் என்றால் முஸ்லிமா மாறிடு. காலையில ஏய் ன்னு கூப்பிட்டவன், மத்தியானம் நீ முஸ்லிமா மாறிட்டா, சாய்ந்திரம் பாய் ன்னு கூப்பிடுவான்.

அப்படி ஒருவர் இஸ்லாமியனாக மாறும்போது, அங்கேயும் வேறுபாடுகள் இருக்கு. பெண்ணை பர்தா போட்டு மூடுறான், தலாக் சொல்லி விரட்டி விட்டுறான் என்று சொல்வது மோசடியான வாதம். அது ஜாதியை, இந்துமதத்தைப் பாதுக்காக்கதான் பயன்படும்’ என்கிறார்.

பாபர் மசூதிக்கு எதிரான செயல்களின்போது, கடவுள் மறுப்பு பேசுவது மசூதியை இடிக்கும் இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக மாறிவிடும் என்பதுபோல்,
இஸ்லாமியர்களுக்கு எதிராக பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியின்போது தலாக் பிரச்சினையை முதன்மைபடுத்தவது,
இந்து அமைப்புகளின் இஸ்லாமிய எதிர்ப்புக்கே பயன்படும். அவர்களும் தலாக் பிரச்சினையைதான் பிரதானப் படுத்துகிறார்கள்.
*
நேற்று மதசார்பற்றோர் மாமன்றம் நடத்திய பொதுசிவில் சட்டம் குறித்த கலந்துரையாடலில் ‘தலாக்’ பிரச்சினையை வைத்து கடும் விவாதங்கள் நடந்தபோது நான் பதிவு செய்தது.
பேராசிரியர் சுபவியும் நானும் ஒத்தக் கருத்து. முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் அவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். தி.க தலைவர் ஆசிரியரின் இறுதி உரை மிகச் சிறப்பான தெளிவுரை. படம்: தோழர். முஹம்மது ஷிப்லி
31 October